You Are Here: Home » Featured, Rajini Lead » ரசிகன் பெருமைப்பட்ட தருணங்களில் ஒன்று — கலியுக கர்ணன் ரஜினி — இறுதிப் பகுதி FINAL PART!

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் வெளியுலகிற்கு தெரியாது செய்து வரும் அறப்பணிகள் தர்ம காரியங்கள் எத்தனையோ உண்டு. செய்யும் உதவிகளை வெளியே சொல்லவோ, அவற்றை தம்பட்டம் அடித்துக்கொள்ளவோ, அவைகளை படமெடுத்து பத்திரிக்கைகளுக்கு தந்து பெயரேடுக்கவோ அவருக்கு தெரியாது.

உண்மை தெரியாமல் அவரை விமர்சிப்பவர்கள் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. “எதையும் எதிர்பார்த்து நான் இதைச் செய்யலே. என் கடமை. என் இஷ்டம் செய்றேன். இதுல யார் என்ன நினைச்சா எனக்கு என்ன? மனசாட்சிப்படி வாழவே நான் விரும்புறேனே தவிர மத்தவங்க கருத்துக்கு அல்ல” என்பது தான் அவரது நிலைப்பாடு.

அவரது உதவிகள் கூடுமானவரை ரகசியமாகவே இருக்கும். பயனாளிகள் மூலம் அவை வெளியே கசிந்தால் உண்டு. அப்படி நம் கவனத்திற்கு சமீபத்தில் வந்த விஷயம் ஒன்றை இங்கு தருகிறேன்.

நண்பர் தமிழிசை அப்பா… இவர் INFOSYS நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறார். நமது தளத்திற்கு ஆரம்பம் முதல் வாசகர். எனது நண்பரும் கூட.

சமீபத்தில் சிவகாசி பட்டாசு விபத்து தொடர்பாக மம்மூட்டி அவர்கள் நம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஷயத்தில் ரஜினி அவர்களை சிலர் தேவையின்றி விமர்சித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதைத் தொடர்ந்து எனக்கு அவர் பின்வரும் மின்னஞ்சலை/கமெண்ட்டை அனுப்பியிருந்தார்.

மிக மிக அற்புதமான இந்த தகவலை, இந்த தொடரின் இறுதி பகுதியாக வெளியிடுகிறேன்.

கலியுகக் கர்ணன் ரஜினி தொடர் இத்துடன் முடிவடைந்தது! தொடரை இதுவரை ரசித்த அனைவருக்கும் நன்றி!!

ரஜினியை விமர்சித்த நண்பர்கள் வாயடைத்த தருணம்!

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது (2000 – 2001 தந்தை பெரியார் அரசு மேல் நிலை பள்ளி , காரைக்கால்), ஒரு நாள் பள்ளி வகுப்புகள் முடிந்த பின்னர், இலவச நோட்டு புக் கொடுப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. சென்று பார்த்தால் மிகப்பெரிய மாணவர் கூட்டம் எங்களுக்கு முன்னர் காத்திருந்தது. நாங்களும் காத்திருந்து ஒரு வழியாக வாங்கி விட்டோம்.

புதுவை மாநிலத்தில் அடிக்கடி ஏழை எளிய மக்களுக்கு அச்சமயம் ஏதாவது இலவசமாக கொடுப்பது வழக்கம். அது போல இந்த முறை அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்று எண்ணினோம்.

நோட்டு வழங்கும் இடத்தில் எந்த ஒரு அறிவிப்பு பலகையோ, போஸ்டரோ இல்லை. ஆகையால் கொடுப்பது யார்…? புதுவை அரசா அல்லது தமிழக அரசா அல்லது பள்ளிக் கல்வித் துறையா என்று தெரியவில்லை. நோட்டை வாங்கி பார்க்கும் போது தான் தெரிந்தது அது யார் குடுத்தது என்று.

நோட்டின் அட்டை மேல் “Arunachala Educational Trust ‘ என்று ஒரு ஓரத்தில் சிறியதாக அச்சடிக்க பட்டு இருந்தது. ஒரு மாணவனுக்கு இரண்டு long size unruled 200 pages நோட்டு கொடுத்தார்கள். மிக நல்ல quality பேப்பர் கொண்ட நோட்டுகள் அவை.

விசாரித்து பார்த்ததில், இது தலைவர் , தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள ஒவ்வொரு அரசு உயர் மற்றும் மேல் நிலை பள்ளி மாணவ மாணவியர்க்கும் வழங்குகிறார் என்று தெரிந்து கொண்டேன். தலைவன் ரசிகனாக இருந்ததற்கு மேலும் பெருமை பட்டு கொண்டேன். தலைவரை பற்றி தாழ்த்தி பேசிய என்னுடைய சில நண்பர்கள் அன்று முதல் வாய் அடைத்து போனார்கள். ஆனால் எனக்கு தெரிந்து இதுவரை இது எந்த நாளேடுகளிலோ ஊடகங்களிலோ வந்ததாக தெரியவில்லை.

ஒரு சிறு கணக்கு போட்டு பாருங்கள் — தமிழகம் மற்றும் புதுவையில் எத்தனை அரசு பள்ளிகள் , அதில் எத்தனை உயர் மற்றும் மேல் நிலை மாணவ மாணவியர்கள் ?? இந்த வேலையை வேறொரு நடிகரோ அரசியல் வாதியோ செய்து இருந்தால்…. விஷயமே வேற !

எதையும் எதிர்பார்க்காமல் ஊராருக்கு தம்பட்டம் அடிக்காமல் உதவிகள் செய்பவர் தலைவர்.

- தமிழிசை அப்பா

[கலியுக கர்ணன் ரஜினி தொடர் நிறைவடைகிறது]

[முற்றும்]

————————————————————————————————-

கலியுக கர்ணன் ரஜினி – இதுவரை வெளியான மற்ற தொடர்களுக்கு - கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யவும்.

http://onlysuperstar.tamilmovieposter.com/?s=கலியுக+கர்ணன்+ரஜினி+Series

————————————————————————————————-

11 Responses to “ரசிகன் பெருமைப்பட்ட தருணங்களில் ஒன்று — கலியுக கர்ணன் ரஜினி — இறுதிப் பகுதி FINAL PART!”

 1. murugan murugan says:

  அருமையா செய்தி சுந்தர் ஜி !!!
  கலியுக கர்ணன் - தலைவருக்கு மிக பொருத்தமான தலைப்பு தான் !!!
  உதவி செய்வதற்கு யாரையும் எதிர் பார்க்காதீர்கள் - உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள் - என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்று நம் தலைவர் நமக்கு இட்ட கட்டளையை நமது நண்பர்கள் சிரமேற்க்கொண்டு அவரவர்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர் !!!
  அவ்வாறு செய்யும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தியே நமக்கு போதும் !!!
  தலைவர் இவ்வாறு வெளி உலகுக்கு தெரியாமல் செய்த செய்துகொண்டு இருக்கிறன்ற செய்யப்போகின்ற உதவிகள் பல அதில் சிலவட்ரை நாம் அறிந்து கொள்ள நமக்கு உறுதுணை புரிந்த நண்பர் சுந்தர் அவர்களின் முயற்சியை மனதார பாராட்டுவதோடு மேன்மேலும் அவரது பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம் !!!

 2. vasi.rajni vasi.rajni says:

  சுந்தர்ஜி, இந்த அங்கதை நீங்கள் இறுதி அங்கம் என்று கூறியவுடன் எனக்குள் ஒரு இனம் புரியாத சோகம் வந்து விட்டது,
  .
  உங்களை போன்ற ஒரு ரஜினி ரசிகரை நான் பார்த்ததே இல்லை. துரோகம், கிழருப்பு வேலைகள், வயிற்றெரிச்சல் போன்ற பல்வேறு தடைகளையும் தண்டி நமது தளத்தை நீங்கள் நடத்தி வந்திர்கள்.உங்களை சீண்டி பார்த்தவர்களை நினைத்து மிகவும் வேதனை பட்டேன். தங்கள் செயலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நிச்சயம் ஒரு நாள் வருந்துவார்கள்.

  ரஜினியை ரசிப்பதை விட அவரை பின்பற்றுவதே நாம் அவருக்கு செய்யும் கைமாறு. .நீங்கள் தற்பொழுது எடுத்துள்ள பயணமும் இது போலதான்.
  .
  சுந்தர்ஜி, தங்களுடைய பயணம் நிச்சயம் உங்களுக்கு மிகபெரிய இடத்தை பெற்றுத்தரும். என்றும் தங்கள் பயணத்தில் நான் இருப்பேன்.

  வேதனையுடன்

  vasi .rajni

  ————————————————————-
  நன்றி வஸி. இந்த தளத்தின் மூலம் எனக்கு கிடைத்த மிக மிக நல்ல நண்பர்களுள் நீங்களும் ஒருவர்.

  இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பான் என்று கூறுவார்கள். அண்மைக்காலங்களாக என் வாழ்வில் நடைபெற்ற விஷயங்களே என் உண்மையான கடமையை பயணத்தை உணர்த்தின. என்னை இந்த முடிவை எடுக்கச் சொல்லி தூண்டின.

  உண்மையைச் சொல்லப்போனால் மேற்கூறி சோதனைகள் அனைத்தும் என் ஆன்மபலத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துவிட்டது. உலகின் எந்த பல்கலைக்கழகத்திற்கு சென்றாலும் நான் படிக்க முடியாத வாழ்வியல் பாடங்களை கற்றேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது நான் வருத்தமோ கோபமோ கொள்வதற்கு பதில், நன்றியைத் தான் கூற கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் இல்லையேல் நான் இல்லை. இந்த பக்குவம், மனவுறுதி எனக்கு வந்தேயிருக்காது.

  - சுந்தர்

 3. sethu sethu says:

  we request you to continue this web site also. we are able to know more about our star thro your web site. so please continue this web site also

 4. Sankaranarayanan Sankaranarayanan says:

  உங்களது பண்பட்ட புதிய பயணத்தில் நாங்களும் எப்போதும் இருப்போம்…

  நன்றியுடன்
  ப.சங்கரநாராயணன்

 5. RAJA RAJA says:

  அருமையான விஷயம் சுந்தர் அவர்களே ,வேண்டாம் இதை நிறுத்தாதீர்கள் ,நமது ரசிகர்கள் பல பேருக்கு தலைவர் செய்த பல விஷயங்கள் தெரியா வரும் அப்பொழுது இதில் வெளியிடலாம் ,இதை தலைவரை குளிர வைபதற்காகவோ அல்லது தலைவர் இதெல்லாம் செய்தார் எண்டு சொல்வதற்காகவோ அல்ல ,இருந்தாலும் நம் தலைவரின் ரசிகர்கள் பல பேர் இன்னும் தலைவரை சரியாக புரியாமல் உள்ளார்கள் அவர்களுக்காக ,நமது மன திருப்திக்காக

 6. Rajagopalan Rajagopalan says:

  Only this article comes to an end. Am i right Sundar?

  ———————————-
  Actually this series was started as a short series only. Just go to Archives and see the very first article’s heading. You will understand it. But it extended as i started writing it. Now planning to start some other series of which will expose you about another noble quality of thalaivar. Let’s see.
  - Sundar

 7. devaraj devaraj says:

  Hi Sunder fantastic news. Best wishes for the new site you have started. I would suggest you keep on this Kaliyuga Kannan series as many commoners do not know what Thaliver givees away. So it will be useful my humble request.
  cheers
  dev.

 8. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Kaliyuga karnan series mudivathu varuthamaga ullathu.ivlo naal Unknown news koduthinga. We are all thankful to you

 9. karthik karthik says:

  if u want to do something different.. just do as u like in the same rajini fans site…. dont neglect thalaivar… if thalaivar is not there… i dont know who u r…. what u r… pls continue thalaivar news like kaliyuga karnan…. pls dont avoid thalaivar………… i like u anna….

  —————————————————
  கவலைவேண்டாம் நண்பா…
  எனது புதிய பயணத்திற்கும் பங்கமில்லாமல் இந்த தளத்திற்கும் எந்த குறைவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன். (நாம்) நெகடிவ்வாக எதையும் நினைக்கவேண்டாமே. நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.
  நன்றி.
  - சுந்தர்

 10. B. Kannan B. Kannan says:

  வாவ் அருமையான செய்தி..
  தலைவர் எப்படி தான் இப்படி கொடுத்துட்டு ஒன்றுமே நடக்காத மாதிரி இருக்காரோ.. நாம் நம் தலைவரிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது..
  இந்த கலியுக கர்ணன் பகுதி மிக
  அருமையான பகுதி.. இதை முடிந்தால் வேறு வடிவத்தில் கொடுங்கள் சுந்தர்.. தலைவருடைய தய குணம் இந்த ஒரு பகுதியில் இருந்து தான் என்னை போன்ற கோடிக்கணக்கான நண்பர்களுக்கு தெரிகிறது..
  So do consider sundar… never think about closing the website.
  cheers..
  பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
  பா. கண்ணன்.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates