You Are Here: Home » Featured, Rajini Lead » கம்பன் விழாவில் இடம் பெற்ற ‘ரஜினி சொன்ன கதை’ — சூப்பர் ஸ்டார் ரஜினி @ கம்பன் விழா — FINAL PART

மிழுக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்ட கம்பன் கழகம் சார்பில், 38வது ஆண்டு கம்பன் விழா, சென்னையில் 3 நாட்கள் (ஆகஸ்ட் 10, 11, 12) நடைபெற்றது.

“கம்பன் - யாதுமாகி நின்றான்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழா, மயிலாப்பூர் ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்துகொண்டு விழாவை முழுமையாக ரசித்தார்.

இரண்டாம் நாளன்று அவர் கூறிய கதை ஒன்றை பிரபல பட்டி மன்ற பேச்சாளர் கூறி கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டு சென்றார்.

கடந்த நான்காண்டுகளாக ரஜினி இந்த விழாவில் தவறாமல் கலந்துகொண்டு வருகிறார். (சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தமையால் 2011 ஆம் கலந்துகொள்ளவில்லை).

முதல் நாள் விழாவுக்கு, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விழாவில் கலந்துகொண்டவர்களை, கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன் எழுதிய ‘கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்ற ஏவி.எம். அறக்கட்டளை சொற்பொழிவு நூலை, சென்னை கம்பன் கழக துணைத்தலைவர் நல்லி குப்புசாமி வெளியிட்டார். அவரிடம் இருந்து புதுவைக் கம்பன் கழக தலைவர் ந.கோவிந்தசாமி முதல்படியை பெற்றுக்கொண்டார்.

அதன்பின்னர், தமிழறிஞர்களுக்கு விருது மற்றும் நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை வரவேற்று கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசியதாவது:

தமிழுக்கு பொக்கிஷமாக கிடைத்த அறிஞர் கம்பன் ஆவார். 800 ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்காக மாபெரும் இலக்கியமான ராமாயணத்தை படைத்தார். அவருக்காக நாடு முழுவதும் கம்பன் விழா நடத்தப்பட்டு வருகிறது.

ராமரை வணங்க, போற்ற இலக்கியத்தை கம்பன் தரவில்லை. தமிழர்களுக்கு பயன்படும் வாழ்க்கை நெறியோடு, அறிவு & ஆற்றலை எடுத்துக் காட்ட ராமாயணத்தை படைத்துள்ளார். எந்த லட்சியத்திற்காக கம்பன் விழா நடத்தப்படுகிறது என்பதை உணர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பொது நோக்கோடு விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கம்பன் யாதுமாகி நின்றான் என்ற தலைப்பில் 3 நாள் விழா நடைபெறுகிறது.  இவ்வாறு ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.

இரண்டாம் நாள் விழாவில் மாலை எவரும் எதிர்பாராத வண்ணம் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்துகொண்டு நிகழ்ச்சி முழுக்க சுமார் 3 மணிநேரத்துக்கும் மேல் அமர்ந்து ரசித்தார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த ரஜினி அவர்களை பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திருமதி.பாரதி பாஸ்கர் மற்றும் திருமதி.டி.எஸ்.பிரேமா ஆகியோர் பார்த்து தங்கள் வணக்கங்களை பரிமாறிக்கொண்டனர்.

தொடர்ந்து சுழலும் சொல்லரங்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. காப்பியப் போக்கிற்கு பெரிதும் பெருமை சேர்ப்பது கம்ப மகளிரின்…. “மதி நுட்பமல்ல…. உறுதிப்பாடே” என்ற தலைப்பில் திருமதி.பாரதி பாஸ்கரும், “உறுதிப்பாடல்ல… தியாக உணர்வே” என்ற தலைப்பில் திருமதி. இராம சௌந்தரவல்லி அவர்களும், “தியாக உணர்வல்ல; கொடுமனமே” என்ற தலைப்பில் திருமதி.விசாலாட்சி சுப்ரமணியனும், “கொடுமனமல்ல; மதிநுட்பமே!” என்ற தலைப்பில் திருமதி. டி.எஸ்.பிரேமாவும் உரையாற்றினர்.
பைந்தமிழில் கம்ப மகளிர் ஆற்றிய உரையை சூப்பர் ஸ்டார் ரஜினி மெய்மறந்து கேட்டார்.

“மதி நுட்பமல்ல…. உறுதிப்பாடே” என்ற தலைப்பில் பேசிய திருமதி.பாரதி பாஸ்கர் தனது வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ரஜினி அவர்கள் கூறிய கதை ஒன்றினை சமயோசிதமாகக் கூறி கைதட்டல்களை அள்ளிக்கொண்டு சென்றார்.

திருமதி.பாரதி பாஸ்கர் கூறியதாவது : கம்பன் தன் இலக்கியத்தில் கையாண்டிருக்கும் மகளிர்க்கு பெருமை சேர்ப்பது அவர்கள் மன உறுதியே தவிர வேறில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கூறிய ஒரு கதையை இங்கு கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரு பெண்ணிற்க்கு தைரியம் தான் மிகவும் முக்கியம். தைரிய லட்சுமி மட்டும் நம்மிடம் வந்துவிட்டால் ஏனைய அனைத்து செல்வங்களும் நம்மிடம் தானே தேடி வந்துவிடும். (முழு கதையையும் கூறுகிறார்.).

திருமதி.பாரதி பாஸ்கர் கூறி முடித்தவுடன், அரங்கமே கைத்தட்டல்கள் அதிர்ந்தது.

அடுத்த சில மணித்துளிகளில் நிகழ்ச்சி நிறைவு பெற, சூப்பர் ஸ்டார் ரஜினி அனைவருக்கும் வணக்கம் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்.

இரண்டாம் நாள் மாலை நடைபெற்ற பட்டி மண்டபத்தை காண சரியாக மாலை 5.00 மணிக்கெல்லாம் வந்துவிட்டார்.

“வீழ்ச்சியிலும் நம் மனத்தை பெரிதும் ஆட்சி செய்வது “தயரதன் மரணமே” (அல்லது) “வாலி வதையே” (அல்லது) “இராவணன் முடிவே” என்ற தலைப்பில் திரு.அவ்வை நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டி மண்டபத்தில், தலை சிறந்த பேச்சாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் பங்கு பெற்றனர்.

இறுதியில் பார்வையாளர் வாக்கெடுப்பு நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பார்வையாளர்களும் தமிழ் நேசர்களும், ஆர்வமுடன் தங்கள் தீர்ப்பை வாக்குச் சீட்டில் எழுதி வாக்களித்தனர்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கம்பன் விழா - துளிகள்

* 3 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவிற்கு தமிழகம் மற்றும் பல வெளிநாடுகளில் இருந்து தமிழறிஞர்கள் வந்திருந்தனர்.

‘* பல தமிழறிஞர்கள் பாராட்டும் ரொக்கப் பரிசும் தந்து கௌரவிக்கப்பட்டார்கள்.

* அதே போல இலக்கிய ஆர்வம் மிக்க மாணவ சமுதாயத்தை சேர்ந்த பலர் இந்த விழாவில் பாராட்டும் பதக்கமும் தந்தது கௌரவிக்கப்பட்டார்கள். இவர்களில் ஹிந்து மதமல்லாத பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

* சூப்பர் ஸ்டாரின் வருகை எப்போதும் போல ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

* சூப்பர் ஸ்டார் ரஜினி வந்தபோதும் சரி… கிளம்பிச் சென்ற போதும் சரி… மிக மிக வேகமாக இருந்தது. ஃபோட்டோக்ராபர்களுக்கு அவருடன் ஓடிச் சென்று புகைப்படம் எடுக்க பெரிய சவாலாக இருந்தது.

* சூப்பர் ஸ்டார் வாக்களித்துவிட்டு திரும்பியவுடன், பார்வையாளர்கள் அவரை சூழ்ந்துகொண்டு கைகொடுப்பதும், வாழ்த்து தெரிவிப்பதுமாக இருந்தனர்.

‘* வெளியே வரும்போது, ஏ.வி.எம்.ராஜேஸ்வரி மண்டப ஊழியர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களும் அவரை மொயத்துவிட்டனர்.

* மூன்று மணிநேர நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் இடையில் தான் அமர்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை.

* எவரிடமும் பேசாது, விழா நிகழ்ச்சிகளை, உரைகளை கவனத்துடன் கேட்டார் ரஜினி.

* அறிஞர்கள் சுவையான பல தகவல்களை கம்ப ராமாயனத்திளிருந்து கூறியபோது மனவிட்டு சிரித்தார்.

* பட்டிமண்டப தலைப்ப்பு தொடர்பாக பார்வையாளர்கள் தீர்ப்பை கேட்டு வாக்கெடுப்பு நடந்தபோது, தந்தது தீர்ப்பை வாக்குச் சீட்டில் எழுதி வாக்களித்தார்.

* தலைப்பு என்ன தெரியுமா? “வீழ்ச்சியிலும் நம் மனத்தை பெரிதும் ஆட்சி செய்வது “தயரதன் மரணமே” (அல்லது) “வாலி வதையே” (அல்லது) “இராவணன் முடிவே”.

* எனக்கு தெரிந்து சூப்பர் ஸ்டார் ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினி, இராவணனுக்கே வாக்களித்திருப்பார் என்று கருதுகிறேன். ஏனெனில், இராவணன் கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Superstar Rajini in Kamban Kazhagam event - Complete Gallery

[END]

11 Responses to “கம்பன் விழாவில் இடம் பெற்ற ‘ரஜினி சொன்ன கதை’ — சூப்பர் ஸ்டார் ரஜினி @ கம்பன் விழா — FINAL PART”

  1. Jegan Jegan says:

    Thnx for sharing with us

  2. harisivaji harisivaji says:

    தமிழ் தமிழ் என்று பேசினா மட்டும் பத்தாது
    இது மாத்ரி வாழனும் , மனதார மனசாட்சியோடு வாழனும்
    எத்தன பேரு நான் தமிழன் என்று சொல்றவங்க இந்த மாத்ரி தமிழ் விழாக்களில் பங்கு பெறுகிறார்கள் (விழா மேடைஎறாமல்)

  3. kumaran kumaran says:

    மேடை ஏறாமல் 3 மணிநேரம் எழுந்திருக்காமல் தமிழை ரசித்த உண்மையான தமிழன், எங்கள் தலைவர் .

    • விஜய் ஆனந்த் விஜய் ஆனந்த் says:

      @ Kumaran
      நண்பரே, “உண்மைத் தமிழர்” , “ஒரே தலைவர்” போன்ற சொற்களை கூடுமான வரையில் தவிர்க்கலாமே…! நான் உங்கள் கருத்தை குறை கூறவில்லை…அதில் உள்ள வார்த்தைகளை மட்டும் கவனிக்கச் சொல்கிறேன்…! ஏனென்றால், இது போன்ற வார்த்தைகள் இன்று அரசியல் மேடைகளிலும், பிற கூட்டங்களிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது…! தவறாகச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்…!
      -
      நன்றி !
      -
      “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
      -
      விஜய் ஆனந்த்

      ———————————————————————-
      You are right. We need to avoid certain terms and words while referring Rajini sir.
      - Sundar

  4. sakthivel sakthivel says:

    Do you have any videos ……..can i hear that patti madram speeches…….if u uploaded ……………it will be useful for us……..

    Thayavu seyithuuuu one purinthu kollungal………..tamil nattil……..tamilan mattam thann ullanar yendra aruthammm yellai………cbe ruled by telugu ,madurai (certains areas by telugu)………..like wise it is splitted……plz don’t worry about the people in TN is not fighting against Welfare of TN…….
    Clearly who r the powerful poeple in TN…….

  5. RAJA RAJA says:

    தலைவர் இது போன்ற விழாக்களுக்கு போறது ஒன்னும் புதிசில்லை. முன்பெல்லாம் அவர் அடிக்கடி மாறுவேடத்துல இது போன்ற இலக்கிய விழாக்களுக்கு செல்வதுண்டு. அது பத்தி பா.விஜய் ஒரு முறை சொல்லியிருக்கிறார். அவ்வளவு ஏன், கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்ற ஒரு வழக்காடு மன்றத்தை கூட ரஜினி மாறுவேடத்தில் சென்று ரசித்திருக்கிறார். அது பற்றி அடுத்த நாள் தினத் தந்தியில் கூட செய்தி வெளியானது. (நம் தளத்தில் கூட அதை பார்த்த ஞாபகம்).

    தலைவருக்கு என்றுமே தமிழ் இலக்கியங்கள் மீது அலாதி பிரியம் உண்டு என்பதையே இது கட்டுகிறது.

    இந்த நிகழ்ச்சியை எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்து விருந்து படிச்சதுக்கு உங்களுக்கு தான் சுந்தர் நன்றி சொல்லணும். இல்லாட்டா தெரியாமலே போயிருக்கும்.

  6. B. Kannan B. Kannan says:

    //தமிழ் தமிழ் என்று பேசினா மட்டும் பத்தாது
    இது மாத்ரி வாழனும் , மனதார மனசாட்சியோடு வாழனும்
    எத்தன பேரு நான் தமிழன் என்று சொல்றவங்க இந்த மாத்ரி தமிழ் விழாக்களில் பங்கு பெறுகிறார்கள் (விழா மேடைஎறாமல்)//
    அது தான் தலைவர்.. அவர் தமிழராக வாழ்கிறார்..
    தமிழராக சுவாசிக்கிறார்..

  7. B. Kannan B. Kannan says:

    Thanks sundar for ur extensive coverage of Kamban vizha and our beloved thalaivar in that vizha..

  8. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Thanks Sundar for these spectacular photographs. You have done a big thing. But didn’t even claimed it. Feel so charged after seeing Thalaivar’s photographs. Excellent show. In simple words, you are in wrong slot for your capacity/capability. May God bless you.

  9. மாரீஸ் கண்ணன் மாரீஸ் கண்ணன் says:

    தலைவர் இதுபோன்ற விழாக்களுக்கு அடிக்கடி சென்றாலும் இந்த மாதிரி ஒரு புகைப்படங்களை நாம் பார்த்ததில்லை. ரஜினி வந்து உட்கார்ந்துவிட்டாரே என்று குளோசப் ஷாட்டுகளாக அடித்து தள்ளாமல், எந்த வித பதட்டமும் இன்றி மிக அழகாக சூழ்நிலைகளும் நன்கு பிரதிபலிக்கும் வண்ணம் ஃபோட்டோ படம் எடுத்துள்ளார்கள். புகைப்படங்கள் முழுக்க ஒரு ஒழுங்கு தென்படுகிறது. சான்றோர்கள் சபையல்லவா….

    மாரீஸ் கண்ணன்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates