









You Are Here: Home » Featured, Flash from the Past » மன்சூரலிகான் கிளப்பிய புயல் — “தீமைக்கும் நன்மை செய்” — புதிய பகுதி # 1
ரஜினி அவர்களின் சினிமா வெற்றியும் அவரது ஸ்டைலும் அவருக்கு லட்சோப லட்சம் ரசிகர்களை பெற்றுத் தந்தது. ஆனால் அவரிடம் உள்ள பல்வேறு நற்குணங்கள் தான் அந்த ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள உதவிக் கொண்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. இல்லையெனில், 1975 இல் திரையுலக பயணத்தை துவக்கி, 1978 ல் சூப்பர் ஸ்டாராகி, இன்று வரை அந்த சிம்மாசனத்தை தக்க வைத்துக் கொண்டிருக்க முடியுமா? இத்தனை ஆண்டுகளில் மக்களின் ரசனையே தலைகீழாக மாறிவிட்டது. தொழில்நுட்பம் மாறிவிட்டது. சக நடிகர்கள் மாறிவிட்டார்கள். நடிகைகள் தங்கள் வாரிசுகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாலச்சந்தர், மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் எல்லாம் மாறி தற்போது நான்காம் தலைமுறை இயக்குனர்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மாற்றங்களுக்கு நடுவே ரஜினி அவர்களின் BOX OFFICE HOLD அப்படியே இருக்கிறது - சொல்லப்போனால் கூடியிருக்கிறது என்பது எத்தனை பெரிய விஷயம். அதற்கு காரணம் அவரது அசைக்க முடியாத சினிமா வெற்றிகள் என்றாலும் அதற்கும் அப்பாற்பட்டு அவர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது தான். அவரை விமர்சிப்பவர்கள் கூட ஒப்புக்கொள்ளும் விஷயம் இது.
ரஜினி அவர்களை பொறுத்தவரை தன் ரசிகர்கள் வெறும் ரசிகர்களாக மட்டுமில்லாமல், அவரை அவரது காரக்டரை முற்றிலும் புரிந்துகொண்ட பண்பட்ட ரசிகர்களாக இருக்கவேண்டும் என்றே ஆசைப்படுகிறார்.
திரையுலக வாழ்க்கையிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி அவர் கடைப்பிடித்து வரும் பல உயரிய குணங்களை ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் பின்பற்றுவது அட்லீஸ்ட் அவற்றை முயற்சி செய்து பார்ப்பது நாம் அவருக்கு செய்யும் உண்மையான அன்பு. பலர் அவரை தங்கள் ரசிகர்கள் என்று கூறிக்கொள்ள விருப்பப்படுகின்றனரே தவிர அவரது நல்ல குணங்களை பின்பற்றுவது குறித்து குறைந்த பட்சம் யோசிப்பது கூட இல்லை. சொல்லப்போனால் தங்களது பக்குவமற்ற செயல்களுக்கு அவரையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள். இது அறியாமையே தவிர வேறு எதுவும் இல்லை.
ரஜினி அவர்களின் கொடைத் தன்மை பற்றிய ‘கலியுகக் கர்ணன்’ தொடரை நான் முடிவுக்கு கொண்டு வந்து ‘முற்றும்’ என்று போட்டவுடன் நண்பர்கள் சிலர் மிகவும் வருத்தமுற்று அந்த பகுதியை மீண்டும் தொடருமாறு கேட்டிருந்தனர். மூன்றாண்டுகளுக்கு முன்பு அந்த பகுதி துவக்கப்பட்டதே ஒரு குறுந்தொடராகத் தான். அதாவது SHORT SERIES. ஆனால் அது எழுத எழுத நீண்டுகொண்டே வந்துவிட்டது. ரஜினி அவர்களின் கொடைக்கு முடிவு தான் ஏது?
இந்நிலையில், அவரது மற்றோர் உயரிய குணமான ‘மன்னித்தல்’ பற்றி ஒரு தொடரை துவக்க இருக்கிறேன். இந்த தொடரின் நோக்கம் ரஜினி அவர்களை புகழ்ந்து எழுதி எழுதி பதிவுகளை நிரப்புவதோ அல்லது அவர் மிக மிக உயர்ந்த மனிதர் என்றோ திரும்ப திரும்ப நிரூபிக்க அல்ல. அவை எது எதிலோ ஃபாலோ செய்ய விரும்பும் ரசிகர்கள் இது போன்ற நல்ல விஷயங்களை ஃபாலோ செய்யட்டுமே என்று தான். நண்பர் வஸி கமெண்ட் பகுதியில் கூறியதை இங்கு நினைவு கூர்கிறேன். “ரஜினியை ரசிப்பதை விட அவரை பின்பற்றுவதே நாம் அவருக்கு செய்யும் கைமாறு!”
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
என்று வள்ளுவர் கூறியதன் பொருள் எனக்கும் தெரியும். இருந்தாலும் நல்ல சிந்தனைகளை மனதில் விதைப்பதே ஒரு வகையில் நாம் முன்னேற்றப் பாதையில் செல்கிறோம் என்பதற்கான அடையாளம் தான். Ok?
இந்த புதிய தொடரில் ரஜினி என்கிற மாமலையோடு மோதி பின்னர் அவரது அன்பினால் கட்டுண்டவர்களை பற்றி காண இருக்கிறோம். ஏதோ ஒரு காரணத்தால் - புரிந்துகொள்ளாமையால் - தான் அந்தந்த சூழ்நிலைகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சூப்பர் ஸ்டார் மீது ஒரு வித காழ்ப்புணர்ச்சி தோன்றி அது மோதலுக்கு வழிவகுத்ததே தவிர வேறு காரணம் எதுவும் இல்லை. இவ்வாறு அவருடன் மோதி பின்னர் அவரது குணம் தெரிந்து அவரின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்களை பற்றி ஒவ்வொரு பகுதியிலும் விரிவாக பார்க்க இருக்கிறோம்.
இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். இது ஒரு குறுந்தொடர். SHORT SERIES தான்.
முதலில் மன்சூரலிகான். ஒ.கே.?
1995 ஆம் ஆண்டு. ரஜினி அவர்களின் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்த நேரம். ‘முத்து’ படமும் வெளியாக சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருந்தது. பல்வேறு காரணங்களினால் அப்போதைய அ.தி.மு.க அரசு மீது மக்கள் உச்சகட்ட கோபத்தில் இருந்த நேரம் அது. அந்த சூழ்நிலையில், ரஜினி தான் அடுத்த முதல்வர். அவர் வந்தால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என்று மக்களும் ஊடகங்களும் ரஜினியை நம்பிக்கொண்டிருந்த நேரம்.
எல்லோரும் ரஜினி அவர்களின் புகழை உச்சரித்துக்கொண்டிருக்க, எங்கிருந்தோ வந்தார் நடிகர் மன்சூரலிகான். ரஜினி அவர்களை கன்னா பின்னாவென்று பத்திரிக்கைகளில் விமர்சிக்க ஆரம்பித்தார்.
குமுதம், விகடன், பேட்டி தொடங்கி, சன் டி.வியில் ரபி பெர்னார்டின் ‘இந்த வாரம் சந்தித்தேன்’ நிகழ்ச்சி வரை அனைத்திலும் ரஜினியை பிடித்து வாங்கு வாங்கென்று வாங்கிக்கொண்டிருந்தார் மன்சூர். “ரஜினியாவது கஜினியாவது… இங்கே தமிழ்நாட்டுல ஒரு வெங்காயமும் முடியாது. அவர் அரசியலுக்கு வந்தா ஜெயிக்கவே முடியாது. அவர் என்ன பெரிய இவரா?” என்றெல்லாம் விமர்சித்தார் மன்சூரலிகான். ஆனால் அவரின் விமர்சனங்கள் அனைத்தும் அரசியல் ரீதியாகத் தான் இருந்ததே தவிர தனிப்பட்ட ரீதியில் இல்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ரஜினியை அடுத்த முதல்வர் ரேஞ்ச்சுக்கு பத்தரிக்கைகள் எழுதிக்கொண்டிருக்க, எல்லாரும் அவரின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டிருக்க, இவர் யாரடா திடீரென்று நம்ம தலைவரை இப்படி விமர்சிக்கிறாரே என்று ரசிகர்கள் கொந்தளித்து போய்விட்டனர். திரையுலகில் இருந்தே ஒருவர் இப்படி கிளம்பியது ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இத்துணைக்கும் மன்சூரின் விமர்சனங்கள் அனைத்தும் அரசியல் ரீதியானதே தவிர தனிப்பட்ட ரீதியில் அல்ல.
ரஜினி அவர்கள் மீதான அரசியல் ரீதியான விமர்சனத்தைக் கூட ஏத்துக்கவோ ஜீரணிக்கவோ முடியாத மனநிலையில் இருந்தனர் ரசிகர்கள் அப்போது. எனவே நேச்சுரலி மன்சூர் செய்தது ஏதோ பெரிய கிரிமினல் குத்தம்கிற ரேஞ்ச்க்கு அப்போ எல்லாம் ரசிகர்கள் பேசுவாங்க. ஆனா தலைவரை பாருங்க… எவ்ளோ அழகா, மெச்சூர்டா அதை ஹாண்டில் பண்ணினாரு தெரியுமா?
‘பாட்ஷா’, ‘முத்து’ என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர்களாக ரஜினி கொடுத்திருந்ததால் ரசிகர்கள் மற்றும் மன்றங்கள் அனைத்தும் மிக மிக ஆக்டிவாக இருந்தனர். தவிர ரஜினி அவர்களின் அரசியல் பிரவேசம் எதிர்பார்க்கப்பட்ட நேரம் அது என்பதால் ரசிகர்கள் அப்போது உச்சகட்ட எழுச்சியில் வேறு இருந்தனர். கொஞ்சம் சாத்வீகமான ரசிகர்கள் மன்சூரலிகானுக்கு ஏதாவது நிகழ்ந்துவிடுமோ என்று பயந்தனர்.
இந்நிலையில், 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி தூர்தர்ஷனில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் சூப்பர் ஸ்டார் . கிட்டத்தட்ட நூறு கேள்விகள். அவரிடம் என்னென்னவெல்லாம் ரசிகர்கள் கேட்க நினைத்தார்களோ அத்தனையும் கேட்டுத் தீர்த்துவிட்டனர். ரஜினியும் அனைத்திற்கும் அபாரமான அற்புதமான பதில்களை கூறியிருந்தார்.
அப்போது ஒருவர் மன்சூரலிகான் பற்றி ஒரு ரசிகர் கேட்டிருந்தார்.
“தலைவா… பத்த்ரிக்கைகளிலும் டி.வி.க்களிலும் உங்களை ஒரு நடிகர் கன்னாபின்னாவென்று விமர்சித்து வருகிறாரே? அது பத்தி என்ன சொல்றீங்க? எங்க ரத்தம் கொதிக்குது தலைவா” என்று.
அதற்கு பதிலளித்த ரஜினி சிரித்துக்கொண்டே… “கண்ணா… நாம சுதந்திர நாட்டுல இருக்கோம். எல்லாருக்கும் அவங்கவங்க கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கு. விமர்சனங்களை நான் வரவேற்க்கிறேன்” என்றார் ரெண்டே வரியில். (அந்த பதிலுக்கு பிறகு ‘பாட்ஷா’வில் நம்ம தோழன் பாரு… தோழன் பாரு… பாடல் கிளிப்பிங் மிக பொருத்தமாக காட்டப்பட்டது.)
‘பாட்ஷா’ தோழன் பாரு… தோழன் பாரு.. வீடியோ
http://www.youtube.com/watch?v=x6ZTVKhwQNw
ரஜினி அவர்களின் இந்த பதில் ரசிகர்களை காலரை தூக்க வைத்தது. பத்திரிக்கைகளும் பாராட்டின. அதன் பிறகு மன்சூரலிகான் கூறும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதை பத்திரிக்கைகள் நிறுத்திவிட்டன.
So, ஒரு விஷயத்தில் ரசிகர்களின் பார்வை வேறு அவரின் பார்வை வேறு என்பது தெள்ளத் தெளிவாக அனைவரும் புரிந்துகொண்டனர்.
காலம் உருண்டது. சொந்தப் படம் எடுத்து நஷ்டத்தில் சிக்கினார் மன்சூரலிகான். பட வாய்ப்புகளும் சுருங்கின. இந்த நிலையில் 1999 ஆம் ஆண்டு ‘படையப்பா’ படம் தயாரித்தார் ரஜினி. அதில் மன்சூரலிகானுக்கு ஒரு சிறிய வேடம் தரப்பட்டது. அந்த சிறிய வேடத்துக்கு 5 லட்ச ரூபாய் சம்பளம் தந்திருந்தார் ரஜினி. அன்றைய நேரம் 5 லட்ச ரூபாய் என்பது எவ்ளோ பெரிய தொகை என்பது தெரியுமல்லவா?
Mansoorali Khan - Superstar Rajini scene in Padayappa
http://www.youtube.com/watch?v=8l86X3hBqD8
இதற்கு காரணம் என்ன? தம்மை விமர்சித்தவர்களும் தம்மை நன்கு புரிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பத்தை தருகிறார் ரஜினி என்பது தான். மேலும் தன்னை விமர்சித்தவர்களை மன்னிப்பது மட்டுமல்ல அதை அவர் நினைவில் வைத்துக்கொள்ள கூட முயற்சிப்பதில்லை என்பது தான்.
இதே மன்சூரலிகான் பிற்பாடு (1999) அளித்த பேட்டி ஒன்றை பாருங்கள்…
———————————————————————
படையப்பாவில் நீங்கள் பங்கெடுத்திருப்பது குறித்து ?
ரஜினியுடன் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தது உண்மைதான்.
ஆனால் படையப்பாவில் ரஜினியுடனான நட்புக்காக முக்கிய பத்திரத்தில் நடிக்கிறேன். அது போக, தொழில் ரீதியாக பார்த்தால் நல்லா சம்பளம் தருகிறார்கள். அதனால் படையப்பாவில் பங்கேற்றிருக்கிறேன்.
“என்ன மாதிரி வேடத்தில் நடிக்கிறீர்கள்?”
ரஜினி ‘படையப்பாவாக’ நடிக்கிறார். ரஜினியின் பாத்திரத்திற்கு பெருமை சேர்க்கும் பாத்திரத்தில் நான் நடிக்கிறேன்.
ரஜினியிடம் நீங்கள் பிரமித்த விஷயம்?
அவர் ஒரு சிறந்த ஆன்மீக வாதி. விவேகானந்தர் போல இருக்கிறார்.
லட்சக்கணக்கான் பேர் ரஜினி வீட்டு முன் நின்று, “அரசியலுக்கு வா தலைவா” என்று அழைப்பு விடுத்தும் வர மறுப்பது பெரிய விஷயம். இந்த விஷயத்தில் நான் ஒன்றை சொல்லவேண்டும். காரை வேகமாக ஒட்டிக்கொண்டு போவது திறமை தான். ஆனால் அதைவிட, தேவையான இடத்தில் ‘பிரேக்’ போடக் கூடிய திறமையும் தேவை.
அரசியல் அழைப்புக்கள் வரும்போது ரஜினியின் அந்த பிரேக் போடக்கூடிய தன்மை ஆச்சரியமானது.
———————————————————————
2008 ஆம் ஆண்டு ஹொகேனக்கல் பிரச்னையில் தமிழ்த் திரையுலகம் உண்ணாவிரதம் இருந்தபோது மேடையில் பேசிய மன்சூர் மறக்காது இதை குறிப்பிட்டார். ரஜினி ஒரு சிறந்த மனிதர் என்பதை பலரின் வயிற்றெரிச்சல்களுக்கு நடுவே பதிவு செய்தார்.
இது எப்படி இருக்கு?
முதல்ல எப்படி பேசினவர் ரஜினி அவர்களோட அனுகுமுறையால அப்புறம் எப்படி பேசினாருன்னு பார்த்தீங்கல்ல… அது தான் ரஜினி!
அடுத்த பகுதியில்…. ஆச்சி மனோரமா!
[END]
Sundarji, this short series is unexpected, but a good start…thanks for ur good work.
வணக்கம் சுந்தர் ,
நானும் இந்த தள வாசகர் தான் தலைவரின் ரசிகர் கூட உங்களுக்கு என் நன்றி
ஸ்ரீரங்கம் சதீஷ்
அண்ணா கலக்கல்!!! இதை நாங்கள் கொஞ்சம் கூட எதிர் பார்கவில்லை!! தலைவர் அவர்களை எதிர்த்தவர்கள் பற்றி நாங்கள் கேள்விபட்டுரிக்கிறோம்! ஆனால் அதில் சில பொய்களும் கலந்து வரும்.. தெள்ள தெளிவாக உண்மையை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றிகள் பல.. மேலும் நீங்கள் இதை துவக்கி இருப்பதிற்கு தலைவரின் புகழ் பாட அல்ல, அவரை பின்பற்றி நல்ல மனிதராக வாழ வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன்!!
இதே போல் வேலு பிரபாகரனும் விமர்சித்து பின் ரஜினியின் பண்பு தெரிந்து அவர் அன்புக்குக்கு அடிமை ஆனது உலகறிந்த விஷயம். அடுத்த பதிவில் அதை போடும்படி கேட்டு கொள்கிறேன்.
First Congrats Na… Our Only superstar Facebook page Crossed 2500 bloods….
Sema super paguthi “ Theemaikkum Nanmai Sei” ….
Kalakkal Na..
Endrum Thalaivar Valyil RAJINIROX G.Udhay..
thanks
சூப்பர் ,,ரஜினி என்றால் வெறும் புகழ்மிக்க மனிதன் மட்டுமல்ல ,எத்தனையோ நற்பண்புகள் அடங்கிய மா *மனிதன்,இந்தகால இளையர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அவரது இதுபோன்ற பண்புகளை சுந்தர் தொடர்ந்தும் தர வேண்டும் ..
Hi Sundar,
Excellent Article.. Yes i totally agree with below lines…
“ரஜினியை ரசிப்பதை விட அவரை பின்பற்றுவதே நாம் அவருக்கு செய்யும் கைமாறு!”
Not only your wordings the photos you uploaded according to the articles also very Nice… Keep it up
நன்றி சுந்தர்ஜி… கண்டிப்பாக தலைவரின் ஒவ்வொரு அணுகுமுறையும் நாம் மனிதர்களாக வாழ்வதற்கு நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய அவசியமானவை. வாழ்ந்து காட்டும் மகான் படி வாழ முயற்சிப்போம்.
ப.சங்கரநாராயணன்
வாழ்க ! தலைவர் !
” இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். ”
-
இந்தக் குறளுக்கு பொருத்தமான நிகழ்வு…! விமர்சிப்பவரையும் வெறுக்காமல் நேசிக்கும் பண்பு எத்துனை பேருக்கு அமையும்….! தலைவர் ஒரு “அதிசயப் பிறவி” தான் ! படையப்பா படத்தில் மன்சூர் அலிகான் பேசியதில் இருந்தே தெரிகிறது தலைவர் அவருக்கு செய்த உதவி…! தலைவர் தலைவர் தாங்க…!
-
இந்த புதிய பகுதி “கலியுக கர்ணன்” நிறைவு பெற்றதால் இருந்த வருத்தத்தை போக்கும்…! உங்கள் முயற்சிக்கு நன்றி…!
-
“கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”
-
விஜய் ஆனந்த்
அருமையான பதிவு !!!
வாழ்த்துக்கள் !!!
தலைவரை பார்த்து வியக்கும் எண்ணற்ற குணங்களில் மிக முக்கியமான குணம் இந்த குணம் !!!
நம்மை யாராவது கொஞ்சம் சீண்டினாலும் பொறுமை இழக்கிறோம் - அப்படி இருக்கு இந்த மனிதருக்கு தான் எவ்வளவு பக்குவம் பொறுமை சகிப்புத்தன்மை !!!
தம்மை நோக்கி வரும் மலை போன்ற பிரச்சனைகளையும் இவரால் மட்டும் எப்படி இவ்வளவு பொறுமையாக சமாளிக்கமுடிகிறது என்று எண்ணுகையில் வியப்பு தான் மிஞ்சுகிறது !!!
ஆரம்ப காலத்தில் தலைவர் எப்படி இருந்தவர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் !!!
அவர் படிப்படியாக தம்மையே செதுக்கி கொண்டவர் !!!
இந்த மாற்றம் ஒரு நொடியில் நிகழ்ததில்லை !!!
அவரது இடத்தில் வேறு யார் இருந்தாலும் இந்த அளவுக்கு பக்குவமாக ஒவ்வொரு விஷயத்தையும் அனுகுவார்களா என்பது சந்தேகமே !!!
அவர் தம்மை நோக்கி வரும் ஒவ்வொரு கல்லையும் வைரங்களாக மாற்றி தமது மகுடத்தில் பதியசெய்கிறார் !!!
இந்த உயரிய குணத்தை பின்பற்றுவது கடினம் தான் இருந்த போதிலும் அதை பின் பற்ற ஒரு அடி முன் வைபோமேய்யானால் அதுவே நாம் அவருக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதை !!!
நம்மை நாமே சீர் தூக்கிக்கொள்ள நமக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த சுந்தர் அவர்களுக்கு தலைவரின் ரசிகர்களாகிய நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் !!!
நன்றி சுந்தர் அண்ணா சிறப்பான ஆரம்பம்…..
முடிந்தால் 1995 ஆம் ஆண்டு தலைவரின் கேள்வி பதில்களையும் பதிவாக தரவும்.
அந்த பேட்டியின் லிங்க்
http://www.youtube.com/watch?v=fVyYY1eXSco
நன்றி சரவணன்
Nice Article Sir. Eagerly waiting for the next article.
Achi Manorama, Velu Prabakaram appuram ennum ethanai pero…
May be Namma Vaigai Puyal Vadivelu…
இந்த புதிய பகுதி “கலியுக கர்ணன்” நிறைவு பெற்றதால் இருந்த வருத்தத்தை போக்கும்…! உங்கள் முயற்சிக்கு நன்றி…!
சுந்தர் சார்
I have been reading all your posts but after reading this my hands are automatically commenting for ur good work superb.
—————————————————-
Thanks Ragul and friends.
- Sundar
திரு பாரதி ராஜா பேசிய பேச்சுக்கள் என்னால் தான்கிகொலவே முடியலை. நெய்வேலி போராட்டத்தில். அன்று தூக்கமே சரியாய் வரலை. அடுத்த நாள் தலைவர் அவர் வீட்ட விட்டு வெளிய (his poes garden house was under renovation, so he was in another apartment) வந்து கார் ல ஏறும் போது, டிவி நிருபர் இதை பத்தி கேட்டதற்கு தலைவர் சொன்னார் : ” அவரு பெரியவர், இப்படி பேசி இருந்திருக்க கூடாது ” .. என்ன ஒரு பக்குவம் !! Hope Barathi Raja episode is also in ur list. Would like to read your narration about this.
—————————————————
திரு.பாரதிராஜா மட்டுமல்ல. நீங்கள் அதிகம் அறிந்திராதவர்களும் லிஸ்ட்டில் உண்டு.
- சுந்தர்
mansoor, ஆச்சி, மணிவண்ணன், சத்யராஜ், T.R, பாரதிராஜா, ராமதாஸ் எனக்கு தெரிந்த லிஸ்ட் இதுதான்.
—————————————————
Why Sathyaraj? Unfit even for this list.
- Sundar
மனிதர்கள் பற்றிய பதிவு மட்டுமே
வாழ்த்துக்கள்.கலக்கல் ஆரம்பம்.. சுந்தர் சார்..
அடி தூள் இத இத தான் எதிர்பார்த்தேன்
இதை கடைபிடித்தால் நாமும் வாழ்வோம் நாடும் வீடு வாழும்
very good வொர்க் சுந்தர் ஜி,
மேஸ்ட்ரோ இளையராஜா காற்றில் இசையை விதைத்தார்;
நீங்கள் காற்றில் அன்பை விதைக்ரீர்கள் … !!!
Really very good work . . .
Kalakal post Thalaivar pathi evlo visayam collect panirukinga.. Continue u r service forever anna. Dd interview video kidakuma
Dear Sudarji, You should also include the so called ‘Puratchi Thamizhan’ episode on his flip flops etc. I observed ogenekkal protest where thalaivar comes to the dias, this gentleman tries to shake hand or greet him but thalaivar did not see him by mistake and went shook hands with Sarathkumar, Kamal etc…I believe this incident could have made his gentlemen ‘ego’ centric and blabbered in the protest. I would be happy if you could register about this incident and then his flip flops in trying to patch up. Thanks for your platform to register this incident.
—————————————————
Hogenekkal ego issue may be true. But his blabbering was also not planned. I meant he didn’t plan it. Due to the circumstances prevailed there after actor vijayakumar’s praisings about thalaivar in the stage, he lost his control. Anyway, let me think over it. thanks.
- Sundar
Not only mansoor ali khan but also manorama, sarath kumar, velu prabhakaran, ramadoss etc.., they all criticised thalaivar at different stages, but he didn’t say a word to those comments. That is Thalaivar.
Excellent Sunder, and your comment on Satyaraj is correct.
Best wishes.
Dev.
தூள் மா !!. thanks
சுந்தர், சத்தியராஜ் பேசிய அடுத்த நாள் ஜூவியில் அவரது பேட்டி வந்தது …… மேடையில் அவர் என்ன சொன்னாரோ அதேதான் பேட்டியிலும் சொல்லியிருந்தார். கண்டிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்த பேட்டியை எடுத்திருப்பார்கள் . அவரது பேச்சு ப்ளான் பண்ணியதாகத்தான் இருந்திருக்கும் !
———————————
இல்லே விஜய். ஏன்னா…. வாரமிருமுறை வருகிறது என்பதால் அப்போதைக்கு அப்போது செய்திகளை தயார் செய்வார்கள். புதன்கிழமை காலையில வர்ற ஜூ.வி.ல செவ்வாய்க்கிழமை நைட் ஏதாவது பெரிசா நடந்தா அது வந்துடுது. PRINTING TECHNOLOGY இப்போ ரொம்ப டெவலப் ஆயிடுச்சு. நிறையே பத்திரிக்கைகள் சொந்தமா மெஷின் போட்டுட்டாங்க.
- சுந்தர்
ரொம்ப நல்ல தொடர். சும்மா தூள் கிளப்புங்க.இந்த மாதிரி தொடரை தான் நான் ரொம்பவே எதிர்பார்த்தேன்.இந்த தொடர் மூலம் எல்லா ரசிகர்களாகிய நாம் தலைவர் போல் “மன்னிப்போம் மறப்போம்” என்றே வாழ்வதற்கு வழி வகுத்த திரு.சுந்தர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பல.
மிக முக்கியமான விர்துஎ என நான் கருதுவது தலைவரின் இந்த குணத்தை தான்..நன்றி..