You Are Here: Home » Featured, Rajini Lead » கடும் வெள்ளத்தில் சிக்கிய மந்த்ராலயம் — ரஜினி செய்தது என்ன?

ந்த்ராலயத்திற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் உள்ள தொடர்பை நாம் அனைவரும் அறிவோம். கடந்த 2009 ஆம் ஆண்டு மந்த்ராலயத்தில் உள்ள துங்கபத்ரா நதி இடைவிடாத மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கெடுக்க, மொத்த மந்த்ராலயமும் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. ஆலயம் முழுதும் வெள்ள நீர்  சூழ, தற்காலிகமாக மந்த்ராலயம் மூடப்பட்டது. மூல பிருந்தாவனம் அமைந்திருக்கும் பகுதியை கூட வெள்ளம் விட்டுவைக்கவில்லை.

நீர் சற்று வடிந்த பின்னர் பார்த்தால் எங்கும் ஒரே சேறும் சகதியுமாய் மாறி மந்திராலயமே சின்னா பின்னமாகியிருந்தது. நாடி வருவோர்க்கெல்லாம் கற்பக விருட்சமாய் திகழ்ந்த அந்த இடம் இப்படி இயற்கையின் சீற்றத்துக்கு இரையாகி நிற்பதை பார்த்து பக்தர்கள் கண்ணீர் வடித்தனர். ஆலய நிர்வாகம் செய்வதறியாது திணறியது.

(இங்கே உங்களில் சிலருக்கு ஒரு சந்தேகம் வரும். “கேட்பதையெல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சம், கலியுக தெய்வம் அது இது என்றெல்லாம் சொல்றாங்களே ராகவேந்திர சுவாமிகளை. அவரால் இந்த வெள்ளத்திலிருந்து மந்த்ராலயத்தை காத்துக்கொள்ள முடியலியா?” என்று.  இறைவனின் செயலுக்கான காரணங்களை மனிதர்கள் நாம் சரியாக கூறிவிட முடியுமா? இருப்பினும் என் அறிவிற்கு எட்டியதை கூறுகிறேன். மிக மிகப் பெரிய பாதிப்பை தரவிருந்த ஒரு பெரு வெள்ளத்தை தன் பக்கம் திருப்பி தனது இடத்தை அதன் பசிக்கு இரையாக தந்தார் சுவாமிகள் என்று தான் நான் கருதுகிறேன்! அருகிலிருந்த ஸ்ரீசைலம் அணை உடையும் நிலையில் இருந்ததாம் அப்போது. தெரியுமா?)

இந்நிலையில், அந்த நேரத்தில் வெளியான பத்திரிகை ஒன்றில் ‘கண்ணீரிலும் தண்ணீரிலும் மந்த்ராலயம் - உதவுவாரா ரஜினி?’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. கட்டுரையை படித்த நான் கலங்கிப் போனேன். ரஜினி உதவுவாரா இல்லையா என்று எண்ணி அல்ல. மந்திராலயத்தை வெள்ளம் புரட்டி எடுத்த செய்தி மற்றும் புகைப்படங்களை பார்த்து.

வெள்ளம் எந்தளவு தீவிரமாக இருந்தது என்று நீங்கள் தெரிந்துகொள்ள, அந்த சமயம் ஹிந்துவில் வெளியான செய்தி ஒன்றை தருகிறேன்.

http://www.hindu.com/2009/10/06/stories/2009100659160500.htm

பத்திரிக்கைகள் படிக்கும் வழக்கம் உடையவர் ரஜினி என்பதால், நிச்சயம் இதை படித்திருப்பார். அல்லது எப்படியேனும் மந்திராலயத்தில் வெள்ளம் சூழ்ந்த விஷயம் அவருக்கு எட்டியிருக்கும். ஏதேனும் செய்வார் என்று மேற்கொண்டு இதைப் பற்றி யோசிக்கவில்லை. அதற்கு அடுத்த வாரம், ரஜினி அவர்களின் தரப்பிலிருந்து இது குறித்து ஜூ.வி.யிலோ அல்லது நாளிதழ்களிலோ ஏதேனும் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். (என்னே ஒரு அறிவீனம்!) எதுவும் அப்படி வரவில்லை.

உள்ளுக்குள் எனக்கு உறுத்தலாக இருந்தது. அவரை ஆளாக்கிய ஒரு மகானின் ஆலயம் இப்படி சீரழிந்து போயிருக்கிறதே. இந்த நேரத்தில் ரஜினி இப்படி கண்டுகொள்ளாது இருக்கிறாரே என்று ஒரு பக்கம் என்னை மனவருத்தம் ஆட்டி படைத்தது. இதைப் பற்றி என் நெருங்கிய நண்பர்களிடம் கூட நான் பேசவில்லை. ஒரு பக்கம் இந்த சந்தேகம் இருந்தாலும் மறுபக்கம், ‘நிச்சயம் ரஜினி ஏதாவது செய்வார். செய்திருப்பார். அவரை பத்தி தெரிஞ்சிருந்தும் நாம சந்தேகப்படுறோமே’ என்று என்னை சமாதானம் செய்துகொண்டேன். மந்திராலயத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்துக்கு சென்று இது பற்றி ஏதாவது அப்டேட் இருக்கிறதா என்று அடிக்கடி செக் செய்துவந்தேன். பின்னர் அதை பற்றி மறந்தேவிட்டேன்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. நம் நண்பர் மனோஜ் சில மாதங்களுக்கு முன்பு மந்த்ராலயம் சென்று வந்தார் அல்லவா? அப்போது அங்குள்ள அர்ச்சகர் ஒருவரிடம் தன்னை ரஜினி ரசிகர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு பேசியபோது, அந்த அர்ச்சகர் கூறியது என்ன தெரியுமா? “ரஜினி இங்கே அடிக்கடி வருவது வழக்கம். சில சமயம் தனியாக. சில சமயம் நண்பர்களுடன். சில வருஷத்துக்கு முன்னாடி மந்த்ராலயத்துல வெள்ளம் வந்தப்போ ரஜினி சார் பிருந்தாவனத்தோட புனரமைப்பு பணிகளுக்காக ஒரு நல்ல அமௌண்ட் டொனேஷனா கொடுத்தார்!” என்று பேச்சுவாக்கில் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சென்ற ஆண்டு ரஜினி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்ட சமயம், அவர் நல்லபடியாக குணம் பெறவேண்டி இங்கே விசேஷ பூஜை ஒன்றை மடமே ஏற்பாடு செய்து நடத்தி பின்பு பிரசாதத்தை ரஜினியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்களாம். சிங்கப்பூர்ல இருந்து அவர் திரும்பி வருவதற்கு முன்பு நடந்தது இது.

இதை மனோஜ் என்னிடம் சொல்லும்போது எனக்கு ஒரு கணம் சிலிர்ப்பாக இருந்தது. மானசீகமாக தலைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.

So, தான் செய்யும் இது போன்ற பணிகளை எல்லாம் அவர் வெளியே சொல்வதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவரும் அப்படிப்பட்டவர் இல்லை. நாமும் அதை எதிர்பார்ப்பதில் அர்த்தமும் இல்லை. இந்த நிலையில் அவரை முழுமையாக புரிந்துகொள்ளாமல் விமர்சிப்பவர்களை பார்த்து நாம் என்ன செய்ய முடியும்? மெலிதான ஒரு சிரிப்பை உதிர்ப்பதை தவிர!

[END]

24 Responses to “கடும் வெள்ளத்தில் சிக்கிய மந்த்ராலயம் — ரஜினி செய்தது என்ன?”

  1. Raj Raj says:

    சூப்பர் சார்

  2. PVIJAYSJEC PVIJAYSJEC says:

    இத இத தான் எதிர் பார்த்தேன்..

    “வரும் போது எதுவும் கொண்டு வரல போகும் போது எதுவும் கொண்டு போக போறதில்ல நடுவுல மட்டும் என்து என்து ன்னு சொல்லிக்கிட்டு”

    தலைவரை பற்றி நன்கு தெரிந்தவர்கள் அவரை பற்றி ஒரு நொடி கூட தவறாக சிந்திக்க மாட்டார்கள்..

    என்றும் தலைவர் பக்தன்
    விஜய்

  3. **Chitti** **Chitti** says:

    முதலில், இந்த தகவலை தத்ரூப படங்களுடன், இந்த செய்தியை அதுவும் இன்று (வியாழக்கிழமை) தந்தது, மிக பெரிய சந்தோஷம். அதற்காக, சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
    ***
    நண்பர் மனோஜ் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். மனோஜ் அவர்களை மந்த்ராலயத்திற்கு வரவழைத்தது (கடும் சோதனை/இழப்பு வரும் முன்பு) அவரின் செயலே என்று நான் நம்புகின்றேன்.
    ***
    மந்த்ராலயத்தில் 2009 -இல் வந்த வெள்ளம் கடந்த நூறு ஆண்டுகளில் இதுவே முதல் முறை (1892 -ம் ஆண்டு பிருந்தாவனம் மூழ்கும் அளவிற்கு வெள்ளம் வந்தது என்று கூறுகின்றனர்). அதன் பின்பு 2009 -இல் வந்ததுதான் மிக பெரிய வெள்ளம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். (ஆதாரம்: ‘ஸ்ரீ ராகவேந்த்ர மகிமை - எட்டாம் பாகம்’).
    ***
    சரி, இந்த பதிவின் நோக்கத்துக்கான விஷயத்திற்கு வருவோம்.
    நம் தலைவரின் மனதை உற்று நோக்கும் ரசிகர்களின் மனதில் என்ன இருக்குமோ, அதை சுந்தர் அவர்கள் அப்படியே பிரதிபலித்து விட்டார்.
    ***
    எனவே, நல்லது செய்வதற்கு நாம் ரஜினியை எதிர்ப்பார்க்க தேவை இல்லை. நம்மிடம் (பணமும், மனமும்) இருக்கும் அளவிற்கு நாமே செய்வோம். நம்மால் செய்யமுடியவில்லை என்றாலும் பரவா இல்லை. பரவாயில்லை. மற்றவர்களை இது செய், அது செய் என்று சொல்லாமல் இருக்கலாம். (மறுபடியும் சொல்கிறேன்: இந்த கருத்தினை ஆமோதிப்பவர்கள், எதிர்ப்பு தெரிப்பவர்கள் இருவர் இருப்பர். அதில் எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை பற்றியோ, அவர்களின் கடுமையான வாக்குவதத்திர்க்கோ நான் கவலை படபோவது இல்லை).
    ***
    நாம் நம்முடைய வாழ்க்கையினை மேம்படுத்தி, பிறகு, மற்றவர்களையும் மேம்படுத்தும் அளவிற்கு உயர வேண்டும். இதை நான் சொல்லவில்லை நண்பர்களே. நம் ரஜினியின் விருப்பமும் அது தான்.
    ***
    God bless you all. May the joy be with you all.
    ***
    உனது ரசிகனாக இருப்பதில் மற்றட்ட மகிழ்ச்சியும், பெருமையும், கர்வமும் அடைகிறேன். வாழ்க வளமுடன்!
    ***
    **சிட்டி**.
    ஜெய் ஹிந்த்!!!
    dot .

    ——————————————————————-
    // இந்த தகவலை தத்ரூப படங்களுடன், இந்த செய்தியை அதுவும் இன்று (வியாழக்கிழமை) தந்தது, மிக பெரிய சந்தோஷம்.//

    அட ஆமாம். இன்னைக்கு வியாழக்கிழமை. இதை நான் திட்டமிட்டு செய்யலே. அதுவா அமைஞ்சது. சொல்லப்போனா இதை நான் நேற்றைக்கே பதிவிடுவதாக இருந்தேன். எதுக்கும் ஒரு நாள் கேப் விடுவோமேன்னு இன்னை போஸ்ட் பண்ணினேன். தேங்க்ஸ் சிட்டி.
    - சுந்தர்

  4. vasanthan vasanthan says:

    அருமை சுந்தர் ,எனக்குக்குட இந்த செய்தி தெரியாது ,புரியாதவர்களுக்கு தலைவர் என்றும் புதிர்தான் ,

  5. Thalaivar great mahaan. Kankalangiten tha padikumpothu

  6. Ashwin Ashwin says:

    Excellent article Sundar. The last paragraph is just like hitting the last nail into the coffin of those who do ill talk about our Thalaivar without knowing the facts.

  7. murugan murugan says:

    சரியான நேரத்தில் செய்யப்பட்ட சரியான பதிவு !!!
    தலைவர் சொல்வது குறைவு செய்வது அதிகம் !!!
    தலைவருக்கு எல்லாம் தெரியும் !!!
    எதையுமே தீர ஆலோசித்து அலசி ஆராயும் குணம் உள்ளவர்!!!
    vilambaraththai விரும்பாதவர்!!!
    எனவே நண்பர்களே thevaiyattra குழப்பத்தை விடுத்து நம்பிக்கையோடு எதிர்காலத்தை எதிர்கொள்வோம் !!!

  8. Thamizhisai Appa Thamizhisai Appa says:

    நெடு நாளாக மந்த்ராலயம் செல்ல வேண்டும் என்று ஆசை ..நேரம் காலம் கூடி வரவில்லை … ராகவேந்திர சுவாமி அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க அருள் புரிய வேண்டும் !

  9. saranya saranya says:

    solliteenga illa. idhayum vimarsikka oru kootam kelambum

  10. KUMARAN KUMARAN says:

    தலைவர் தர்மத்தின் தலைவன் .

  11. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

    We cannot reach or understand God through human intelligence. When intelligence is there, Ego will be there. God can only be realised by being humble and surrendering to him with unquestionable faith.
    Well, a timely article from our Sundar (as usual). Very true and genuine opinion from Chitti.

  12. murugan murugan says:

    sir translate english

  13. **Chitti** **Chitti** says:

    // இந்த தகவலை தத்ரூப படங்களுடன், இந்த செய்தியை அதுவும் இன்று (வியாழக்கிழமை) தந்தது, மிக பெரிய சந்தோஷம்.//
    அட ஆமாம். இன்னைக்கு வியாழக்கிழமை. இதை நான் திட்டமிட்டு செய்யலே. அதுவா அமைஞ்சது.
    ***
    அதுதாங்க நம் ராகவேந்த்ரரின் மகிமை. அவரின் பிள்ளையை மற்றும் அவர் செய்யும் மறைமுக உதவிகளை புரிந்து கொள்ளாது இருப்பவர்களுக்கு அவரே முன்கூட்டியே நம் நண்பரிடம் தெரிவித்து, அதை சரியான சமயத்தில் உங்கள் மூலம் சரியான ஒரு நாளில் (அவரின் வியாழக்கிழமையில்) எங்களுக்கு (வெளி உலகுக்கு) தெரிவித்து இருக்கின்றாரே!!!
    ***
    உங்களுக்கும் நண்பர் மனோஜ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!!
    ***
    **சிட்டி**.
    ஜெய் ஹிந்த்!!!
    Dot.

  14. RAJA RAJA says:

    இது தான் தலைவருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்,தலைவர் உதவி செய்தது யாருக்குமே தெரியகூடாது என்று நினைப்பவர் ,சில சமயம் அது அவரையும் மீறி வெளி வந்து விடுவது கடவுளின் செயல் ,
    உதவி என்பது சொல்லாமல் செய்வது தான்,சொல்லி செய்வதற்கு தலைவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல,அதே போல் ஒரு வேலை தலைவர் தன நண்பர்கள் மூலமாக சிவகாசி விபத்ரிக்கு ஏதாவது செய்து இருக்கலாம் ,அப்படி செய்து இருந்தால் அதுவும் ஒருநாள் இப்படி வெளி வரும்,ஆனால் வெளிய வந்து விட்டது என்று சந்தொசபடவும் மாட்டார் ,வரவில்லையே என்று வருத்த படவும் மாட்டார் நம் தலைவர் .

    ——————————————————————————-

  15. Ramar Thoothukudi Ramar Thoothukudi says:

    இது ஒரு துளியே..

  16. B. Kannan B. Kannan says:

    அருமையான பதிவு.. சில நண்பர்கள் சொல்வதை போல் இன்று வியாழக்கிழமையாக அமைந்தது இறைவனுடைய விருப்பம்..
    சிட்டி வழக்கம் போல் சில பன்ச்களை அருமையாக கூறி உள்ளார்.. Keep this going dude..
    சுந்தரிடம் இந்த விஷயத்தை சொன்ன தம்பி மனோஜிற்கு எங்களின் timely நன்றி..
    தலைவர் செய்வார் என்று சொல்லுவதை விட்டு நம்மால் முடிந்த உதவியை நாம் செய்யலாம்..
    தலைவர் பற்றி அறிந்ததால் அவர் கண்டிப்பாக ஏதாவது உதவி செய்திருப்பார் என்று நம்பிக்கையோடு கூறலாம்..
    //தான் செய்யும் இது போன்ற பணிகளை எல்லாம் அவர் வெளியே சொல்வதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவரும் அப்படிப்பட்டவர் இல்லை. நாமும் அதை எதிர்பார்ப்பதில் அர்த்தமும் இல்லை. இந்த நிலையில் அவரை முழுமையாக புரிந்துகொள்ளாமல் விமர்சிப்பவர்களை பார்த்து நாம் என்ன செய்ய முடியும்? மெலிதான ஒரு சிரிப்பை உதிர்ப்பதை தவிர!//
    இதற்க்கு மேல் இதை இவ்வளவு தெளிவாக கூற முடியாது..
    சியர்ஸ்..
    பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
    பா. கண்ணன்.

  17. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    //நமது தலைவரை புரிந்துகொள்ளாமல் விமர்சிப்பவர்களை பார்த்து நாம் என்ன செய்ய முடியும்? மெலிதான ஒரு சிரிப்பை உதிர்ப்பதை தவிர!//
    அழகான படங்களுடன் தெளிவான ஒரு பதிவிற்கு நன்றி சுந்தர் அண்ணா..
    “தர்மத்தின் தலைவர்” - நமது தலைவர்..

    என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் எஸ்.எம்.எஸ் குரூப்

  18. ram ram says:

    Hi Sundar,

    Really this is a very good and valuable entry.and to be honest nowadays ur entries are well said and matured as well.
    I used to open this site everyday and i am feeling that the people here and u are well equipped with good thoughts.
    actually my native is madurai and now am abt abroad.am eager to so some help for the people who r in needs of education or basic needs. If you wish we can utilize this site as a channel for that.
    We all can contribute for a good cause and help the needy.and i prefer we can plan for Dec 12.
    Am sure you might be doing these things now.But i would like to join your group.
    This is my personnel thoughts and feel free to share ur thoughts.

    ————————————————
    Thanks for your intention Ram. Really pleased.
    As of now we don’t have any plans for Dec 12.
    Also i don’t have any ideas of doing anything collectively through this website.
    If you wish to do something you can do it directly to the beneficiaries - irrespective whether it is small or big.

    Since i don’t want to halt your helping mind even for a micro-second i am providing the following URL. Do something to these kids if you wish.
    http://www.premavasam.org/
    - Sundar

  19. Prasanna Prasanna says:

    Hi,
    Truely agreed for whatever that has been written in this article .
    But let me putforth my views !
    But before that, for the friends who asks me ” what did you do for the society , instead of asking others ? Ans : I dint do anything , but we r doing whatever we can in the name of thalaivar for the society or ” bcoz of thalaivar, we r doing ”
    Now coming to the point ,
    How many ppl like thalaivar and how many follow him ? Ans : keep the number in crores .
    Its not necessary that thalaivar wants to publicise the help that he is doing , but atleast he can be inspiring lakhs of fans who wanted to do something to the society , but somehow they r not doing !
    For example : how many rajini fans would have helped for sivakasi victims ? keep 20 percent fans hav helped . If thalaivar atleast asked the fans or convey that “ I strongly console for the ppl who died in that accident and I will be ther for them and I am doing whatever I can ( he doesn’t want to mention the amount ) and I urge the fans to help as much as u can for the victims”
    Now the result will be in such a way lakhs of fans will help bcoz thalaivar in involved directly .
    Ultimately the benefits goes the people . this is what we want thalaivar to do instead of doing silently .
    If thalaivar helping others indirectly inspires lakhs of fans to help, then if he helps others directly inspires crores of fans to help the ppl ..Also many public will come to volunteer “
    Thalaivar can atleast give a voice consoling the victims .. Its really hurting thalaivaa

  20. Prasanna Prasanna says:

    2) take the case of mantralaya as sundar ji has written in this article.

    If thalaivar would hav directly helped or raised his voice or then governments attentions or many charitable organisations would have turned their focus towards this and ultimately the benefit goes to the people who have suffered during the flood .

    That’s the power of thalaivar’s voice . if the media can use his brand for films, then if rajini goes and helps them publicly , then whole country attention will turn towards that ..

    Whatever they say , whether he is doing this for politics or not , the ultimate benefit goes to the people ..

    Thaliavar his wasting his fans base till this time .. he doesn’t need to come to politics , but he can do lot to the society by inspiring crores of ppl , if he helps directly or voices directly , instead of doing silently ..more no of fans will get inspired …

  21. saravanan saravanan says:

    அதெலாம் நல்ல மனசுதான்

    ஆனா

    அவருக்கு என்ன முன்னால் முதல் அமைச்சர் இந்நாள் முதல் அமைச்சர் அவங்க ஆருயிர் நண்பர்கள் ஆச்சே. அவர முதலமைச்சர் கூட உட்கார வைக்கும் அளவுக்கு உயர்த்திய தமிழ் மக்களுக்கும் ரசிகர்கலுக்கும் ஒன்னும் பண்ணலன்னு ஒரு பேச்சு விட்டுட்டு அவங்கள ஜால்ரா போட்டுட்டு தன வேலைய நல்ல செஞ்சுக்க பிளான் போட்டு இருக்கார் போல இருக்கு நல்ல தலைவர். முன்னாளில் இருந்த கண்ணியம் தலைவரிடம் இல்லாம போகிவிட்டது. ஊருக்கு கெட்டது செய்தாலும் நம்மள நல்ல விசாரிச்சா அவங்க இவருக்கு ஆருயிர் நண்பன் ஹ ஹ ஹ ஹா

  22. raja raja says:

    நண்பர் சரவணன் அவர்களே

    தலைவருடைய ரசிகராக இருப்பதைவிட அவரை புரிந்தகொண்ட ரசிகனாக இருக்க முயற்சி செய்வோம்.

    நேரு ஸ்டேடியத்தில் முதலில் அங்கு என்ன நடந்தது என்று இன்னும் பாதிபேருக்கு சரியாக புரியவில்லை. சுந்தர் இத்துணைக்கும் மிக மிக தெளிவாக விளக்கியிருந்தார்.

    ஆனால் எல்லோரும் ஒரு வார பத்திரிக்கை எழுதியதை நினைத்து அதை வைத்து பேசி கொண்டு இருகிறார்கள்.

    சுந்தர் மற்றும் அங்கு சென்றவர்கள் சொன்னதை வைத்து தலைவர் கலைஞரை மட்டும் சொல்லவில்லை. அவர் எம் ஜி ஆர் ,மற்றும் வேறு சிலர் பெயரையும் குறிபிட்டுள்ளார், அதோடு கலைஞர் அவர்களின் பெயரை குறிப்பிடும் பொழுது முன்னாள் முதல்வர் என்று சொல்லிருந்தால் தான் அது இருவருக்குமே மன கஷ்டமாக இருக்கும். அவர் சொன்னது என் நண்பர் என்று.

    ////ஊருக்கு கெட்டது செய்தாலும் நம்மள நல்ல விசாரிச்சா அவங்க இவருக்கு ஆருயிர் நண்பன் ஹ ஹ ஹ ஹா////

    அடுத்து இன்று ஊருக்கு நல்லது செய்யும் அரசியல் வாதிகள் வேறு யாரையாவது காட்டுங்கள் பார்க்கலாம் ,அப்படி இருக்கும் போது நலம் விசாரிச்சது ஜெயலலிதா அவர்களும், கலைஞர் அவர்களும் தான் ,இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் அனைவரும் தலைவரை நண்பராக வேண்டும் என்று நினைகிறார்கள்,தலைவர் அவர்களின் மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்கிறார் அவ்வளவுதான் .

    இதே தலைவர் தான் ஜெயலலிதா அவர்களை தைரியலட்சுமி என்று பாராட்டினார் அப்பொழுது சில பேர் அதை விமர்சித்தார்கள். அவர் என்ன செய்தாலும் விமர்சிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் வெளியேயும் இருக்கிறது. உள்ளேயும் இருக்கிறது.

    அப்போம் அவருக்கு என்ன வேலை நடக்க வேண்டியது இருக்கிறது என்று கொஞ்சம் சொல்ல முடியுமா,அப்படி அடுத்தவர்கள் மூலம் காரியம் சாதிக்க வேண்டி இருந்தாலோ அல்லது அவர் அடுத்தவர்களை தன வேலைக்கு உபயோக படுத்துபவராக இருந்தாலோ இந்நேரம் பாட்டாளி மக்கள் கட்சி பாபா பெட்டி தூக்கி கொண்டு போகும் தலைவர் ரசிகர்களுக்கு சிறு கண் காட்டி இருந்தால் அவ்வளவு தான் ,அதனால் கொஞ்சம் யோசித்து பேசவும்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates