You Are Here: Home » Fans' Corner, Featured » சிவகாசி சோகம் — மனமிருந்தது உதவிட, மார்க்கம் பிறந்தது கண்ணீரை துடைக்க!

சிவகாசியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டு 35 க்கும் அதிகமான உயிர்கள் கொத்தாக சிதறி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுதும், ஏன் இந்தியா முழுதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

ரூ.100 க்கும் குறைவான தினக்கூலி பெற்று அன்றாட வாழ்க்கை சக்கரத்தை ஓட்டவேண்டிய நிர்பந்தத்தில் இருந்த ஏழைத் தொழிலாளர்கள் பலர் நெருப்பின் கோரப்பசிக்கு ஆளானார்கள். இது தவிர, ஏதேனும் உதவி செய்ய இயலுமா என்று ஓடோடிச் சென்றவர்கள் கூட அவ்விபத்தில் சிக்கி உயிரை இழந்தது படுகாயமுற்றது சோகத்திலும் சோகம். உயிரிழந்தவர்களை தவிர உடல் ஊனமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பலர். அவர்களுக்கு உடல் நிலை சரியானாலும் மேற்கொண்டு எதிர்காலத்திற்கு என்ன செய்வது என்று வழி தெரியாமல் விழிக்கிறார்கள். காயம் தந்த வலி ஒரு புறம் எதிர்காலம் குறித்த பயம் தரும் வலி ஒரு புறம் என்று அம்மக்கள் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகி நிற்கின்றனர்.

அரசு அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கியிருந்தாலும் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த அச்சத்தை எவராலும் போக்க இயலவில்லை.

சிவகாசி விபத்து நடந்த அன்றே உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நம் தளத்தில் இரங்கல் செய்தியை SCROLLING மூலம் ஓடச் செய்தேன். தவிர அன்றைக்கு வெளியிட்டிருந்த பொழுதுபோக்கு தொடர்புடைய பதிவு ஒன்றையும் நீக்கிவிட்டேன்.

அடுத்தடுத்து தினசரி பத்திரிக்கைகள் மற்றும் வார இதழ்களில் சிவகாசி விபத்து தொடர்புடைய செய்திகளை படித்தபோது நெஞ்சம் கனத்தது.

அப்போதிலிருந்தே இம்மக்களுக்கு ஏதாவது நம்மால் இயன்ற ஒரு சிறு துளியையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் என் நெஞ்சில் ஓட ஆரம்பித்தது. ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

இந்நிலையில், “அவர் ஏன் செய்யலே? இவர் ஏன் செய்யலே? என்று கேள்விகள் கேட்பதற்கு பதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள்” என்று கூறி “நடிகர்களுக்கு மட்டும் தான் சமூக அக்கறை இருக்கவேண்டுமா?” என்று கேள்வி எழுப்பி பதிவு ஒன்றை அளித்திருந்தேன். அதன் இறுதியில், “இருளைச் சபிப்பதற்கு பதில் ஒரு மெழுகு வர்த்தியை ஏற்ற முயற்சி செய்யுங்களேன்” என்றும் கூறியிருந்தேன்.

பாதிக்கப்பட்டவர்களில் எவரேனும் ஒருவருக்காவது அவர்களுக்கு பயனுள்ள வகையில் ஏதேனும் என் பங்கிற்கு செய்யவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டுத் தான் அந்த பதிவையே நான் அளித்தேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் சரி… அதற்கு சரியான பயனாளியை அடையாளம் காண்பது எப்படி? நான் என்ன மாவட்ட கலெக்டரா? டேபிளை தட்டினவுடனே லிஸ்ட் வந்து விழுறதுக்கு? நான் இருப்பதோ சென்னை. சிவகாசியோ பல நூறு கி.மீ. தாண்டி உள்ளது.

அப்போது நினைவுக்கு வந்தவர் சிவகாசியில் இருக்கும் நமது தளத்தின் வாசகர் சிவசங்கர். அவருக்கு உடனே ஃபோன் செய்து பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் வறுமையில் இருப்பவர்கள் எவருக்கேனும் நான் உடனடியாக ஏதாவது செய்ய விரும்பும் விஷயத்தை கூறி, தகுந்த பயனாளியை அடையாளம் காட்டுவதில் உதவுமாறு கேட்டுக்கொண்டேன்.

“சென்னையில் இருக்கும் நீங்களே இந்தளவு முயற்சி எடுக்கும் போது, ஊர்க்காரன் நான் இதுக்கு ஹெல்ப் பண்ணாம இருப்பேனா… எனக்கு ஒரு நாலஞ்சு நாள் டயம் கொடுங்க. விசாரிச்சுட்டு சொல்றேன்” என்றார். தனது பணிகளை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, பயனாளியை அடையாளம் காணும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.

விபத்தால் ஒரு காலை இழந்தவர் கோரிக்கை

நாலைந்து நாட்கள் கழித்து என்னைக் கூப்பிட்டவர், விபத்தால் ஒரு காலை முற்றிலும் இழந்த நிலையில் ஒருவர் வாடுவதாகவும் அவருக்கு வேண்டுமானால் ஏதாவது செய்யலாம் என்றும் என்னிடம் கூறினார். நீங்களே சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் பேசி அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டு சொல்லுங்கள். என்றேன். மறுபடியும் இரண்டு நாட்கள் கழித்து கூப்பிட்டவர், “அவருடைய ஒரு காலை அவர் இழந்துவிட்டாலும், சிகிச்சை உள்ளிட்ட விஷயங்களை தமிழக அரசே பார்த்துக்கொள்கிறது. தற்போது மதுரையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால் இன்னும் சில மாதங்கள் கழித்து அவருடைய காயங்கள் முற்றிலும் ஆறிய பிறகு அவருடைய போக்குவரத்து வசதிக்காக மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் ஒன்று தான். அது அவருக்கு கிடைத்தால் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்றார். அதற்கு ஆகக்கூடிய முழு தொகையும் கொடுக்கமுடியாவிட்டாலும் பரவாயில்லை அட்லீஸ்ட் 50% மாவது அவரது குடும்பத்தினரும் அவரும் எதிர்பார்க்கின்றனர் என்றார். நானும் அதற்கு முழு மனதுடன் ஒப்புக்கொண்டேன். விஷயத்தை நண்பர்கள் சிலரிடம் கூறியபோது அவர்களும் தங்கள் பங்கிற்கு ஒரு தொகையை தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

“நீங்கள மேற்கூறிய நபருக்கு நிச்சயம் உதவுவோம். ஆனால் உடனடியாக உதவி தேவைப்படுபவர்கள் எவரேனும் இருந்தால் சொல்லுங்கள்” என்று சிவசங்கரிடம் கேட்டுக்கொண்டேன்.

நண்பர் மறுபடியும் அதற்கான முயற்சிகளில் இறங்க, அவருடன் பணிபுரிபவர் ஒருவரின் மூலமாக ஒரு பயனாளி அடையாளம் காணப்பட்டார். மேற்படி வெடிவிபத்தால் பாதிக்கப்பட்ட கருப்பசாமி (வயது 22) என்னும் இளைஞர் ஒருவருக்கு மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், முடிந்ததை கொடுத்து உதவும்படி அவருடைய குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.

மேற்கொண்டு தொடர்வதற்கு முன்பு கருப்பசாமியை பற்றி தெரிந்துகொள்ளவும்.

தந்தையை விழுங்கிய முந்தைய விபத்து

சிவகாசி ஆதிப்பட்டியை சேர்ந்த இவரது குடும்பத்தில் இவர் தான் மூத்தவர். வயது 21. சிவகாசியில் இதுவரை பல விபத்துக்கள் நடந்ததுண்டு. கடந்த 2010 ஆம் ஆண்டு ராஜேஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இவரது தந்தை சுப்பிரமணி சிக்கி உயிரிழந்துவிட்டார். பள்ளியிறுதி படித்துவந்த கருப்பசாமிக்கு அது முதல் குடும்பத்தை காக்கும் சுமை ஏற்பட்டுவிட்டது. எனவே தனது படிப்பை நிறுத்திவிட்டு இவரும் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றார். இவருக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உள்ளனர். இருவரும் பள்ளிப்படிப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகாசியில் விபத்து ஏற்பட்ட அன்று காலை இவர் சற்று தொலைவில் உள்ள வேறு ஒரு பட்டாசு ஆலையில் பணியில் இருந்துள்ளார். இவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் சிலர் விபத்தில் சிக்கிய ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தில் விபத்தன்று பணியில் இருந்துள்ளனர். எனவே வெடிவிபத்து ஏற்பட்ட தகவலையும் சத்தத்தையும் அறிந்து அங்கிருப்பவர்களை காப்பாற்ற இவர் அங்கு விரைந்து சென்றுள்ளார். ஆனால் விபத்தின் வீரியம் கற்பனைக்கப்பாற்பட்டு அதிகமாக இருக்கவே, இவரும் அதில் சிக்கிக்கொண்டார். காப்பாற்றப்போன இவர் தூக்கி எரியப்பட்டதில் இவரது கால் எலும்பு முறிந்து சுய நினைவு இழந்துவிட்டார். ஏற்கனவே குடும்பத்தில் ஒருவரை பறிகொடுத்துவிட்டதால் கலங்கிய இவரது குடும்பத்தினர் அரசு சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ்க்காக காத்திருக்காமல் இவரை தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் உடனடியாக சேர்த்துவிட்டனர். எது எதையோ விற்று இவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது இவரது கால்களில் முட்டிக்கு கீழும் பாதத்திற்கு மேலும் எலும்பு முறிவு ஏற்பட்ட இடங்களில் இரு இடங்களில் பிளேட் வைத்து SCREW போடப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதங்கள் கழித்தே இவரால் நடக்க முடியும். பணிக்கும் செல்ல முடியும். ஏற்கனவே குடுமபத் தலைவரை பட்டாசு விபத்தில் பலிகொடுத்த இவரது குடுமபத்தின் மூல ஆதாரமான இவரும் முடங்கிப் போய்விட, செய்வதறியாது திகைத்து நிற்கிறது இவரது குடும்பம். பள்ளி செல்லும் தம்பி தங்கை வேறு.

இவரது கதையை நம்மிடம் கூறிய சிவசங்கர், இவருக்குத் தான் உடனடி உதவி தேவைப்படுவதாகவும் இவருக்கு ஏதாவது செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

நான் உடனே என்னுடைய அக்கவுண்ட்டில் இருந்து ஒரு சிறிய தொகையை நண்பரின் அக்கவுன்ட்டுக்கு டிரான்ஸ்பர் செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதலில் இதை கொடுங்கள். நண்பர்களுடன் கலந்தாலோசித்து வேறு ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கிறேன் என்று கூறினேன். நண்பர் சிவசங்கரும், நம் அளித்த தொகையில் கருப்பசாமி நடமாட WALKING STAND ஒன்றையும் வாங்கி மீதத் தொகையை ஒரு கவரில் போட்டு தன் பங்கிற்கு கொஞ்சம் தொகையை வலுக்கட்டாயமாக அதில் சேர்த்து நமது தளம் சார்பாக அவரிடம் அவரது குடும்பத்தார் முன்னிலையில் ஒப்படைத்தார்.

நாங்கள் கொடுத்தது ஒரு பெரிய தொகையல்ல. நாங்கள் செய்திருப்பதும் பெரிய உதவி அல்ல என்று எனக்கு தெரியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு மிகச் சிறிய ஆறுதல். அவ்வளவே. “நாம் தனித்து விடப்படவில்லை. எங்கோ தமிழகத்தின் மூலையில் இருக்கும் நமது கண்ணீரையும் துடைத்துவிட சிலர் இருக்கிறார்கள்” என்று அவர்கள் கருதக்கூடும். எங்களுக்கு அது போதும்.

நாங்கள் கொடுத்தது ஒரு பெரிய தொகையல்ல. நாங்கள் செய்திருப்பதும் பெரிய உதவி அல்ல என்று எனக்கு தெரியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு மிகச் சிறிய ஆறுதல். அவ்வளவே. “நாம் தனித்து விடப்படவில்லை. எங்கோ தமிழகத்தின் மூலையில் இருக்கும் நமது கண்ணீரையும் துடைத்துவிட சிலர் இருக்கிறார்கள்” என்று அவர்கள் கருதக்கூடும். எங்களுக்கு அது போதும்.

இந்த உதவியை பொறுத்தவரை நான் செய்தது நமது ONLYSUPERSTAR.COM தளம் மற்றும் உங்க சார்பாகத் தான். ஆனால் சிவசங்கர் என்ன சொல்லி அவங்க கிட்டே கொடுத்திருக்கார் தெரியுமா? “சுந்தர்னு ரஜினி அபிமானி ஒருத்தர் தன்னோட RIGHTMANTRA.COM லருந்து இதை கொடுத்திருக்கார்” என்று சொல்லி தான். நான் சிவசங்கர் கிட்டே இது பத்தி எதுவும் சொல்லலே. இருந்தாலும் அவரே RIGHTMANTRA வோட முதல் அறப்பணியை துவக்கி வெச்சிட்டார். God is Great.

இது ஒரு ஆரம்பம் தான். எங்களால் இயன்ற அளவிற்கு என் சக்திக்கு உட்பட்டு நான் எங்கிருந்தாலும் எங்களது இந்த துயர் துடைப்பு பணி தொடரும்.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை நீங்கள் தெரிஞ்சிக்கணும், உங்களுக்கும் இது போன்ற எண்ணம் அரும்பும் என்பதாலேயே இதை வெளிய சொல்றேன். புகைப்படங்களையும் பிரசுரிக்கிறேன். யாரும் தப்பா நினைக்கவேண்டாம். தவறு என்று நினைத்தால் மன்னித்துவிடுங்கள்.

(குறிப்பு : இந்த பதிவை வீட்டுல என்னோட சிஸ்டமில் டைப் செய்து கொண்டிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.35 pm இருக்கும்… முரசு டி.வி.யில் புரட்சித்தலைவரோட ‘புத்தன்  ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்க்காக’ பாட்டு போய்கிட்டிருந்தது. பதிவை டைப் செய்யும்போது கேட்டதாலோ என்னவோ தெரியலே… பாடலைக் கேட்டவுடன் ஒரு நிமிடம் எனக்கு என்னவோ போலிருந்தது. )

நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்த போது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம்
இறைவனும் தந்ததில்லை

[END]

18 Responses to “சிவகாசி சோகம் — மனமிருந்தது உதவிட, மார்க்கம் பிறந்தது கண்ணீரை துடைக்க!”

 1. Chithamparam Chithamparam says:

  வாழ்த்தக்கள்சுந்தர் அண்ணா இந்தப் பதிவு நிச்சயம் அனைவர் மனதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்

 2. Anand Vasi Anand Vasi says:

  A great starting effort frm u brother… Thanks to Mr.Sivasankar for his supporting you in this excellent work… U ppl are developing Godly deeds by doing these things…Lets good things spread…

 3. Sankaranarayanan Sankaranarayanan says:

  Great job… Sundarji…

 4. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Kalathal uthavi seithu neenga uyarnthu varugureergal .u r great sundar anna.

 5. ganesan ganesan says:

  Hello Sundar,

  Really good effort…God always with you…

  Best Regards,

  M.Ganesan

 6. RAJA RAJA says:

  நல்ல விஷயம் சுந்தர் அவர்களே அந்த மோட்டார் வாகனம் கேட்டவருக்கு கண்டிப்பாக உதவி செய்யலாம் விலை விசாரிங்கள் என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்கிறேன்

 7. மாரீஸ் கண்ணன் மாரீஸ் கண்ணன் says:

  என்ன சொல்வது… சுந்தர்… இந்த ஒரு பதிவே ஓராயிரம் செய்திகளை சொல்கிறது. உங்கள் நட்பு கிடைத்ததை எண்ணி நான் பல தருணங்களில் சந்தோஷப்பட்டிருக்கிறேன். இன்று பெருமைப் படுகிறேன்.

  பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கரங்களே இறைவனுக்கு பிரியமானவை என்று எங்கோ படித்திருக்கிறேன். உங்கள் செயல் அதைத் தன உணர்த்தியுள்ளது.

  //மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
  அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்//

  இறுதியில் அந்தப் பாடலில் உள்ள வரிகளும் உணர்த்துவது இதைத் தான்.

  மாரீஸ் கண்ணன்

 8. விஜய் ஆனந்த் விஜய் ஆனந்த் says:

  எல்லோரும் என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என்று கேட்டுக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் செய்து முடித்துவிட்டு சொல்லி இருக்கிறீர்கள்…! இது தான் உண்மை மனிதாபிமானம்..! நமது தள நண்பர் சிவசங்கர் அவர்களுக்கு எத்துனை நன்றிகள் சொன்னாலும் தகும்….! உண்மைப் பயனாளியை தேடிக் கண்டுபிடித்து உதவிகள் பெற்று தருவது சேவையிலும் சேவை ! இறைவன் வாழ்த்துவான் உங்கள் இருவரையும்…!
  -
  “காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
  ஞாலத்தின் மானப் பெரிது”
  -
  “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
  -
  விஜய் ஆனந்த்

 9. Gokuladass Gokuladass says:

  சுந்தர் ஒருங்கிணையுங்கள் கண்டிப்பாக உதவலாம்

  —————————————-
  பயனாளிகளை அடையாளம் காட்டுகிறேன். எதைச் செய்வதானாலும் நீங்களே நேரடியாக செய்யவும். அது தான் சரி.
  உங்கள் உணர்வுக்கு நன்றி.
  - சுந்தர்

 10. S.Siva Sankar S.Siva Sankar says:

  வணக்கம் நண்பர்களே!!
  சுந்தர் அவர்களின் முயற்சியால் தான் இந்த நிகழ்வு சாத்தியமனது.
  RIGHTMANTRA வோட முதல் அறப்பணியை நான் துவக்கி வைத்ததாக கூறியுள்ளார். இன்று எனது பிறந்தநாள். இந்த வரிகள் எனக்கு கடவுளின் பிறந்தநாள் பரிசாக எண்ணுகிறேன்.

  நண்பர் விஜய் ஆனந்த் மற்றும் நமது தள வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவிக்கின்றேன்

  சிவசங்கர், சிவகாசி

 11. Mano Mano says:

  Sundar would love to help.

  ————————————————————-
  திருமதி.மனோ அவர்கள் போன்று உதவுவதற்கு முன்வந்துள்ள அனைவருக்கும் நன்றி.

  தனிப்பட்ட முறையில் சிறிது சிறிதாக உதவுவதைவிட அனைவரும் சேர்ந்து செய்யலாம். சிறு துளி பெரு வெள்ளமாகும். நாங்கள் துனையிருக்கிறோம் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

  நான் புதிதாக துவக்கியிருக்கும் RightMantra.com மூலம் இது போன்று நிறைய செய்ய உத்தேசித்துள்ளேன். அந்த முயற்சிகளில் தங்கள் பங்கு இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் (அது எத்தனை சிறியதாக இருந்தாலும் சரி) அப்போது தாராளமாக செய்யலாம். அனைத்தும் TRANSPARENT ஆக இருக்கும். பயனாளிகளிடம் உங்கள் பங்களிப்பு நேரடியாக சென்று சேர்வது சான்றுடன் உறுதி செய்யப்படும். உங்களுக்கும் உதவிய ஆத்ம திருப்தி இருக்கும். எவருக்கும் எந்த அசௌகரியமும் இருக்காது.

  விரைவில் செயல்படுத்துகிறேன். திருவருள் துணையிருக்கட்டும்.

  - சுந்தர்

 12. Antony prabu Antony prabu says:

  நல்லவை தொடரவும் தீங்குகள் முடியவும் இறைவனை பிரார்த்திப்போம்.
  உதவி செய்தது மட்டுமல்லாமல் எங்களையும் உதவி செய்ய தூண்டும் உங்களுக்கு நன்றி.
  தலைவர் படித்தால் நிச்சயம் பெருமைப்படுவார்.

 13. napoleon.s.kumar napoleon.s.kumar says:

  //நான் புதிதாக துவக்கியிருக்கும் RightMantra.com மூலம் இது போன்று நிறைய செய்ய உத்தேசித்துள்ளேன்.//
  ரொம்ப , ரொம்ப நல்ல விஷயம்.என்னையும் அதில் பங்கு பெற வாய்ப்பு அளிக்கவும்.

 14. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  NO WORDS TO SAY… GREAT GREAT GREAT….

  -RAJINIROX G.Udhay..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates