You Are Here: Home » Featured, Superstar Movie News » ‘சிவாஜி’ படத்தால் நஷ்டம் என்று சொன்னவர்கள் பொய்க்கணக்கு காட்டுகிறார்கள் என்றே அர்த்தம் - ஏ.வி.எம்.சரவணன் சவுக்கடி!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியாக ‘சிவாஜி’ திரைப்படம் வசூலை கொட்டோகொட்டென்று கொட்டி பாக்ஸ் ஆபீசையே அதிரவைத்தது நினைவிருக்கலாம்.

கறுப்பு பண ஒழிப்பை மையமாக வைத்து வெளியான அந்த திரைப்படத்தில் அனைத்து வர்த்தகமும் முறைப்படி ‘செக்’ பரிவர்த்தனைகள் மூலமே நடைபெற்றது. நடிகர்கள், நடிகைகள், மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வருமானவரி பிடித்தம் செய்யப்பட்டு பின்னரே சம்பளம் வழங்கப்பட்டது. அதுவும் செக்குகளாகவே.

எதையுமே கருப்பாக பார்த்த பழக்கப்பட்ட வெளியீட்டாளர்கள் சிலருக்கு வெள்ளையில் வர்த்தகம் செய்யவேண்டிய நிர்பந்தம். அந்த நிர்பந்தமே ஏற்படுத்தய புழுக்கமோ என்னவோ ஒரு பக்கம் படத்தை வைத்து பணத்தை வாரி குவித்துவிட்டு மறுபக்கம் சிவாஜியால் நஷ்டம் என்று வாய் கூசாமல் கூறினர்.

அவை எதுவுமே உண்மை அல்ல என்று ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தெரிந்தபோதிலும், படம் சம்பந்தப்பட்ட ஒருவரே அது பற்றி தற்போது கூறியிருக்கிறார்.

சிவாஜியை தயாரித்த ஏ.வி.எம்.ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அதிபர் திரு.ஏ.வி.எம். சரவணன், இந்த வார ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் அது பற்றி விரிவாக கூறியிருக்கிறார்.

சிவாஜியால் நஷ்டம் என்று கூறியவர்களுக்கு சரியான சவுக்கடி. நன்றி சரவணன் சார்.

(இப்போல்லாம் உண்மை ரெண்டு மூணு வருஷம் கழிச்சாவது வெளியே வருது பார்த்தீங்களா?)

அடுத்து, ரஜினி, கமல் என்ற இரு பெரும் கலைஞர்கள் மீண்டும் சேர்ந்து நடிப்பது பற்றி கூறியிருக்கிறார் ஏ.வி.எம்.சரவணன். சற்று நம்பிக்க்யுடனும் கூட. ரஜினி - கமல் இரு தரப்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை ஆர்வலர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு காம்பினேஷன் இது. அதற்கு சாத்தியமுண்டா? சரவணன் சார் கூறுவதை படியுங்கள்… நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

Double click the image to ZOOM & READ

******************************************************************
Finishing line : பொய் தான் அடிக்கடி பேசிகிட்டே இருக்கும். உண்மை எப்போவாவது தான் வாய் திறக்கும்.
ஆனா  அப்படி திறக்கும்போது பொய் இருந்த தடம் தெரியாமல் போய்டும். சொல்லப்போனா வாழ்க்கையில பல விஷயங்கள் இப்படித் தாங்க.
******************************************************************

[END]

7 Responses to “‘சிவாஜி’ படத்தால் நஷ்டம் என்று சொன்னவர்கள் பொய்க்கணக்கு காட்டுகிறார்கள் என்றே அர்த்தம் - ஏ.வி.எம்.சரவணன் சவுக்கடி!”

 1. senthil senthil says:

  Thalaivar padam orunalum nastam agathu.

 2. raajeshtve raajeshtve says:

  ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு அனைத்து ரசிகர்கள் சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!

 3. raajeshtve raajeshtve says:

  ஏவிஎம் நிறுவனம் எந்த ஒரு தங்கள் படத்தை இப்படி மீண்டும் வெளியீட முயற்சித்தது இல்லை, ஏவிஎம் மட்டும் அல்ல வேறு எந்த தயாரிப்பு நிறுவனம் தங்கள் பெரிய பட்ஜெட் படங்களை (வெற்றி பெற்றிருந்தாலும் கூட) இப்படி மீண்டும் பெரும் செலவு செய்து வெளியீட முயற்சித்ததில்லை. சிவாஜி 2D பதிப்பு எத்தகைய வெற்றி மற்றும் வசூல் பெற்றிருந்தால் அதை மீண்டும் பதினாறு கோடி ருபாய் செலவில் 3D யாக உருவாக்கி அதை வெளியிடுகிறார்கள் என்றால் அது ரஜினி அவர்களின் படத்திற்காக தான். ஏனென்றால் கண்டிப்பாக போட்ட காசை விட பாத்து படங்கு கைக்கு லாபம் வரும் என்பது அவர்களுக்கு தெரியும். நிச்சயம் இந்த சிவாஜி 3D வெளியாகி மீண்டும் நூறு கோடி வசூல் ஈட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தபடத்தின் வெற்றியை பார்த்து சிவாஜிக்கு பிறகு வெளியான ஒரு சில மிகபெரிய வெற்றி பெற்ற படங்கள் என்று சொல்லப்பட்ட சுமாரான படங்களை தங்கள் தயாரிப்பாளர்கள் வெளியீட முன்வரலாம், அதுசரி அதை யார் பார்பார்கள்.

 4. மாரீஸ் கண்ணன் மாரீஸ் கண்ணன் says:

  யெஸ்… சுந்தர்ஜி….நன்கு சம்பாதித்துவிட்டு சிவாஜி, எந்திரனின் வசூலை குறை சொன்னவர்களுக்கு நிச்சயம் படத்தை கொடுக்ககூடாது. நல்ல விலை கொடுக்கிறார்கள் என்று இவர்களுக்கு படத்தை கொடுத்தால் அதற்குரிய விலையை இவர்கள் கொடுக்கவேண்டியிருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா?
  .
  மாரீஸ் கண்ணன்

 5. dr suneel dr suneel says:

  சரவணன் சார் உண்மையை தெளிவாக சொல்லிவிட்டார்..மகிழ்ச்சி..
  இந்த காம்பினேஷன் வந்தா அருமை தான்..அந்த படம் அவ்வளவு அழகா வந்தருக்கு :)

 6. raja raja says:

  உண்மையை பல காலம் மறைக்க முடியாது அது யார் மூலமாவது வெளியே வந்து விடும் ,பொய் சொல்லி கொண்டு திரிந்தவர்களுக்கு செம சவுக்கடி அதே போல் சிவாஜி யால் நஷ்டம் என்று பொய் சொன்னதை கேட்டு ஊடகங்களில் திரித்து சொல்லி கொண்டு இருந்த வேறு சில நடிகர்களின் ரசிகர்களும் இப்பொழுது வாயடைத்து பொய் இருப்பார்கள்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates