









You Are Here: Home » Featured, Rajini Lead » “என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே”…. தமிழக முதல்வர் தலைமையேற்ற எம்.எஸ்.வி அவர்களின் பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரை! முழு வடிவம்!!
ஜெயா டி.வி.யின் 14 வது ஆண்டுவிழாவும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழாவும் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை 5.00 மணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினி, கலைஞானி கமல் ஹாசன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் நாம் நண்பர்களுடன் கலந்துகொண்டோம். நிகழ்ச்சி குறித்த மற்ற சுவையான அப்சர்வேஷங்களை பின்னர் சொல்கிறேன். நீங்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் உரை இதோ. (எழுத எழுத அப்டேட் செய்கிறேன்). Photographs will be updated later.
சூப்பர் ஸ்டாரின் பெயர் மைக்கில் அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே, அரங்கமே கைத்தட்டல்கள் அதிர்ந்தது.
(கைத்தட்டல்… விசில்) “இந்த விழாவின் நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி சார் அவர்களே, இந்த விழாவிற்கும் தலைமை தாங்க வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களே, (கைத்தட்டல்… விசில்) இந்த மேடையில் அமர்ந்திருக்கும் என்னுடைய குருநாதர் கே.பி. சார் அவர்களே, சரவணன் சார் அவர்களே, இசைஞானி இளையராஜா அவர்களே (கைத்தட்டல்… விசில்), என்னுடைய நண்பன் கமல் ஹாசன் அவர்களே(கைத்தட்டல்… விசில்), இங்கே வருகை தந்திருக்கும் சோ சார் அவர்களே, சிவக்குமார் அவர்களே, மற்றும் திரையுலக சிறந்த பெரியவர்களே, அமைச்சர்களே, பத்திரிக்கை நண்பர்களே, என்னை வாழ வைக்கும் (பலத்த கைத்தட்டல்… விசில்), வாழ வைத்த தமிழக மக்களே (கைத்தட்டல்… விசில்) அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். (கைத்தட்டல்… விசில்)…..
“சி.எம். பதவிக்கு பதவிக்கு வந்தபிறகு நான் கேள்விப்பட்டேன் இண்டஸ்ட்ரில இருக்கிறவங்க எல்லாரும் அவங்களுக்கு பாராட்டுவிழா நடத்தனும்னு சொல்லி ஆசைப்பட்டாங்க. ஆனா அவங்க தான் “இப்போ வேண்டாம்”னு சொன்னதா கேள்விப்பட்டேன். அவங்களே இப்போ இங்கே வந்து எம்.எஸ்.வி.அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துறாங்கன்னு சொன்னா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்ச மாதிரி. மிகப் பெரிய விஷயம். இது உங்களுக்கும் கூட ஒரு மிகப் பெரிய சந்தர்ப்பம். இல்லேன்னா… உங்களை கூட பாராட்ட இப்போ எங்களுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்க முடியாது.”
“முதல்ல ஜெயா.டி.வி. 13 ஆண்டுகள் முடிந்து 14 ஆண்டுகள் அடியெடுத்து வைக்கிறாங்க. அந்த சாதனைக்காக அங்கே வேலை பார்க்குற அத்துனை பேருக்கும் நான் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிச்சிக்குறேன். நானும் ஜெயா.டி.வி. நிகழ்ச்சிகளை நிறைய பார்க்குறேன். சரவணன் சார் சொன்ன மாதிரி காலைல போடுற நிகழ்ச்சிகள் (பக்தி, ஆன்மிகம்) எனக்கு ரொம்ப பிடிச்சவை. அதே போல, இந்த நியூஸ் போடுறதுக்கு முன்னால போடுற ‘வரலாற்று சுவடுகள்’ எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கப்புறம் சோ சாரோட ‘எங்கே பிராமணன்’ தொடரை நான் ரொம்ப விரும்பி பார்ப்பேன். அதுல சோ சார் கொடுக்குற விளக்கங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா அது அப்புறம் ஸ்டாப் ஆயிடுச்சு. நான் கூட சோ சார் கிட்டே இது பத்தி கேட்டேன். அதுக்கு சோ சார் சொன்னனாங்க… “சி.எம். கூட இது பத்தி என்கிட்டே கேட்டாங்க. “எனக்கு நேரமில்லே!”
சி.எம்.சொல்லி கூட கேட்க்காத ஒரு ஆள் தமிழ் நாட்டுல இருக்காங்கன்னு சொன்ன அது சோ சார் தான். (பலத்த கைத்தட்டல்… விசில்)
சோ அவர்களை காமிரா குளோசப்பில் காட்டுகிறது. அவர் தலையில் கை வைத்துக்கொள்கிறார். “இதையெல்லாம் ஏன்பா சொல்றே நீ?” என்கிற அர்த்தத்தில்.”
“ஒரு சின்ன செடியா இருந்த ஜெயா டீ.வி. இன்னைக்கு கமல்ஹாசன் சொன்ன மாதிரி ஒரு மரமா வந்திருக்கு தன்னோட சொந்த முயற்சியால என்பது பெரிய விஷயம்.”
“எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி சார் அவர்களுக்கு இங்கே பாராட்டு விழா. இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் எல்லோரைவிட நான் சினிமாவில் ஒரு ஜூனியர் தான். எம்.எஸ்.வி. அவர்களை பாராட்டுவதற்கு இளையராஜா சார், கமல்ஹாசன், கே.பி.சார் அவங்களே தயங்கும்போது வார்த்தைகள் இல்லைன்னு சொல்லும்போது நான் மட்டும் எப்படி பேசுவேன்? என்னோட படங்கள் கூட அவர் நிறைய செய்யலே.”
“ஆனா பெங்களூர்ல நான் இருக்கும்போது - கன்னடா பேசுறவங்க எல்லாம் - “போனால் போகட்டும் போடா”ன்னு பாடுவாங்க. அதோட மீனிங்கே தெரியாமலே. “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்”னு பாடுறாங்க. அதோட மீனிங்கே தெரியாமலே.” (பலத்த கைத்தட்டல்… விசில்)
“நான் மொழியே தெரியலேன்னாலும் படங்களுக்கு போவேன். அந்த கதையோட அம்சத்தை தெரிஞ்சிக்கிறதுக்கு. ‘சர்வர் சுந்தரம்’ அப்படின்னு ஒரு படம். ஒரு சர்வர் சினிமா ஆக்டர் ஆகுறான் அப்படின்னு ஒரு கதை. நானும் கண்டக்டரா இருந்து சினிமா ஆக்டரா ஆகணும்னு ஒரு நினைப்பு. கனவு. அதனால அந்தப் படத்துக்கு போனேன். அந்த படத்துக்கு நான் போயிருந்தபோது, ‘அவளுக்கென்ன அழகிய மனம்’ அப்படின்னு ஒரு பாட்டு. அதுல மியூசிக் வாசிக்கிற மாதிரி, ஒரு MUSICIAN கம்போஸ் பண்ணும் சீன வர்றப்போ ஒரே கைதட்டல் விசில். ஒரு எம்.ஜி.ஆர். ஒரு சிவாஜி இங்கல்லாம் பர்ஸ்ட் டைம் இன்ட்ரோட்யூஸ் ஆகும்போது எப்படி இருக்கும்? அந்த மாதிரி ஒரு கைதட்டல் ஒரு விசில். எனக்கு புரியவேயில்லை. எதுக்கு எல்லாரும் இதுக்கு இப்படி கை தட்டுறாங்கன்னு. ஏன் இவ்ளோ ஆரவாரம்னு. என் பக்கத்துல இருக்குறவருகிட்டே கேட்டேன். “அந்த மியூசிக் கம்போஸ் பண்ற மாதிரி ஒருத்தரை காட்டுறாங்க இல்லே… அவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்கு தான் நாங்க கைதட்டுறோம்” அப்படின்னு சொல்றார்.”
“ஒரு இசையமைப்பாளருக்கு இவ்ளோ ஆரவாரம்… ஃபேன்ஸ்… மதிப்பு…. அப்படிங்கிறது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்திச்சு. அதுக்கப்புறம் நான் மெட்ராஸ் வந்ததுக்கப்புறம், ‘அபூர்வ ராகங்கள்’ சமயத்துல தான் நேர்ல பார்த்தேன். நான் சினிமாவுல பார்த்ததுக்கும் நேர்ல பார்க்குறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. நான் பார்க்கும்போது காவி உடையில, நேத்தியல் குங்குமம் சந்தனம் இதெல்லாம் வெச்சிகிட்டு இருந்தாரு.”
“எனக்கு ‘மூன்று முடிச்சு’ படத்துல நடிக்கும்போது படத்துல நான் பாட்டு பாடும்போது, அந்த போட்ல வர்ற ஸாங்… ‘மனவினைகள் யாருடனோ’ அந்த ஸாங்…. எனக்கு பெக்கூளியரான ஒரு ஃபேஸ்… அதுக்கு பெக்கூளியரான ஒரு வாய்ஸ் வேணும்னு, எம்.எஸ்.வி.சாரைத் தான் எனக்கு பாட வெச்சாங்க. எனக்கு முதன் முதலா பாடினது எம்.எஸ்.வி. சார் தான். அதுக்கப்புறம் நினைத்தாலே இனிக்கும்… ‘சம்போ…சிவ சம்போ…’ பாட்டை பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க…”
“எம்.எஸ்.வி. & ராமமூர்த்தி இந்த மாதிரி சாதனையாளர்களை பத்தி பேசனும்னு சொன்னா எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. அதாவது இந்த மரணம்குறது இயற்கையானது. எல்லாருக்கும் நிகழக்கூடியது. இந்த மரணம் என்பது ஒரு தடவை தான் என்றில்லை… ரெண்டு முறை நிகழும்.”
“நிறைய பேருக்கு அதாவது 90% ஜனங்களுக்கு ஒரு தடவை தான். அதாவது உயிர் உடலைவிட்டு போனா ஃபினிஷ். அவ்ளோ தான்.”
“மிகப் பெரிய பேரும் புகழும் பெற்றவர்கள் அந்த பெயரையும் புகழையும் தோல்வியாலேயோ இல்லே வேற சில காரணங்களினாலோ அந்த பெயரையும் புகழையும் இழந்துவிட்டால் அப்போ அவன் சாகிறான். அப்போ ஒரு முறை மரணம் நடக்கும். அதற்கப்புறம் இயற்கையாக உயிர் பிரியும்போது ரெண்டாவது முறையாக மரணம் நிகழும். ஆனா மரணமே இல்லாத சில பேர் இருக்காங்க. அவங்க 1% தான் இருப்பாங்க. அவங்க வாழும்போதும் சரி.. இறந்து போன பிறகும் சரி… அவங்க பேரும் புகழும் என்னைக்குமே இருக்கும். அவங்கல்லாம் பார்த்தீங்கன்னா சாகா வரம் பெற்றவர்கள். (கைத்தட்டல் அடங்க சற்று நேரமாகிறது. அவரால் பேச முடியவில்லை. பின்னர் மீண்டும் தொடர்கிறார்.) அவங்கல்லாம் ஒரு தனிப்பிறவி.”
“நார்த்துல பார்த்தீங்கன்னு சொன்னா… சினிமா துறையில, வி.சாந்தாராம், தாதா சாகேப் பால்கே, எஸ்.டி.பரமன்… நம்ம தமிழ்நாட்டுல பார்த்தீங்கன்னு சொன்னா… நம்ம காமராஜர் அவர்கள்… பெரியார் அவர்கள்… அறிஞர் அண்ணா அவர்கள்… புரட்ச்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், (கைத்தட்டல்… விசில்), நடிகர் திலகம் சிவாஜி அவர்கள், கண்ணதாசன் அவர்கள், இவங்க எல்லாரும் மறைந்தாலும் அவர்கள் பெயரும் புகழும் மறையவில்லை. அதே போல, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சில சாகா வரம் பெற்ற பிறவிகள் நம்மோடு. அரசியலில் என்னுடைய ஆருயிர் நண்பர் மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் (கைத்தட்டல்)… விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள். இவங்களுக்கெல்லாம் தோல்வி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.”
“வெற்றியடைஞ்சா சந்தோஷம் இருக்கும். தோல்வியடைஞ்சா மனசு கொஞ்சம் வருத்தப்படும். ஆனா அவங்க பேருக்கும் புகழுக்கும் எந்த பாதிப்பும் வராது. ஏன்னா… அதையெல்லாம் தாண்டி ஒரு லெவல்ல அவங்க இருப்பாங்க. தோல்வி, வெற்றிகளை தாங்கிக்கொள்கிற ஒரு சமமான மனநிலையில இருப்பாங்க. அந்த வரிசையை சேர்ந்தவங்க நம்ம புரட்சி தலைவி அவர்கள்… எம்.எஸ்.வி. அவர்கள். அவங்க வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்திருக்கிறேன். அவங்க கூட பழகியிருக்கிறேன். அப்படிங்கிற மனசு சந்தோஷத்தோட இந்த விழாவுல எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு புரட்சித் தலைவி அவர்கள் இன்னும் மக்களுக்கு நிறைய சேவை செஞ்சி, இந்தியா மட்டுமில்லே உலக அளவில் அவர் பேரும் புகழும் பெறவேண்டும்…. அதற்கு அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் அந்த இறைவன் வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வணங்கி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.” (கைத்தட்டல் விசில்… கைத்தட்டல் விசில்).
…THALAIVAR SPEECH ENDS
Photographs will be updated by morning. Other updates later.
Thank you!
[END]
சுந்தர் நண்பா கலக்கீட்டீங்க.அதி விரைவில் செய்தி தந்ததற்கு நன்றி
என்ன ஜி இவ்வள்ளவு சீக்கிரமா அப்டேட் பண்றீங்க சந்தோசம் …இன்னும் கொஞ்சம் பாஸ்ட் அஹ பண்ணுங்க ..
Thalaivar’s opening speech is like ;his opening scene in the film. Great show. Thanks for the update Sundar.
photo pls watching jaya tv from 9′o clock but they r showing our god face for only one second …pls update the photo …pls don’t wait for your next update…
கலக்கீட்டீங்க.அதி விரைவில் செய்தி தந்ததற்கு நன்றி
thanks for the quick updates.
வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத நிகழ்ச்சி இது…தலைவரின் தைரியத்தை எப்படி பாராட்டுவதே என்று தெரியவில்லை….ஜெ மேடையில் கலைஞரை பற்றி சொன்னார் பாருங்க…ஹையோ என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.
.
என்னதான் நிகழ்ச்சியை நேரில்பார்தலும் நம் தளத்தில் பர்கும்போத் கிரிக்கெட்டை நேரில் பார்பதைவிட டிவி-இல் பார்க்கும்போது கிடைக்கும் மனநிறைவு இதில் கிடைக்கும்.
.
அதிலும் லைவ் அப்டேட் மாதிரி சுட சுட கிடைக்கும்போது சொல்லவா வேண்டும்..சீக்கிரம் அப்டேட் பண்ணுக சுந்தர்.
Infact this style is also peculiar
Waiting for each paragraph indeed gives a thirill !!!
ப்ளீஸ் அப்டேட் தி video
———————————————
Video coverage only by Jaya tv. It will telecasted soon. Will update on this accordingly
- Sundar
தாங்கள் எதாவது வர்த்தக எழுத்தாளரை பணியில் அமர்த்தி உள்ளீரா? இவ்வளவு அருமையான உரைநடைஐ படித்து பல நாட்கள் ஆகி விட்டன.
எப்பா என்ன ஒரு உரை இது
எங்கள் சரிதிரனின் சரித்திர உரையில் இதுவும் ஒன்று
சிட்டி ரோபோ அளவிற்கு விரைவாக இருக்கும் சுந்தர் அண்ணாவை பார்த்து ஆச்சர்யபடுகிறேன்!! அவர் உழைபிர்க்கும் அற்பனிபிர்க்கும் என் நன்றிகள்
Hats off to u சுந்தர். இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் பங்கினை இத விட சூப்பரா வேற யாரும் கவர செஞ்சுற முடியாது. ஜெயா டிவில முழு வீடியோவும் வரும்முங்குறீங்க?
@ Sivaji Rao வெறியன்… ‘வர்த்தக எழுத்தாளர்….’ போன்ற கமெண்ட்டுகளைத் தவிர்ப்பது மிக நல்லது. விளையாட்டுக்கு கூட. ஏனெனில் நமக்கு சுந்தர் அவர்களைப் பற்றி தெரியும். ஆனால் புதிதாக வருபவர்கள் ஏதோ உண்மையில் அவர் இதற்காக தனியாக யாரையாவது பணியமர்த்தியிருக்கிறார் என்று நினைத்துவிடப்போகிறார்கள்.
இன்று நேற்றல்ல 2005 ஆம் ஆண்டு முதல் சுந்தர், தலைவர் கலந்துகொள்ளும் விழாக்களில் அவர் கலந்துகொண்டால் இது போன்று ஒரு விரிவான பதிவை அன்றைக்கே எப்படியாவது அளித்துவிடுவார். (இவர் வர்ணனையில் சிவாஜி வெள்ளி விழா நீங்கள் படிக்கவில்லையே? படிச்சிப் பாருங்க!)
புரட்சி தலைவி முன்னாடி கலைஞர் பத்தி பேச ஒரு தைரியம் வேணும் . அது தலைவர் க்கு மட்டும் தான் இருக்கு .. சாகா வரம் பட்டியலில் நீங்கள் தான் நம்பர் ஒன் தலைவா
Agree With senthilmohan appaji. (like)
We used to read rajini fans forum just for his updates.
Why did he not speak about Jayalalitha in any of the functions when Karunanithi was CM?
——————————————————-
2009 ஆம் ஆண்டு, அக்டோபர் 9 அன்று இதே நேரு உள்விளையாட்டரங்கில், பெப்சி தொழாளர்கள் சார்பாக அவர்களுக்கு நிலம் ஒதுக்கிய அப்போதைய முதல்வர் கலைஞருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ரஜினி, பெப்சி தொழிலாளர்களுக்கு ஜெயலலிதா அவர்கள் உதவ முன்வந்ததை பற்றி மறக்காது குறிப்பிட்டார்.
- சுந்தர்
@Mr.RAJ
As SUNDAR told in FEFSI function THALAIVAR thanked JJ regarding LAND allocation for FEFSI members
IN SIVAJI silver jubilee function THALAIVAR thanked JJ for spending time to see sivaji film
like that many occassions THALAIVAR didn’t fear to say the truth in front of anyone
நம்மோடு. அரசியலில் என்னுடைய ஆருயிர் நண்பர் மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் (கைத்தட்டல்)… விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள். இவங்களுக்கெல்லாம் தோல்வி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.”
*************************
இந்த தில்லு ….நேர்மை …எவன் கிட்ட இருக்கு ….நீ சூப்பர் தலைவா !!!
Hi Sundar,
Very fast update.. Waiting to see the video with his stylish talking…
Wonderful speech…
I’m sure the below lines will definitely suits with our Thalviar…
//வெற்றியடைஞ்சா சந்தோஷம் இருக்கும். தோல்வியடைஞ்சா மனசு கொஞ்சம் வருத்தப்படும். ஆனா அவங்க பேருக்கும் புகழுக்கும் எந்த பாதிப்பும் வராது. ஏன்னா… அதையெல்லாம் தாண்டி ஒரு லெவல்ல அவங்க இருப்பாங்க. தோல்வி, வெற்றிகளை தாங்கிக்கொள்கிற ஒரு சமமான மனநிலையில இருப்பாங்க. அந்த வரிசையை சேர்ந்தவங்க//
Nice coverage! Thank you so much for bringing live before us.
waiting for telcast in Jaya.
Interested to know who got the maximum attention, claps in the function ? is it our SS ?
please share those details if possible.
சூப்பர் அப்டேட் ஜி…….படிக்க படிக்க நிகழ்ச்சியை நேர்ல பார்த்த மாதிரியே இருக்கு……..cm முன்னாடியே கலைஞர பாராட்டுரார்ணா தலைவரோட தைரியம் யாருக்கு வரும்……கெத்து……மீடியா எல்லாமே ஒட்டுமொத்தமா இந்த பார்ட் மட்டும் மறைச்சுட்டாங்க……எல்லாம் அரசியல்……ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை………..உங்க updates மட்டும் இல்லேன்னா எங்களுக்கு எல்லாம் உண்மை என்னனு தெரிசுருக்காது………..’By Superstar Fans, For Superstar Fans’……..எவ்ளோ உண்மை பாருங்க……….சூப்பர் ஜி…..
சூப்பர், கிரேட் , fantastic ,
J munnadi karunanithi pathi pesa thil ulla aalu namma THALAIVAR thaan .
Avar arasiyal vilatuku apparpatavar. Avara vambukilukathinga.
மிக தெளிவாக அதே சமயத்தில் நாகரீகமான பேச்சு. நம் தலைவருக்கு நான் ஒரு பட்டம் சூடுகிறேன் அதாவது
தன்னடக்க திலகம். என்ன சூப்பரா?
நாம எங்க இருக்கோம் என்று நினைக்காமல்
என்ன நினைக்கிறோம் என்று மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லும் இதுவே தில்லு ….
Very fast update and depicts your hardwork. thanks is very short word for this. Simply Great.
//“வெற்றியடைஞ்சா சந்தோஷம் இருக்கும். தோல்வியடைஞ்சா மனசு கொஞ்சம் வருத்தப்படும். ஆனா அவங்க பேருக்கும் புகழுக்கும் எந்த பாதிப்பும் வராது. ஏன்னா… அதையெல்லாம் தாண்டி ஒரு லெவல்ல அவங்க இருப்பாங்க. தோல்வி, வெற்றிகளை தாங்கிக்கொள்கிற ஒரு சமமான மனநிலையில இருப்பாங்க.//
தலைவர் கூறி இருப்பது அவருக்கே 100 % porundhugirathu..
//Why did he not speak about Jayalalitha in any of the functions when Karunanithi was CM?
——————————————————–
2009 ஆம் ஆண்டு, அக்டோபர் 9 அன்று இதே நேரு உள்விளையாட்டரங்கில், பெப்சி தொழாளர்கள் சார்பாக அவர்களுக்கு நிலம் ஒதுக்கிய அப்போதைய முதல்வர் கலைஞருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ரஜினி, பெப்சி தொழிலாளர்களுக்கு ஜெயலலிதா அவர்கள் உதவ முன்வந்ததை பற்றி மறக்காது குறிப்பிட்டார்.
- சுந்தர்//
இது தான் சுந்தர்..
நேற்று சுந்தர் கை பேசியில் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியுமா என்று அழைத்த போது அலுவலக வேலை இருந்த படியால் நான் வர இயலாததை சொன்னேன்..
நிறைய வருத்தம் இருந்தது.. ஆனால் நேற்று வந்த அப்டேட்ஸ் மற்றும் இந்த தலைவர் பேச்சை நேரில் பார்த்த திருப்தியை ஏற்படுத்த கூடிய உரைநடையில் இந்த கட்டுரையை பார்த்த பிறகு கொஞ்சம் குறைந்திருக்கிறது..
தேங்க்ஸ் சுந்தர்..
//என்னை வாழ வைக்கும் (பலத்த கைத்தட்டல்… விசில்), வாழ வைத்த தமிழக மக்களே (கைத்தட்டல்… விசில்) //
தலைவர் intro பட்டாசா இருந்திருக்கும் போல!!!!!
I missed it man..
Waiting for further updates and photos sundar..
சியர்ஸ்..
பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
உள்ளது உள்ளபடியே லைவ் ஆக கொடுத்த உங்களுக்கு முதல் நன்றி,( தினத்தந்தி எப்படி இப்படி மாறிவிட்டார்கள்)
Well deserved recognition for Mellisai Mannargal MSV and Ramamurthy during their life time. Evergreen melodies of MSV will always remain in the hearts of true music lovers, which has stood the test of time. All time great singers Thavathiru TMS and Isai kuyil P.Suseela gave life to the tunes of MSV and incomparable lyrics of Kaviarasu Kannadasan and Vaali. Late 50s, 60s and 70s were the golden period for Tamil cinema music, which was ruled by Mellisai Mannargal (not to forget KVM). Music lovers are always indebted to the duo of MSV and Ramamurthy. MSV’s rendering of Sambo Sivasambo song is ultimate. In fact songs sung by MSV cannot be even tried by others. That much of pitch, diction and expression was given by MSV. He is not only a composer, but also a great singer with enormous humility and divinity.
நேர்மையான நம் தலைவரின் உரையை நிறைவாக தந்த எங்கள் சுந்தர்ஜி அவர்களுக்கு மிக்க நன்றி…
சங்கரநாராயணன்
நிகழ்ச்சியை நேரில் பார்த்த திருப்தி உள்ளது அருமையான வர்ணனை மற்றும் படங்கள்
“DEATH OCCURS TWICE FOR A PERSON IN LIFE !.. BUT FOR A FEW - THERE IS NO DEATH AT ALL WHATSOEVER !” - THALAIVAR’S SPEECH YESTERDAY AT THE MSV-JAYA TV FUNCTION…
Initially Thalaivar thanked everyone as usual in his style which included - M.S.Vishwanathan, Ramamoorthy, Ilaiyaraja, CM J.Jayalalithaa, Kamal Haasan , K.Balachander, AVM Saravanan, Cho, actor Sivakumar etc. Then he went on to say that - “I heard that everyone in the industry wanted to appreciate our CM and wished to have a felicitation function for the same. But, I heard that she refused the same saying it is not needed now. But, she herself is conducting a felicitation function for M.S.Vishwanathan here today - which means - like targetting 2 mangoes in one stone. And this is also a big occasion for you - because we wouldn’t have got a better opportunity to praise you than this stage said Thalaivar pointing at J.Jayalalithaa in his speech.
First of all, Jaya TV is stepping into it’s 14th year after the successful completion of 13 years - I congratulate Jaya TV and wish them on this special occasion. I wish the technical crew and officials of Jaya TV too on this special occasion. I have also been watching a few programmes in Jaya TV. As Saravanan sir said - I watch those special Bhakthi-Aanmeegham programs early in the morning which are my favourites, and before the news - they show a programme called - “Varalaaru Suvadugal” - which i like a lot (Note - here - he says before news & not news
), then one of my favourite programme is Cho’s “Enge Brahmanan” - I used to watch it regularly and used to like the explanation that Cho Sir gives during the episodes. Now it has stopped. I don’t know the reason. I too have asked Cho Sir as to why it was stopped. For that - his reply was - “Even CM ma’am called me asking to resume the programme, similar to you. But I don’t have the time these days.” Thalaivar then told in a Punchy comedy style - “Even after CM says something , if there is a person who doesn’t listen to it in Tamil Nadu means - it can be only Cho !”… With rounds of applause and whistles cameras focus to Cho immediately - wherein Cho keeps his hand on his head and bends down in shy.
As Kamal said, Jaya TV has grown from a plant now into a big tree by it’s own efforts and it’s a big matter. This stage is arranged to shower praise for the legends MSV and Ramamoorthy sir. I am a small man infront of these legends sitting on the stage. When these legends like KB Sir, Ilaiyaraja Sir, Kamal Haasan themselves don’t have words to praise the legend, how can one expect me to have in this occasion , that too he hasn’t done many of my movies too !..
When I was in Bangalore initially - people used to sing songs “Ponaal pogattam po da.” and “Naan Aanaiyittaal adhu nadandhu vittaal” without even knowing the meaning of it. Even if I don’t know a language, I used to go to that movie. Just to know the jist of the story. A movie by name “Server Sundaram” which had the story of a Server trying to become an Actor. I too had been to this movie when I was a conductor as It had a similar story as I too tried to become an Actor. In that movie there was a song “Avalukkenna Azhagiya Manam” in which the crowd in theatre started to whistle like how they used to for MGR or Sivaji Sir at the beginning of the song - I did not understand the reason and I happened to ask why they whistled and clapped to the person next to me. He said - it was for that person who was shown as music composer - MSV sir - for whom we clapped !.. I was stunned to know that for a music director - there were so many fans.
Then during Aboorva Raagangal, I happened to meet him for the first time in Madras. I got to know only then that seeing him through Cinema and up front is totally different. He was wearing an Orange Kavi dress with Sandhanam & kungumam on his foreheard. Then for Moondru Mudichu movie - a song called “Manavinaigal yaarudadho” required a different voice for me. It was sung by MSV sir. I can proudly say that my first song was sung by MSV sir. Then as you all know “Sambo Siva Sambo” song too was sung by him.
When I want to talk about MSV and Ramamoorthy Sir - what comes to my mind is - “Death” - Death occurs twice in the life of a person. But, for 90% of the people it occurs only once. If the breath stops, its a finish !… But for legends or people who have gained popularity, fame & name in their life - if they happen to lose their fame and name in someway or the other by their deeds , then they tend to die once in their life. Next is the nature’s death that happens for the 2nd time in their life. But there is a 3rd category of people who are just 1% in this world : who don’t die whatsoever !.. Even if they attain a natural death, their name and fame would make them live forever !.. (Thunderous applause)
Some of them in North being : V.Shantharam, Dada Saheb Palke, RD Burman among others. In our TN, we can list Dr.Kamaraj, Anna, Periyar, MGR, Sivaji Ganesan etc among others.. In Politics, you can say Dr.Kalaingar , J.Jayalalithaa and in music - MSV sir. I am happy and blessed to have lived in their era. And I thank everyone for giving me an opportunity to speak here. I wish J.Jayalalithaa good health and gain more popularity not only in India but also universally by doing good deeds to people of Tamil Nadu & India. Thank you. - Signed off our Superstar.
————————————————-
Thanks Praveen for amazing translation.
- Sundar
ஜெ.வை மேடையில் வைத்துக்கொண்டு கலைஞரை பாராட்டும் தைரியம் தலைவரை தவிர உலகத்திலேயே எவனுக்கும் கிடையாது. ஜெயா டி.வியில் கண்டிப்பாக எடிட் செய்து விடுவார்கள்.
Take a bow to this amazing human being.would love to live like him.
//ஜெ.வை மேடையில் வைத்துக்கொண்டு கலைஞரை பாராட்டும் தைரியம் தலைவரை தவிர உலகத்திலேயே எவனுக்கும் கிடையாது. ஜெயா டி.வியில் கண்டிப்பாக எடிட் செய்து விடுவார்கள்.//
இது போல் கலைஞர் டி.வி.-யில் முன்பு அஜீத் அவர்கள் பெப்சி விழாவில் பேசிய பகுதி, சூப்பர் ஸ்டார் கை தட்டிய பகுதி இவை எடிட் செய்யப்பட்டன. அரசியல் கட்சிகள் நடத்தும் சேனல்களில் இவை common .
சூப்பர் ஸ்டார் பேச்சு மிக, மிக அருமை. கலைஞர் பெயரை mention பண்ணி இருக்க வேண்டாம் என்பது தான் என் நிலை. நல்ல வேளை, இது எதுவும் அரசியல் புயலைக் கிளப்பவில்லை! நன்றி.
-=== மிஸ்டர் பாவலன் ===-
Hi sundar ji,,
Today facebook-la superstar rajinikanth - an inspiration nu page la… Thalaivar pathi oru super articIle vanthu eruku….
Sila paru thalaivar x c.m and current c.m ku nu jaldra podrarunu thapa oru talk eruku..
Athu thapu-nu thalaivar speech-a vachi examples kuduthu erukanga…
Superb….
Antha mathiri oru article namba sight-la vantha superb-a erukum
With pic & proof…
Plz sundar ji….
———————————————————-
கடந்த காலங்களில் நாம் அது போன்று எண்ணற்ற பதிவுகள் போட்டாயிற்று. சொன்னதையே நான் எத்துனை முறை திரும்ப திரும்ப சொல்வது? எனக்கு திகட்டிவிட்டது. நாய் வாலை நிமிர்த்தமுடியாது என்பது போல, தலைவரை புரிந்துகொள்ளாதவர்களுக்கு என்ன சொன்னாலும் ஏறப்போவதில்லை.
- சுந்தர்
என்னா பாஸ்ட் …. கலக்கல் & பல கோடி நன்றிகள் சுந்தர் அண்ணா…
என்றும் தலைவரின் தனி வழியில் ரஜினிராக்ஸ் எஸ்.எம்.எஸ். குரூப்..
சுந்தர்ஜி வணக்கம்.
உங்களது உடனடி அப்டேட் மிக அருமை. உங்கள் உழைப்பு அதைவிட அருமை.
அன்றைய தினம் நான் உங்களை இரவு தொடர்பு கொண்டபோது கூட நீங்கள் இந்த பதிவினை டைப் செய்து கொண்டு இருந்தீர்கள். ஆனால் உங்கள் பதிவினை வரிக்கு வரி காப்பி செய்து அப்படியே வேறு சிலர் தங்கள் இணைய தளத்தில் வெளிவிடுவது எந்த வகையில் நியாயம்? இதையே நீங்கள் செய்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் சும்மாயிருப்பார்களா? தலைவர் உரை பொதுவானது என்றாலும் அதை முதலில் வெளிக்கொண்டு வந்த உழைப்பு உங்களுடையது அல்லவா?? அதுவும் அவர் என்ன பேசினார் என்றே எவருக்குமே தெரியாத நிலையில் அதை முதன் முதலில் இணையத்தில் அளித்தது நீங்கள் தானே? இது உங்களுக்கு தெரியாமல் இருக்காது. இருந்தும் நீங்கள் ஏன் இன்னமும் மௌனமாக இருகிறீர்கள்?? இது பல முறை நடந்துவிட்டது. அதனால் தான் கேட்கிறேன்.
நன்றி
ப.சங்கரநாராயணன்
———————————————————————————————————————-
நமது பணியை பாராட்டிய, மெச்சிய நண்பர்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றி.
நம் தளத்தின் மீதும் என் எழுத்தின் மீதும் நம்பிக்கை வைத்து இங்கு வந்து பார்த்து அதை எடுத்து தங்கள் தளத்திற்கு பயன்படுத்திக்கொண்டவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். என்னை நம்பி வருபவர்கள் யாராக இருந்தாலும் நான் ஏமாற்றமாட்டேன். முதலில் இங்கு தான் சரியான அப்டேட் கிடைக்கும் என்று சம்பந்தப்பட்டவர்கள் கருதியிருக்கலாம். இனி அடுத்து வரவிருக்கிற பதிவுகளை கூட அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். சுவாரஸ்யமான தகவல்கள் காத்திருக்கிறது. மிக்க நன்றி!!
- சுந்தர்
நன்றி சுந்தர்ஜி..
உங்கள் நட்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.
அருமை சுந்தர்…!
‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ குறள் தான் நினைவுக்கு வருகிறது.
.
மாரீஸ் கண்ணன்
தலைவர் யாருக்கும் எதற்க்கும் பயந்தவரும் அல்ல,தலை வணங்குபவரும் அல்ல என்பதற்க்கு இந்த பேச்சு ஒரு சாட்சி தலைவா நீங்கள் மனதில் பட்டதை தைரியமாக சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே