You Are Here: Home » Featured, Rajini Lead » முதல்வர் முன்னிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு - தி.மு.க.வின் ரீயாக்ஷன் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் எம்.எஸ்.வி. அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை பற்றி குறிப்பிடப்பட்டது சர்ச்சையாக்கப்பட்டது தெரிந்ததே.

இந்நிலையில், அது குறித்து பத்திரிக்கைகள் மற்றும் சில பிரபலங்களின் கருத்துக்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்…

——————————————————————————————————-
(01/09/2012) சனிக்கிழமை வெளியான ஜூனியர் விகடனில்
பழ கருப்பையா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. :

கருணாநிதிக்கு என்ன புகழ் எஞ்சி நிற்கிறது ?

“ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டு கருணாநிதியை புகழ்ந்தாரே ரஜினி?” என்று, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வான பழ கருப்பையாவிடம் கேட்டோம். “அம்மா முன்னிலையில் ரஜினி பேசியதை நானும் கேட்டேன். ‘புகழ் பெற்றவர்கள் இருமுறை சாகிறார்கள். ஒன்று உடலை விட்டு உயிர் நீங்கும்போது, இன்னொரு முறை புகழ் நிலையில் இருந்து சரிவுறும் போது’ இப்படி சொல்லிக் கொண்டு வந்தவர் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். என்று வரிசைப்படுத்தி இவர்களுக்கெல்லாம் ஒரு முறை தான் மரணம் ஏற்பட்டதேன்றார். அவர்கள் வாழும்போது புகழை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகாதவர்கள் என்பதால், வாழும்போது சாகாதவர்கள் என்பது அதன் பொருள். இந்த வரிசையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் சேர்த்தார்.

ரஜினிகாந்தின் ஆராய்ச்சி சரியானது தானா? தமிழுக்காகவும் தமிழினத்துக்காகவும் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் தலைவராக இருந்துகொண்டு, மைய ஆட்சியிலும், அங்கம் வகித்துக் கொண்டு, சோனியா காந்தியின் சொந்த நோக்கத்துக்காக துணைபோய், கசாப்புக்கடைக்காரன் ராஜபக்சே ஈழத்தை சுடுகாடாக்கும் வேளையில், தமிழ்நாடு பொங்கி எழுந்துவிடாமல் நாடகங்கள் ஆடி, இன அழிவுக்கு காரணமான கருணாநிதிக்கு என்ன புகழ் எஞ்சி நிற்கிறது?

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்து தி.மு.க.வை விளக்கிக்கொண்டிருந்தாள், காங்கிரஸ் கவிழ்ந்திருக்கும். போர் நின்றிருக்கும். ஈழத் தமிழினம் காக்கப்பட்டிருக்கும். அந்த ஒன்றைக் கருணாநிதி செய்திருந்தால் அரசியல் ரீதியிலான திறனாய்வுகள் அப்போதே இருந்திருக்கும் என்றாலும் ‘இனம் அழியக் காரணமானவர்’ என்ற ‘வரலாற்று இழிவுக்கு’ உள்ளாகி இருக்க மாட்டார்.

ரஜினிகாந்த் சொல்லிய வாழும்போதே அடையும் இன்னொரு மரணம் இதுவாக இருக்கலாம். ஒரு கருதுகோளை முன்வைத்து அதை திறம்பட வளர்த்து முடிக்க ரஜினிகாந்த் பழக்கப்பட்டிருக்கவில்லை. உண்மையிலேயே ரஜினி நல்லவர். கருணாநிதி “என் பெயரை ஏன் விட்டு விட்டாய்?” என்று கேட்டு வருத்தப்பட்டு விடுவாரோ என்னும் தாட்சணயம் ரஜினியை அவ்வாறு சொள்ளவைத்துவிட்டது!

——————————————————————————————————-

இதற்கு பதிலடியாக தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் 02/09/2012 அன்று வெளியான கட்டுரை….

முரசொலி (02/09/2012)

ஆமை புகுந்த வீடும், பழ.கருப்பையா சேர்ந்த கட்சியும் உருப்படுமா?

“ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது” என்று கிராமங்களில் சொல் வார்கள்! அதைப்போல பழ.கருப்பையா சேர்ந்த எந்த கட்சியும் உருப்படுவதில்லை. அவர் யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அவர்களும் நிலைத்து நிற்பதில்லை. தமிழ்நாட்டில் அவர் இல்லாத கட்சிகளே கிடையாது. அந்த அளவிற்கு அவருடைய கருத்துக்களுக்கும் மலிவான மதிப்பு மட்டுமே உண்டு.

ஜெயலலிதா இருந்த மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசும்போது தலைவர் கலைஞரைப் பாராட்டி விட்டாராம்! உடனே பழ.கருப்பையா வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு, கலைஞர் மீது விழுந்து பிறாண்டி யிருக்கிறார். இலங்கைத் தமிழர் போராட்டத்தில் கலைஞர் எதுவும் செய்யவில்லையாம்! இலங்கைத் தமிழர் போராட்டத்தின்போது திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவரும் எந்த அளவிற்குப் பாடுபட்டார்கள், எத்தகைய போராட்டங்களை நடத்தினார்கள், மத்திய அரசுக்கு எந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்தார்கள் என்பதையெல்லாம் தலைவர் கலைஞரே பக்கம் பக்கமாக முரசொலி யிலே விரிவாக எழுதியிருக்கிறார். அதையெல்லாம் படித்தால் தானே? அதைப் படிக்காத இந்த மூதேவி, கலைஞரைப் பற்றி பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

இலங்கைத் தமிழர்களுக்காக கலைஞர் ஒன்றுமே செய்யவில்லை என்கிற இந்த அதிகப் பிரசங்கி என்ன செய்தார்? பட்டினிப் போராட்டம் நடத்தினாரா? அல்லது இலங்கைக்கு துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு போனாரா? கலைஞரைப் பற்றி குறை சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது?

