You Are Here: Home » Featured, Rajini Lead » சமூக உணர்வு என்பது நடிகர்களுக்கு மட்டும் தான் இருக்கவேண்டுமா என்ன?

சிவகாசி பட்டாசு விபத்தை பற்றிய செய்திகளை படித்ததிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி உதவேண்டும் என்று நம் ரசிகர்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். நல்ல விஷயம் தான். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் பெறவேண்டும் என்கிற ஆதங்கத்தை விட, ரஜினி அவர்களை இந்த சூழலில் சிலர் விமர்சிப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. இத்தகு எண்ணவோட்டமே  தவறு.

சிவகாசி பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது நிறுவனத்தில் இருந்து மருந்துப் பொருட்களை இலவசமாக அளித்து நடிகர் மம்மூட்டி பெருந்தன்மையுடன் உதவியதை வைத்து இங்குள்ள நடிகர்களை மட்டம் தட்டுவதில் சிலர் அதீத ஆர்வம் காட்டிவருகின்றனர். நடிகர் மம்மூட்டி செய்தது நிச்சயம் பாராட்டுக்குரிய ஒரு செயல் தான். அதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. சிவகாசி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருந்து பொருட்களை மம்மூட்டி நடத்தி வரும் பதஞ்சலி ஆயுர்வேதா என்னும் நிறுவனத்திற்கு ஆர்டர் செய்துள்ளனர். அன்று பிறந்த நாள் கொண்டாடிய திரு.மம்மூட்டி இந்த விஷயம் தெரிந்தவுடன் மேற்படி 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த ஆர்டருக்கு பணம் எதுவும் தரவேண்டாம் என்றும் இலவசமாக அதை தாம் தருவதாகவும் கூறிவிட்டார். இது தான் நடந்தது.

சரி தொடங்கிய பிரச்னைக்கு வருகிறேன்…

சிவகாசி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி தனிப்பட்ட முறையில் ஏதாவது உதவினாரா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் உதவினால் கூட அதை வெளியுலகிற்கு தெரியும்படி செய்யவேண்டும் என்கிற நிர்பந்தம் எதுவும் அவருக்கு இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். “பார்த்தீயா என் தலைவனை?” என்று தன் ரசிகர்கள் ஃபேஸ்புக்கிலும்  டீக்கடைகளிலும் உட்கார்ந்து அரட்டைக் கச்சேரி நடத்துவதற்க்கெல்லாம் அவர் தான் செய்யும் இது போன்ற உதவிகளை பகிரங்கப்படுத்தவேண்டுமா? சற்று யோசித்து பாருங்கள். அவர் என்ன அப்படிப்பட்ட ஒரு மனிதரா? அவர் என்ன அரசியல்வாதியா இல்லை உள்ளுக்குள் அரசியல் ஆசைகளை வைத்துக்கொண்டு உதவிகள் செய்பவரா? எதுவும் கிடையாதே. பின்னர் ஏன் சார் வெளியே சொல்லணும்?

ஒருவர் தான் செய்யும் உதவியை பகிரங்கப்படுத்துறதை நான் குறை கூறவில்லை. அது அவரவர் மனநிலை மற்றும் அணுகுமுறையை பொறுத்தது. உண்மை என்னவென்று தெரியாத நிலையில் எவரையும் விமர்சிக்கவேண்டாம் என்று தான் கூறுகிறேன்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் அவரை விமர்சிப்பவர்களுக்காகவாவது அவர் தான் செய்பவற்றை பகிரங்கப்படுத்தவேண்டும் என்று தானே அடுத்து சொல்ல வருகிறீர்கள்?

விமர்சனத்துக்கு பயந்துகொண்டெல்லாம் தனது உதவிகளை பற்றியோ அறப்பணிகளை பற்றியோ வெளியே சொல்லும் வழக்கம் அவரிடத்தில் என்றும் இருந்ததில்லை இல்லை. தனது மனசாட்சி சொல்லிவிட்டால் எதைப் பற்றியும் அவர் கவலைப்படேல் கொள்கையுடையவர் அவர்.

அரசியல் ஆதாயங்களை மனதில் கொண்டு விளம்பரத்துக்காக சில நடிகர்கள் செய்யும் உதவிகள் ஒரு புறமிருக்க, சத்தமேயில்லாமல் நம் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட சில நடிகர்கள் எவ்வளவோ உதவிகளை செய்துகொண்டு தானிருக்கின்றனர். தாங்கள் செய்யும் உதவிகளை எல்லாம் வெளியே சொல்லவேண்டும் என்கிற கட்டாயம் அவர்களுக்கு இல்லை. அது அவரவர் மனசாட்சி சம்பந்தப்பட்டது. எந்த நடிகரும் தாங்கள் செய்யும் உதவிகளை ஏதோ ஒரு வகையில் வெளியே சொல்லும்போது மட்டுமே நமக்கு அது தெரியவருகிறது. பயனாளிகளுக்கே கூட இன்னார் தான் செய்தார் இந்த உதவியை என்று தெரியாமல் செய்யும் நடிகர்களும் சிலர் உண்டு இங்கே என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

தமிழகத்தில் எத்தனையோ விபத்துக்கள் அடிக்கடி நடந்துகொண்டுதானிருக்கிறது. அதில் எண்ணற்ற உயிர்கள் பலியாகிக்கொண்டுதானிருக்கிறது. உயிர்கள் எங்கு எந்த சூழ்நிலையில் பலியானாலும் அவை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு மிகப் பெரிய இழப்பு தானே. விபத்தின் தன்மை மற்றும் காரண காரியங்களை மனதில் கொண்டு அரசாங்கம் அவர்களுக்கு நிவாரணத்தை வழங்கிக்கொண்டு தானிருக்கிறது. அவற்றுக்கெல்லாம் நடிகர்கள் உதவவேண்டும் என்று சொல்வது நடைமுறையில் சாத்தியமா?

இந்த விஷயத்திற்கு நாம் உதவவேண்டும் என்று முடிவு செய்யவேண்டியது அந்த உதவியை செயல்படுத்தப்போகிறவர் தானே தவிர அடுத்தவர் அல்ல.

சரி… அப்படியே ஒருவேளை உதவினாலும், “இத்தனை நாள் எங்கே போயிருந்தார் இவர்? இப்போ வந்துட்டார் திடீர்னு…? அரசியல் ஆசை வந்துடுச்சு போல” என்று அதையும் குற்றம் கண்டுபிடித்து எழுதுபவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள். எனவே விமர்சனங்களுக்கு பயந்துகொண்டு இங்கு எதையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

அடுத்து….. தாம் சம்பாதிப்பதை எல்லாம் நாட்டு மக்களுக்கே கொடுத்துவிடவேண்டும் என்று நடிகர்களை மட்டும் சிலர் எதிர்பார்ப்பது ஏன்? அவர்களுக்கு என்ன இலவசமாகவா அவர்களது சம்பளம் கிடைக்கிறது? மற்ற துறையினரிடம் இத்தகு எதிர்ப்பார்ப்பு இல்லையே ஏன்? இன்றைக்கும், எத்தனையோ தொழிலதிபர்கள், முன்னணி மருத்துவர்கள், வழக்கறிஞர்கள்  மாநிலம் விட்டு மாநிலம் போய் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். வீடு மாளிகைகளை வாங்கி குவிக்கிறார்கள். அவர்களையெல்லாம் எவரும் போய் இந்த கேள்விகளை கேட்டதில்லை. அவர்களுக்கு மட்டும் அரசியல் ரீதியிலான ஆசைகள் இல்லையா என்ன? இல்லை அரசியல் பக்கமே அவர்கள் தலைவைத்து படுத்ததில்லையா?

முதலமைச்சரிடம் நடிகர்கள் நேரடியாக வழங்கும் நிதிகள் மட்டுமே ரஜினி வெளியுலகிற்கு தெரிந்தபடி செய்யும் உதவிகள். அதுவும் கூட முதலமைச்சரின் அலுவலகத்தில் இருந்து தான் அந்த செய்தியும் படமும் வெளியாகிறது. அவரிடம் இருந்து அல்ல. மற்றபடி நடிகர் சங்கம் சார்பாக ஏதேனும் போராட்டம் நடைபெற்றால் அதன் முடிவில் அனைவரும் பகிரங்க நிதியளிக்கும்போது இவர் அளிக்கிறார். அது நாகரீகம் என்பதால். மற்றபடி பயந்துகொண்டு அல்ல.

பிறர் தவறாக நினைப்பார்களே இதை வெளியில் சொல்லிவிடலாமே என்று அவர் எந்த காலத்திலும் தான் செய்யும் உதவிகளை பற்றி எண்ணியதில்லை. எண்ணவும் மாட்டார். ஏனெனில் அடிப்படையில் ரஜினி அரசியல்வாதியல்ல. வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் எத்தனையோ உதவிகளை அவர் செய்கிறார். செய்துவருகிறார். நம்புபவர்கள் நம்பட்டும். நம்பாதவர்களை பற்றி நமெக்கன்ன அக்கறை?

தலைவர் எத்தனையோ உதவிகளை வெளியுலகிற்கு தெரியாமல் செய்துகொண்டு வருகிறார். நம் தளத்தில் கலியுகக் கர்ணன் ரஜினி பகுதியை படித்தால் புரியும்.

http://onlysuperstar.tamilmovieposter.com/?s=கலியுக+கர்ணன்

விமர்சனங்களுக்கு கூட - தகுதியான நபர்களிடம் இருந்து வந்தால் மட்டுமே - பதிலளிப்பது அவர் வழக்கம். நாமும் அதை பின்பற்றலாமே…

சிவகாசி விபத்தில் நடிகர்களை பார்த்து டேபிளை குத்துப(தி)வர்கள் எல்லாம் தாங்கள் இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமாக செய்தது என்ன என்று ஒரு கணம் யோசிப்பது நல்லது. (யாரைப் போய் ஆக்கப்பூர்வமா சிந்திக்கச் சொல்லிடீங்க நீங்க என்று நீங்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பது புரியுது புரியுது…!) செஞ்சிலுவை சங்கம் மூலமாகவே அல்லது தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வடிவில் பட்டாசு விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்தாகவோ நிதியாகவோ உதவ மேற்கூறியவர்கள் முன்வந்தால் என் பங்கும் அதில் நிச்சயம் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

இருட்டை சபிப்பதை விட - அவன் எங்கே போனான் இவன் எங்கே போனான் என்றெல்லாம் விவாதிப்பதைவிட - ஒரு மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்சிக்கலாமே…  ஏன் சமூக உணர்வு என்பது நடிகர்களுக்கு மட்டும் தான் இருக்கவேண்டுமா என்ன?

—————————————————————————————
அடுத்து…..

வெள்ளத்தில் சிக்கிய மந்திராலயம்… ரஜினி செய்தது என்ன? நெகிழ வைக்கும் ஒரு நிஜம்!

(இதை நான் வெளியே சொல்லவேண்டாம் என்று நினைத்தேன். சூழ்நிலையின் அவசியம் கருதி சொல்றேன். விரைவில் விரிவான பதிவை எதிர்பாருங்கள்.)
—————————————————————————————

[END]

24 Responses to “சமூக உணர்வு என்பது நடிகர்களுக்கு மட்டும் தான் இருக்கவேண்டுமா என்ன?”

  1. dr suneel dr suneel says:

    ஜி
    இது என்ன புதுசா? அட விடுங்க..மம்மூட்டி செய்த செயல் பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை..
    நடிகர்கள் என்றால் ஒரு படி கீழே என்று இறக்கி பார்க்கும் ஒரு வித போலி மேட்டிமை இங்கு உண்டு..அதுவும் வெகுஜன நடிகர்கள் மீது காழ்ப்பு உண்டு சிலருக்கு..மிக சரியாக சொல்வதாக இருந்தால்- அவரவர் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் என்ன நிலைபாடுகள் எடுத்தோம்? அதற்காக வாய்கிழிய பேசியதை தவிர என்ன செயலாற்றினோம் என்பதை மதிப்பிட்டால் போதும்..வாழ்க hypocricy

  2. PVIJAYSJEC PVIJAYSJEC says:

    சுந்தர்

    மிக ஆழமான மற்றுமொரு பதிவு..

    நம் தலைவர் நல்லது செய்தாலும் கெட்ட பெயர் தான் செய்யலைனாலும் அதே பெயர் தான்.

    இந்த விஷயத்தில் தலைவர் எதுவும் செய்யவில்லை என்று யாராலும் கூற முடியாது. அவர் செய்யும் பல நல்ல செயல்கள் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்ற அவசியமும் இல்லை..

    என்னை பொறுத்தவரை ” ஒருவர் எல்லோருக்கும் உதவி செய்வது என்பது முடியாத செயல் ஆனால் எல்லோரும் கண்டிப்பாக அவரவர் தகுதிக்கேற்ப யாருகாவது உதவலாமே”..

    என்றும் தலைவர் பக்தன்
    விஜய்

  3. Sankaranarayanan Sankaranarayanan says:

    சரியான சாட்டை… எல்லோரது மனதினில் பட்டதை பிரதிபலித்துள்ள பதிவு.

  4. m nagendra rao m nagendra rao says:

    பதிவுக்கு நன்றி சுந்தர் !

  5. murugan murugan says:

    முற்றிலும் உண்மை சுந்தர்ஜி !!!
    விளக்கப்பதிவிர்க்கு நன்றி !!!
    இது போன்ற செய்திகளை கேட்க்கும்போதேல்லாம் குறை கூறுபவர்களின் அறியாமையும் அவசர புத்தியும் இன்னும் சொல்ல போனால் மன பக்குவமின்மையும் தான் வெளிப்படுகிறது !!!
    நண்பர்களே எல்லா விஷயத்திருக்கும் ஒரே மாதிரியான அணுகு முறை உதவாது!!!
    எவர் கூறுவது கவனிக்கபடுகிறதோ இல்லையோ நமது தலைவர் மற்றும் அவரது ரசிகர்களின் ஒவ்வொரு அசைவும் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது இன்னும் சொல்ல போனால் கண்காணிக்கப்படுகிறது !!!
    எனவே நம் தலைவரை போல நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது அவசியம் !!!
    நம்மக்குள் நெருப்பை மூட்டி விட்டு அதில் குளிர் காய பலர் காத்துக்கிடக்கின்றனர் !!!
    எனவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்!!!
    நமது தலைவரை நாமே சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றால் வேறு யார் புரிந்துகொள்வார்கள் !!!

  6. harisivaji harisivaji says:

    சரி… அப்படியே ஒருவேளை உதவினாலும், “இத்தனை நாள் எங்கே போயிருந்தார் இவர்? இப்போ வந்துட்டார் திடீர்னு…? அரசியல் ஆசை வந்துடுச்சு போல” என்று அதையும் குற்றம் கண்டுபிடித்து எழுதுபவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள். எனவே விமர்சனங்களுக்கு பயந்துகொண்டு இங்கு எதையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை.///
    பாராட்டி பிழைக்கும் கூட்டம் ஒரு பக்கம்
    தூற்றி பிழைக்கும் கூட்டம் ஒரு பக்கம்
    என்ன பண்ண முடியும் இவங்களுக்கு பயந்துகிட்டு வாழ முடியாது
    ஒரு ஒரு வரின் மனசாட்சிக்கு பயந்து வாழனும் செய்யணும்
    இவனுங்க வீட்ல கண்ணாடி இருக்காதோ

  7. SANKAR SANKAR says:

    தெளிவான தீர்க்கமான பதிவு… புரியவேண்டிய
    அனைவருக்கும் புரியும் … இதன் வெற்றி நம் செயலில் இருக்கிறது

    நன்றி

    சங்கர் S

  8. RAJA RAJA says:

    தலைவர் புரியாதவர்களுக்கு ஒரு புதிர்

    புரிந்தவர்களுக்கு அவர் புனிதர்

    புரியாதவர்களுக்கும் புரியும்படி சொல்லிய சுந்தர் அவர்களுக்கு நன்றி

  9. RAJA RAJA says:

    நம் தளம் சார்பாக பர்னால் வாங்கி கொடுத்தாலும் சரி இல்லை இங்கே கோட்டக்கல் வைதிச்சாலை அல்லது வேறு எதவது வைத்திய சாலைகளில் இருந்து மருந்து வாங்கி கொடுக்கலாம் என்றாலும் சரி சொல்லுங்கள் செய்வோம்

  10. விஜய் ஆனந்த் விஜய் ஆனந்த் says:

    எல்லோருக்கும் சமுதாய அக்கறை நிச்சயம் தேவை…..மம்மூட்டி செய்தார் ரஜினி ஏன் செய்யவில்லை என்று கேட்பதை விட்டுவிட்டு நாம் என்ன உதவிகள் செய்யலாம், நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைப்பதே சிறந்தது…..! என்ன நடந்தாலும் ரஜினி ஏன் செய்யவில்லை என்று கேட்பதே இவர்களுக்கு வாடிக்கை….. இவர்களுக்கு இது மட்டும் தான் வேலையோ…?
    -
    “கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”
    -
    விஜய் ஆனந்த்

  11. lenin lenin says:

    நெத்தியடி …என்மனசுல பலநாட்கள் ஓடுன விசயத்த நன் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிருகீங்க.நன்றி .

  12. மனோஜ் ராக்ஸ் மனோஜ் ராக்ஸ் says:

    தலைவரை விமர்சிக்கும் அதி புத்திசாலிகளே !! உங்கள் மனசாட்சியை கேட்டுபாருங்கள், ஆண்டவனை கேட்டுபாருங்கள்!! இருவரும் சரி என்று சொன்னால் GO AHEAD !!

  13. suji suji says:

    good sundar sir…..well said

  14. B. Kannan B. Kannan says:

    //ரஜினி வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் எத்தனையோ உதவிகளை அவர் செய்கிறார். செய்துவருகிறார். நம்புபவர்கள் நம்பட்டும். நம்பாதவர்களை பற்றி நமெக்கன்ன அக்கறை?//
    நெத்தி அடி..
    இந்த நேரத்தில் அவசியமான பதிவு..
    ஹாட்ஸ் ஆப் சுந்தர்..

  15. Shankar Shankar says:

    http://www.youtube.com/watch?v=6aFSkTj4wlY

    Please watch this video, and you’ll see the true colours of so called movie stars… for those who’s questioning our beloved thalaiver mr. Rajinikanth… he dosent’ need publicity stunts to cover up anything..

  16. chakra chakra says:

    ரஜினியா இருப்பது ரஜினிக்கே மிக பெரிய கஷ்டம்

  17. vasanthan vasanthan says:

    சுந்தர் உங்களைப்போன்று என்னைப்போன்று தலைவரை புரிந்துகொண்டவர்களுக்கு தெரியும் தலைவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று ,அந்தளவிற்கு புரிந்து கொள்ளும் மனிதர்கள் இருந்தால் தமிழ் நாடு எங்கயோ போயிருக்கும் ..

  18. saranya saranya says:

    thalaivar avargal sivaji padatthil varuvathu pola foundation aarambitthu, rasigargalin thunaiyodu udhavigal seidhaal thaan ivargalin vaayai mooda mudiyum. adhuvum thaan arasiyaluku varamaten endru koori vittu. idhu saathiyamaa. idhu nadakum varai ivargal oyapovathillai…

  19. Ramar Thoothukudi Ramar Thoothukudi says:

    இதல்லாம் கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளை கேக்க வேண்டிய கேள்வி…
    நல்லா யோசிங்க ….

  20. Shiva Shiva says:

    101 % true words..Hats off to you Mr.Sundar..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates