You Are Here: Home » Featured, Happenings » ‘தில்லுமுல்லு’ ரீமேக் - ரஜினி இடத்தில் சிவாவா? ரசிகர்களின் குமுறலுக்கு இயக்குனர் பதில்!

மிழ் சினிமாவில் கதைப் பஞ்சம் என்றுமில்லாத அளவு தலைவிரித்தாடுகிறது. (அது மட்டுமா இங்கிலீஷ் பட டி.வி.டி.க்கள் கூட தான்னு ஒருத்தரு இங்கே முனுமுனுக்குறார்). விளைவு பழைய சூப்பர் ஹிட் படங்களை ரீமேக் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அந்த ட்ரெண்டில் முன்னணியில் இருப்பவை ALWAYS GOLD என்று கருதப்படும் ரஜினி படங்கள் தான். (ஆனாலும் சுந்தர்.சி. இதுக்கு அநியாயத்துக்கு திருஷ்டி பரிகாரம் பண்ணிட்டாருங்க!).

பில்லா, மாப்பிள்ளை, முரட்டுக்காளை, என அடுத்தடுத்து ரஜினி படங்களின் ரீமேக்குகள் வெளியாயின. (இதில் அஜீத் நடித்த ‘பில்லா’ மட்டுமே ஹிட்டானது). இந்த வரிசையில் ரஜினி நடித்து 80களின் துவக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட காமெடி கலக்கல் ‘தில்லுமுல்லு’ ரீமேக் செய்யப்படவிருக்கிறது.

‘தமிழ் படம்’ புகழ் மிர்ச்சி சிவா நடிக்க, பத்ரி என்பவர் இயக்குகிறார்.

ரீமேக் செய்வது என்று தீர்மானித்தவுடன், புத்திசாலித்தனமாக சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்து அவரது ஆசி பெற்று திரும்பியிருக்கிறது இந்த டீம். அப்படியே கமலையும். (கமல் அந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்).

ரசிகர்கள் மனதில் இது தொடர்பாக உள்ள பல கேள்விகளுக்கு விகடனில் பதில் கூறியிருக்கிறார் பத்ரி.

அதிலிருந்து முக்கியமானவை மட்டும்…

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

கேள்வி : பாலச்சந்தர், ரஜினி, கமல் என்ன சொன்னாங்க?

பதில் : ரஜினிக்கு சிவாவை நேர்ல பார்த்ததும் ஆச்சரியம்.’ஸ்க்ரீன்ல பார்க்கிரதைவிட நேர்ல அழகா இருக்கீங்க’ன்னு சொன்னவர், அந்தப் படத்துல அவர் கமிட் ஆனா கதையையும் சொன்னார்.

‘பாலச்சந்தர்’ சார் ‘தில்லுமுல்லு’ பண்ணலாம்னு சொன்னப்போ எனக்கு ரொம்ப பயம். அதுவரை ஆக்க்ஷன் பண்ணிட்டு இருந்தேன். ரசிகர்கள் காமெடியில் என்னை எத்துபாங்கலான்னு எக்கச்சக்க பதற்றம். ஆனா, சார் தான் தைரியம் கொடுத்து என் பாடி லாங்குவேஜையே மாற்றி நடிக்க வெச்சார். அவர் சொன்ன மாதிரியே ‘தில்லுமுல்லு’ ஹிட். ஆனா, சிவாவுக்கு அந்த பிரச்னைகூட இல்லே. அவர் ஏற்கனவே ஹ்யூமர்ல நல்லா ஃபார்ம்ல இருக்கார். எங்கேயாவது விழா மேடையில் இருந்தா கூட அடுத்து அவர் என்ன பெசப்போரார்னு கேட்க ஆவலா இருப்பேன். அவருக்கு இது சரியான படம். வெளுத்துக்கட்டுங்கன்னு தட்டிக்கொடுத்தார் ரஜினி.

கேள்வி : என்ன இருந்தாலும் ‘ரஜினி இடத்துல சிவாவா?’ன்னு யாரும் சொல்லமாட்டாங்களா?

பதில் : அப்படியில்லை. ‘தில்லுமுல்லு’ ஒரிஜினலே அமோல் பாலேகார் நடிச்ச ‘கோல்மால்’ தான். அப்போ அதுவரை சொந்த ஸ்க்ரிப்ட்டில் படம் பண்ணிகிட்டிருந்த பாலச்சந்தர் சார், ‘கோல்மால்’ காமெடி பார்த்துட்டு, ரீமேக் பண்ண படம் தான் ‘தில்லுமுல்லு’. சிவாவை வெச்சு ‘பாட்ஷா’, ‘படையப்பா’ தான் பண்ணக்கூடாது. ‘தில்லுமுல்லு’ பண்ணலாம். ரஜினி, கமல் உள்ளிட்ட எல்லாரும் சிவாவை ஏத்துகிட்டாங்களே…?


கேள்வி : ரசிகர்கள் ‘தில்லுமுல்லு’ பாடல்களை இசையை இன்னும் ரசிக்கிறாங்க. அதை டீஸ் பண்ணிற மாட்டீங்களே?

பதில் : அதை நாங்க உணர்ந்திருக்கோம். ‘தில்லுமுல்லு தில்லுமுல்லு,’  ‘ராகங்கள் பதினாறு’ பாடல்களை அப்படியே ரீமிக்ஸ் பண்றோம். அந்த ரீமிக்ஸ் பாடலுக்கு ம்யூசிக் ஒரிஜினலுக்கு பண்ண அதே எம்.எஸ்.விஸ்வநாதன் தான். மீதி மூணு பாட்டுக்கு யுவன்ஷங்கர் ராஜா தான். இப்போ மூணு பாடல்களை வாலி எழுதுறார். அதனால் டைட்டிலில் கவிஞர் கண்ணதாசன்-வாலின்னு தான் வரும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

சில விஷயங்கள் நமது சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும்போது - நாம் விரும்புகிறோமோ இல்லையோ - அவற்றை வாழ்த்துவது தான் சிறந்தது.

வாழ்த்துவோமாக! ரஜினியும் அதைத் தான் செய்திருக்கிறார்!!

[END]


12 Responses to “‘தில்லுமுல்லு’ ரீமேக் - ரஜினி இடத்தில் சிவாவா? ரசிகர்களின் குமுறலுக்கு இயக்குனர் பதில்!”

  1. Devaraj Devaraj says:

    I agree with your last statement.
    Cheers
    Dev.

  2. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Your finishing touch has good intentions and it is really amazing.

  3. Somesh Somesh says:

    எல்லாம் ஓகே . சிவா தலைவர் இடுப்புல கை போட்டு போஸ் குடுத்திருக்கிறது கொஞ்சம் ஓவர் . டைரக்டர் எப்டி போஸ் குடுதிருக்கிராறு . இதே சிவா கமல் சார் கூட எடுத்த போட்டோ ல கை கட்டிட்டு நிக்கிறாரு . தலைவர் தான் அப்டி போஸ் குடுக்க encourage செஞ்சிருப்பாரு . இருந்தாலும் கொஞ்சம் உறுத்தல தான் இருக்கு.

    • chithamparam chithamparam says:

      எனக்கென்னவோ அது தப்பில்லைண்ணு தோணுது ஏன்னா இப்ப நம்ம அப்பாகிட்ட எவ்வளவு மரியாதை இருந்தாலும் அவர் கூட சகஜமா இருப்போம் அது அந்த இரண்டு பேருக்குமிடையிலான Understanding ஐ பொறுத்தது.
      என்னைப் பொறுத்தவரையில் ஒரு ரசிகனுக்கு தலைவன் மேல் 100% உரிமை உள்ளது. ஆனால் சிவா அவர்கள் தலைவரை எப்படிப் பார்க்கிறார் என்று தெரியவில்லை

    • kumaran kumaran says:

      somesh - எனக்கு தோன்றியதை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்

  4. Karthik Karthik says:

    தலைவரோட மிகச்சிறந்த படத்த இப்டி பண்றாங்களே..

  5. chithamparam chithamparam says:

    இணையுமா இரு சிகரங்கள்…?
    http://vanavil7.blogspot.com/2012/08/blog-post.html

    Like us on Facebook
    http://www.facebook.com/Vanavil7

    Follow us on Twitter
    https://twitter.com/#!/vanavil7

  6. Ivanga remake pani kedukatum, aana padathoda title a kandipa mathanum.
    Illena next generation nuku classic films pathi theriyathu. Padikathavan, Muratukalai, Mappilai nu sonna ipa vantha worst films nu comment panuvanga.

  7. மாரீஸ் கண்ணன் மாரீஸ் கண்ணன் says:

    என்னத்தை சொல்றது….. தலைவரே ஆசி கொடுத்துட்டு பிறகு நாம பேசி என்னாகப்போகுது. நீங்க சொல்றமாதிரி வாழ்த்துவோமாக.
    .
    மாரீஸ் கண்ணன்

  8. dr suneel dr suneel says:

    சிவாவுக்கு காமடி nallaa வரும்..இல்லைன்னு சொல்லல..ஆனா கிட்டத்தட்ட இருநூறு தடவ பாத்து ரெண்டு சிடிய தேச்ச படம்..எனக்குன்னு இல்லை பல தலைவர் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்த படம்..ஒவ்வொரு வசனமும் தலைகீழா மனப்பாடம்..தேங்காய் ஸ்ரீனிவாசன் - தலைவர் காம்பினேஷனில் ஒவ்வொரு சீனும் கலக்கும்..ஜீரணிக்கவே முடியல..

  9. R O S H A N R O S H A N says:

    என்ன சொன்னாலும் மனசு ஆரல சுந்தர்…….கண்ணுக்கு தெரிஞ்சே ஒரு கிளாசிக் படம் மொக்கை ஆகாரத பாக்கும் போது கடுப்பா இருக்கு ஜி……’ரஜினி கமல் சிவாவ ஏதுக்கிட்டாங்கன்ன அது அவங்களோட பெருந்தன்மை……..அதுக்காக எல்லாம் எங்களால இத ஜீரணிக்க முடியாது……….

    • raja raja says:

      கண்டிப்பாக ரசிகர்கள் தலைவருக்கு கடிதங்களை போட வேண்டியது தான் தலைவா வேண்டாம் என்று. தலைவர் திரைப்படங்களின் பெயரை வைத்தே சில பேர் கடுபெதினார்கள் என்றால் இப்பொழுது படத்தை எடுக்குறேன் என்று வேறு கடுபெதுகிரார்கள்

      கடவுளே இந்த படம் தான் கடைசியாக இருக்க வேண்டும் எங்கள் தலைவர் படம் வேறு எதுவும் இனிமேல் வேறு யாரும் ரீமேக் செய்ய கூடாது

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates