









You Are Here: Home » Featured, Superstar Movie News » சிவாஜி 3D பிரீமியர் - டோக்கியோ சென்றார் ஸ்ரேயா & சென்னையை கலக்கும் சிவாஜி 3D ட்ரெயிலர்!
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நாளை (செப் 15) சிவாஜி படத்தின் சிறப்பு காட்சியில் நடிகை ஸ்ரேயா கலந்துகொள்கிறார்.
கனடா நாட்டில் டொரோண்ட்டோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அவர் அங்கிருந்து நேராக ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு செல்கிறார்.
இது குறித்து தனது டுவிட்டரில் (https://twitter.com/shriyasmiling) ஸ்ரேயா கூறியிருப்பதாவது :
“சிவாஜி தி பாஸ் பார்ப்பதற்கு ஜப்பான் போய்கொண்டிருக்கிறேன். இதற்க்கு மேல் என்னால் பொறுமையாக இருக்கமுடியாது. 3D வடிவத்தில் படத்தை காண மிகவும் ஆவலாக இருக்கிறேன்.” ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : ரஜினி ஜப்பானில் ஒரு மிகப் பெரிய சக்தி. அவருடைய படத்தை மறுபடியும் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள் ஜப்பானியர்கள். அதுவும் 3D வடிவத்தில் என்றால் கேட்கவா வேண்டும்?” என்று கூறியிருக்கிறார் ஸ்ரேயா.
Tail piece 1 : இங்கு தமிழகத்தில் சிவாஜி 3D படம் வெளியாவதை பற்றி தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. விஜய், சூர்யா ஆகியோரின் படங்களுக்கு போட்டியாக படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவேண்டாம் என்று ரஜினி ஏ.வி.எம்.எம்மை கேட்டுக்கொண்டதாக வந்த செய்திகள் எதிலும் உண்மையில்லை. பொதுவாக இது போன்ற வெளியீட்டு விவகாரங்களில் அவர் தலையிடுவதில்லை. அதுவும் ஏ.வி.எம். நிறுவனத்தின் மேல் அவர் பெரு மதிப்பு வைத்திருக்கிறார். “அது அவர்கள் சௌகரியம். நாம் ஏன் இது பற்றி சொல்லவேண்டும்?” என்பதே அவர் மனவோட்டம்.
Tail piece 2 : சிவாஜி 3D படத்தின் ட்ரெயிலர், சென்னை நகரில் ஓடிக்கொண்டிருக்கும் Finding Nemo 3D, RAAZ 3D, உள்ளிட்ட 3D படங்களின் இடைவேளையின்போது திரையிடப்படுகிறதாம். இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், சூப்பர் ஸ்டாரை திரையில் பார்த்ததும் இன்ப அதிர்ச்ச்சியில் விசில் மற்றும் கைதட்டல்களால் தியேட்டரை அடி தூள் கிளப்பிவிடுகிறார்களாம்.
Tail piece 3: விநாயகர் சதுர்த்தி அன்று ‘கோச்சடையான்’ தரப்பிலிருந்து படத்தின் ஆடியோ குறித்த முக்கிய அறிவிப்பு ஏதேனும் வரலாம். அப்படியில்லையெனில் குறைந்தபட்சம் ஏதாவது விளம்பரத்தையாவது (புதிய ஸ்டில்லுடன்) எதிர்பார்க்கலாம்.
[END]
Morning super kalakal news thanks na. Eppo vanthalum jeyupom. Intha Vinayaga chathurthi romba special.
எனக்கு ஜப்பானில் எந்த இடத்தில் நிகழ்ச்சி நடக்கிறது .
நான் ஜப்பானில் இருக்கும் ரஜனி சாரின் ரசிகர் .
சொந்த ஊர் சிறிலங்கா .தயவு செய்து இடத்தை அவசரமாக குறிப்பிடவும் .
—————————————————————
ஜப்பானில் எங்கு நடக்கிறது என்ற விபரம் வெளியிடப்படவில்லை. எதற்கும் சற்று பொறுக்கவும். தெரிந்தவுடன் இதே பகுதியில் வந்து தெரிவிக்கிறேன்.
- சுந்தர்
Great news Sundarji. When do you expect that Sivaji The Boss 3 D get released?
செம செம…. தலைவா…..
Dying to meet Rajnikanth in person.My father had travelled in the same bus when Thalaivar was a bus conductor in the late 60′s.I am huge fan of Thalaivar.Every day atleast once I think of him.Have huge expectations on “KOCHADAIYAAN”.I pray god that it should be bigger than “ENDHIRAN”
சும்மா அதிருதுல்ல .. தீபாவளி புது படத்துக்கு….
கடைசி செய்தி தூள்
Tail piece செய்தி மூன்றுமே அருமை..