









You Are Here: Home » Fans' Corner, Featured » இது ஆண்டவன் கட்டளை!
ரஜினி அவர்களை பார்த்தே நான் வளர்ந்துவந்தாலும் அவரை நான் வெறும் நடிகராகவும் ENTERTAINER ஆகவும் மட்டும் பார்க்கவில்லை. அவர் எனக்கு ஒரு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். ஆதலால் தான் அவரை பற்றிய தளத்தை என்னால் எத்தனையோ இன்னல்கள் மற்றும் போராட்டங்களுக்கிடையே இத்தனை வருடங்கள் நடத்த முடிந்தது.
ரஜினி அவர்களை அவரது நடிப்பையும் ஸ்டைலையும் தவிர்த்து அவரது குணத்துக்காக விரும்புபவர்கள் எத்தனையோ பேர் உண்டு. ஆகையால் தான் அவரது சினிமா பற்றிய செய்திகளை பகிர்வதோடு மட்டுமல்லாமல் அதையும் தாண்டி அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தும் பல நல்ல விஷயங்களை நமது தளத்தில் பகிர்ந்துகொண்டு வந்தேன். நல்ல விஷயங்களை ஆதரிக்க நமது ரசிகர்கள் என்றுமே தயங்கியது கிடையாது. எனவே அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
அவரது சினிமாவை வெற்றிகளையும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்களையும், அவர் வலியுறுத்தும் விஷயங்களை மட்டுமே எழுதி வந்த எனக்கு, அடுத்தடுத்து சோதனைகள் ஏற்பட அவற்றுக்கு பதிலடி கொடுக்கவோ ரீயாக்ட் செய்யவோ நான் துளியும் விரும்பவில்லை. அதற்கு பதில் எனது பலத்தில் - அதாவது ப்ளஸ் பாயிண்ட் - என்று நான் நினைத்த விஷயங்களில் - என் முழு கவனத்தையும் செலுத்தினேன். அந்த நேரத்தில் எனது நண்பர்கள் சிலர் கூறிய அறிவுரையும் இதற்கு ஒரு காரணம்.
நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784:)
(பொருள் : நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.)
அடுத்தடுத்து பிரபலங்களின் சந்திப்பு, சாதனையாளர்களின் பேட்டி என்று நமது தளம் வளர்ந்ததற்கு எனது இந்த அணுகுமுறை தான் காரணம் என்றே கருதுகிறேன்.
நமது எழுத்து பலருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் ஒரு வித மன இறுக்கத்தை குறைத்தாலும் நண்பர் ரிஷி அவர்கள் நடத்தி வரும் LIVINGEXTRA.COM போன்ற தளங்களை பார்க்கும்போது இந்த எழுத்தாற்றலை வைத்து நாம் செய்யவேண்டியது நிறைய உள்ளது. ஆனால் நாமோ ஒரு சிறிய வட்டத்தில் அகப்பட்டுக்கொண்டுவிட்டோமோ என்று எனக்கு அடிக்கடி தோன்றுவது உண்டு.
கடற்கரை மணலில் எழுதப்படும் எழுத்தை போல அல்லாமல், காலத்தால் அழியாத கல்வெட்டாய் என் எழுத்துக்கள் இருப்பதையே நான் விரும்புகிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு நான் சிவராத்திரி விரதம் மேற்கொண்ட சமயத்தில் சென்னையில் உள்ள சைவத் திருத்தலங்களை பற்றி இணையத்தில் ஏதோ தேடியபோது SHIVATEMPLES.COM என்ற தளத்தை பார்க்க நேர்ந்தது. தமிழகத்தில் உள்ள பாடல் பெற்ற சிவாலயங்கள் பற்றி மிக அற்புதமாக அனைத்து விபரங்களும் தொகுக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டு ஒருவித அர்ப்பணிப்பு உணர்வுடன் அந்த தளம் உருவாக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
அதன் ஆசிரியர் திரு.நாராயணசாமியை தொடர்பு கொண்டு எனது மகிழ்ச்சியையும் தெரிவித்து பாராட்டுக்களையும் பகிர்ந்துகொண்டேன். எனது பெயர் மற்றும் இருப்பிடத்தை மட்டுமே கூறிய நான் ஏதோ ஒரு வித தயக்கத்தால் அப்போது என்னை நான் முழுமையாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை.
யானை கட்டி தீனி போடுவது போல ஒரு வெப்சைட் நடத்துவது என்பது எவ்வளவு கடினமான ஒன்று என்று அதை நடத்துபவர்களுக்கு தான் தெரியும். வங்கிப் பணியில் இருந்து ஒய்வு பெற்ற அவர், இறைப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பி, ஒரு அற்புதமான விஷயத்தை தேர்ந்தெடுத்து தாமே வெப்சைட் டிசைனிங்கை படிப்படியாக கற்றுக்கொண்டு அந்த தளத்தை அவரே உருவாக்கியதும் பராமரித்துவருவதும் தெரிந்தபோது எனக்கு வியப்பு பன்மடங்கு ஏற்பட்டது. மறுபக்கம் எனக்கு வெட்கமாக இருந்தது. நாம் போகவேண்டிய பாதையே வேறு நமது இலக்கே வேறு என்பது எனக்கு தெளிவாக புரிந்தது.
இனி என் எழுத்துக்கள் அறநெறியையும், தெய்வ பக்தியையும் பரவச் செய்யவும், வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்கிற தாகம் உள்ளவர்களுக்கும், சரியான வழிகாட்டுதல்கள் இன்றி தவிப்பவர்களுக்கும் பயன்படவேண்டும் என்று விரும்புகிறேன். இறைவன் எனக்கு இட்ட கட்டளையும் அது தான் என்றே எனக்கு தோன்றுகிறது. (இந்த ONLYSUPERSTAR.COM தளத்தை பொறுத்தவரை இதற்கு ஒரு டைம் ஃப்ரேம் வைத்திருக்கிறேன். அதுவரை இது இயங்கும்.)
இந்த தளம் நடத்துவது தொடர்பாக கடந்த காலங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் அது எனக்கு தந்த பாடங்கள் இனி நான் துவங்கப் போகும் பயணத்திலும் ஈடுபடவிருக்கும் துறையிலும் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவன் நடத்தும் நாடகத்தில் காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை. பொருளின்றி பாத்திரங்கள் பேசுவதில்லை.
நான் மேற்க்கூறிய பிற விஷயங்களை நிச்சயம் இந்த தளத்தில் அளிக்க முடியாது. அது சரியாகவும் இருக்காது. எதையுமே திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே இவற்றுக்காக பிரத்யேகமாக therightmantra.blogspot.in என்ற தளத்தை விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்த இந்த நன்னாளில் துவக்குகிறேன். வாழ்க்கைக்கு பயனுள்ள விஷயங்கள் மட்டுமே மேற்க்கூறிய தளத்தில் இடம்பெறும்.
ஆன்மிகம், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, மருத்துவம், ஆரோக்கியம், பக்தி இலக்கியங்கள், தமிழ் நன்னெறி நூல்கள், இதிகாசங்கள், பிரபலங்களின் பேட்டிகள், சாதனையாளர்களுடன் சந்திப்பு, திருக்கோவில்கள் பயணம், பல்துறை நிபுணர்களின் பங்களிப்பு, COUNSELLING என பலவற்றை இந்த தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.
therightmantra.blogspot.in என்னும் இந்த தளம் நிச்சயம் உங்கள் அனைவரையும் கவரும், உங்கள் சிந்தனையின் போக்கையே மாற்றும் என்று உறுதியாக நம்புகிறேன். உங்கள் நல்லாதரவை தந்து என்னை கௌரவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். (Rightmantra.com என்ற பெயரை நான் ரெஜிஸ்டர் செய்துவிட்டாலும் மேற்கூறிய இந்த பிளாக்கை வெப்சைட்டாக மாற்ற சிறிது அவகாசம் தேவைப்படுகிறது.)
இந்த நன்னாளை மிஸ் செய்துவிடக்கூடாது. இன்றைக்கு எப்படியாவது பிள்ளையார் சுழி போட்டுவிடவேண்டும் என்று எளிமையாக துவக்கியிருக்கிறேன். போகப் போக தளம் மெருகூட்டப்படும். பலப் பல புதிய விஷயங்கள் சேர்க்கப்படும்.
எனக்கு மிக மிக விருப்பமான ஒரு கிரவுண்டில் இறைவன் என்னை விளையாட பணித்துள்ளான். முழு சுதந்திரத்தோடு. பொறுத்திருந்து பாருங்கள்!
- சுந்தர்
RIGHTMANTRA.COM
Good Job!! Keep going. God Bless you.
வாழ்த்துகள் சுந்தர்
தங்களுடைய இந்த புதிய பயணத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஜி……..
லிங்க் போக மாட்டேங்குது…….எப்போ ஸ்டார்ட் ஆகுது ஜி உங்க புதிய தளம்……
————————————————————-
It is working Roshan. Just check in other browsers or refresh one or two times.
- Sundar
All the very best Sundar. I hope u’ve listened to ur instinct and have initiated this. My heartfelt wishes to U n rightmantra.com. Let the almighty bless n guide u.
Mr. Sundar, many divine blessings are on your way. We are happy for your spiritual journey and congratulate the latest effort.
Keep it up!
Vivekanandan Doraiswamy
நல்வாழ்த்துக்கள். வெற்றி நிச்சயம்,இது வேதசத்தியம்.
சூப்பர் சார்
All the best !!
நல்வாழ்த்துக்கள் உங்கள் புதிய தளம் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்
All the very best. Looking forward to reading your write-ups.
Congrats Sundar
All the best Mr. Sundar.
Good luck!!!
என்னுடைய மனபூர்வமான வாழ்த்தும், பங்களிப்பும் எப்போதும் இருக்கும்
நீங்கள் என்னிடம் இதை பற்றி எதுவுமே கூறவில்லை அண்ணா!! ரொம்ப அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது!! இனி நடப்பவை அனைத்தும் நன்றாகவே நடக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்!!!
என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் சுந்தர் ஜி…..
இதைத் தானே இவ்வளவு நாளாய் எதிர் பார்த்திருந்தேன்…!!
உங்களின் புதிய பயணம் பலருக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையட்டும் என்று வேண்டுகிறேன்…..!! பிள்ளையார் சுழியுடன் ஆரம்பம் ஆகியிருக்கும் உங்கள் (நம்) தளம் வெற்றி அடையும்…! ஆண்டவன் இருக்கிறான்….!
-
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
-
விஜய் ஆனந்த்
வாழ்த்துக்கள் சுந்தர்.
சரியான நேரத்தில் சரியான புதிய பாதையில் ஆண்டவன் உங்களை பயணம் செய்ய கட்டளை இட்டிருக்கிறான். நீங்கள் கூறியுள்ளதுபோல் ஒரு சிறிய வட்டத்துக்குள்தான் இருந்தீர்கள். ஆனால் இப்போது இறைவனின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தில் பயணம் செய்ய உங்கள் முன்வினை நற்பயன் காரணமாயிருக்கிறது. வாழ்த்துக்கள் சுந்தர். புதிய வலை தளத்திற்கு விசிட் செய்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.
மகிழ்ச்சியான செய்தி சுந்தர்….என்போன்றவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் பேருதவியாக இருக்கும்……
.
எப்பொழுதும் உங்களுடன் இருக்கும் ஆண்டவன் நீங்கள் எடுத்திருக்கும் இந்த புதிய முயற்சிக்கும் கூட இருந்து வழி நடத்த நான் மனபூர்வமாக வேண்டுகிறேன்…
.
எங்களின் அதரவு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும் என்று நான் உறுதிகூருகிறேன்…..
.
மாரீஸ் கண்ணன்.
ஆண்டவன் எபோதும் நம்மோடு ,வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் ,.
Sundar Sir,
My Best Wishes for your good work. Keep going. Great job !
Regards,
Praveen
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
திரு. சுந்தர் அவர்கள் நல்ல ரசிகர் என்பதோடு நல்ல மனிதர் எனவும் வாழ்ந்து காட்டி வருகிறார். உங்கள் புதிய முயற்சி பெரும் வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்கள். நல்ல கட்டுரைகளை நாங்களும் தருகிறோம். அவை suit ஆனால் guest articles ஆக வெளியிடுங்கள். நன்றி.
-மிஸ்டர் பாவலன்
——————————————-
Thanks and Welcome bro.
- Sundar
Great Initiative sundar gee..all the very best.keep inspiring us in thalaivar way..
அன்புள்ள நண்பர் சுந்தர்,
ரொம்ப ரொம்ப நல்ல விஷயம்…கண்டிப்பா எல்லோருக்கும் மனஅமைதி தர போற விஷயம்.
வாழ்த்துக்கள்.
கணேசன்
வாழ்த்துக்கள் சுந்தர் ஜி !!!
உங்கள் வாழ்க்கைப்பாதையில் நீங்கள் ஆரம்பித்திருக்கும் இந்த புதிய தளம் ஒரு மைல் கல்லாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் !!!
Pudhiya Thalam Pudhiya Muyarchi Ellam Valla Eraivanin Asiyodu Vetri Peratum!!!
சூப்பர் சுந்தர்ஜி…. உங்கள் எல்லா முயற்சியும் வெற்றி பெற எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள் புரியட்டும். புதிய வெப்சைட் நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்…
this what v want…….v gave this suggestion a long back ago……..when u r in blogspot………
i hope mantra blogspot will also change to .com
very good sundar………..
summa oru natakrin + mattum paseyyyyy………no use……..
un valkai un kayil………..
this thoughts should come to grass root rasigars……….
they should come in life and give a rich and healthy contribution to the world………….
This sure will happen…………………..
Lets Parents Bless us and next god………
வாழ்த்துக்கள் ஜி..
இந்த செய்தி ரொம்ப சந்தோசத்த கொடுக்குது..ஏதோ ஒரு பாதைய நோக்கி போறீங்க..வாழ்த்துக்கள்..இனி எல்லாம் சுகமே..
Congrats bro. May the almighty guide you in all your services to mankind. Blessings from a fellow thalivar fans. Hope to see a lot of Sundars in future.god bless.
All the Best anna . We always follow u…
Excellent! I My sincere wishes to you for your new website & all your new endeavors in the near future! Needless to say that I will be beside you. Eagerly looking ahead for those inspiring articles in rightmantra, the way you have already been doing for a long time. I am sure the rightmantra will enrich many lives..! Kudos!
Congrats ..
sir, pls no time frame for “onlysuperstar.com”.
வாழ்த்துக்கள் சுந்தர். எப்பொழுதும் போல் இந்த தளத்திற்கும் என் ஆதரவு உண்டு. ஆனால் தலைவர் பற்றி உண்மையான செய்திகளை உங்களால் மட்டுமே அளிக்க முடியும். தயவு செய்து இந்த onlysuperstar.com தளத்தை நிறுத்துவது பற்றி யோசனையே வேண்டாம். ரசிகர்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு
All the Best Sundarji. I am following your writings since 2005 and realized that you have lots of writing potential with good reading knowledge. May God bless you. Only because of people like you, we are able to get true news about Thalaivar. Keep it up.
என் இருதயத்தின் அடித்தளத்தில் இருந்து என் அன்பான வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் பயணம் அற்புதமானதாக இருக்கும்.
மிக்க மகிழ்ச்சி சுந்தர். வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் சுந்தர்ஜி,நல்லதே நடக்கும்
ஹாய் சுந்தர் அண்ணா,
நமது புதிய தளமும் நன்றாக வர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்…
// (இந்த ONLYSUPERSTAR.COM தளத்தை பொறுத்தவரை இதற்கு ஒரு டைம் ஃப்ரேம் வைத்திருக்கிறேன். அதுவரை இது இயங்கும்.)//
சுந்தர் அண்ணா.. எந்த டைம் ஃப்ரேமும் வேண்டாம் ணா…
டைம் ஃப்ரேம் பற்றி நினைத்து கூட பார்க்காதீர்கள்.. ப்ளீஸ் …
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ்..
வாழ்த்துகள் சுந்தர்
வாழ்க வளமுடன்
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி. சுந்தர் நீங்கள் அறிவாளி மட்டும் அல்ல பொறுமையும் விவேகமும் உள்ள ஒரு சிறந்த மனிதாபிமானி அதனால் தான் உங்களை யாராலும் எவராலும் வீழ்த்தமுடியாது. உங்களின் புதிய முயற்சி உங்களுக்கு ஒரு மிகசிறந்த அன்பு உலகத்தை காட்டும் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். உங்களின் புதிய தளம் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
Congratulations on your spiritual journey and move. I’m proud of you. This certainly strengthens yours journey.
இந்த தளமும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
Very happy to hear this.. All the very best for this venture too..
We will be with u as always..
நம்ம தளத்தையும்(ONLYSUPERSTAR.com) இப்போது போல் எப்போதும் நடத்த வேண்டும் சுந்தர். இது அன்பு கட்டளை..
சியர்ஸ்..
பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
best of luck sundar.
all the best.
Dear sunder Sir, We wish a great success for the spirituality Job taken by you thro the website on this Vinayaga chathuthi day and we follow the spitritual journey thro your website,our kind request his not to keep any time frame for onlysuperstar.com as there are crores of hearts got binded tightly by fans thro your web,once again i congratulate to more n more success comes on your way,Please run both websites parallely that is our humble request, Thank u
om ganeshaya namaha
best wishes from Vellorerajinifans, Gandhi road , Vellore:632004
SH Kumar, Venkat Somu, Suresh kumar.S,GK Kumar,Prakash babu.H,VR Kannan,PkP Arumugam,Koteeswaran.B,Logu C,Venaktesh C
தலைவரை பற்றிய இந்த site க்கு நாங்கள் எல்லாம் வாசகர்கள், ஆனால் நீங்கள் ஆரம்பிக்கும் ஆன்மிக site க்கு தலைவரே வாசகராக வர வாய்ப்பிருக்கு
வாழ்த்துக்கள் சுந்தர் !!
————————————————-
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
நாளை பற்றி சிந்திப்போம். திட்டமிடுவோம். நாளை மறுநாளைப் பற்றி வேண்டாமே….
@ சோமேஷ் : என் மீதுள்ள அன்பின் மிகுதியால் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். எனக்கு என் புதிய தளத்தின் SITE AUDIENCE குறித்து எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லை என்பதே உண்மை. ஆண்டவன் இட்ட கட்டளையை செய்கிறேன். அதில் ஏற்படும் வெற்றி தோல்விகளுக்கு அவனே பொறுப்பு.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி சோமேஷ். தலைவர் தனக்காக ஒரு தளம் நடத்தப்படுவதைவிட ஆன்மிகம் மற்றும் சுயமுன்னேற்றத்துக்காக இப்படி ஒரு தளம் நடத்தப்படுவதையே நிச்சயம் விரும்புவார். மகிழ்ச்சியடைவார்.
- சுந்தர்
thank you.
i hope that your photo backround is thrisulam (near airport) siva temple.
—————————————-
Ya…. what a beautiful temple… very ancient one. Many Chennaiites are not aware of this temple.
- Sundar
சுந்தர்,
உங்களின் இந்த முடிவு , மிக மிகச் சரியானதே. நமக்கு பிடித்த, நன்றாக செய்ய கூடிய விஷயங்கள், நமக்கு தொழிலாகவோ அல்லது வாழ்கையில் ஒரு திருப்புமுனை அளிக்க கூடியதாகவோ அமைவது அரிது - இறைவன் கொடுத்த வரம், உங்களுக்கு கிட்டி உள்ளது …. நிறையபேருக்கு அமைவதில்லை….. பலருக்கோ பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையாகவே இருக்கிறது!
rajinifans yahoo group (2004) முதல் உங்கள் எழுத்துக்களை நான் படித்து வருகிறேன் …. உங்களால் விஷயங்களை மக்கள் சுவாரஸ்யமாக படித்து புரிந்து கொள்ள வைக்க இயலும். உங்களுக்கு பெரு வெற்றி நிச்சயம். அது மட்டுமில்லாமல் , ஒருவரின் எண்ணம் போல் அவரின் வாழ்வு அமையும்…உங்கள் வாழ்வு செழிப்பாக விளங்கும்… விளங்க, என் பிரார்த்தனைகள். காலங்கள் ஓடினாலும், தடங்கள் மாறினாலும், நம் நட்பு என்றும் தொடரும் .
இவன் ,
Thamizhisai Appa
(ராஜகோபாலன்)
கடவுள் மேல் பற்று வருவதற்கும் அவன் அருள் இருந்தால் தான் முடியும். அந்த இறை அருளால் தாங்கள் தொடங்கி உள்ள பிளாக்கில் மென் மேலும் ஆன்மிக செய்திகளை வழங்குங்கள். புதிய ஆன்மிக தளத்தை அறிமுக படுத்தியதற்கு நன்றி.நன்றி.நன்றி.
அண்ணா, இந்த அருமையான முயற்சியில் நிறைவான வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.நல்லதொரு எதிர்காலத்தை நாம் அனைவரும் பெறுவோமாக .
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Hello Sundar,
Excellent decision. Wishing you the very Best!!!
Cheers,
Rajesh.