அன்றைக்கு கலைஞரின் பின்னால் போய்க் கொண்டு, காரைக்குடிக்கே கலைஞரை அழைத்துப் போய் கூட்டம் நடத்தி, உன் பையை நிரப்பிக் கொண்டாயே, அப்போது கலைஞர் உயர் வாகத் தென்பட்டாரோ? இப்போது கலைஞரை குறைகூறும் நீ, நாளைக்கு அம்மையார் ஆட்சி போய் விட்டால் மறுபடியும் அவரை “அம்போ” வென்று விட்டு விட்டுப் போய் விடுவாய் என்பது ஊருக்குத் தெரியாதா? அ.தி.மு.க. தோன்றிய காலத்திலிருந்து அந்தக் கட்சிக்காக உழைத்தவரா நீ? நேரம் பார்த்து அந்தக் கட்சியிலே சேர்ந்து இன்றை க்கு உனக்கும் பதவி கிடைத்துவிட்டதும், பிழைத்துப் போகின்ற வழியைப் பார்க்க வேண்டுமே தவிர, கலைஞர் மீது பழி கூற உனக்கு என்ன தகுதி உள்ளது?

கலைஞருக்கு என்ன புகழ் எஞ்சி நிற்கிறது என்று கேள்வி கேட்கிறாயே, உன்னுடைய நிலை என்ன? கலைஞருக்கு ஒரே கட்சி, ஒரே தலைவர், ஒரே கொடி! உன் யோக்கியதை என்ன? வெட்கமாக இல்லையா உனக்குப் பேசுவதற்கு? கையாலாகாதவன் தான் வாய்ச் சவடால் காட்டுவான். நீ போய் விட்டால் உன்னைத் தூக்குவதற்குக்கூட நான்கு பேர் வரமாட்டான். உனக்கெல்லாம் கலைஞர் பற்றி எழுதுவதற்கு பேனா ஒரு கேடா?

நீ கலைஞரைப் பற்றி மட்டும் எழுதவில்லை. அவரைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினியையும் கிண்டல் செய்திருக்கிறாய். உண்மையிலேயே ரஜினி நல்லவர் என்றும், ஆனால் தாட்சண்யம் கருதிப் பேசினார் என்றும், அவர் ஏதோ தவறிப் பேசி விட்டதைப்போல, அவருடைய கருத்துக் கும் மாசு ஏற்படுத்த முனைந்திருக்கிறாய்.

எப்படியோ உன் பிழைப்பை நீ நடத்திக் கொள்வதைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. ஆனால் தி.மு.கழகத்தைப் பற்றியோ, அதன் தலைவரைப் பற்றியோ இப்படியெல்லாம் பேசினால் மூலைக்கு மூலை வாங்கிக் கட்டிக் கொள்ளத்தான் வேண்டும். வாயை அடக்கு இல்லாவிட்டால் அடக்குவோம்!

——————————————————————————————————-

ஜூனியர் விகடன் (05/09/2012)
துக்ளக் ஆசிரியர் சோ….

என்னை மாட்டிவிட்டுட்டார் ரஜினி

‘முதல்வர் பேச்சை கேட்காத ஒருவர்’ என்று சோவை பற்றி ரஜினி பேசியதற்கு சோ என்ன சொல்கிறார்> ‘இதை சீரியசான விஷயம் என்று என்னிடம் கேட்கிறீர்களே…. ரஜினி எனக்கு மிகும் நெருங்கிய நண்பர். என்னைப் பற்றி பேச அவருக்கு உரிமை உண்டு. அவர் பேசியதற்காக நான் சீரியஸ் ஆகவில்லை. என்னை மாட்டிவிட்டுட்டாரே… என்று தான் தலையில் கைவைத்தேன்” என்றார் சோ.

——————————————————————————————————-
குமுதம் ரிப்போர்ட்டர் (06/09/2012)

“அதே இடம்… அதே சந்திப்பு…. ஜெ.வை உரசிய ரஜினி” என்ற தலைப்பில், விழா நிகழ்வுகளை மெலிதாக அலசிவிட்டு….

கருணாநிதியை மக்கள் புறக்கணித்தாலும் ரஜினி நினைவில் வைத்திருக்கிறார்.

——————————————————————————————————-

குமுதம்…. (06/09/2012)

தனது படம் வரும்போதெல்லாம் பரபரப்பாக எதையாவது பேசி ரசிகர்களை சூடாக வைத்திருப்பது ரஜினி பின்பற்றும் தந்திரங்களில் ஒன்று. அன்று அவர் மேடையில் பேசிய பேச்சு தேவையற்ற கூத்து. (இது தான் குமுதம் கட்டுரையின் சாராம்சம்).

——————————————————————————————————-

ஆனந்த விகடன் (12/09/2012)

கேள்வி :
“ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே, ‘கருணாநிதி என் ஆருயிர் நண்பர்’ என்று ரஜினி பேசினாரே…. கருணாநிதி - ஜெயலலிதா இவருடனான ரஜினியின் நட்புச் சமநிலையை ஜெயலலிதா ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டாரா?

துக்ளக் ஆசிரியர் சோ: “இதனால் ஜெயலலிதாவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஜெயலலிதா அதை எப்படி எடுத்துக்கொண்டார் என்பதும் எனக்கு தெரியாது. ஆனால், முதல்வரை மேடையில் வைத்துக்கொண்டு, ‘கலைஞரின் இன்றைய புகழ் காலத்துக்கும் நீடிக்கும்’ என்று ரஜினி பேசியது கலைஞரை அவர் விமர்சனம் செய்தது போலத் தான் இருந்தது. கலைஞருக்கு ஏராளமான ‘புகழ்’ இருக்கிறது. குடும்ப ஆட்சி நடத்தினார் என்ற புகழ் இருக்கிறது. குடும்பத்துக்கு தமிழ் நாட்டையே தாரை வார்த்தார் என்ற புகழ் இருக்கிறது. ஈழம் விஷயத்தில் கோமாளி நாடகம் நடத்தினார் என்ற புகழ் இருக்கிறது. அலைக் கற்றை ஊழல் புகழ் இருக்கிறது. இந்த புகழ் எல்லாம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று ரஜினி கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதாகவே அவர் மேடையில் பேசியபோது எனக்கு தோன்றியது. நல்ல வேலை ரஜினி கலைஞரோடு நிறுத்திக்கொண்டார். இன்னும் ஸ்டாலின் புகழ், அழகிரி புகழ், கனிமொழி புகழ், என்று வரிசையாக பட்டியலிட்டிருந்தால் அந்த மேடை இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தியை புகழ நேரம் இல்லாமல் போயிருக்கும்.

ஒரு விஷயத்தை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும். கலைஞர் ஆட்சியின் போது நடந்த ‘பெப்சி’ விழாவில் அன்றைய முதல்வர் முன்பாக பேசிய ரஜினி, அதற்க்கு முன்பும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பள்ளிக்கரணையில் ‘பெப்சி’ உறுப்பினர்களுக்கு நிலம் ஒதுக்கியதை குறிப்பிட்டு பேசினார்.அதை ‘பெப்சி’ உறுப்பினர்கள் ஏற்காமல் போனது அவர்களுக்குத் தான் நஷ்டம் என்று வெளிப்படையாக குறிப்பிட்டார். ‘டயமன்ட்’ போல விலை மதிப்புள்ள இடத்தை கோட்டை விட்டுவிட்டீர்களே என்று ரஜினி சொஇன்னார். இதை கலைஞரை மேடையில் வைத்துக்கொண்டே பேசுகிறோமே என்றெல்லாம் ரஜினி தயங்கவில்லை. எப்போதுமே அவர் அப்படித் தான்.”

——————————————————————————————————-
(நண்பர்களே இந்த பதில் சோ விகடனுக்கு சொல்றாரு என்பதை விட, ரஜினிக்கு தான் சொல்றமாதிரி எனக்கு தோணுது!)

[END]

40 Responses to “முதல்வர் முன்னிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு - தி.மு.க.வின் ரீயாக்ஷன் என்ன?”

  1. vimal vimal says:

    idhu thaan unmai

    குமுதம்…. (06/09/2012)

    தனது படம் வரும்போதெல்லாம் பரபரப்பாக எதையாவது பேசி ரசிகர்களை சூடாக வைத்திருப்பது ரஜினி பின்பற்றும் தந்திரங்களில் ஒன்று. அன்று அவர் மேடையில் பேசிய பேச்சு தேவையற்ற கூத்து. (இது தான் குமுதம் கட்டுரையின் சாராம்சம்).

    idhu thaan unmai

    • saranya saranya says:

      appo enthentha padathukku munnaadi ennenna arikkai vittaar endru ungalaal koora mudiyuma.

      • David Baasha David Baasha says:

        கண்ணா,அவர் அரசியல் பற்றி பேசவில்லை,பராசக்தி,மனோகரா… போன்ற படங்களில் சிவாஜியை எப்படி நம்மால் மறக்க முடியாதோ கலைஞரின் வசனதயும் மறக்க முடியாது.அதை வைத்து நண்பர் என்ற முறையில் கூறினார்.ப ம க பிரச்சனையின் போதுகூட தி மு க வில் கலைஞரை தவிர அங்கு நண்பராக யாரையும் ஏற்று கொள்ளமுடியாது என்றுதான் கூறினார்.வாய் இருக்கு என்று பேசக்கூடாது தோழரே.

    • Vicky Vicky says:

      Oh, what a discovery!
      Avar padam varumbothu ‘oru padathai patthi yethanai tadavaitan pesurathu’ yendru sangadapattavar. Mattavargaltan , aiyoyo padam varapoguthe-nu yetavuthu poi solli,buildup panni tevai illata romours spread pannuvangga. Athe pol tan ithuvum. Nallatho, kettatho, Rajini patthi pesinaltanne

  2. RAJA RAJA says:

    உண்மையில் பழ. கருப்பையா சொல்லியதும் ,முரசொலியில் வந்ததும் அவர் அவர் தங்கள் தலைமையை திருப்தி படுத்த சொன்னது ,அடுத்து பத்திரிகை அதை பத்தி பேசி நமது நேரத்தை வீண் அடிக்க விரும்பவில்லை
    ———————————————————————————-
    திரு சோ அவர்கள் சொல்லியது தான் நூற்றுக்கு நூறு உண்மை ,சோ அவர்களுக்கு தலைவர் எவ்வாறு பேசுவார் என்று தெரியும் அது தான் அவர் இவ்வளவு தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்
    ——————————————————————————-
    இன்று இவ்வளவு பேசும் பத்திரிகைகள் அதையே தலைவர் அவர்கள் கலைஞரை மேடையில் வைத்து திரு ஜெயலலிதா அவர்கள் இடம் கொடுத்தார் என்று பாராட்டி பேசினார் ஆனால் அந்த விஷயத்தை யாரும் அப்பொழுது இப்படி பரபரப்பாக பேசவில்லை,இவர்கள் இப்படி செய்வது ஏதோ கலைஞர் முன்னாள் யாரை பற்றி பேசினாலும் அவர் கண்டு கொள்ள மாட்டார் ,ஆனால் ஜெயலலிதா அவர்கள் முன்னால் வேறு ஒரு கட்சி தலைவரை பற்றி பேசினால் அவர் கோவம் கொள்வார் என்பது போல இவர்களாகவே ஒரு மாயையை உருவாக்கி உள்ளார்கள் இதை திரு ஜெயலலிதா அவர்கள் உணர்ந்தால் போதும்

    ————————————————————————-
    குமுதம் ரிப்போர்ட்டர் (06/09/2012)
    “அதே இடம்… அதே சந்திப்பு…. ஜெ.வை உரசிய ரஜினி” என்ற தலைப்பில், விழா நிகழ்வுகளை மெலிதாக அலசிவிட்டு….
    கருணாநிதியை மக்கள் புறக்கணித்தாலும் ரஜினி நினைவில் வைத்திருக்கிறார்./////////////////////////

    பார்க்க தானே போகிறோம் இதே பத்திரிக்கை இன்னும் கொஞ்ச காலம் கழித்து என்ன செய்ய போகிறது என்று

    ————————————————————————————-

    தலைவர் கலைஞர் என் நண்பர் என்று தான் கூறினார் ,ஒருவருக்கு நண்பர் என்று இருந்தால் அவர் கடைசி வரை நண்பராக தான் இருக்க முடியும் ,நம்பிக்கை துரோகம் செய்தால் ஒழிய வேறு எந்த விசயத்துக்கும் நண்பர்கள் மேல் கோபம் வராது அது யாராக இருந்தாலும் அப்படி தான் நானாக இருந்தாலும் சரி ,நீங்கலாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி அதை விட்டு விதூ தலைவர் ஏதோ சொல்ல கூடாததை சொல்லி விட்டதை போல பெருசு படுத்தி பேசுவது வேடிக்கை

  3. vasanthan vasanthan says:

    திருந்தாத உள்ளங்கள் நம் அரசியல்வாதிகள் ,,சில பத்திரிகைகள் ,,….வருந்தாத உள்ளம் நம் தலைவர் .

  4. David Baasha David Baasha says:

    இதை தவறு என்று சொன்னால்தான் பத்திரகைகள் பிழைப்பு நடத்த முடியும்.இந்த பேச்சில் என்ன பரபரப்பு இருக்கு.கலைஞர் தலைவரின் நண்பர்தானே?தலைவர் தி.மு.க வில் இல்லையே.பரபரப்பாக பேசி அவர் படம் ஓடும் நிலை இல்லை என்பதை உலகம் அறியும். கிறுக்குத்தனமாக உங்கள் பேனா எழுதி உங்கள் பத்திரிக்கை விற்கும் நிலை உள்ளது என்று குழந்தை கூட அறியும்.

  5. ananth ananth says:

    நல்லவங்க என்ன பேசினாலும், தீயவர்கள் எதிர்பார்கள், குறை சொல்லுவார்கள் . இது கலி காலம். அழிவுக்குத்தான் முக்கியம் , ஆக்கத்திற்கு அல்ல.

  6. arul arul says:

    குமுதம் அண்ட் குமுதம் ரிப்போர்ட்டர் ரெம்ப கேவலமா போய்ட்டாங்க இப்போ முழுமையாக அதிமுக ஆதரவு எடுத்துட்டாங்க

  7. senthil senthil says:

    பரபரப்பாக பேசி அவர் படம் ஓடும் நிலை இல்லை என்பதை உலகம் அறியும்.

  8. Kumudham & Kumudham reporter magazines not at selling as there is no stuff. That’s why they write bad about Thalaivar to sell and do the marketing for their magazines. Let us feel that a dog barks looking at a sun and moon.

  9. Sankaranarayanan Sankaranarayanan says:

    எதையாவது பரபரப்பா எழுதி பைசா பார்க்கிற கேவலமான பத்திரிக்கைகள் நம் தலைவர் பரபரப்பா பேசுகிறாரு என கூறுவது மகா கேவலம். பத்திரிக்கை விற்பதற்கு கேவலமான செயல்களில் ஈடுபடும் இவங்களை ……… விடுங்க

    அதை ஆண்டவன் பார்த்துப்பாரு.

  10. harisivaji harisivaji says:

    பர பரப்பா நெறைய பேரு படம் வரும் பொது பேசுறாங்க அவங்க படம் ஓடுதா ????
    படம் ஓடுதா இலையோ அதை இவுங்க பத்திரிகையில் போட்டு கல்லா கட்டிகிறாங்க

  11. RAJNISENTHIL RAJNISENTHIL says:

    kumudham ippadi ezhuthiyadhu roomba varuthama irruku

  12. suyambu suyambu says:

    அவர் பேசியதில் தவறு ஒன்றும் இல்லை. நாம் எடுத்து கொள்ளும் விதத்தில் than இருந்கிறது

  13. Naveen Naveen says:

    Mr. Sundar, why super star haven’t tried to help the victims in sivakSi accident. I think it is better for super star to stop such political nonsense and just to do good things here after. I think we have to insist him to concentrate on people who needs help. Not all these stupid politicians. It is an upset for all of us. I think thalaivar is becoming too selfish.

    —————————————————-
    நவீன், ரஜினி அவர்கள் கடந்த காலங்களில் செய்த நல்ல விஷயங்கள் பல என் கவனித்திற்கு வரும்போதெல்லாம் அதை நான் இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். ஆனால் “அவர் இப்படி செய்யவேண்டும், இப்படி செய்தால் நன்றாக இருக்கும், இப்படி செய்திருக்கவேண்டும்” என்ற ரீதியில் நான் எதையும் கூற முனைந்ததில்லை. சிவகாசி துயரத்தை பொறுத்தவரை அவர் ஏதாவது செய்திருக்கவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். பார்க்கலாம்…
    - சுந்தர்

    • RAJA RAJA says:

      @நவீன்
      தலைவர் அன்றே சொல்லிவிட்டார் இதை நான் செய்யணும் செய்ய கூடாது என்று யாரும் என்னை கட்டாய படுத்த முடியாது என்று ,மாற்று மாநிலத்தில் இருந்து ஒருவர் மருந்து கொடுத்து அனுப்பியதை பெருமையாக போடும் இங்குள்ள பத்திரிகைகள் தலைவர் எதாவது உதவி செய்தால் உடனே ஏன் அவர் இதற்க்கு முன்னாள் சிவகாசியில் இவ்வளவு விபத்துக்கு உதவி செய்யவில்லை,இப்பொழுது திடீர் என்று உதவி செய்கிறாரே ஏன் படம் வெளி வர போகிறது என்றா என்று சொல்லுவார்கள் இதை எப்படி எடுத்து கொள்ளுவீர்கள் ,தலைவர் செய்ய வேண்டும் என்று எல்லோருக்குமே விருப்பம் தான் செய்தாலும் குறை கூறுவார்கள் செய்ய விட்டாலும் குறை கூறுவார்கள்,அடுத்து மற்றவர்களை போல் நீங்களும் என்னமோ தலைவர் மட்டும் தான் இங்கு நடித்து கோடி கோடியாய் பண சம்பாதிப்பது போல் பேசுவது வருத்தமாக உள்ளது,எவ்வளவோ பேர் உள்ளார்கள் அவர்களையும் நாம் செய்யுங்கள் என்று சொல்ல முடியுமா முடியாது .

      • Naveen Naveen says:

        குறை சொல்லும் நாக்கு நிக்கப்போவது இல்லை. ஆனால் இந்த விபத்தில் வஞ்சிக்கப்பட்ட உயிர்களை பற்றி சற்று சிந்தியுங்கள்:( தலைவருக்கு இனி பணம் தேவையில்லை, புகழும் தேவையில்லை. இந்த நிலையில் பிறர் செய்யும் விமர்சனம் பற்றி என்ன கவலை. ?! நன்மை செய்ய அவருக்கு என்ன தடை? அரசியல் அவருக்கு விருப்பம் இல்லை. “ரசிகர்களுக்கு என்ன கைம்மாறு செய்ய” என்று பேசும் அவர் இப்படி பாதிகபட்டவர்களுக்கு உதவுவது நன்மை தராத? மம்மூட்டி தமிழில் என்திர்பர்தா சம்பளம் கிடைக்காது போக தந்து இமேஜ் வளர இந்த உதவி உதவும் என்பது நான் அறிவேன். நான் சொல்ல நினைபதெல்லாம் தலைவர் இனியேனும் இந்த திராவிடர் கட்சி தலைவர்களை வாழ்த்தி பேசுவதை நிறுத்தி அவதியுறும் மக்களுக்கு உதவ வேண்டும். ரசிகர்களை சந்திபதையும் இப்போது அவர் செய்வதில்லையே;( ஒரு முறையாவது அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க முடியவில்லையே?:( தனிப்பட்ட முறையில் இந்த ரசிகனுக்கும் சலுகை தர தேவை இல்லை. அட்லீஸ்ட் சோசியல் சர்வீஸ் செய்யகுடதா ? மற்ற நடிரைபற்றி நம்மக்கு என்ன? நம் தலைவர் இதுபோல் நன்மை செய்ய தயக்கம் என்ன ?

    • Naveen Naveen says:

      நன்றி சுந்தர் சார், தலைவருக்கு எசொனை சொல்ல என்னக்கு அருகதை இல்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட மனிதர்காள்ளுக்கு இனியேனும் அவர் உதவ வேண்டும். அவர் ரசிகார்கல்லுக்கு என்ன கைம்மாறு செய்ய என்ற கேள்விக்கு என் பதில் எதுதான் . அடர்வு இல்லாதவர்களுக்கு உதவுவது ஆண்டவக்கு உதவுவது போள்ளதான். நாம் இதை ஒரு கோரிக்கையாக அவருடன் எடுத்து சொல்ல நீங்கள் தான் உதவ வேண்டும். வாழ்க இந்தியா :)

      —————————————————————
      நவீன், முதலில் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். தலைவருக்கும் ரசிகர்களுக்கும் இடையே நான் பாலம் அல்ல. நானும் உங்களைப் போல ஒருவனே. என் எண்ணங்களை இந்த தளத்தில் வெளிப்படுத்துகிறேன். அது ஆரோக்கியமாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன். உங்களுடைய விவாதமும் அவ்வாறு அமையவேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். அவ்வளவே. நான் எழுதுபவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றியேல்லாம எனக்கு கவலை இல்லை. அவர்களுக்கும் அதற்க்கெல்லாம் நேரம் இல்லை.

      அடுத்து தலைவர் செய்யும் உதவிகளை பற்றி….

      தலைவர் எத்தனையோ உதவிகளை வெளியுலகிற்கு தெரியாமல் செய்துகொண்டு வருகிறார். நம் தளத்தில் கலியுகக் கர்ணன் ரஜினி பகுதியை படித்தால் புரியும்.

      http://onlysuperstar.tamilmovieposter.com/?s=கலியுக+கர்ணன்

      சிவகாசி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் தனிப்பட்ட முறையில் ஏதாவது உதவினாரா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் உதவினால் கூட அதை வெளியுலகிற்கு தெரியும்படி செய்யவேண்டும் என்கிற நிர்பந்தம் எதுவும் அவருக்கு இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவர் என்ன அரசியல்வாதியா இல்லை உள்ளுக்குள் அரசியல் ஆசைகளை வைத்துக்கொண்டு உதவிகள் செய்பவரா? எதுவும் கிடையாதே…

      விமர்சனத்துக்கு பயந்துகொண்டெல்லாம் தனது உதவிகளை பற்றியோ அறப்பணிகளை பற்றியோ வெளியே சொல்லும் வழக்கம் அவரிடத்தில் இல்லை. தனது மனசாட்சி சொல்லிவிட்டால் எதைப் பற்றியும் அவர் கவலைப்படமாட்டார்.

      முதலமைச்சரிடம் நடிகர்கள் நேரடியாக வழங்கும் நிதிகள் மட்டுமே அவர் வெளியுலகிற்கு தெரிந்தபடி செய்கிறார். அதுவும் கூட முதலமைச்சரின் அலுவலகத்தில் இருந்து தான் அந்த செய்தியும் படம் வருகிறது. அவரிடம் இருந்து அல்ல. மற்றபடி நடிகர் சங்கம் சார்பாக ஏதேனும் போராட்டம் நடைபெற்றால் அதில் அனைவரும் பகிரங்க நிதியளிக்கும்போது இவர் அளிக்கிறார். அது நாகரீகம் என்பதால்.

      மற்றபடி வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் எத்தனையோ உதவிகளை அவர் செய்துவருகிறார். நம்புபவர்கள் நம்பட்டும். நம்பாதவர்களை பற்றி நமெக்கன்ன அக்கறை?

      பிறர் தவறாக நினைப்பார்களே இதை வெளியில் சொல்லிவிடலாமே என்று அவர் எந்த காலத்திலும் தான் செய்யும் உதவிகளை பற்றி எண்ணியதில்லை. எண்ணவும் மாட்டார். ஏனெனில் அடிப்படையில் ரஜினி அரசியல்வாதியல்ல. ஒரு நல்ல மனிதர். அவ்வளவே.

      விமர்சனங்களுக்கு கூட தகுதியான நபர்களிடம் இருந்து வந்தால் மட்டுமே பதிலளிப்பது அவர் வழக்கம். நாமும் அதை பின்பற்றலாமே…

      - சுந்தர்

  14. sun sun says:

    Thalaivar spoke about human life .There is no politics and controversial talk.
    third rate magazines and persons will be criticizing always something about thalaivar for the sake of the publicity .Nothing is there.

  15. murugan murugan says:

    மனதிற்கு சரி என பட்டதை யாருக்கும் பயப்படாமல் கூறுவதில் தலைவர் என்றைக்குமே தயக்கம் காட்டியது இல்லை !!!
    அது கலைஞர் ஆட்சியானாலும் சரி ஜெ யின் ஆட்ச்சியானாலும் சரி !!!
    தலைவர் எது செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்று கண்ணில் விளக்கெண்ணை விட்டு கொண்டு தேடுபவர்களுக்கு எல்லாம் குதர்க்கமாகவே தெரியும் !!!
    தலைவர் எதையும் யோசிக்காமல் கூறுவதில்லை - அது உலகறிந்த உண்மை !!!
    தலைவரைபற்றி நமக்கு நன்றாகவே தெரியும் !!!
    அவர் பார்க்காத விமர்சனங்களா?
    அவர் கடந்து வராத சோதனைகளா?
    சோதனைகளை சாதனைகலாக்கும் சரித்திர நாயகன் நமது தலைவர் !!!
    எனவே தேவை இல்லாமல் நம் மனதை குழப்பிக்கொல்வதைக்காட்டிலும் குழப்ப நினைப்பவர்களின் முகத்தில் அமைதி மற்றும் புன்னகை என்னும் கரியை பூசுவோம்!!!

  16. **Chitti** **Chitti** says:

    My dear Rajni Aficionados,
    Hope all of you’are doing good and being great.
    ***
    @Sundarji, Thanks so much for bringing up all the information and given all of them to us under one roof.
    ***
    And I like half of the Cho Ramaswamy’s interview where he made it clear that Rajni is always like that. Being courageous. Certainly, both are good friends and both respect other very well.
    ***
    Indeed, If Rajni enters into politics, Cho will be with Rajni. that’s 100% sure - since both are good hearted people (I FEEL).
    ***
    And don’t take it to account of whatever the negative things the media is saying about rajni since almost 90% are fake info’s. Better we can concentrate on positive things. Positive things on Rajni and ourselves.
    ***
    And then, don’t expect all the time Rajni had to do all this or that. First let us think about what we have done. At least prayers???? If and when we are not doing even a bit of anything, then indeed we don’t have rights to ask others or tell others what to do.
    (this is my personal opinion. And so if you felt accepting it ok. Else those who don’t accept it and trying to reply me with much more critic w(ay)ords, I literally don’t care about).
    ***
    To all, Be happy always and focus on your lives to improve yourself personally, professionally, spiritually and then the others.
    ***
    God bless all.
    ***
    p.s: sorry to inform you (TO MY FRIENDS and MY WELL WISHERS) that I could not come often here and so could not comment here as well because of my current focused things.
    ***
    **Chitti**.
    Jai Hind!!!
    Dot.

  17. B. Kannan B. Kannan says:

    தலைவர் edhavathu paesi thaan oru padam hit பண்ண வேண்டிய நிலையை 1980 லேயே கடந்து விட்டார்..
    Avar மனதிற்கு edhu சரி என்று படுகிறதோ adhai yaarukkum bayapadaamal பேசுவார்.. அவரை purindhu கொண்டவருக்கு தெரியும்.. அதை வியாபாரம் aakka ninaippavargalai நாம் just like தட் ignore பண்ண vaendiyadhu thaan..
    Sivagasi vishayathil thalaivar வெளியில் சொல்லாமல் கூட உதவி இருக்கலாம்..

  18. sakthivel sakthivel says:

    everyone here already gave their property to others.
    first u do this and talk.don’t give direction to others.
    u can criticize him reg. entering politics.
    Whether he is good r bad,we know many peoples got so much money from his name and film.
    this is itself indirect help to others,don’t expect the RAJINI wealth.
    From us,he earned r not…….the issue.
    U can point out why he is not meeting fans,he is concentraing only on daughter films????
    One thing everyone knows that if we help others………good thing
    if doesn’t ………GOD will take care of them.
    This also fits to RAJINI too.

    • saranya saranya says:

      ur comment is good. i accept all ur points. btw i dont understand this statement
      //he is concentraing only on daughter films????//
      which daughter’s films he is concentrating? can u tell us.

    • Naveen Naveen says:

      hi sakthi, If I have enough money I will help those victims as much i can. I am not telling anyone to give their property to others. if rajini sir gives 1 rupee out of his pocket that will change to 1 crore.(if all of us donate 1 rupee) when he have the power to grab the crowd just use it help the poor. is that such a hard thing to do.? as his loyal fans let us request him to help the victims. that’s i wish to say. Thank you.

  19. RAJNISENTHIL RAJNISENTHIL says:

    கூடிய சீக்கிரத்தில் நல்ல செய்தி வரும் .

  20. Darwin Darwin says:

    சுந்தர் ஜி நீங்க குமுதம் விமர்சிச்சதுல கொஞ்சம் தான் போட்டிருகிங்க…… அவனுக ரொம்ப மோசமா எழுதி இருகிறாங்க. (ஜே மேடையில் ரஜினி கூத்து) ithu தான் தலைபாவே போட்டிருக்காங்க.

    ———————————————
    நான் எதுக்குங்க அதைப் போய் முழுசா போடணும்?

    - சுந்தர்

    • RAJA RAJA says:

      @ டார்வின்

      ஒரு மனிதரை பற்றி பாராட்டினாலும் சரி ,தூற்றினாலும் சரி ,அவரை பற்றி தவறான வதந்திகளை பற்றி பரப்பினாலும் சரி சுட சுட பத்திரிக்கை வியாபாரம் கோடி கட்டி பறக்றது ,ஏன் என்றால் அவரை பற்றி எதாவது ஒரு செய்தி நமக்கு கிடைக்காதா என்று திரியும் பத்திரிக்கை அலுவலகம் பல ,அதனால் அதை பற்றி எல்லாம் நாம் கவலை படகூடாது

      மனிதன் தான் அவன் உயர்ந்தவன் ,இவன் தாழ்ந்தவன் என்று நினைப்பான் ,ஆனால் ஞானிகளுக்கு எல்லோருமே ஒன்று தான் ,நம் தலைவர் ஞானி ,அதனால் கவலை பட தேவை இல்லை ,ஏன் என்றால் நக்கீரன் தலைவரை பற்றி போடாத தவறான செய்திகளா,இருந்தும் தலைவர் அணைத்து பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு நேரில் சென்று தன மகள் திருமண பத்திரிக்கை கொடுத்து அவர்களை மதிப்புள்ளவர்களாக மாற்றினார்.

      இது தான் “அவர் நானா நன் அயம் செய்து விடல் “

      • Darwin Darwin says:

        சரியாக சொன்னிக. இவனுக சில நேரத்தில் தலைவரை புகழ்வதும் உயர்த்தி ,தாழ்த்தி பேசுவதும் எதிர்மறையாக பேசுவதும் என்னைக்கு தான் திருந்துவாங்களோ …………

    • Darwin Darwin says:

      சுந்தர்ஜி இந்த பத்திரிகை எப்படி பட்டது என்று ரசிகர்களுக்கு தெரியனும் என்று பார்த்தேன்…… பரவா இல்லை எல்லாருக்கும் தெரிந்திருக்கு….

  21. RAJNISENTHIL RAJNISENTHIL says:

    நீங்க சொல்றது கரெக்ட் சுந்தர் ஜி ,ஆனால் ஒரு முகாம் நடத்தும் கூடத்தில் இருந்து கொண்டு எதிர் முகாம் தலைவரை புகழ்வது எந்த ஊரு நாகரீகம் என்று கேட்டிருக்கிறார் அந்த பத்திரிகையாள நண்பர் .பாவம் அவர் ராஜாஜி ,காமராஜர் ,அண்ணா போன்ற தலைவர்களை பற்றி தெரியாதவர் போலும்.

    ——————————————————
    //என்று கேட்டிருக்கிறார் அந்த பத்திரிகையாள நண்பர்//
    பாஸ், நான் தான் சொன்னேனே…. புரியலியா?
    அவர் கேட்கலை. கேட்கவைக்கப்பட்டிருக்கிறார்.
    - சுந்தர்

  22. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

    சிவகாசி வெடி விபத்துக்கு ஒரு சிலரின் பேராசையும் கவனக்குறைவும்தான் காரணம். தலைவர் உதவி செய்தாலும் அதை அவர் தம்பட்டம் அடித்துக்கொள்ள மாட்டார்.

    தலைவரின் நேர்மையும் தைரியமும் நமக்கு புதிதல்ல. மூன்றாந்தர பத்திரிக்கைகளின் வியாபார நோக்கமும் பச்சோந்திதனமும் புதிதல்ல. டார்வின் அவர்களின் கருத்துக்கு சுந்தரின் பதில் supero super .

  23. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    தலைவர் படம் ஓடுறதுக்காக இப்படி பேசுறாரா… என்ன காமெடி பா இது…. ஹீ ஹீ ஹீ …. எப்டிய இப்டிலாம் திங் பண்றீங்க .. எழுதும் போது உங்களுக்கே சிரிப்பா வரலையா… இதெல்லாம் ஒரு பொழப்பு…

    என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் எஸ்.எம்.எஸ் குரூப்.

  24. dr.naren dr.naren says:

    தலைவர் பற்றி அனந்த விகடனில் 2008il oru பதிவு வந்தது yenthiran ஒரு தந்திரன் அதோடு விகடன் பதிபங்கள் வாங்குவதை நிறுத்திவிட்டேன் இபோது குமுதம் இன்று முதல் வாங்குவதை நிறுத்திவிட்டேன் .நஷ்டம் அவர்களுக்கு தான் .சுந்தர் சொல்வது போல் இதுவும் கடந்து போகும் .

  25. n.chinnasamy n.chinnasamy says:

    தலைவர பத்தி தப்ப பேச யாருக்கும் அருகதை இல்லை, தலைவர் பொதுவா தன சொன்னார் தேவை இல்லாமல் அரசியல் சாயம் பூசதிர்கள்.

  26. Thamizhisai Appa Thamizhisai Appa says:

    குமுதம் பற்றி பெரிதாக அலட்டி கொள்ள தேவை இல்லை..
    குமுதம் -சந்தர்பவாதத்தின் உச்சம்! சமீபத்தில் , கோச்சடையன் அறிவுப்புக்கு பின்னர் , அவர்கள் அதே பெயரில் ஆரம்பித்த ஒரு தொடர் , இதற்க்கு ஒரு நல்ல உதாரணம்.
    தலைவர் படத்துக்கு மட்டும் அல்ல , வரலாற்றில் வரும் கோச்சடையன் க்கும் சம்பந்தமே இல்லாமல் மிகவும் மோசமாக எழுதப்பட்ட தொடர் அது.

    தலைவர் கொள்கை பற்றி இரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் , எனக்கு மிகவும் பிடித்த இரு வரிகளை குறிப்பிடுகிறேன் …இந்த வரிகளில் வருவது போல தான் தலைவர்

    “” உண்மையை சொல்லி நன்மையை செய்தால், உலகம் உன்னிடம் மயங்கும் !
    நிலை உயரும் போது பணிவு கொண்டால், உயிர்கள் உன்னை வணங்கும் !! “”

    • saranya saranya says:

      உங்களுக்கு தெரியாதா.. அந்த தொடர் ஆரம்பித்த ஒரு சில நாட்களில் கே.ஸ்.ரவிக்குமார் அவர்களும், சௌந்தர்யா அவர்களும் கூறிவிட்டார்களே அந்த தொடருக்கும் படத்தின் கதைக்கும் சம்பதமே இல்லை என்று. இவர்கள் இப்படி எழுதுவதற்கு அதுவும் ஒரு காரணம்..

  27. ரஜினி பேசியதில் எந்தத் தவறையும் காண முடியாது. இது தமிழக அரசியல்வாதிகளுக்குத்தான் புதிதாக இருக்கும். வேறு எந்த மாநிலத்தில் இப்படி எதிர்க்கட்சித் தலைவர்களை எதிரிகளாகப் பாவிக்கும் மனோபாவம் கிடையாது. அந்தச் சாபக்கேடு தமிழகத்திற்குத்தான். அதுவும் எண்பதுகளில் ஆரம்பித்ததுதான். அதுவரை, அண்ணா அவர்களும் காமராஜர் அவர்களும் எதிரெதிர் கட்சித்தலைவர்களாக இருந்தாலும், மற்றவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். இப்போதோ அந்த நிலை தமிழகத்தில் இல்லை. அதனால்தான் ரஜினியின் இந்தச் சாதாரண நல்லுரை இப்படித் திரித்துப் பார்க்கப்படுகிறது. அதுதான் அதிமுக துதிபாடியாக இருக்கும் குமுதம் மற்றும் ரிப்போர்ட்டருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

    ———————————————
    வருக அரசன் சார்.
    நல்ல கருத்துக்கு நன்றி.
    - சுந்தர்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates