You Are Here: Home » Featured, Rajini Lead » “தேசப்பிதாவை மதிக்கவில்லை என்றால்…?” சூப்பர் ஸ்டார் சொல்வதை கேளுங்கள்! காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!!

கேள்வி : “காந்தியடிகள் பற்றி உங்கள் கருத்து என்ன?”

பதில் : “உண்மையின் வடிவம். மிகப் பெரிய யோகி.”

கேள்வி :  “நீங்க ஆன்மீக வாதியா காந்திய வாதியா?”

பதில் : “ரெண்டும் வேற வேற இல்லீங்க!”

1995 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் பேட்டியில் சூப்பர் ஸ்டார் கூறியது தான் இது.

ரஜினி அவர்களிடம் ஏற்பட்ட ஆன்மீக மற்றும் காந்திய ஈடுபாட்டுக்கு காரணம் மகாத்மா அவரை மிகப் பெரிய அளவில் ஈர்த்திருக்கிறார் பாதித்திருக்கிறார் என்பது தான்.

அவருடைய சொல் மற்றும் செயல்கள் அனைத்திலும் காந்தியின் தாக்கம் அதிகளவு இருக்கும். ஒரு கட்டத்தில் படம் துவக்கும்போது டைட்டில் கார்டில், காந்தி படத்துக்கு அவர் பூக்கள் போடுவது போல காட்டப்பட்டது.

அந்த படம் எது தெரியுமா? “முத்து!”

உண்மை, உழைப்பு, உயர்வு என்று எழுதப்பட்ட காந்தியின் படத்துக்கு பூக்கள் போட்டுத் தான் முத்துவின் டைட்டில் கார்டே துவங்கும்.

நான் ரஜினி அவர்களை ரசிப்பவன் என்பதால் காந்தியை பிடித்ததா அல்லது காந்தியை பிடித்தது என்பதால் ரஜினி அவர்களை இரசித்தேனா அல்லது இரண்டுமே அல்ல… ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்பட்டதால் இருவரையும் விரும்பினேனா என்று எனக்கு தெரியாது. ஆனால் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது.

நிஜ வாழ்க்கையிலும் காந்தியக் கொள்களைகளை கடைபிடிக்கவே நான் விரும்புகிறேன். அது இன்றைய உலகில் மிகவும் கடினமான ஒன்று என்றபோதிலும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தனது திரைப்படங்களில் பல்வேறு தருணங்களில் காந்திய சிந்தனைகளை மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார். கீழ்கண்த  ஒரு நிமிட பட கிளிப்பிங் ஒன்றை பாருங்கள். அவர் காந்தி மீது எந்தளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பது புரியும்.

கடைசி வரி பன்ச்சோ பன்ச்… மாஸ்டர் பன்ச்!

Rajini & Mahatma Gandhi Super scene - Video

[END]

8 Responses to ““தேசப்பிதாவை மதிக்கவில்லை என்றால்…?” சூப்பர் ஸ்டார் சொல்வதை கேளுங்கள்! காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!!”

  1. Anand Vasi Anand Vasi says:

    Thalaiver, oru Vazhum Mahatma!…Mahatma Gandhi is the epitome of Non-violence…Proud to b an Indian…But today Looting takes place in masses by misusing GANDHIJI’S name…

    - Antha Andavan naala kuda intha INDIA va???

    HAPPY GANDHI JAYANTHI. OM

  2. Renga Renga says:

    Hi, very nice article.

  3. dr suneel dr suneel says:

    காவேரி நதிநீர் சென்னை உண்ணாவிரதம் நினைவில் இருக்கிறது..காந்தி,வள்ளுவர், பாபாஜி ஆகிய மூவரின் சிறிய படங்கள் மட்டுமே அங்கு இருண்டது, எந்த ஆடம்பர பிளேக்ஸ் எல்லாம் இல்லை..ரஜினிக்குள் ஒரு காந்தி நிச்சயம் இருக்கிறார்..

  4. kumaran kumaran says:

    தலைவரும் ஒரு மகாத்மா தான்

  5. B. Kannan B. Kannan says:

    “மற்றவர்களுக்கு மரியாதை தராதவர்கள் அந்த மரியாதையை தங்கள் வாழ்க்கையில் பெறவே முடியாது”..
    எவ்வளவு பெரிய விஷயத்தை இப்படி சொல்லிட்டார் தலைவர்.. ஹாட்ஸ் ஆப்..

  6. RAJA RAJA says:

    காந்தியைப் போல் ஒரு மகானை இனி நம் வாழ்நாளில் பார்ப்பது அரிது ,இருந்தும் ஒரு வருத்தம் அவரை ஒரு சிலர் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று , ஒரு சிலர் தனக்கு காந்தி அவர்களை பற்றி எல்லாம் தெரியும் என்பது போல் FACEBOOK ல் தவறாக எழுதி இருந்தது மிகவும் வருத்தமாக இருந்தது.

    ———————————————————
    விடுங்க ராஜா.

    அண்மையில் வலையில் படித்த டுவீட் மொழி ஒன்று தான் என் நினைவுக்கு வருது.

    //பஸ்ல பக்கத்து சீட்டுல இருந்து தூங்கி விழுறவனையயே நம்மால ஒன்னும் செய்யமுடியலே. ஆனா இணையம் தான் எத்துனை எளிது “ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே…”//

    - சுந்தர்

  7. napoleon.s.kumar napoleon.s.kumar says:

    மகாத்மா பிறந்த நாளன்று இப்படி ஒரு பதிவை போட்டு எங்கள் உள்ளங்களை குளிர வைத்ததற்காக ரொம்ப, ரொம்ப நன்றி.

  8. Shiva Shiva says:

    I love Thalaivar one step ahead for these reasons..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates