You Are Here: Home » Featured, Happenings » “நான் எழுதியதிலேயே என்னை மிகவும் பெருமை கொள்ளச் செய்த பாடல் எது தெரியுமா?” — மனம் திறக்கிறார் கவிஞர் வாலி!

விஞர் வாலி விகடன் மேடையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார். ஒவ்வொரு பதிலும் சுவாரஸ்யம். இந்த வாரம், “இந்தப் பாடல் எழுதினேன் என்பதற்காக நீங்கள் பெருமைப்படும் பாடல் எது?” என்று ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு வாலி கூறியுள்ள பதிலை படியுங்கள்….


_____________________________________________________________________________________
கேள்வி : இந்தப் பாடல் எழுதினேன் என்பதற்காக நீங்கள் பெருமைப்படும் பாடல்?

பதில் : ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல் தான். திருச்சி நகரில் அருள்மிகு ஐயப்பன் கோவிலில் கல்வெட்டில் முழு பாடலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆடியோவில் அனுதினமும் அந்தப் பாடல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. ராஜாஜி எழுதிய குறையொன்றுமில்லை… மறை மூர்த்தி கண்ணாவும் அருகிலேயே கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ராஜாஜிக்கு இணையாக இருக்கின்றேன்.
_____________________________________________________________________________________

வாலி அவர்கள் கூறியுள்ள இந்த விஷயம் பற்றி நாம் ஏற்கனவே மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு விரிவான பதிவை அளித்துள்ளோம்.

கீழே இடம்பெற்றுள்ள லிங்கில் அந்த பதிவை காணலாம்.

இசைஞானியின் ஊணை உருக்கும் இசையில் காலத்தால் காலத்தால் அழியாது நிற்கும் பாடல் இது.

பாடலை கேட்பதோடு மட்டுமல்லாமல் ரசிப்பதோடு மட்டுமல்லாமல், பாடல் கூறியுள்ள படி அனைவரும் அவரவரர் அன்னையை போற்றி வணங்கி வருவோமாக.

Finishing line : மேற்படி பாடல் பதிவின் போது, பாடலைப் பாடிய கே.ஜே.ஏசுதாஸ், இசையமைத்த இளைஞானி, பாடலை எழுதிய வாலி, இயக்குனர் பி.வாசு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிஐந்து பேரும் உண்மையில் கண்கலங்கிவிட்டார்கள். அவரவர் தாயை நினைத்து!

From our archives:
—————————————————————————————————————————
கோவிலில் இடம் பெற்ற ரஜினி பட பாடல் – அன்னையர் தின ஸ்பெஷல் கவரேஜ்!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=3655

உலகமே உங்க காலடியில் கிடக்கணுமா? இதோ அதுக்கு ஒரு எளிய வழி! — அன்னையர் தின ஸ்பெஷல்!!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14781
—————————————————————————————————————————

[END]

6 Responses to ““நான் எழுதியதிலேயே என்னை மிகவும் பெருமை கொள்ளச் செய்த பாடல் எது தெரியுமா?” — மனம் திறக்கிறார் கவிஞர் வாலி!”

  1. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    As mentoned by Simple Sundar, let us pray our Moms when they exist. Thanks for connecting us Sundar.

  2. raja raja says:

    உண்மையில் இந்த பாடலுக்கு நிகர் இந்த பாடலே ,திரு யேசுதாஸ் அவர்கள் எந்த மேடையில் இந்த பாடலை பாடினாலும் அப்படி லயித்து கேட்டு கொண்டே இருக்கலாம்

  3. harisivaji harisivaji says:

    மூன்று வருசத்துக்கு முன்னாடி வந்த பதிவை இதனுடன் இணைத்து பழைய நினைவுகளை எழுபிவிடீர்கள்
    மறக்க முடியாத மறக்க கூடாத பாடல் இது பாடல் மட்டும் தரும் உணர்வு வேற எந்த பாடலுக்கும் வராது

  4. மாரீஸ் கண்ணன் மாரீஸ் கண்ணன் says:

    தலைவர் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது…
    ””பசுதங்கம் புதுவெள்ளி மாணிக்கம் வரிரம் இது யாவும் ஒரு தாயுக்கு ஈடாகுமா…..ரசித்து கேட்டல் கண்களில் கண்ணீர் தானாக வரும்….
    .
    பினிஷிங் லைனில் சொன்ன செய்தி சிம்பலி சூப்பர்…
    .
    மாரீஸ் கண்ணன்

  5. R.Ramarajan- Madurai R.Ramarajan- Madurai says:

    Thalaivar thaayai urugi nadithirupar. In telugu, our S.P.B singed this song

  6. ramesh er ramesh er says:

    என்னுடைய மொபைல் போனின் caller tune 7 வருடங்களாக மாறாமல் ஒலிக்கும் பாடல் , தலைவரின் நடிப்பு , யேசுதாஸ் அவர்களின் குரல் , இளையாராஜாவின் இசை , வாலி யின் வரிகள் என கலந்த கதம்பம் இந்த பாடல், எல்லா தாய் க்கும் சமர்ப்பணம் .
    விலை மீது விலை வைத்து
    கேட்டாலும் கொடுத்தாலும்
    கடைதன்னில் தாய் அன்பு கிடைக்காதம்மா

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates