You Are Here: Home » Featured, Happenings » “பாடல் என்றால் எப்படி இருக்கவேண்டும்?” - இசைஞானி சொல்வதை கேளுங்கள்!! சொன்னாங்க… சொன்னாங்க…. (4)

1) பேச்சை குறைங்க மிஸ்கின்!

வாய் பேசுவதை குறையுங்கள் மிஸ்கின் …. நல்ல படைப்புகளை தரத்தோடு கொடுப்பதில் மட்டும் உங்கள் கவனத்தை வையுங்கள். வெறும் ஆணவ பேச்சு மட்டும் உங்களை தரமான படைப்பாளிகளின் வரிசையில் சிம்மாசனம் போட்டு அமர்த்தாது. BETTER LUCK NEXT TIME !!!

A visitor @ முகமூடி விமர்சனம் @ Luckylookonline.com

2) முந்தைய காலங்களில், அரசியல்வாதிகளிடம் நேர்மையின் நிழல் தெரிந்தது என்பதை நம்ப முடிகிறதா?

“இன்றைய அரசியல்வாதிகளைக் காணும்போது அது நம்பும்படியாக இல்லை. ஆனால் சமீபத்திய அனுபவம் ஒன்று அந்த எண்ணத்தை  மாற்றிக்கொள்ள வைத்தது. கடந்த மே மாதம் 24 ஆம் தேதி, ஏற்பட்ட விலையேற்ற
அறிவிப்புக்கு பிறகு பதுக்கலால் பெட்ரோலுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னையில் கள்ள மார்கெட்டில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.180/- வரை வசூலிக்கப்பட்ட நேரம் அது. அந்த சமயத்தில் நான் அவசரமாக சென்னையில் இருந்து இருந்து திருச்சிக்கு காரில் பயணித்தேன். நெடுஞ்சாலையில் பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இல்லை என்று கை விரித்தார்கள். ஆனால் கேன்களில் பெட்ரோல் வெளியே போவதை பல இடங்களில் காண முடிந்தது. கடைசியாக ஒரு பெட்ரோல் பங்க்கில் கை விரிக்காமல் பெட்ரோல் நிரப்பி உரிய விலையை வசூலித்தார்கள். ‘இந்த தருணத்தை பயன்படுத்தி மற்றவர்கள் கொள்ளை லாபம் பார்க்கும்போது, நீங்கள் மட்டும் எப்படி?” என்று ஆச்சரியத்துடன் அதன் ஊழியர்களிடம் கேட்டேன்.

“எல்லாம் எங்க முதலாளியோட நேர்மை தான் காரணம்; அவுங்க தாத்தாவிடமிருந்து கத்துகிட்டார்” என்றவரிடம் முதலாளி பற்றி விசாரித்தேன். “காலம் சென்ற, முன்னாள் அமைச்சர் கக்கனின் பேரன் தான் என்னுடைய முதலாளி”; என்றார். 1957 முதல் 1967 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து பொதுப் பணித்துறை மற்றும் போலீஸ் துறை அமைச்சராக செயல்பட்ட கக்கன் அவர்கள் நேர்மையின் அடையாளம். தன் பதவிகளை பயன்படுத்தி சொத்து சேர்க்காத அவர், தன் நேர்மையையும் நாணயத்தையும் தன் சந்ததிகளிடம் விட்டுச் சென்றிருப்பதை நினைத்து, ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்.”

- எஸ்.ராமன், சென்னை - 17 @ நானே கேள்வி - நானே பதில், ஆனந்த விகடன்

3) உங்கள் லைஃப்-பார்ட்னர் பேஸ்புக்கில் ரகசிய சாட்டிங் செய்கிறாரா?

(பெயர் வெளியிட விரும்பாத விகடன் வாசகி) : “எனக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. நானும் என் கணவரும் எந்த விஷயமானாலும் பகிர்ந்துகொள்ளாமல் தூங்கச் செல்ல மாட்டோம். எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருந்தது. ஆனால் சமீப காலமாக என்னவர் இரவில் தனியாக செல்போனில் பேசுகிறார். ஃபேஸ்புக்கில் மணிக்கணக்காக இரவுகளில் சாட்டிங் செய்கிறார். என்னால் சந்தேகப்படவும் முடியவில்லை. அதே சமயம் கேட்க்காமல் இருக்கவும் முடியவில்லை. நான் என்ன செய்வது. என் குழப்பத்திற்கு விடை சொல்லுங்கள்.”

ராஜ் மோகன், மனநல மருத்துவர் :

“எப்போது மனைவிக்கு தெரியவேண்டாம் என்று உங்கள் கணவர் நினைக்கிறாரோ அப்போதே ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம். இப்படி ஒரு சந்தேகம் எழுந்துவிட்டால் அதை கேட்பதா வேண்டாமா என்று குழம்ப வேண்டாம். கேட்பதன் மூலம் தான் சந்தேகத்தை போக்கிக்கொள்ள முடியும். “நீங்கள் இப்போதெல்லாம் என்னிடம் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. எனக்கு கஷ்டமாக இருக்கிறது” என்று மனம் திறந்து கேளுங்கள். மென்மையாக பேசுங்கள். பேசுவது தான் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும். அவர் சொல்லும் பதிலில் இருந்து அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று தெரிந்துகொள்ளலாம். தனிமையில் அதிக நேரம் செலவழிக்கிறார் என்றால் அவருக்கு ஏதோ ஒரு கிக் கிடைத்திருக்கும். அது என்னவென்று கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு அவரின் செயல் பிடிக்கவில்லை என்று உணர்த்துங்கள். சந்தேகத்துக்குரிய உறவு முறை இருந்தால் அதை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். எதுவாக இருந்தாலும் உங்கள் கணவரை எதிர்க்காதீர்கள். பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்று மட்டும் பாருங்கள். தேவைப்பட்டால் கவுன்சிலிங் செய்பவர்களை தொடர்புகொள்ளுங்கள்.”

@ இதுதான்… இதற்குத் தான்…. இப்படித்தான் (ஆனந்த விகடன்)

4) பாடல் என்றால் எப்படி இருக்கவேண்டும்?

இசைஞானி இளையராஜா : என்னுடைய பதினாறு வயதில் அவர் எழுதிய ‘மாலைப் பொழுதின் மயத்திலே’ என்ற பாடல் எனக்கு நல்லா ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தியது.

ஏன்னா எதையுமே தீர்மானிக்க முடியாத வயதில்

இளமையெல்லாம் வெறும் கனவு மாயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் புரியாது
மயங்குது எதிர்காலம்

என்ற வரிகள் கதையில் ஏற்படுத்திய முக்கியத்துவத்தை விட பெரிய முக்கியத்துவத்தை என் மனதில் ஏற்படுத்தியது. அப்போது நான் ஏழோ எட்டோ படிச்சிகிட்டுருக்கேன். அப்போ இந்த ‘இளமையெல்லாம் வெறும் கனவு மயம்’ என்கிற வார்த்தை நாம படிக்கிறோம் எதிர்காலத்தில் என்னவாகப்போகிறோம்னு கேள்வி கேட்பதை போல தோன்றியது! முடிவும் புரியாது மயங்குது எதிர்காலம்! ஆமா அப்படித்தானே யோசிச்சேன். இந்த பாடல் இன்றைய இளைஞர்களுக்கும் சமுதாயத்திற்கும் பொருந்தும் என்பது என் ஆணித்தரமான கருத்து. இந்த இரண்டு வரிகள் மனித இனத்திர்க்குமே பொருத்தமானது. பாடல் என்றால் இது போலத் தான் இருக்கவேண்டும் என்பது என் கருத்து.

- கண்ணதாசன் பாடலில் தங்களுக்கு பிடித்த பாடல் எது? (பிரபா, புதுச்சேரி) என்ற கேள்விக்கு இளையராஜா குமுதத்தில் அளித்த பதில்!

5) பிரச்னைகளை சமாளிக்க உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்!

* உங்கள் குழந்தைகள் பத்தாவது வகுப்பு முடித்துவிட்டார்களா? ஆம் எனில்,அவர்களுக்கு நீங்கள் ஞாயிறு தோறும் உங்கள் ஊரில் இருக்கும் நூலகத்துக்கு அழைத்துச் சென்று,பத்திரிகை மற்றும் வார மாத இதழ்கள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள்.ஏனெனில்,நாம் வாழ்ந்து கொண்டிருப்பது அறிவு யுகம் ஆகும்.மற்றவர்களை விடவும்,கொஞ்சம் கூடுதலாக பொது அறிவு நமது குழந்தைக்குத் தெரிந்திருந்தால்,போட்டிகளிலும்,நேர்காணல்களிலும்,          மேல்படிப்பிலும்,புதிய முயற்சிகளிலும் ஜெயிக்கும்.

பொது அறிவு மட்டுமல்ல;பல துறைகளைப்பற்றிய அடிப்படை அறிவில் தேர்ச்சி பெற்றிருந்தால்தான் இந்த போட்டிநிறைந்த   காலத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும். Knowledge Update must for Success to our Child.

* கல்லூரியில் படிக்கும் நமது குழந்தையிடம் நாம் நமது பள்ளி,கல்லூரி வாழ்க்கையில் ஒரு பிரச்னையை எப்படி சொதப்பினோம்? எப்படி ஜெயித்தோம்? என்பதை சுவைபட விவரிப்பது நமது கடமை ஆகும்.இப்படி விவரிக்கும் முன்பு உங்கள் குழந்தையிடம் நீங்கள் ஆழ்ந்த அன்பு செலுத்தி உங்களுக்கும்,உங்களுடைய குடும்பத்துக்கும் ஏற்றவிதமாக வளர்த்திருப்பது அவசியம். (பல குடும்பங்களில் ஒவ்வொருவருமே தீவு போல வாழ்ந்து வருவதை நேரில் பார்க்கும் போது கண்ணீரே வருகிறது) இப்படி மாதம் ஒருமுறை நாம் சுவைபட விவரித்துக்கொண்டே வந்தால்,எதிர்காலத்தில் நமது குடும்பத்தில் சிக்கல்கள்,பிரச்னைகள் வரும்போது அதை இலகுவாக கையாளும் திறன் நமது பட்டப்படிப்பு படிக்கும் குழந்தைக்கு (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்) வந்துவிடும். டெஸ்ட் செய்துதான் பாருங்களேன்.

- www.aanmigakkadal.com/2012/08/2_20.html

6) நன்மையை வேண்டின் நன்மையை செய்

எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை

பொருள் விளக்கம் : நாம் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லையே என்று வருந்தும் மடைமை பொருந்திய நெஞ்சமே, எதை கேட்டாலும் கொடுக்கும் கற்பக மரத்தின் கீழே இருந்து பழம் கேட்டு, அது தின்ன முடியாத எட்டிக்காயை கொடுத்தால் அது யார் குற்றம், அனைத்தும் முன் பிறவியில் நாம் செய்த செயல்கள் மூலமே, நம் தலையில் எழுதி வைத்தபடி நடக்கிறது. ஆதலால் நன்மையை வேண்டின் நன்மையை செய்.

- ஔவையார் @ மூதுரை

Courtesy : www.thamilworld.com/forum/index.php?showtopic=19426

————————————————————————————-
படித்ததில் பிடித்தது

பெண்கள் தான் காதலை முதலில் சொல்கிறார்கள். கண்களை படிக்கும் திறன் ஆண்களுக்கு இருப்பதில்லை.
twitter.com/vignasuresh

நம்ம சரக்கு

‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்று கருதும் மனப்பான்மை, தகுதியற்றவர்கள் எல்லாம் நம் தோளில் கை போட அனுமதித்துவிடுகிறது என்பதை சிலர் உணர்வதில்லை
twitter.com/simplesundar

நண்பர்களே இது என்னோட பர்சனல் டுவிட்டர் அக்கவுண்ட்.  ஃபாலோ செய்ய விரும்புபவர்கள் …..லாம்.  twitter.com/simplesundar
————————————————————————————-

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சொன்னாங்க… சொன்னாங்க…. (3)
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=16171

சொன்னாங்க… சொன்னாங்க…. (2)
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=15842

சொன்னாங்க… சொன்னாங்க…. (1)
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=15649
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

[END]

14 Responses to ““பாடல் என்றால் எப்படி இருக்கவேண்டும்?” - இசைஞானி சொல்வதை கேளுங்கள்!! சொன்னாங்க… சொன்னாங்க…. (4)”

  1. மிஸ்டர் பாவலன் மிஸ்டர் பாவலன் says:

    நண்பர் சுந்தர் அவர்களே:

    நீங்கள் குறிப்பிட்ட அவ்வையார் பாடல் மிக அருமை.
    அதே பொருளில் இன்னும் எளிமையாக ஒரு நல்ல பாடல்
    சிவபோகசாரத்தில் உள்ளது. இது தருமபுரம் ஆதீன குருமுதல்வர்
    அருள்திரு குருஞானசம்பந்தர் அவர்களால் எழுதப்பட்டது.

    ” சும்மா தனுவருமோ சும்மா பிணிவருமோ
    சும்மா வருமோ சுகதுக்கம் – நம்மால்முன்
    செய்த வினைக்கு ஈடாய்ச் சிவனருள்செய் விப்பதென்றால்
    எய்தவனை நாடி இரு. ”

    -== மிஸ்டர் பாவலன் ===-

  2. murugan murugan says:

    அருமையான தகவல்கள் சுந்தர்ஜி !!!
    அறுசுவை விருந்து உண்டதுபோன்ற உணர்வு !!!
    மிக்க நன்றி !!!

  3. ganesan ganesan says:

    Hello Sundarji,

    Very very bad article about our Super star in today’s Kumudam…pls do some thing

    Ganesan

    ——————————————————————-
    Check my answer to Mr.Manojscen for his comment @ http://onlysuperstar.tamilmovieposter.com/?p=16234

    - Sundar

  4. மாரீஸ் கண்ணன் மாரீஸ் கண்ணன் says:

    சுந்தர், கக்கன் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருடைய சந்ததியினரும் இவ்வளவு நேர்மையுடன் இருக்கிறார்கள் என்று தெரியும்போது உண்மையில் நெகிழ்ச்சியாக இருக்கிறது.

    நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும் என்பதற்கு உதாரணம் தான் மிஸ்கின் போன்றவர்கள். ஹிட் படங்களாக கொடுத்து மேன்மேலும் உயரும் ஷங்கர், முருகதாஸ் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள், பேசுவதேயில்லை என்பதை கவனித்தீர்களா?

    பேஸ்புக் பற்றிய கேள்வி-பதில் உண்மையில் ஒரு எச்சரிக்கை மணி.

    குழந்தைகளை வளர்ப்பது குறித்த பாயிண்ட் உண்மையில் ரொம்பவும் சூப்பர்.

    ஒவ்வையின் மூதுரையும் அதன் விளக்கமும் சூப்பர்.

    கடைசீயில் உங்களின் டுவீட் மொழி சூப்பரோ சூப்பர்.

    கலக்கல் தொகுப்பு. தேர்ந்தெடுத்து அளித்தமைக்கு நன்றி! நன்றி!!

    • PREMANAND RAMARAJU PREMANAND RAMARAJU says:

      இப்போ இருக்குற பெருசுங்க கூடவே இருக்குற சந்ததிகள் பெருசுகளுக்கும் மேல நடந்துக்குது.

  5. மனோஜ் ராக்ஸ் மனோஜ் ராக்ஸ் says:

    அண்ணா…. அண்ணா…. சூப்பர் அண்ணா. அனைத்தும் சூப்பர்.:) :) :)

    கக்கன் அவர்களைப் பற்றி நான் கேள்விபட்டதேயில்லை!!!!!! இன்று தெரிந்துகொண்டேன். அவருடைய பேரன்களே இத்தனை நேர்மை என்றால் அவர் எப்படி இருந்திருப்பார்???????????? எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது.

    இசைஞானி கூறியுள்ள ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாடல் வரிகள் சூப்பர். இப்போது தான் யூ-ட்யூபில் முழுதும் கேட்டேன்.

    கடைசியில் நீங்கள் கூறியுள்ள டுவீட் பன்ச் தாறுமாறு.:) :) :)

    குமுதத்துல என்ன தான் போட்டிருக்காங்கண்ணா? தப்பா போட்டிருந்தா நாம நிச்சயம் ஏதாவது செய்யனுண்ணா…..

    —————————————————————————————
    போன பதிவுல, (ஓடிவந்த புரோட்டோகால் அதிகாரி) மனோவுக்கு என்ன பதில் சொல்லியிருந்தஏனோ அதே பதில் தான்.

    இந்த மாதிரி நிறைய பார்த்தாச்சு. இது எதையுமே அவர் சீரியஸா எடுத்துக்கிறது இல்லை. சட்டை செய்றதும் இல்லே. அப்படி இருக்கும்போது நாம எதுக்கு வீணா அலட்டிக்கணும்? அது அர்த்தமில்லேன்னு தோணுது எனக்கு.

    இன்று வெளியான குமுதத்தில் ‘ஜெ. மேடையில் ரஜினி கூத்து’ என்று தேனி கண்ணன் என்பவர் கன்னா பின்னாவென்று ஏதோ எழுதியிருக்கிறார். (எழுத வைக்கப்பட்டுள்ளார்!) பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? சிலரோட மனம் குளிரும்படி நடந்துகொள்ளவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு. குமுதம் ரெகுலரா படிக்கிறவங்களுக்கு மேட்டர் தெரியும்.

    ஆனா அவர்கள் என்ன எழுதினாலும் மேற்படி பத்திரிக்கைகளை நான் விமர்சிப்பதாக இல்லை. கடந்த காலங்களில் அப்படி நான் சில சமயம் நடந்துகொண்டதற்கு வெட்கப்படுகிறேன். அவர்களுக்கு ரஜினி அவர்களிடமும் அவரது குடும்பத்தினரிடமும் இருக்கும் மதிப்பும், மரியாதையும், ரீச்சும் நூற்றில் ஒரு பங்கு – இல்லையில்லை ஆயிரத்தில் ஒரு பங்கு – கூட நமக்கு இல்லை எனும்போது அவங்களை விமர்சிக்க நமெக்கென்ன தகுதி இருக்கு?

    கூடிய சீக்கிரம் ‘கோச்சடையான்’ ஸ்பெஷல் அப்டேட்ஸ் அடங்கிய அதன் இயக்குனர் சௌந்தர்யாவின் பேட்டி + தலைவரோட அசத்தல் பேட்டி ஒன்னை குமுதத்துல எதிர்பார்க்கலாம். நானும் அதை ஸ்கேன் பண்ணி போடத்தான் போறேன். (கடந்த பல வருஷமா இது தானே பாஸ் நடந்துகிட்டுருக்கு.) நீங்களும் படிக்கத் தான் போறீங்க. இது தான் யதார்த்தம்!!!!!!!!!!!!

    - சுந்தர்

  6. விஜய் ஆனந்த் விஜய் ஆனந்த் says:

    அண்மைக் காலமாக நம் தளத்தில் வெளியாகும் பகுதிகளில் என்னை மிகவும் கவர்ந்தது இது தான். பல நல்ல விஷயங்களை தேனீக்கள் பூக்களை தேடி அலைந்து தேனை கொண்டு வந்து தருவது போல தருகிறீர்கள்.

    கக்கன் அவர்களைப் பற்றி என் அப்பா என்னிடம் கூறியிருக்கிறார். அவர் இறக்கும்போது சொத்து என்று எதுவுமே சேர்த்திருக்கவில்லையாம். இப்போதும் இருக்கிறார்களே… அரசியல்(வியாதிகள்.)

    பிரச்னைகளை சமாளிக்க குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க கூறப்பட்டிருக்கும் வழிமுறைகள் அருமை. அனைவரும் பின்பற்ற வேண்டியது. ஆனால் நான் பின்பற்ற குறைந்தது ஐந்தாறு வருடங்களாவது ஆகும். :)

    நீ தானே என் பொன்வசந்தம் படத்தை முதல் நாள் முதல் ஷோ காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்க்ளுள் நானும் ஒருவன். ஒளவையின் மூதுரை தவிர்த்து ஆத்திசூடி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதையும் ஒரு முறை பதிவிடுங்களேன்.

    குமுதம் போட்டியை சமாளித்து விற்பனையை உயர்த்த கையாண்டிருக்கும் கீழ்த் தரமான தந்திரம் இது. இதை நீங்கள் சொல்வதுபோல கண்டுகொள்ளாமல் இருப்பதே சிறந்தது.

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  7. naveen(kodambakkam) naveen(kodambakkam) says:

    super collection of useful info. i like the info about former minister kakkan and ilaiyaraaja’s favourite lyric. pls keep posting this section regulary and often.

  8. Satheesh Satheesh says:

    mugamoodi is a crap. total time waste. a good advice for mysskin.
    Kakkan is a very honest politician. and tamilnadu can’t see again a person like him.
    nep audio isaignai rocks asusual. i wonder ilayaraja how connects today’s younger generation’s pulses. really tantallizing songs. waiting to watch the movie. and reg his opinion on that bhaygalakshmi movie song, maalai pozhudhin mayakkaththilae, it is 100% true. soul stirring song.
    Moodhurai composition is awesome. Next to valluvar i like avvaiyaar most.

  9. RAJA RAJA says:

    தலைவரின் செய்திகள் + நிகழ்சிகள் பற்றி போடுவதோடு இல்லாமல் இந்த மாதிரி பல பயனுள்ள பதிவுகளையும் போடுவதால் தான் இந்த வெப்சைட் தனித்து தெரிகிறது வாழ்த்துக்கள்.

    மிஷ்கின் அவர்கள் முகமூடி படம் வெளிவரும் முன்பே பல திமிர் பேச்சுகளை பேசினார் இப்பொழுது தெரிந்து விட்டது வாயில் வடை சுட்டார் என்று ,பாவம் ஜீவா நன்றாக நடிப்பவர் அவர் உழைப்பு வீணாக்க பட்டுவிட்டது தான் வருத்தம்

    கக்கன் அவர்களை போல் இனி நமக்கு ஒரு அரசியல் வாதி கிடைப்பாரா என்பது கஷ்டமே

    குமுதம் பற்றி நாம் கவலை பட தேவையே இல்லை ஏன் என்றால் அந்த பத்திரிக்கைக்கு பல வருடங்களாக வியாபார சோறு போடுவது நம் தலைவர் தான் தலைவரை விமர்சித்தோ பாராட்டியோ ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் கண்டிப்பாக அவர்கள் போடுவார்கள் இதை நான் பாத்து வருடமாக பார்த்து வருகிறேன் ,அதனால் அதை எல்லாம் பற்றி நாம் கவலை பட தேவை இல்லை

    அவ்வையார் அவர்களின் ஆத்திசூடியை இன்று பலர் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க தயங்குவது ஏனோ என்று தெரியவில்லை ,ஆத்திசூடி ,திருக்குறள் கற்றுகொடுத்து அதற்க்கு விளக்கம் சொல்லி கொடுத்தாலே நமது குழந்தைகள் பல நல்ல விசயங்களை கற்றுகொள்வார்கள் அதை விட்டு விட்டு இன்னும் ஆங்கில மோகத்தில் திரிகிறார்கள் என்ன செய்வது.

    ஒரு அதிர்ச்சியான விஷயம் நான்கு வாரங்களுக்கு முன்னாள் என்று நினைக்கிறன் வாரமலர் புத்தகத்தில் உங்கள் இடம் என்ற பகுதியில் வாசகர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாம் அதில் ஒருவர் ஒரு விஷயம் சொல்லி இருந்தார் என்ன வென்றால் இன்று நம் குழந்தைகள் அதிகம் விரும்பி சொல்லும் “RINGA RINGA ROSES” பாடலின் உண்மையான அர்த்தம் என்ன வென்றால் பல வருடங்களுக்கு முன்னாள் ஆங்கிலேயர் நம்மை ஆட்சி புரிந்த போது அவர்களுக்கு சர்ம நோய் வந்து உள்ளதாம், அப்பொழுது அவர்கள் உடல் முழுதும் வட்ட வட்டமாய் சிகப்பு சிகப்பை இருக்குமாம் அதை விளக்க வந்த பாடலாம் நாமும் இன்று வரை அதன் விளக்கம் தெரியாமல் நாமும் படித்து நம் குழந்தைகளும் அதை தான் படித்து வருகிறார்கள் என்ன செய்வது.

    ——————————————————————-
    நன்றி ராஜா!! அந்த வாரமலர் செய்தி உண்மையில் அதிர்ச்சி தான். நீங்கள் சொல்லியிருந்தால் நான் இங்கு அளித்திருப்பேனே….

    நண்பர்களே, பத்திரிக்கைகளில், இணையங்களில் நீங்கள் படிக்கும் பயனுள்ள, சிந்திக்கத் தூண்டும் செய்திகளை என் கவனத்துக்கு கொண்டுவந்தால் சம்பந்நதப்பட்ட அந்த பத்திரிகை + இணையத்தின் பெயருடன் உங்களது பெயரும் குறிப்பிடப்பட்டு இந்த பகுதியில் அந்த தகவல் பகிர்ந்துகொள்ளப்படும்.

    மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி : simplesundar@gmail.com

    - சுந்தர்

    • RAJA RAJA says:

      கண்டிப்பாக சுந்தர் நான் வீட்டில் தேடி பார்கிறேன் இருந்தால் அதை நாளை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புகிறேன்

  10. Rajagopalan Rajagopalan says:

    ////////////////// அவர்களுக்கு ரஜினி அவர்களிடமும் அவரது குடும்பத்தினரிடமும் இருக்கும் மதிப்பும், மரியாதையும், ரீச்சும் நூற்றில் ஒரு பங்கு – இல்லையில்லை ஆயிரத்தில் ஒரு பங்கு – கூட நமக்கு இல்லை எனும்போது அவங்களை விமர்சிக்க நமெக்கென்ன தகுதி இருக்கு?

    கூடிய சீக்கிரம் ‘கோச்சடையான்’ ஸ்பெஷல் அப்டேட்ஸ் அடங்கிய அதன் இயக்குனர் சௌந்தர்யாவின் பேட்டி + தலைவரோட அசத்தல் பேட்டி ஒன்னை குமுதத்துல எதிர்பார்க்கலாம். நானும் அதை ஸ்கேன் பண்ணி போடத்தான் போறேன். (கடந்த பல வருஷமா இது தானே பாஸ் நடந்துகிட்டுருக்கு.) நீங்களும் படிக்கத் தான் போறீங்க. இது தான் யதார்த்தம்!!!!!!!!!!!!

    - சுந்தர் //////////////////

    Edhu 100% True…Very Well Said!!!

  11. B. Kannan B. Kannan says:

    கக்கன் குடும்பத்தார் பற்றிய செய்தி மெய் சிலிர்க்க வைத்து விட்டது.. என்ன தான் சொல்லுங்கள் மேன் மக்கள் மேன் மக்கள் தான்..
    //சௌந்தர்யாவின் பேட்டி + தலைவரோட அசத்தல் பேட்டி ஒன்னை குமுதத்துல எதிர்பார்க்கலாம். நானும் அதை ஸ்கேன் பண்ணி போடத்தான் போறேன். (கடந்த பல வருஷமா இது தானே பாஸ் நடந்துகிட்டுருக்கு.) நீங்களும் படிக்கத் தான் போறீங்க. இது தான் யதார்த்தம்!!!!!!!!!!!!

    - சுந்தர்//
    தலைவர் ஸ்டைல் பஞ்ச் பா..
    Very different compilation of news.. Keep it going sundar..
    சியர்ஸ்..
    பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
    பா. கண்ணன்.

  12. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

    காலத்தின் கட்டாயதைதாண்டி இன்றும் கக்கன் அவர்களின் நற்பண்புகள் அவரது குடும்பத்தாரிடம் வேரூன்றியிருப்பது நம் மனதிற்கு மிகவும் ஆறுதலும் புதிய நம்பிக்கையும் தருகிறது. பேராசை நம் கலாச்சாரத்தின் இன்றைய முக்கிய அடையாளமாக ஆகிவிட்ட நிலையில், இந்த நல்ல விஷயத்தை நம்முடன் பகிர்ந்துகொண்ட சுந்தருக்கு நன்றி.
    ஒரு பாடல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இசைஞானி கூறியிருக்கும் விளக்கம் நூற்றுக்கு நூறு சரி.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates