You Are Here: Home » Featured, Flash from the Past » மாறி மாறி வரும் ஆட்சிகள் - என்றும் மாறாத ரஜினியின் ‘அஞ்சாமை’!! சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேடைப் பேச்சின் முழு வரலாறு!!

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், ஆற்றிய உரை நாம் எதிர்பார்த்ததைப் போல சில பத்திரிக்கைகளால் சர்சையாக்கப்பட்டுள்ளது. இணைய பழக்கமில்லாத பல ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் என்ன பேசினார் என்றே தெரியவில்லை. ஏதோ பேசக்கூடாததை பேசிவிட்டார் போல என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இணையத்தை ரெகுலராக பார்க்கும் இன்றைய ஃபேஸ்புக் ரசிகர்களுக்கோ “சி.எம். ஜெயலலிதா முன்னால தைரியமா கலைஞர் பேரை தலைவர் சொல்லிட்டாரு. அவ்வளவு தான்!”  நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.  மற்றபடி அவர்களுக்கு சூப்பர் ஸ்டாரின் ‘அஞ்சாமை’ பற்றிய மேடை வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (ஏனெனில் இவர்களில் பெரும்பாலனவர்கள் 22 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். ஆகையால் சொல்கிறேன். மற்றபடி எனக்குத் தான் தெரியும் என்ற ரீதியில் நான் சொல்வதாக எவரும் கருதவேண்டாம்!)

இந்த தைரியம் அவருக்கு இன்று நேற்றல்ல, கடந்த பல ஆண்டுகளாக - ஆட்சிகள் மாறி மாறி வந்தபோதும் - மாறாமல் உடனிருப்பது.

இந்நிலையில், அடுத்தடுத்து முன்னணி பத்திரிக்கைகளில் இந்த விஷயம் அவரவர் வசதிக்கேற்ப திரித்து கூறப்பட்டுள்ளது.

இது விஷயமாக சிலவற்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேற்படி பத்திரிக்கைகளை விமர்சிப்பது நம் நோக்கமல்ல. என்ன நடக்கிறது, நடந்தது என்பதை ரசிகர்களுக்கு தெரியவைக்கும் நம்மாலான ஒரு சிறிய முயற்சி.

(எம்.எஸ்.வி. அவர்களின் பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரை - முழு வடிவத்தை - படிக்க இங்கே க்ளிக் செய்யவும்).

மேடைகளில் பல்வேறு காரணங்களினால் பலர் பேசத் தயங்கும் விஷயத்தை பட்டென்று போட்டு உடைத்து பேசிவிடுவது சூப்பர் ஸ்டாரின் வழக்கம். இது குறித்து அவர் பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்யமாட்டார். காரணம், மனதில் பட்டதை சட்டென்று பேசிவிடுவது அவரது வழக்கம். மற்றவர்களுக்கு இருக்கும் நிர்பந்தமோ பயமோ அவருக்கு இல்லை என்பது தான் காரணம்.

இது இன்று நேற்றல்ல. கடந்த பல வருடங்களாக இப்படித்தான்.

1995 ஆம் ஆண்டு. ‘செவாலியே’ விருது பெற்றதற்காக சிவாஜி கணேசன் அவர்களுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பாராட்டுவிழா நடைபெற்றது. அதில் தமிழ் திரையுலகமே கலந்துகொண்டது. அதில் பேசிய ரஜினி அவர்கள், சிவாஜி அவர்களுக்கு உரிய மரியாதையை தர மாநில அரசு தவறிவிட்டது என்று குற்றம்சாட்டினார். மேலும் அப்போதைய ஆட்சியில் தரமணியில் புதிதாக கட்டப்பட்ட ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு சிவாஜி அவர்களின் பெயர் வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் கூறினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில், (1999) முதல்வர் கலைஞரை வைத்துக்கொண்டே கடவுள் நம்பிக்கை பற்றி பேசினார்.  நாத்திகர்கள் என்று எவரும் இல்லை என்றும் பேசினார். (இதற்கு தான் வேலு பிரபாகரன் உள்ளிட்டோர் அப்போது ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.)

அதற்கு அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சியில் - அதாவது 2004 ஆம் ஆண்டு இறுதியில் - திரையுலகிற்கு சலுகைகள் அளித்தமைக்காக - முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதை விரும்பாத ரஜினி கூடுமானவரை தவிர்க்க பார்த்தார். ஆனாலும் அப்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் வேணுகோபாலின் முயற்சியில் கலந்துகொண்டார்.(இதை மேடையிலும் தெரிவித்தார்). அப்போது பேசிய ரஜினி அவர்கள், “என்னைப் பத்தி எல்லாருக்கும் தெரியும். சரின்னா சரி. தப்புன்னா தப்பு. யாராயிருந்தாலும்.” என்று கூறினார். முதல்வரின் தைரியத்தை பாராட்டி ‘தைரியலக்ஷ்மி’ பற்றிய கதையை கூறினார்.

(2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் ஜெ.வுடன்.)

அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில், பெப்சி தொழிலாளர்களுக்கு முதல்வர் கலைஞர் அவர்கள் இடம் ஒதுக்கியமைக்கு பாராட்டு விழா நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய ரஜினி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்ததை எடுத்துக் கூறினார்.

மேலும் ‘சிவாஜி’ வெள்ளி விழாவில், ‘சிவாஜி’ திரைப்படத்தை பார்த்து பாராட்டியமைக்கு ஜெயலலிதா அவர்களுக்கு நன்றியை கூறினார். முதல்வர் கலைஞர் முன்னிலையில் அந்த விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘நன்றிப் பெருவிழா’ நிகழ்ச்சியிலும் தமது மகளின் திருமணத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை முதலில் அழைத்ததை குறிப்பிட்டு ஜெயலலிதா அவர்களின் பெயரை மறக்காது குறிப்பிட்டார்.

ஆள்வோருடன் மேடையில் தோன்றினாலே ஜால்ரா தான் என்ற நிலை ரஜினி அவர்களிடம் எப்போதுமே இருந்ததில்லை.

மேலே நான் சொல்லியிருக்குற அவரோட உரைகள் ஜஸ்ட் சில சாம்பிள்ஸ் தான். இன்னும் நிறைய பேசியிருக்கிறார். அதே சமயம், இந்த மேடையில நிச்சயம் ஏதாவது பரபரப்பா பேசிடனும்னும் அவர் நினைக்கிறதில்லை. பேசுறது ரஜினி என்பதாலயே அவை பரபரப்பாகிவிடுகிறது. பாவம் அவர் என்ன செய்வார்?

ஒரு அரசியல் தலைவருக்கு சங்கடத்தை தரக்கூடிய பேச்சை மேடையில் பேசும் அளவிற்கு மேடை நாகரிகம் அறியாதவரா ரஜினி? எதைப் பற்றியும் கவலைப் படாது மனதில் பட்டதை தைரியமாக பேசும் ஆண் மகன் அவர். ஒரு அரசியல் கட்சியின் மேடையில் மாற்றுக் கட்சி தலைவரின் பெயரைச் சொல்வதே கிரிமினல் குற்றமாக பார்க்கப்படுவதும், பண்பாடு பற்றி வாய் கிழிய பேசும், எழுதும், தலையங்கம் தீட்டும் பத்திரிக்கைகள் இந்த விஷயத்தை அர்த்தமில்லாது விவாதப் பொருளாக்குவதும் அவரவர் வணிக ரீதியிலான தேவையை - நிர்பந்தத்தை - மனதில் கொண்டே தவிர வேறு ஒன்றும் இல்லை.

அது மட்டுமில்லே…. ஒரு மாநில முதல்வர் முன்னிலையில், திரைத்துறை சம்பந்தப்பட்ட விழாவில் எதிர்கட்சித் தலைவரின் பெயரைக் கூட எவரும் சொல்லத் தயங்கும் ஒரு சூழ்நிலைகளில் அவர் துணிவுடன் கூறுவதும் மேற்படி சர்ச்சைகள் (?!) கிளம்புவதற்கு காரணம் ஆகும். (ஒருவேளை சம்பந்தப்பட்ட எதிர்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள கட்சி சார்புடைய நடிகர் எவருக்கேனும் முதல்வர் முன்னிலையில் பேசும் வாய்ப்பு தரப்பட்டால் அவர் தனது தலைமையின் பெயரை தைரியமாக குறிப்பிடக்கூடும். ஆனால் மாற்றுக் கட்சியை சேர்ந்த நடிகர்களுக்கு இங்கு மைக் தரப்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்!)

இதில் விஷயம் என்னவென்றால், சூப்பர் ஸ்டார் அவர்களின் மேற்படி பேச்சுக்களை சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களே தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில், அவரைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், பரபரப்புக்காக பத்திரிக்கைகள் தான் இதை ஊதி பெரிதாக்குகின்றன.

(தற்போது 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் முதல்வர் ஜெ.வுடன்.)

என்னை பொறுத்தவரை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், இவை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுத் தள்ளவேண்டியவை. இவற்றுக்கு நாம் பெரிதாக ரீயாக்ட் செய்யத் தேவையில்லை.

ஏனெனில், ரஜினி அவர்களே இதை - அதாவது பத்திரிக்கைகள் இப்படி எழுதுவதை - ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டார். “நமக்கு எவ்வளவோ விஷயங்களில் சப்போர்ட் பண்ணியிருக்காங்க. முக்கியத்துவம் கொடுக்குறாங்க. எழுதினா எழுதிட்டு போகட்டும். அதனால என்ன இப்போ? மக்களுக்கு என்னை பத்தி தெரியும். ரசிகர்களுக்கு நல்லாவே தெரியும். நாம் தப்பு செய்யலே. அப்படியிருக்கும்போது எதுக்கு இதுக்கு போய் கவலைப்படணும்? அலட்டிக்கணும்?” என்பது தான் நிச்சயம் அவரது மனநிலையாக இருக்கமுடியுமே தவிர வேறு எதுவும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை ரஜினி அவர்களின் இந்த தைரியம் தான் அவரது மிகப் பெரிய பலமே. அவரது தனித் தன்மையே இது தான். அவரது எளிமைக்கு பிறகு ரசிகர்களுக்கு அவரிடத்தில் மிக மிக பிடித்ததும் இது தான். பெண்களும் அவரிடத்தில் விரும்புவது இதைத் தான்.

எத்தனையோ புயல்களுக்கும், மாற்றங்களுக்கும், சறுக்கல்களுக்கும் ஈடுகொடுத்து, ஆண்டாண்டு காலமாக ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் ‘சிம்மாசனம்’ இட்டு வீற்றிருக்கிறார் என்றால் அதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான்: அது தான் அவரது ‘தைரியம்’. வள்ளுவன் வாக்கில் : “அஞ்சாமை”.

அவரை நிஜ வாழ்க்கையை பின்பற்ற விரும்பும் ரசிகர்கள், அவரது இந்த குணத்தை பின்பற்ற முயற்சிக்கலாமே!!

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. (குறள் 647)

பொருள் : சொல்லக்கூடிய விஷயத்தை அச்சமும் சோர்வுமின்றி சொல்லக்கூடிய திறம்படத்தவனை எவராலும் வெல்ல முடியாது.

———————————————————————————————-
ஃபினிஷிங் லைன் : பத்திரிக்கைகளின் விமர்சனங்களை பற்றி ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை. அதை எழுதும் பேனாவுக்கே தெரியும். “நாம் எழுதவில்லை, எழுதவைக்கப்படுகிறோம்” என்று!
———————————————————————————————-

[END]

17 Responses to “மாறி மாறி வரும் ஆட்சிகள் - என்றும் மாறாத ரஜினியின் ‘அஞ்சாமை’!! சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேடைப் பேச்சின் முழு வரலாறு!!”

 1. ANANTH ANANTH says:

  Naanum antha pathirikai vanki padithen athil nam thalaivarai oru suyanalvathi ena solliirunthargal athai padithathum en manam romba kastappattathu.
  Athum avargl kochadaiyaan padam odavendum enpathargaka thalaivar ivaru paesukirar endru eluthiirunthargal athai padikum pothu enaku seripu dan vanthathu…. kumudam epothum thalaivari vimarsanam seithu lapam sampathipathu avargal pilaipaga kondulanar….. Kumudathil ithai padithathum muthalil nenaithathu inimale kumudam ithalai vangave kudathu endra ennam dan vanthathu …… Suriyani paarthu nai kuraitha kathaiyaga dan ithai eduthukollavendum……

 2. saravanan saravanan says:

  நல்ல ரசிகர் நீங்கள் சுந்தர்

  தலைவரை நன்றாகவே எல்லா விசயங்களிலும் ரசித்து எழுதுகிறிர்கள். ஆனால் தலைவருக்கு தமிழ் நாடு மக்கள் கொடுக்குற முக்கியத்துவத்துக்கு அவர் ஏதோ அவங்க முன்னாடி ஜால்ரா போடுற மாதிரி போட்டு தனக்கு பாதிப்பு வராத மாதிரி கொஞ்சம் துணிச்சலா சொல்ற மாதிரி கொஞ்சம் திருப்தி பண்ணிகிறார்.

  வெள்ளை ய னே வெளி ஏறுன்னு சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாதபோவே நம்ம ஜனங்கள் நமது அப்போதைய தலைவர்கள் துணிஞ்சி வாழ்ந்த நாடு இது. இந்த பாராட்டு முற்காலத்தை நினைத்தால் தூசுக்கு கூட இல்லை.

  நல்லா தமக்கு தேவையானதா தொந்தரவு இல்லாம கிடைக்கவும் வழி செய்துட்டு முடிஞ்ச வரை எதோ ஊருக்கு ஒரு விண்ணப்பமும் தாராரோ தலைவர்

 3. saravanan saravanan says:

  சுந்தர் அவர்களே
  என்னடா இவன் ரசிகனா என்று யோசிக்காதிர்கள். நான் இன்றும் தலைவர் ரசிகன் தான் அதற்காக எனக்கு தப்புன்னு தோணுறத விமர்சனம் செய்றன் வெறும் ஒரு ஆலோசனையா தானே தவிர கண்டிப்பா அவர மனசுல இருந்து கொஞ்சம் கூட விட்டு கொடுக்க மாட்டேன். அவர பார்த்தே வாழ்ந்தவன் நான்

 4. saravanan saravanan says:

  இன்னைக்கும் எத்தனையோ நல்ல குணம் படைத்த அவர் போல ஒரு மனிதனை பார்க்க முடியாது. எனக்கு தெரியும்

  ஆனால் சில விஷயம் அவருக்கு தேவை இல்லை அவரை மக்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு கண்டிப்பா தேவை இல்லை

 5. sakthivel sakthivel says:

  only one solution is there,thalaivar declare that he is not coming to politics and sorry for making others to expect that one.

 6. Somesh Somesh says:

  எனது பர்சனல் ஒபினியன் : திரு கருணாநிதி அவர்கள் முன் ஒரு காலத்தில் மக்களுக்காக உழைத்தார். இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் தலைவர் அவரை ஆருயிர் நண்பர் என்றெல்லாம் சொல்வதை தவிர்க்கலாம். நமது தலைவர் நட்பிறகு பாத்திரம் ஆகும் அளவிற்கு திரு மு க இல்லை. தமிழ் நாடு கடந்த ஆட்சியில் எந்த அளவு சீரழிந்து கிடந்தது என்பதும் அதற்கு யார் காரணம் என்பதும் அனைவரும் அறிந்ததே. அது மட்டும் அல்லது பாபா பட விவகாரத்தில் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தவர்கள் அவர்கள். திரு ஸ்டாலின் இல்ல திருமண விழாவிற்கு முறை படி அழைக்காதவர்கள். இதை தலைவரை சொல்லி இருக்கிறார். அரசியல் வேறு குடும்ப விழாக்கள் வேறு என்று. தலைவருக்கு மன்னிக்கும் மனது.

 7. R.Ramarajan- Madurai R.Ramarajan- Madurai says:

  Thalaivarin nermai, anjamai pathi yarum santhega pada venam. Anna right article at right time . Unga finishing line super o super.
  Nam anaithu rasigaridam Thalaivar pathi correct news sella oru bi-monthly Book start pannalam.

 8. விஜய் ஆனந்த் விஜய் ஆனந்த் says:

  பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிட்டீர்கள் ….! இனி எவரும் இது போன்ற விசயங்களுக்கு தேவை இல்லாமல் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்….! எனக்கு இது ஒன்று தான் புரியவில்லை….முதல்வர் இருக்கும் மேடையில் ஒரு கட்சியின் தலைவரைப் பற்றி சொல்வது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? அதற்கு இவ்வளவு பெரிய விமர்சனம் தேவையே இல்லை,..!
  -
  “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
  -
  விஜய் ஆனந்த்

 9. RAJA RAJA says:

  தலைவரின் ரசிகர்கள் அனைவருக்கும் பஞ்ச் டயலாக் கை வந்த கலை போல தெரிகிறது கடைசியில் நீங்கள் வைத்துள்ள பஞ்ச் அருமை
  ————————————————————————-
  அடுத்த கட்சி தலைவரின் பெயரை கூட குறிப்பிட கூடாது என்று நினைக்கும் இதே பத்திரிக்கைகள் தான் தமிழ்நாட்டில் அரசியல் நாகரீகம் டெல்லியில் இருப்பது போல் இல்லை என்று வாய் கிழிய பேசுவார்கள்
  ——————————————————————————
  முதல்வர் அவர்களே இந்த மாதிரி விஷத்தை கண்டு கொள்ளாமல் விட்டால் கூட இந்த மாதிரி மஞ்சள் பத்திரிக்கைகள் சும்மா இல்லாமல் உசுபேத்தி விடுவார்கள் போல அதே போல் கண்டிப்பாக ஜெயா தொலைகாட்சியில் அதை எடிட் செய்து தான் போடுவார்கள் அதுவும் இந்த பத்திரிகைகளுக்கு ஒரு தீனி தான்

  ——————————————————-

  திரு சோ அவர்கள் எதோ பத்திரிகையில் விளக்கம் கொடுத்து உள்ளார் அது இருந்தால் போடவும் சுந்தர்.

  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
  New article posted. Pls check.
  - Sundar

 10. KUMARAN KUMARAN says:

  தலைவரை சினிமா தான் அளவோடு பேச வைக்கிறது (ஏனென்றால் மற்றவர்களின் முதலிடு உள்ளது ) சினிமாவிலிருந்து retire ஆன பிறகு பாருங்கள் சும்மா இந்தியாவே அதிரபோகிறது

 11. suji suji says:

  இதில் விஷயம் என்னவென்றால், சூப்பர் ஸ்டார் அவர்களின் மேற்படி பேச்சுக்களை சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களே தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில், அவரைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், பரபரப்புக்காக பத்திரிக்கைகள் தான் இதை ஊதி பெரிதாக்குகின்றன.

 12. Mettustreet K.muthu Mettustreet K.muthu says:

  //ரஜினி அவர்களின் இந்த தைரியம் தான் அவரது மிகப் பெரிய பலமே. அவரது தனித் தன்மையே இது தான். அவரது எளிமைக்கு பிறகு ரசிகர்களுக்கு அவரிடத்தில் மிக மிக பிடித்ததும் இது தான். பெண்களும் அவரிடத்தில் விரும்புவது இதைத் தான்.//
  மிகவும் உண்மையான வரிகள் !

 13. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

  From the above article, you brought most of the discussions made by Thaliaivar to right and you proved that you are no way lesser than Mr cho Ramasamy. Great compliation and nice snaps opted for the article.

 14. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  நமது தலைவரைப் பற்றி தான் உலகத்துக்கே தெரியுமே ..!!!!!

  //பத்திரிக்கைகளின் விமர்சனங்களை பற்றி ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை. அதை எழுதும் பேனாவுக்கே தெரியும். “நாம் எழுதவில்லை, எழுதவைக்கப்படுகிறோம்” என்று!//

  //எத்தனையோ புயல்களுக்கும், மாற்றங்களுக்கும், சறுக்கல்களுக்கும் ஈடுகொடுத்து, ஆண்டாண்டு காலமாக ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் ‘சிம்மாசனம்’ இட்டு வீற்றிருக்கிறார் என்றால் அதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான்: அது தான் அவரது ‘தைரியம்’. வள்ளுவன் வாக்கில் : “அஞ்சாமை”.//

  செம கலக்கல் சுந்தர் அண்ணா…

  -என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் எஸ்.எம்.எஸ் குரூப்…

 15. Sankaranarayanan Sankaranarayanan says:

  பத்திரிக்கைகளின் விமர்சனங்களை பற்றி ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை. அதை எழுதும் பேனாவுக்கே தெரியும். “நாம் எழுதவில்லை, எழுதவைக்கப்படுகிறோம்” என்று!

  சூப்பர் பஞ்ச்..

 16. மனோஜ் ராக்ஸ் மனோஜ் ராக்ஸ் says:

  ஒவ்வொரு புகைப்படமும் அறிய பொக்கிஷம்!! அனைத்தும் அசத்தல்!! இவை எளிதில் கிடைபதால் நமக்கு அதன் அருமை தெரியவில்லை!! சுந்தர் அண்ணாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்!! உங்கள் சேவை எங்களுக்கு தேவை!!

 17. B. Kannan B. Kannan says:

  Superb one sundar.. I think noone can explain better than this..
  Need this one for our young and charged up fans to understand the current scenario better and react accordingly..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates