You Are Here: Home » Featured, Superstar Movie News » ‘சாருலதா’ விழாவில் ‘எந்திரன்’ வசூல் குறித்து சக்ஸேனா பேசியது என்ன? Complete Video & Text!

உண்மையை யாராலும் மறைக்க முடியாது. அது என்றைக்கு இருந்தாலும் ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பது மற்றொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் வெளியான சூப்பர் ஸ்டாரின் ‘எந்திரன்’ திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை பெற்று அங்கிங்கெனாதபடி எங்கும் பாக்ஸ் ஆபீஸை அதிரவைத்தது. பல இடங்களில் சிவாஜியின் ரெக்கார்டுகளை அனாயசமாக முறியடித்தது. ஆந்திராவில் தெலுங்கு டப்பிங் வடிவில் வெளியாகி டப்பிங்க பட வசூலில் புதிய அத்தியாயத்தை தோற்றுவித்தது. பல நேரடி தெலுங்கு படங்களுக்கு சவாலாக விளங்கி, பல சென்டர்களில் நூறு நாட்கள் கண்டது. மலையாளத்திலும் இப்படித்தான்.

தமிழில் சூறாவளியாக சுற்றியடித்ததில், முந்தைய ‘சிவாஜி’ வசூலெல்லாம் தூசி என்றானது.

ஹிந்தியில் படம் வெற்றி பெற்றாலும், வசூல் விபரங்கள் கிடைக்கவில்லை. அதற்கு காரணத்தை நாம் சொல்லவும் வேண்டுமோ?

தற்போது, நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா ரோபோவின் ஹிந்தி வசூல் விபரங்களை பற்றி பல பிரமிப்பான தகவல்களை கூறியுள்ளார்.

ட்டிப்பிறந்த இரட்டையர்களை மையமாக வைத்து ப்ரியாமணி நடிக்க, பொன்குமார் இயக்கத்தில் ‘சாருலதா’ என்ற படம் உருவாகியிருக்கிறது.

படத்தை தயாரித்திருப்பவர் சன் பிக்சர்சின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா.

நிகழ்ச்சியில் மைக்கை பிடித்த சக்ஸேனா மிக மிக உருக்கமாக பேசினார். ஒரு படத்திற்கு மார்கெட்டிங் என்பது எந்தளவு முக்கியம் என்பதை ‘எந்திரன்’ படத்தை தான் ஹிந்தியில் வெளியிட்டு லாபம் பார்த்த கதையை புள்ளிவிபரங்களுடன் கூறினார்.

சக்ஸேனாவின் பேச்சிலேயே அண்மையில் அவர் அனுபவித்த கஷ்டங்கள் அவரை எந்தளவு பக்குவப்படுத்தியிருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது. காலம் தான் எவ்ளோ வேகமா சுத்துது…

ரூ.750/- சம்பளத்தில் துவங்கிய வாழ்க்கைசக்ஸேனா பேச்சிலிருந்து….

“இருபது வருடங்களுக்கு முன்பாக ‘பூமாலை’ என்கிற வீடியோ பத்திரிகையில் மாதம் ரூ.750/- சம்பளத்துக்கு என் பணியை துவக்கினேன். அது சன் தொலைக்காட்சியாக மாறியதும் ஒரு மேலாளராக பவனி வந்தேன். பின்னர் சன் பிக்சர்ஸில் CEO வாக இருந்தேன். பின்னர் அதிலிருந்து ராஜானிமா செய்துவிட்டு, என்னுடைய சொந்த முயற்சியில் சாக்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறேன்.”

“என்னுடைய கதை 25 வருட கதை. அதை பத்து நிமிடத்தில் கூறமுடியாது. இன்று நான் சக்ஸேனாவாக  நிற்கிறேன் என்றால் அதற்கு காரணமாக நான் வளர்ந்துவந்த பாதையில் என்னுடன் இருந்த கலாநிதி மாறன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நான் நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன்.”

“இதற்கு முன்பு நான் பல படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறேன். எனவே நான் தயாரித்த முதல் படம் இது அல்ல. வெளியிடும் முதல் படம் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.”

“நான் கடந்து வந்த பாதை என்பது ஒரு பெரிய போராட்டமாகும். ஒரு சிறிய செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்த பத்து பேரில் நானும் ஒருவன். அந்த செடி என்ன என்று உங்களுக்கு தெரியும். அது ஆலமரமாக இருக்கிறது. ஒரு சூறாவளி என்னை தாக்கிய போது “என்னோட வேரை பிடிச்சிகிட்டு நில்லுடான்னா நான் நின்னிருப்பேன். ஆனா பரவாயில்லே… நீ ஓடிப்போ” என்று என்னுடன் இருந்த சகோதரர்களே என்னை சொல்லிவிட்டார்கள்.” (அழுகையை கட்டுப்படுத்திக்கொள்கிறார்).

“என்னால் சும்மாயிருக்க முடியாது. எனக்கு தெரிஞ்ச தொழில் சினிமா என்றாகிவிட்டது. சரி… இதுல போராடி ஜெயிப்போம் என்று இந்த படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறேன்.”

“ஆபத்தில் உதவாத நண்பனும், தாகத்திற்கு கிடைக்காத தண்ணீரும், அரும்பசிக்கு உதவாத அன்னமும் தீயென விலகு என்று ஆன்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.”

“அப்புறம் ஷிவானி என்று ஒரு படம் தற்போது தயாரித்துக்கொண்டிருக்கிறேன். திறமையானவர்களை வைத்து தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகிவருகிறது.”

“இங்கு தயாரிப்பளார் சங்க தலைவர் எஸ்.ஏ.சி. வந்திருக்கிறார். அவரிடம் நேரில் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இங்கேயே உங்கள் மத்தியிலேயே சொல்லிவிடுகிறேன். சாக்ஸ் டீ.வி. என்று ஒரு புதிய தொலைக்காட்சியை வரும் பொங்கல் முதல் துவக்கவிருக்கிறேன்.”

“இது யாருக்கும் போட்டியாகவோ சவால் விடுவதற்கோ இல்லை. மீடியா என்பது மிகப் பெரிய ஒரு சக்தி. உங்களுடன் நானும் அதில் என்னை இணைத்துக்கொள்ளவே இந்த முயற்சி. சிறிய படஜெட் படங்களை தயாரிப்பவர்களை எனது புதிய டீ.வி. ஊக்குவிக்கும்.”

“ஒரு படத்தை தயாரிப்பது எத்தனை கஷ்டம் என்று இங்கே வந்திருக்கும் ஐயப்பனுக்கு தெரியும். என்னால் ஐயப்பன் கெட்டானா அய்யப்பனால் நான் கெட்டேனா என்ற விவாதம் எங்கள் குடும்பத்திற்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தை தாண்டி, நான் கஷ்டத்தில் இருந்தபோது என்னுடன் கூட இருந்த ஐயப்பனின் குடும்பத்தினருக்கு நான் சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.”

“எந்த படத்திற்கும் மார்கெட்டிங் என்பது மிக மிக முக்கியம். அது ஐயப்பனுக்கு நன்கு தெரியும். எந்திரன் படத்தை நாங்கள் தயாரித்தோம். எந்திரன் பிசினஸ் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ரெக்கார்ட்.”

எந்திரனின் வசூல் சாதனை…

“ஷங்கர் சார், ரஜினி சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஆகியோர் கூட்டணியில் உருவான படம் எந்திரன். இதே கூட்டணியில் மைனஸ் ஐஸ்வர்யா ராய் படம் தான் சிவாஜி. ஹிந்தியில் நாங்கள் எந்திரனை வெளியிட்டபோது, ரிஸ்க் வேண்டாம் என்று என்னை சிலர் தடுத்தார்கள். இருப்பினும் படத்தின் மீதுள்ள நம்பிக்கையில் தைரியமாக ரிலீஸ் செய்தோம். 42 கோடிகள் தியேட்டரில் வசூல் செய்தது. ஆடியோ ரைட்ஸ் 1.5 கோடிகள் போனது. சாட்டிலைட் ரைட்ஸ் 18 கோடிகள் போனது. டிவிடி உரிமை ரூ 5.5 கோடிகள்” இவ்வாறு கூறினார் சக்ஸேனா. (ஹிந்தியில் மொத்த வசூல் எவ்வளவு என்று நீங்களே கூட்டிக்கொள்ளுங்கள்!)

மேலும் சாருலதா படத்தை பற்றியும் பேசிய சக்சேனா இறுதியில் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றார்.


ரோபோவைப் பொறுத்தவரை ஹிந்தியிலேயே இப்படியென்றால் சூப்பர் ஹிட்டடித்த தமிழ்நாட்டிலும், அக்கட பூமியான ஆந்திராவிலும் படம் எவ்வளவு கோடிகளை வசூலித்தது என்பதை அந்த ஏழுமலையான் தான் சொல்லவேண்டும்.

வீடியோ முழுக்க அவசியம் பார்க்கவேண்டிய ஒன்று. குறிப்பாக 7:00 - 8.25 வரை அவசியம் பார்க்கவும்.

எந்திரன் வசூல் குறித்து சக்ஸேனா Complete Video!

[END]

18 Responses to “‘சாருலதா’ விழாவில் ‘எந்திரன்’ வசூல் குறித்து சக்ஸேனா பேசியது என்ன? Complete Video & Text!”

 1. சூப்பர் அப்டேட் சுந்தர் ஜி.

 2. Somesh Somesh says:

  பூ பந்தய் யாரும் நீரில் பொத்தி தான் வெச்சாலும்
  பந்து வரும் நீரின் மேலே தான் …

 3. kumaran kumaran says:

  இந்த ஆளு சொல்றத பார்த்தா தன்னுடைய மார்க்கெட்டிங் திறமையால்தான் ஹிந்தி இல் 67 கோடிகள் வசூல் செய்தது போல் பேசுகிறார்.

  ————————————————————————-
  இப்போவாவது விஷயம் வெளியே வந்துதேன்னு நாங்க சந்தோஷப்படுறோம். நீங்க அதையும் குறை சொன்னா எப்படி பாஸ்?
  - சுந்தர்

 4. Thalaivar hindi la panna sathanai (67cr) ya nama tamil la avungalala panna mudiyuma.. North indian media Thalaivar a indian superstar nu sollanum.

 5. R.Gopi R.Gopi says:

  //ரோபோவைப் பொறுத்தவரை ஹிந்தியிலேயே இப்படியென்றால் சூப்பர் ஹிட்டடித்த தமிழ்நாட்டிலும், அக்கட பூமியான ஆந்திராவிலும் படம் எவ்வளவு கோடிகளை வசூலித்தது என்பதை அந்த ஏழுமலையான் தான் சொல்லவேண்டும்.//

  *-*-*-*-*-*-*-*-*-*-*-

  இதோ இருக்கே அக்கட பூமி ரெக்கார்ட்…..

  http://greatandhra.com/viewnews.php?id=24630&cat=1&scat=4
  2010 No-1 Blockbuster Is Not ‘Simha’
  Published Date : 02-Nov-2010 14:19:48 GMT

  Till date, the Nandamuri fans have been pumping their fists in the air and were all excited that the film ‘Simha’ was the biggest grosser for the year 2010. However, their happiness is short-lived. The reason for that is superstar Rajinikanth and his dubbed magnum opus which has created a new record.

  Reports from the box office say that Rajini’s ‘Robot’ has amassed a whopping Rs 30 crores within four weeks of its release and the collections are still steady. This means that the film has gone past the full time collections of ‘Simha’. Though dubbed movies have higher taxes still ‘Robot’ has made strong collections.

  Going forward, there is ‘Orange’ and ‘Ragada’ in the pipeline. If both of them don’t create a magic then it must be admitted that the biggest blockbuster of the year 2010 is the dubbed Tamil flick ‘Robot’!!!

 6. sakthivel sakthivel says:

  y Kocadiyaan movie went to Jaya TV….
  Thalaivar usually will give to Kalaignar kudumbathaar…….
  now only they r realizing the truth………..soon they will understand the fans feelings also………

 7. raajeshtve raajeshtve says:

  பூப்பந்தை யாரும் நீரில் பொதி தான் வெச்சாலும் பந்து வரும் தண்ணி மேலதான் அட உன்னை யாரும் ஓரம் கட்டிதான் வெச்சாலும் தம்பி வாடா பந்து போலதான். மூணாம்பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய் மின்னுவதை மின் மினிகள் தடுத்திடுமா

 8. raja raja says:

  உண்மையில் காலம் அப்போ அப்போ பதில் சொல்லி கொண்டே இருக்கிறது ,முதலில் சன் தொலைகாட்சிக்கு பக்கபலமாக இருந்தவர் திரு சரத் அவர்கள் ,அவரும் வெளியேற்றப்பட்டார் ,இப்பொழுது சாக்ஸ் அவர்கள்

 9. R.Gopi R.Gopi says:

  http://www.gulte.com/entertainment.php?telugu-cinema-news=2010-spl-best-telugu-commercial-hits&page=movie_update_full&link=6925

  2010 Spl: Best Telugu Commercial Hits

  2) ROBO
  Quite rarely, a movie becomes a hit even before its release and Rajnikanth’s ROBO is one among them. The sci-fi movie directed by one of the costliest and talented commercial movie directors in India, S. Shankar has rocked almost all the BOs in India. With a dose of oomph from Aishwarya Rai, along with the musical magic of Oscar winner AR Rahman, the film collected more than 40 crores in Tollywood. For the kind of visual effects that have set standards of Indian cinema along with a strong message regarding life and lust, ROBO is the king of TFI’s 2010 Box Office.

  • Mahesh Mahesh says:

   Gopi,
   The 40-crore figure mentioned in the above link is the distributor share, not the actual gross collection. According to many telugu trade portals, it collected 37cr distributor share in AP state. It roughly translates to a gross collection of 60-62cr.

 10. R.Gopi R.Gopi says:

  http://www.gusagusa.com/news/tollywood-top-hits-2010
  Tollywood Top hits of 2010

  2010 is a mixed year for Telugu cinema industry. The success percentage is pretty low and most of the big films didn’t live up to the expectations. Tamil dubbed films did well at the box office this year and the humongous success of Robo only gives an example how our films have been sidelined by other language movies. Here are the top 5 box office hits of 2010.

  1) Robo (Dubbing) – Blockbuster
  2) Simha - Blockbuster
  3) Brindavanam - Superhit
  4) Darling - Hit
  5) Maryada Ramanna - Hit
  6)orange - above average

  PS: The range of latest releases like Ragada and Nagavalli is yet to be known. However, trade experts say that both the films might not make it to the top 5 as per the current trend.

 11. chithamparam chithamparam says:

  போற போக்கை பார்த்த நிரம்ப உன்மையல் வெளி வரும்போல இருக்கு

 12. harisivaji harisivaji says:

  ஹிந்தி தெலுங்கு மட்டுமே 100 கோடி லாபம் ஈடிருக்ம் போலவே …பக்கத்துலே இப்படினா ?
  . அப்போ தலைவரின் கோட்டையான நம்ம மாநிலத்தில் ??
  அப்போ வெளிநாட்டில் ???
  பாதிகனக்கு தான் வெளிய தெரிஞ்சுர்க்கு
  கூடிய சீக்கிரம் எல்லா உண்மையும் வெளி வரணும்

 13. Mahesh Mahesh says:

  @HariSivaji,
  Here is the information I have gathered while I researched regarding Enthiran BO performance a couple of months after it’s release.

  AndhraPradesh- 37 share, 60+cr gross
  Karnataka- nearly 15cr gross (Ent. Tax paid to KA state Govt in 17 days alone is Rs.3.4cr)
  Kerala-14cr gross (8.5cr share)
  North India(hindi version)- ~30cr gross(according to some Bolly trade sites)
  Overseas-$14Million(authentic report from Eros Media.)=70cr roughly
  TamilNadu- Estimated 100-115cr(only according to official ticket rates)

  Total- Approx. 300cr.
  Note: The TN figure may not include the unofficial rates all the theatres charged during the first week. Only the official, regular rates taken for estimation. Actual figure, unofficial figure may be atleast 20cr more in Tamil Nadu.

 14. Mahesh Mahesh says:

  So much can be written about Enthiran/Robot’s BO records in each of these states and overseas markets…. It will take very very long time for any south indian film to cross Enthiran’s collection.

 15. R.Gopi R.Gopi says:

  //ஹிந்தி தெலுங்கு மட்டுமே 100 கோடி லாபம் ஈடிருக்ம் போலவே //

  ஹரிசிவாஜி…. அது 100௦௦ கோடி லாபம் அல்ல… மொத்த கலெக்‌ஷன்….. கரீட்டான மேட்டர எப்போவும் தப்பா புரிஞ்சுக்கக் கூடாது……

 16. B. Kannan B. Kannan says:

  எந்திரனின் சாதனைகள் உலகின் முழு வெளிச்சத்திற்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates