You Are Here: Home » Featured, Happenings » என்ன பாவம் செய்தார் பவர் ஸ்டார்? சொன்னாங்க… சொன்னாங்க… (3)

1) என்ன பாவம் செய்தார் பவர் ஸ்டார்?

‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசனை ஏன் எல்லா தொலைக்காட்சிகளும் அறிவிப்பாளர்களும் கிண்டல் செய்கிறார்கள், எல்லா பத்திரிக்கைகளும் கிண்டல் செய்கின்றன என்று எனக்கு புரியவில்லை.

கொஞ்ச நாளைக்கு முன்னாள் ‘தமிழ் படம்’ என்றொரு படம் வந்தது. தமிழ் சினிமாவின் அத்தனை இயக்குனர்களின் டவுசரையும் கழற்றினார்கள். கிட்டத்தட்ட அதே வேலையைத் தான் சீனிவாசனும் செய்கிறார்.

நமது பெரிய ஹீரோக்கள் செய்யாத அபத்தங்கள் எதையும் சீனிவாசன் செய்துவிடவில்லை. அவர்கள் இவ்வளவு காலமாக உளறியதைவிட அவர் ஒன்றும் அதிகம் உளறிவிடவில்லை. ஆனால் ஒருவரை நாம் ஹீரோவாகவும் அதே வேலையை செய்யும் இன்னொருவரை காமெடியனாகவும் பார்க்கிறோம். இது அநீதி.

இன்றைக்கு தமிழ்நாட்டை ஆளவிரும்பும் அனைத்து நடிகர்களும் தங்களைப் பற்றி என்னென்ன மூட நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்களோ அதையே தான் பவர் ஸ்டாரும் செய்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் மேல் பணம் மோசடி குற்றச்சாட்டு கூட வந்துவிட்டது. நீங்கள் கரெக்ட்டா தான் போய்கிட்ட்ருகீங்க பாஸ்….

(குங்குமத்தில் ‘நிழல்கள் நடந்த பாதை’ தொடரில் மனுஷ்யபுத்திரன்)

2) மனிதர்களுக்குள் ஏன் சண்டை ?

ஒரு உயிர் மனித ஜென்மமாக பிறவி எடுப்பதற்கு முன்னால், ஒரு செல் உயிரினமாக பிறவி எடுத்த பின்பு, பல ஆயிரம் வருடங்களாக பல பல பிறவிகளை கடந்து மனிதனாக பிறவி எடுக்கிறது. அதனால் தான் மனிதனின் குணங்கள் மிருக குணங்களை கொண்டு கூடவே அறிவையும் கொண்டுள்ளது.

நிஜமாகவே வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வது ஆகும். மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழவேண்டுமென்றால் போதும் என்ற மனம் வேண்டும். பிற உயிர்களை நேசிக்கவேண்டும். பிறருக்கு உதவவேண்டும்.

சாகும்போது எதுவுமே கொண்டுசெல்ல முடியாது என்று உணரவேண்டும். நம் உடலை விட்டு உயிர் பிரிந்து போனபின், சில காலங்கள் கழித்து நம் பக்கத்து பரம எதிரி வீட்டில் மகனாகவோ பேரனாகவோ பிறந்தால், நம் போன ஜென்மத்து சொந்த மகனையோ அல்லது கொஞ்சி விளையாடிய பேரனையோ நம் பரம எதிரியாகவோதான் பார்ப்போம். அதனால் பிறரை தன் உயிர் போல் நேசிக்கவேண்டும் .

ஒரு ஊரில் இரு தரப்பு மக்கள் ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டார்களாம். அதை பார்த்து ஒரு புறாகுஞ்சு தாய்புறாவிடம் அவர்கள் ஏன் ஒன்றை ஒன்று அடித்துக்கொள்கிறார்கள் என்று கேட்டதாம்.அதற்கு தாய் புறா சொன்னதாம்,நாம் கோவிலில் வசித்தபோது நம்பெயர் புறா,கோவில் குடமுழக்கின் போது நாம் சர்ச்சில் வசித்தோம் அப்போதும் நம்பெயர் புறாதான். டிசம்பர் மாதம் வெள்ளை அடித்தபோது தர்காவில் குடி புகுந்தோம் அப்போதும் நம்பெயர் புறாதான். ஆனால் மனிதன் கோவில் போனால் அவன் இந்து ,சர்ச் போனால் அவன் கிறிஸ்தவன், தர்கா போனால் அவன் முஸ்லிம் என்று ஆகிவிடுகிறான் அதனால் அவர்களுக்குள் சண்டை என்று கூறியதாம்.இது எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய கதை.

நாமும் எல்லோரையும் நேசிப்போம்.

(சுரேஷ்  via LivingExtra.com)

3) அவளது அகராதியில் - ‘ஜென்டில்மேன்’

அவளது அகராதியில்
எவனொருவன் உயிரைக்கொடுத்து விரும்பி
விருப்பங்களையும் கனவுகளையும் நிறைவேற்றக்காத்திருந்து
அவள் கூறிய எல்லாவற்றிற்கும் “சரி” என்று சொல்லி
கடைசியில் “உன்னைப்பிடிக்கவில்லை”
என்று அவள் கூறும்போது,
சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொள்ளும் முட்டாள் எவனோ…
அவனே ‘ஜென்டில்மேன்’
இதை எழுதும் நானும் ஓர் ஜென்டில்மேன்

(ராஜ் @ www.lovewarehouse.blogspot.in)

4) காந்தி ஒரு பொது சொத்து - எப்படி?

காந்தியை எனக்குப் பிடிக்கும்.

அவரை விமர்சிப்பதும்… பிடிக்காது… என்று சொல்லுவதும் ஒரு நாகரீகம் ஆகியிருக்கும் காலத்தில் இந்த ஒரு வரி கருத்து இலேசான புன்னகை வரவழைக்கலாம். உண்மையில், அத்தகையவர்களை பார்க்கும் போது பரிதாபமே ஏற்படுகிறது. என்னளவில் காந்தி என்றால் வழுக்கை தலையும் போக்கை சிரிப்பும் கொண்டு புகைப்படங்களில் சிரிக்கும் கிழவர் அல்லர். அவர் எழுதி வைத்துவிட்டு போயிருக்கும் சுமார் பதினாறாயிரம் பக்கங்கள்.

தன்னைத்தானே விதைத்துகொண்டு தானே முளைவிட்டு ,முட்டி மோதி மேலெழுந்து வந்து காற்றில் அலையும் ஒரு காட்டு கொடி போலத்தான் அவரது சிந்தனைகள் எனக்கு தோற்றமளித்தன . வேரிலிருந்து உச்சாணி காம்பில் துளிர்ந்திருக்கும் கட்ட கடைசி இலை வரை மருத்துவ குணம் கொண்ட மூலிகை கொடி அது.

ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் மானுடக்குலத்தின் நலனுக்காகவே சிந்தித்து இருக்கிறான் என்பது எப்பேர்பட்ட விஷயம்! ஏன் நம்மால் அதை, அதன் முழுபரினாமத்துடன் உணர முடியாமல் போய்விட்டது?

இந்தியாவை பொறுத்த வரை காந்தி ஒரு பொது சொத்து. யார் வேண்டுமானாலும் சேதப்படுத்தலாம் என்றாகிவிட்டது. ஒரு மாறுதலுக்கு காந்தி ஜெயந்தி அல்லாத நாளில் கூட அவர் சிலையின் மீது படிந்து கிடக்கிற எச்சங்களை துடைத்து சுத்தபடுத்தலாம் என்று நினைத்தேன் , அதனால் இவற்றை எழுதினேன்.

பிரச்சாரம் என் நோக்கமில்லை. எனக்கு அது முடியவும் முடியாது. ஆனால் நமது வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத எது ஒன்று பற்றியும் அவர் சிந்தித்ததில்லை,

காலத்தால் கொள்ளை கொண்டு போகமுடியாத மிக சில அப்பூர்வமான சிந்தனையாளர்களுள் ஒருவர் அவர்.

(பா.ராகவன் @ Dr.Suneel’s www.gandhitoday.in)

5) அது மட்டும் எப்போதும் முடியாது….

ஒரு தேனியிடம் பறவை கேட்டது.

“ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் நீ தேனை தயாரிக்கிறாய். ஆனால் மனிதன் அந்த தேனை உன்னிடமிருந்து திருடிவிடுகிறான். அதற்காக நீ வருத்தப்படவில்லையா?”

தேனி புன்னகையுடன் பதில் சொன்னது. “இல்லை… இல்லவே இல்லை. மனிதன் என்னிடமிருந்து தேனை மட்டும் தான் திருட முடியும். ஆனால் தேனை உண்டாக்கும் கலையை அவன் ஒரு போதும் என்னிடம் இருந்து திருட முடியாது.”

(அரசு பதில்கள் @ குமுதம்)

6) இறைவன் பிரம்படியில்….

“ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக்கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒரு சில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒளி/ஒலிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்ப திரும்ப வந்து நம்மை பாடாக படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான்.

எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டைனகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியேத. அது  சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரமே இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழெமாழி உண்டு. “இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை”. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித்தோற்றத்தை வைத்து எதையும் எடைபோடுவது சரியானதாக இருக்காது.

(செந்தில்குமார் @ eramsenthil7.blogspot.in)

————————————————————————————————————

படித்ததில் பிடித்தது….

ஆணின் காதல் தோல்விக் கதைகளை பரிதாபத்துடன் கேட்பவர்கள்
பெண்ணின் அத்தகைய கதைகளை குற்றவாகளின் வாக்குமூலமாக பாவிக்கிறார்கள்.
@ twitter.com/arattaigirl

சித்தம் கலங்கித் தெருவில் திரிபவர்கள் எப்போதும் வைத்திருக்கும் மூட்டை போல நாமும் நம் மனதில் சேர்த்தே வைத்திருக்கிறோம் எத்தனையோ குப்பைகளை.
@ twitter.com/jroldmonk

நண்பர்களே என்னோட பர்சனல் டுவிட்டர் அக்கவுன்ட் ஒன்னு புதுசா ஓபன் பண்ணியிருக்கேன். A to Z அடிச்சி தூள் கிளப்பலாம் வாங்க. ஃபாலோ செய்ய விரும்புபவர்கள் பண்ணலாம். https://twitter.com/simplesundar
————————————————————————————————————

Also check :
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சொன்னாங்க… சொன்னாங்க…. (2)
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=15842

சொன்னாங்க… சொன்னாங்க…. (1)
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=15649
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

[END]

10 Responses to “என்ன பாவம் செய்தார் பவர் ஸ்டார்? சொன்னாங்க… சொன்னாங்க… (3)”

  1. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    உங்கள் போடோக்ராப்’ஸ் சூப்பர் னா… அனைத்துமே அருமை குறிப்பாக இறைவனை பற்றியது மிக அருமை .. //எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டைனகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியேத//

    என்றும் தலைவரின் தனி வழியில் ரஜினிராக்ஸ் எஸ்.எம்.எஸ். குரூப்..

  2. dr suneel dr suneel says:

    காந்தி தளத்தை நீங்கள் வாசிக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன்..நன்றி, ஜி..

  3. David Baasha David Baasha says:

    அனைத்தும் அருமை. என் மனதில் இருந்த எண்ணங்களை வார்த்தையாக வரியாக படிக்கும் போது என் வெற்றி கண்ணில் தெரிகிறது. நன்றி!

  4. RAJA RAJA says:

    பவர் ஸ்டார் அவர்கள் செய்வது சிலருக்கு கோமாளி தனமாக தெரிகிறது ,இருந்தாலும் அவர் நுங்கம்பாக்கத்தில் லத்திகா மருத்துவமனை நடத்தி வருகிறார் ஏழைகளுக்கு குறைந்த விலையில் மருத்துவம் ,இதை எந்த பத்திரிகைகளும் எழுதுவதில்லை ,அது ஏன் என்று தெரிவதில்லை ,அவர் சூப்பர் ஸ்டார் தான் எனக்கு போட்டி என்று சொல்வது சிலருக்கு கிண்டலாக படலாம்,இன்று பல நடிகர்கள் நம் தலைவரை போற்றி விட்டு ,மனதுக்குள் அந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி மேல் கண் வைத்து கொண்டு வெளியில் நடிப்பதை விட இவர் வெளிபடையாக பேசுவது எவ்வளவோ மேல்.

    எங்கள் தலைவர் அந்த நாற்காலி யாருக்கு வேணும் என்றாலும் சொந்தம் என்று என்றோ சொல்லி விட்டார் அதை பிடிக்க நண்டு சிண்டு முதல் பல பேர் போட்டி போட்டு கொண்டு இருகிறார்கள் அதில் இவரும் ஒருவராக இருந்தால் மற்றவர்களுக்கு என்ன ,அதை எட்ட முடியாது ,இருந்தும் பல பேர் போட்டி இடுகிறார்கள் அதஏய் தான் இவரும் செய்கிறார் என்ன கொடும சார் இது மற்றவர்கள் செய்தால் பாராட்டும் இந்த பத்திரிக்கை உலகம் இவர் செய்தால் மட்டும் கிண்டல் செய்கிறது

    மகாத்மா காந்தி அஹிம்சையை விட வேறு ஒரு உயர்ந்த ஆயுதம் எதுவும் இல்லை என்பதை நிருபித்த மகான் ,ஆனால் அவரை பல பேர் அவருடைய பிறந்தநாளில் விடுமுறை விடும் பொழுது தான் நினைகிறார்கள் ,என்னை பொறுத்தவரை இந்த நாட்டில் சிலைகளே தேவை இல்லை அதை விட்டு விட்டு அவர்கள் செய்த தியாகம் ,போராட்டங்களை படிக்கும் குழந்தைகளுக்கு போதித்து போராட்ட குணத்தை கொண்டு வர வேண்டும் ,போராட்டம் என்றால் அஹிம்சை முறை போராட்டத்தை சொல்கிறேன் ,இன்று பல பேர் பெருமைக்காக சேகுவாரா அவர் இவர் என்று அவர்களை பற்றி தெரியாமலை அவர் படம் போட்ட T ஷர்ட் போட்டு திரிகிறார்கள் அதை விட்டு விட்டு காந்தி ,நேதாஜி போன்றவர்களை பற்றி தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தாலே போதும் நம் நாட்டில் இல்லாத போராட்ட வீரர்களா (காந்தி ,நேதாஜி ,கட்டபொம்மன் ,வ ஊ சி ,பகத் சிங்,) இப்படி பல பேர் உள்ளார்கள்

  5. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

    தேனீ சொல்லும் பதிலும், இறைவன் பிரம்படியும் சூப்பர். சொன்னாங்க சொன்னாங்க பகுதி அருமையாக இருக்கிறது.

  6. Satheesh Satheesh says:

    sir, really amazing collections of news. I could easily guess your reading habit with these. Kudos. Actually these kind of stuff really helps us to build our moral values. Pleaze continue providing this kind of newz.

    I totally agree what Manusha Puthran sir says on Powerstar Srinivasan. Both of them were present in writer S.Ramakrishnan’s felicitaion where our Superstar too participated as Chief Guest. I wonder kumudam question answers too contains this kind of stuff. honey bee news is wonderful. kudos.

  7. விஜய் ஆனந்த் விஜய் ஆனந்த் says:

    //இன்று பல பேர் பெருமைக்காக சேகுவாரா அவர் இவர் என்று அவர்களை பற்றி தெரியாமலை அவர் படம் போட்ட T ஷர்ட் போட்டு திரிகிறார்கள் அதை விட்டு விட்டு காந்தி ,நேதாஜி போன்றவர்களை பற்றி தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தாலே போதும் நம் நாட்டில் இல்லாத போராட்ட வீரர்களா (காந்தி ,நேதாஜி ,கட்டபொம்மன் ,வ ஊ சி ,பகத் சிங்,) இப்படி பல பேர் உள்ளார்கள்//
    -
    அருமையாகச் சொன்னீர்கள் ராஜா சார்…..இன்றைய நிலையில் நம் நாட்டு பெருமைகள் மறக்கப்பட்டு, அயல்நாட்டு பெருமைகளும் செய்கைகளும் தான் அதிகம் நிறைந்துள்ளன..! இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும்….! அந்த மாற்றங்களை நம்மிடம் இருந்தே துவங்குவோம்….!
    -
    “வாழ்க பாரதம்; வெல்க பாரதம் ”
    -
    விஜய் ஆனந்த்

  8. ravi ravi says:

    //கொஞ்ச நாளைக்கு முன்னாள் ‘தமிழ் படம்’ என்றொரு படம் வந்தது. தமிழ் சினிமாவின் அத்தனை இயக்குனர்களின் டவுசரையும் கழற்றினார்கள். கிட்டத்தட்ட அதே வேலையைத் தான் சீனிவாசனும் செய்கிறார். - மனுஷ்யபுத்திரன் //

    இந்த படத்தில் …இயக்குனர்கள் trouser கழட்டபடவில்லை …….ஹீரோக்கள் trouser கழட்ட முயற்சி செய்வதாக நினைத்து எடுத்த படம்

    —————————————————————————-
    இயக்குனர்கள் & ஹீரோக்கள் மட்டுமல்ல… ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் டவுசரையும் கழற்றினார்கள். அது தான் உண்மை.
    - சுந்தர்

  9. vel vel says:

    Sun —- don;t know where the owners are
    vijay tv — they support only their people
    thalamurai tv — to support their thalamurai

    plz allow the low key people come to power….itz time for them to come…….

  10. napoleon.s.kumar napoleon.s.kumar says:

    அற்புதமான பதிவு. Hats off !!!

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates