









You Are Here: Home » Featured, Flash from the Past » “இவர் முகத்துக்கு மீசை இல்லாமல் நல்லாயில்லையே” - ஷூட்டிங்கில் ரஜினியை கலாய்த்த நாகேஷ் - அமரர் நாகேஷ் பிறந்தநாள் சிறப்பு பதிவு!
இன்று (வியாழன் 27/09/2012) நகைச்சுவை சக்கரவர்த்தி நடிகர் திரு.நாகேஷ் அவர்களின் பிறந்த நாள்.
இரவு ஆதித்யா சானலில் நாகேஷ் அவர்களைப் பற்றி சிறப்பு தொடர் ஒளிபரப்பு நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது. பிரபலங்கள் பலர் நாகேஷ் அவர்களை பற்றி தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். ஒட்டுமொத்த திரையுலமும் அவர் மீது வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் பிரமிக்க வைத்தது.
அவருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இந்தப் பதிவை தருகிறேன்.
1996 ஆம் ஆண்டு பிற்பகுதியில் (தேர்தல் முடிந்து தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழக அரசின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பேசிய சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி அவர்கள், அப்போது சிறப்பு விருது பெற்ற திரு.நாகேஷ் அவர்களை பற்றி பேசும்போது, “சிவாஜி சாருடன் ஒரே ஃபிரேமில் வந்து அவரை விட சிறப்பாக நடித்தார்கள் என்ற பெயரை வாங்கியவர்கள் திரையுலகில் மொத்தம் நான்கே பேர் தான். நடிகவேள் எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலைய்யா, எஸ்.வி.ரங்காராவ் அப்புறம் நம்ம நாகேஷ் சார்.” என்று கூறினார். கூட்டம் கைதட்டி ஆர்பரித்தது.
நாகேஷ் அவர்கள் மீது மிகப்பெறும் மதிப்பு வைத்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அவர் அறிமுகமான அபூர்வ ராகங்கள் (1975) படத்தில் நாகேஷ் நடித்தது குறிப்பிடத்தக்கது.
அவரை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை விஜய் டீ.வி. சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்தது விஜய் டீ.வி. தொலைகாட்சிகளுக்கேல்லாம் அரிதாக பேட்டி தரும் சூப்பர் ஸ்டார், நாகேஷ் அவர்கள் மீது வைத்திருந்த பெருமதிப்பு காரணமாக அந்த பேட்டிக்கு ஒப்புக்கொண்டார்.
பேட்டியின் முழு வீடியோவை கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்து பார்க்கவும்.
Superstar about Nagesh - Video
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=1942
திரு.நாகேஷ் கல்கி வார இதழில் 2003 ஆம் ஆண்டு வாக்கில் ‘சிரித்து வாழ வேண்டும்” என்று ஒரு தொடர் எழுதி வந்தார். டிசம்பர் மாதம் வந்த கல்கி இதழ் ரஜினி சிறப்பிதழாக வெளிவந்தது.
அந்த சிறப்பிதழுக்காக சூப்பர் ஸ்டார் பற்றி நாகேஷ் அவர்கள் கூறியதை கீழே காணலாம்.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் ஷூட்டிங். எனக்கும் மேஜர் சுந்தர்ராஜனுக்கும் ஒரு காட்சி. எங்கள் உரையாடல் முடிகிற போது, கேமரா எங்களை விட்டு விலகி படி எறி மாடிப் பகுதிக்கு செல்ல, அங்கே ரஜினிகாந்த் நின்றுகொண்டிருப்பார். அப்போது தான் நான் ரஜினிகாந்தை முதன் முதலாக பார்க்கிறேன். அப்போது என் கவனத்தை கவர்ந்தவை அவரது அடர்ந்த தலைமுடியும் கருப்பாக இருந்தாலும் சட்டென்று அடுத்தவர்கள் கவனத்தை கவர்கின்ற வசீகரத் தோற்றமும் தான்.
“இது யாரு புதுசா இருக்கு?” என்று மேஜர் கேட்க, “பாலு (கே.பாலச்சந்தர்) புதுசா கண்டுபிடிச்சிட்டு வந்திருக்காரு போல இருக்கு” என்றேன். அவரது முகத்தை பார்த்தபோது உடனே எனக்கு ஏற்பட்ட எண்ணம், “இவர் வழக்கமான புதுமுகம் கிடையாது. இவருக்குள்ளே ஏதோ ஒன்று இருக்கிறது. இவருக்கு சினிமாவில் பிரகாசமான எதிர்காலம் இருக்கும்” என்பது தான். ஆனால் அதே சமயம், தமிழ் திரைப்பட உலகில், சூப்பர் ஸ்டார் என்று சொல்கிற அளவுக்கு உச்சத்தை அடைவார் என்று, அன்றே என்னால் உணர முடிந்தது என்றெல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை.
(Superstar paying homage to Thiru.Nagesh)
அந்த காட்சி முடிந்ததும் டைரக்டர் கே.பாலச்சந்தரிடம், ரஜினியிடம் நான் கவனித்த விஷயத்தை பகிருந்துகொண்ட போது, “ஆமாம்…. அதனால் தான் இந்த காரக்டரில் நடிக்க வெச்சிருக்கேன்” என்றார்.
ரஜினியிடம் மற்றவர்களுக்கு மரிதாய் தரும் பண்பு அதிகமாகவே இருப்பதை கவனித்தேன். அதனையடுத்து, நாங்கள் இணைந்து பணி புரிய வியப்பு ஏற்படாத போதும், அவர் என் மீது அன்பும், மரியாதையும் காட்டத் தவறியதில்லை. ஒரு நாள், கோடம்பாக்கம் ரோட்டில் எதிரெதிர் புறம் இரண்டு பேரும் கார்களில் செல்ல நேர்ந்தபோது ரஜினி தனது காரை நிறுத்திவிட்டு, என்னை நெருங்கி வணக்கம் சொல்லி நலம் விசாரித்துவிட்டு போனார். தவிர மதிய இடைவேளையின்போது நாங்கள் இருவரும் ஒரே படத்தில் பணிபுரியவில்லை என்றாலும் ஒரே ஸ்டூடியோவில் வெவ்வேறு பட ஷூட்டிங்கில் இருந்தால், தம்முடன் லன்ச் சாப்பிட அழைக்கத் தவறமாட்டார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் எங்கள் இரண்டு பேருக்கு எதிரிடை குணாதிசியங்கள். நான் சுமா இருக்காமல் எதையாவது சொல்லிவிட்டு பரபரப்பு ஏற்படுத்திவிடுவேன். ஆனால் ரஜினி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். தில்லுமுல்லு பட ஷூட்டிங்கின்போது “இவர் முகத்துக்கு மீசை இல்லாமல் நல்லாயில்லையே” என்று கமெண்ட் அடிக்க, உடனே பாலச்சந்தர், “மீசையை வெச்சுத் தான் இந்தப் படமே. நீ சும்மா இரு” என்றார். அந்தப் படம் முழுக்க மீசையோடும் மீசையில்லாமலும் அவர் நடித்த நடிப்பு என்னை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தது.”
இவ்வாறு நாகேஷ் அந்த தொடரில் கூறியிருந்தார்.
[END]
very good post sundar ji !!!
திரு நாகேஷ் அவர்கள் மாதிரி ஒரு திறமையான கலைஞன் திரை உலகம் காண்பது அரிது….அவர் நடித்த “சர்வர் சுந்தரம்” படம் எத்துனை தடவை பார்த்தாலும் சலிக்காத ஒன்று…! நகைச்சுவை கலைஞனாக மட்டும் இல்லாமல் குணச்சித்திரம், வில்லன் வேடங்களிலும் வெளுத்து வாங்கியவர்….! “மகளிர் மட்டும்” திரைப்படத்தில் பிணம் போல் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்தது அவரின் நடிப்பாற்றலுக்கு ஒரு சான்று…!
-
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
-
விஜய் ஆனந்த்
சிறு வயதில் நாகேஷ் படங்களை தேடிபோய் பார்த்த அனுபவம் “காதலிக்க நேரமில்லை ” தொடர்ந்து ஒரு வாரம் முழுவதும் அவரின் நகைசுவைக்காக பார்த்தது அற்புத அனுபவம்.
ரபீக் - ஆனந்தயோக
Iru legends um sernthu kalaka neraya vaippu yeno amayavilai.
தலைவர் முதுகில் தட்டிகொடுத்த ஜாம்பவான்களில் நாகேஷ் அவர்களும் ஒருவர்
Suresh Krishna writing Book on Rajinikanth
http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/book-rajinikanth-904
It is nice to recap the incidents about the great living legend Mr Nagesh.
DOnt Miss Suresh Krishnas TIme with Basha…
நாகேஷ் பற்றி விஜய் டிவி ல தலைவர் சொல்லி இருப்பார் பாருங்க,அதுவும் தனக்கு நேர்ந்த அவமானத்தோட ,தலைவர் நேர்மைக்கு நிகரே இல்ல . வாழ்க அய்யா நாகேஷ் புகழ் !
தலைவர் திரு.நாகேஷ் அவர்கள் மீது இன்றும் வைத்திருக்கும் மதிப்பின் காரணமாகத்தான் கோச்சடையானில் நாகேஸ் அவர்களும் வருகிறார்.