You Are Here: Home » Featured, Superstar Movie News » ‘பாட்ஷாவுடன் நான்’ - இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா எழுதிய நூல் அடுத்த மாதம் வெளியீடு!

சூப்பர் ஸ்டாருடன் ஒரு ஐந்து நிமிடம் பழகினாலே அவரை பற்றி பத்து பக்கத்துக்கு ஒரு சூப்பர்  கட்டுரை எழுத முடியும். அப்படியிருக்க அவரை வைத்து நான்கு படங்கள் இயக்கிய ஒருவருக்கு அதுவும் அவற்றில் மூன்று படங்கள் மெகா ப்ளாக்பஸ்டர்கள் படங்கள் எனும்போது எத்தனை விஷயம் இருக்கும் பேச?

ஆம். சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, சூப்பர் ஸ்டாருடன் தான் பணிபுரிந்த அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார். வரும் நவம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள அந்த புத்தகத்திற்கு ‘பாட்ஷாவுடன் நான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது இந்த புத்தகம்.

மேற்படி மூன்று படங்களும் சூப்பர் ஸ்டாரின் கேரியரில் மிக முக்கிய பங்கு வகிக்கும் படங்கள் என்பதால் புத்தகம் பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

சென்ற வருடத்தின் துவக்கத்தில் அவரை நான் நமது தளத்தின் பேட்டிக்காக சந்தித்தபோதே, இப்படி ஒரு புத்தகம் ஒன்றை தாம் எழுதவிருப்பதாக கூறினார். மிகவும் ஆவலுடன் காத்திருப்பதாக கூறி நமது வாழ்த்துக்களை தெரிவித்தோம்.

தற்போது ஊடகங்களில் இந்த நூல் பற்றி செய்தியும் அட்டைப்படமும் வெளியாகியிருப்பதையொட்டி இன்று காலை அவரை தொடர்பு கொண்டபோது, மேற்படி புத்தகம் பற்றி படித்த செய்தியை கூறி, மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்து, நமது தளத்திற்காக பிரத்யேகமாக சில தகவல்களை கேட்டோம்.

நூல் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் நடைபெறும் என்றும் தேதி இன்னும் குறிக்கப்படவில்லை என்றும் கூறினார். மேலும், இப்படி ஒரு புத்தகம் தயாராகிவருவது பற்றி ரஜினி அவர்களிடம் சொன்னபோது, அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் என்றும் தாமும் அந்த நூலை படிக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறியதாக நம்மிடம் தெரிவித்தார் சுரேஷ் கிருஷ்ணா.

அண்ணாமலை, பாட்ஷா, வீரா ஆகிய படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகப்போகிற சூழ்நிலையில், இன்றும் மேற்படி படங்கள் பரபரப்பாக ரசிகர்களிடம் பேசப்படுவதும், தாம் எங்கு சென்றாலும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் இது பற்றி அனைவரும் கேட்பதாலும் இந்த எண்ணம் தமக்கு உதித்தது என்றும் கூறினார். மேற்படி நூல் 200 பக்கங்களுக்கும் குறையாமல் இருக்கும் என்றும் கூறினார் திரு.சுரேஷ் கிருஷ்ணா.

——————————————————————————————-
சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் பேட்டியின் முதல் இரண்டு பகுதிகளுக்கு

http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10507

http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10499

————————————————————————————————-

Today Deccan Chronicle’s news on the same:

Book on Rajinikanth

Baasha, Superstar Rajinikanth’s 1995 action thriller, created an all time record at the box-office. Directed by Suresh Krishna, there were rumours that the makers had plans to produce a sequel to it with Rajini playing the lead protagonist, but this later fizzled out.

Now, it is learnt that a book on the making of Rajini’s three sleeper hits Baasha, Annamalai and Veera, is being written by Suresh Krishna who directed all three films. (It will be called My Days with Baasha.)

Speaking to DC about how the idea originated, Suresh Krishna said, “The three Rajini films were released more than 15 years ago.

But they still remain evergreen in the minds of audiences. Year after year, on Rajini sir’s birthday, invariably, the media asks me to talk about Baasha, Annamalai and Veera, and share with them my experiences with the Superstar.

And every time I speak about it, the audiences seemed to enjoy it. So, I felt that there’s some magic which makes these films unforgettable. That’s when I thought why not write a book on the making of these films.”

The book is being translated into Tamil, Baashavum Naanum, and in Telugu, Baasha Tho Nenu. Suresh Krishna recalled interesting incidents while shooting the three films, how the popular punch lines, including “naan oru thadava sonna nooru thadava sonna maathiri” came up, the music sessions, the stunt blocks, the other side of Rajinikanth - his off-camera persona, during make-up sessions, his reactions during previews, the humanity of the star - and these will now be documented in a behind-the-scenes look at the three films in a 200-page edition. Plans are on to release it by November around Diwali, he said.

[END]

11 Responses to “‘பாட்ஷாவுடன் நான்’ - இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா எழுதிய நூல் அடுத்த மாதம் வெளியீடு!”

 1. sathish sathish says:

  hi sunder,
  we r very eager to see that book i love baba film lot than all the three film lot of message on that film

 2. Chithamparam Chithamparam says:

  நுாலைப்படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

 3. Sankaranarayanan Sankaranarayanan says:

  பாபா உண்மையாகவே பற்பல செய்திகளை சூக்குமமாக சொன்ன ஒரு அற்புத படைப்பு. திரு. சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்…

 4. Rabeek Rabeek says:

  பாபாவில் 7 யோக சக்ரங்களை பற்றி தலைவர் கூறியது
  என்னை ஒரு யோகா ஆசிரியர் ஆக்கியது.

  ————————————-
  Grt info.
  - Sundar

 5. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  மாஸ் நியூஸ் …. ஆவலுடன் எதிர்பார்த்து….

  என்றும் தலைவர் வலையில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 6. Rajavel B Rajavel B says:

  hi sundar anna,

  Your posts and updates about Thalaivar are really good and execllent. We all are eagerly waiting for Thalaivar’s next movie official announcement…any updates about that……

 7. Tharun Tharun says:

  Hi All,

  Today i saw thalaivar in “Naradha Gana Sabha”

  Thanks
  Tharun

 8. Guru Guru says:

  Thanks Sundarji for this wonderful news….WOW!!! This is a fantastic idea by Mr. Suresh Krishna who gave us thalaivar fans a demi god status movies like Baasha & Annamalai of course without our thalaivar it would’ve not been possible but still aprreciation to Suresh krishna for being very creative in his days, we should not forget his contribution. Both the flms are cult classic even today its very fresh & energetic. Superstar Rajinikanth is a very good story writer eg: Baba…yes the film didn’t go like Padayappa or sivaji reason for that is some sector of our thalaivar fans only who always expected a padayappa kind of film frm thalaivar…nw only they hav changd aftr chandramukhi but still the highest grosser of that year ok leave out that. Baba is a film which i will not forget in my life i’m not exaggerating here just saying wat i felt abt this film Baba. It has a great story tells the inner meaning of life like fame, popularity, Atheism, immortality, miracles & especially deals with the true Spiritualism. Baba is one of best title of Rajini’s films like Baasha…who can forget Rahman’s famous spiritual song…Baba will always remain a cult always in all true Rajini fans heart!!! As Amitabh Bachchan sir told in the audio lauch of Robot “Rajini is the son of soil of this country in his times no doubt in it….waiting for Kochadaiyaan darisanam next all the best for the entire team..:)

 9. chithamparam chithamparam says:

  பாபா உண்மையிலேயே எனக்குப் பிடித்தமான படங்களில் ஒன்று.
  பல்வேறு காரணங்களால் இன்று படம் நன்றாக ஓடவில்லை
  இன்று பல ரசிகர்கள் பாபாவை விரும்பிப் பார்க்கிறார்கள்.

  பாபாஜி இருக்கிற இடம் எவ்வளவு சாந்தியா அமைதியா இருக்கு தெரியுமா? பேசமா அவர்கூட இமயமலையைிலயே இருந்திடலாம் போல இருக்கு என்று தலைவர் கூறும் வசனம் என்னை மிகவும் பாதித்தது.

  • RAJNISENTHIL RAJNISENTHIL says:

   எனக்கும் ,அப்படித்தான் ,பாபா படத்தை பலமுறை பார்திருந்தாலும் இன்றும் டிவி யில் மிஸ் பண்ணாம பார்ப்பேன் .எனக்கு தனிப்பட்டமுறையில் பாபா சம்திங் ஸ்பெஷல் ஏனன்றால் நான் விஜய் டிவி செய்திகளில் ஆல்பர்ட் தியேட்டர் வாசலில் நின்று படத்தை பற்றி பேசி இருப்பேன் ,உண்மையாக தலைவர் நமக்கு ஒரு மெசேஜ் சொல்லவே பாபாவை தந்திருப்பார் .

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates