









You Are Here: Home » Featured, Superstar Movie News » சக்சேனா, சூப்பர் ஸ்டார் ரஜினி, ரூ.240 கோடி சம்பளம் … அட இதெல்லாம் உண்மையா? என்ன நடக்குது? A CRYSTAL CLEAR REPORT!
<<<<<<<<<<”சன் பிக்சர்சின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ் ராஜ் சக்சேனா தற்போது சாக்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி அதில் படங்களை வெளியிட்டு வருகிறார். அவரது தயாரிப்பில் 240 கோடி ரூபாய் சம்பளத்தில் மெகா பட்ஜெட்டில் ரஜினி நடிக்கிறார். உடன் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவும் நடிக்கிறார். பன்மொழிகளில் இது வெளியாகும்.” >>>>>>>>>
இப்படி ஒரு செய்தி வெளியாகியதிலிருந்து இது உண்மையா உண்மையா என்று நம்மை நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். COOKED UP செய்திகளுக்கெல்லாம் நாம பதில் சொல்ல முடியாது. ஓரளவு செய்திக்கான முகாந்திரம் கிடைக்கட்டும். அப்புறம் யோசிப்போம் என்று அவர்களுக்கு பதில் கூறி விட்டுவிட்டேன்.
கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் தயாரிக்கப்பட்ட எந்திரனை மிகப் பிரம்மாண்டமாக உலகம் முழுதும் மூலை முடுக்குகளில் எல்லாம் வெளியிட்டு, போட்ட முதலை ஒன்றுக்கு நான்கு பங்காக சன் பிக்சர்ஸ் அறுவடை செய்ய சூத்திரதாரியாக இருந்தவர் சக்சேனா தான். அந்த வகையில் ரஜினியின் மாஸை அவரது பாக்ஸ் ஆபீஸ் பவரை மிகச் சரியாக தெரிந்து வைத்திருப்பவர்களுள் சக்சேனாவும் ஒருவர்.
எனவே ரஜினி என்னும் அட்சயப் பாத்திரத்தில் எவ்வளவு போட்டாலும் அது வட்டியும் முதலுமாக திரும்ப கிடைக்கும் என்று அவர் கருதுவது வியப்பில்லை. எனவே அதற்கு அவர் முயற்சி செய்திருக்கக்கூடும். அதுவும் தவறில்லை. “நூலை கட்டி (தங்க) மலையை இழுப்போம். வந்தா மலை. (அண்ணாமலை). போனா நூல் தானே. போயிட்டு போவுது” என்று அவர் நினைத்திருக்கிறார். அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.
ஏற்கனவே சக்சேனா அறிமுகமானவர் தவிர புதிய பட நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். புதிய தொலைக்காட்சி சானல் வேறு தொடங்கப் போகிறார். So, தன்னை அவர் சந்திக்க விரும்பியபோது ரஜினி மறுப்பு சொல்லாமல் நட்பு ரீதியில் அவரை சந்தித்திருக்க வேண்டும். அப்போது சக்சேனா இப்படி அவரை வைத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமான படம் ஒன்றை தயாரிக்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். அதற்கு ரஜினி என்ன சொல்லியிருப்பார்? “யோசிச்சு சொல்கிறேன் சாக்ஸ்” என்று தானே.
இது தான் நடந்தது.
உண்மை என்ன?
சக்சேனா இப்படி ஒரு ஆபரை ரஜினி அவர்களிடம் வைத்தது உண்மை. அதற்கு ரஜினி யோசித்து சொல்கிறேன் என்று சொன்னதும் உண்மை. ஆனா ரஜினி, சாக்ஸ் இல்லே… அவரை போன்று யார் சொன்னாலும் இதைத் தான் பாலீஷா சொல்வார். ஒரு விஷயத்தை மறுப்பதும் கூட நாகரீகம் தெரிந்தவர்கள் அழகாகத்தான் செய்வார்கள்.
இந்த விஷயம் (ரஜினி படம்) சாத்தியமாக வாய்ப்பில்லை என்று சக்சேனா ஓரளவு யூகித்ததால் தான் அதை அவர் நேற்றைக்கு நடைபெற்ற ‘சுண்டாட்டம்’ படம் ஆடியோ வெளியீட்டு விழாவில் பகிரங்கப்படுத்தினார். ஏன் தெரியுமா? கமல், சூர்யா, அஜீத், விஜய் உள்ளிட்ட மற்ற முன்னணி ஹீரோக்களுக்கு இது ஒரு மெசேஜ். “எனக்கு கால்ஷீட் கொடுத்தீங்கன்னா.. பெரிய பட்ஜெட்ல எடுப்பேன் உங்களுக்கும் நல்லா சம்பளம் தருவேன்” என்பது தான்.
“ரஜினி கிட்டே படம் தயாரிக்கிறதை பத்தி பேசினேன்” என்பது சாக்ஸ்க்கு ஒரு மெரிட். அவ்வளவுதான்.
(இந்த 240 கோடி பிட்டெல்லாம் பாவம் அவர் போட்டதில்லை. அது பத்திரிக்கைங்க போட்ட ஸ்பெஷல் எக்ஸ்ட்ரா பிட்! இது போன்ற சம்பளம் விஷயத்தை எல்லாம் எந்த தயாரிப்பாளரும் வெளியே சொல்லமாட்டாங்க. அதவும் சூப்பர் ஸ்டார் இன்வால்வ ஆகியிருக்கும்போது எப்படி பேசுவார் சாக்ஸ்? தலைவரோட பாக்ஸ் ஆபீஸ் பவரை வெச்சு ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை போட்ட கணக்கு அது! வேற ஒண்ணுமில்லே!)
சூப்பர் ஸ்டாரை பொறுத்தவரை அவரிடம் பணத்தை காட்டி எவரும் கால்ஷீட் பெறவே முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. கே.டி.குஞ்சுமோன் முதல் கலைப்புலி தாணு வரை அவருக்கு கோடிகளை கொட்டி கொடுத்து படத்தை தயாரிக்க காத்திருந்தும் அவர் பார்வை அவர்கள் பக்கம் திரும்பவில்லை. “ரஜினி மட்டும் எனக்கு கால்ஷீட் கொடுத்தால் அந்த படத்தின் அறிவிப்பை நோட்டீஸ் அடித்து ஹெலிகாப்படரில் சென்று அத்தனை இடத்திலும் போடுவேன்” என்று தாணு ஒரு முறை சொன்னார். அவ்வளவு ஏன் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூட ஒரு கட்டத்தில் இத்தகு முயற்சிகளில் இறங்கி நோட்டம் பார்த்தவர் தான்.
Finishing Touch : சூப்பர் ஸ்டாரின் படத்தை தயாரிக்க உண்மையில் வாய்ப்பிருப்பவர்கள் அது பற்றி வாயே திறக்கமாட்டார்கள். ஏற்பாடுகள் எல்லாம் சைலன்ட்டாக நடந்துகொண்டிருக்கும். ஏனெனில், ஒரு படம் தொடர்பாக பேச்சுவார்த்தை அளவில் இருக்கும்போது சம்பந்தப்பட்டவர்கள் அதை வெளியே சொல்வதை ரஜினி அவர்கள் விரும்புவதில்லை. அதே போல, சம்பந்தப்பட்டவர்களும் “இதை ரஜினியே வெளியே சொல்லட்டும். அது வரைக்கும் நாம வாயை திறக்கூடாது” என்று நினைப்பார்கள். சக்சேனா விஷயத்தில் இது ரெண்டுமே இல்லையே கவனிச்சீங்களா?
அப்போ எது உண்மை? உண்மையிலேயே அடுத்து அவர் யார் படத்துல நடிக்கப்போறாருங்க?
அடுத்த பதிவில் விடை ஓரளவு தெரியும்… காத்திருங்கள்!
[END]
superb …thalaivar nadika maatar … i guessed it.
Typical sundarji updates again. Thnx
ரஜினி ரசிகர்களுக்கு அனேகமாக இரண்டே இரண்டு ஆசைகள் தான் இருக்க முடியும். ஒன்று பாட்ஷாவை போன்ற ஒரு அதிரடி ஆக்க்ஷன் திரைபடத்தில் தலைவர் நடிக்க வேண்டும் என்பதும்.மற்றொன்றை நான் சொல்ல தேவையில்லை.
.
ஆனால், நாட்கள் நகர நகர இந்த ஆசைகள் நடக்குமா என்றே தெரியவில்லை.
.
ரஜினி ரசிகர்கள் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு துவண்டுபோயுள்ளனர். தலைவருக்கு நோயவைபட்டபோது கூட ரசிகர்கள் துவண்டு போகாமல் மிகபெரிய எழுச்சியுடன் இருந்தனர்(தலைவருக்கு மிகப்பெரிய கடமை ஒன்று காத்திருப்பதும் அதை நிறைவேற்றாமல் அவருக்கு ஒன்றும் ஆகாது என்றும் அவர்களுக்கு தெரியும்).
.
ஆனால், தலைவர் தரப்பில் இருந்து வரும் “நோ respond” விஷயத்தால் ரசிகர்கள் பலமுறை காயப்பட்டிருப்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. எந்திரனுக்கு கூட இது போல ஒரு மௌனத்தை தயாரிப்பு தரப்பு நமக்கு தரவில்லை.ஆனால், கோச்சடயான் குழுவினர் ரசிகர்களை மிக மிக அதிகமா காக்க வைக்கின்றனர்.
.
படத்தை பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் அவர்கள் வெளியிடவே இல்லை. அதிகமான சஸ்பென்ஸ் திரில்லை தருவதை விட வேதனையை தருகிறது.
.
தலைவர் அடுத்த படத்தின் பட்ஜெட்டை விட சப்ஜெக்டை தான் அதிகம் அக்கறையுடன் எதிர்பார்கிறார்கள். தலைவர் அடுத்து பாட்ஷாவை போன்றட அதிரடி ஆக்க்ஷன் அரசியல் திரைபடத்தில் நடிக்க வேண்டும்.இதுவே எங்களின் அசை.
.
rajnikanth will rule tamilnadu
வசி கூறுவது 100 % உண்மை. ரசிகர்களின் உண்மையான மன நிலை இது தான்.
this is true…200 %
Nice update Sundar Anna…… Hope next movie will be directed by K.V Anand or K.S.Ravikumar…
ஆமாம் சுந்தர் நீங்கள் சொன்னதுதான் உண்மை சக்சீனா விளம்பரத்துக்காக பண்றார்
சுந்தர் ஜி
Nice analysis wating for such a news from you as you give authentic info about thalaivar always
Hope Thalaivar does a movie for PA Arts & Sathya Movies with KS Ravikumar & Suresh Krishna as Thalaivar is doing movies for production houses which shaped his movie carrier
like AVM, Kavithalaya etc
These 2 are pending
This production houses with these 2 directors will give 80′S feel mass which we hardcore fans want.
If Thalaivar does triple role , double role in this movies just imagine the success rate
அருமையான விளக்கம்.
அருமையான பதிவு சுந்தர்ஜி ,saxse
//சூப்பர் ஸ்டாரை பொறுத்தவரை அவரிடம் பணத்தை காட்டி எவரும் கால்ஷீட் பெறவே முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. கே.டி.குஞ்சுமோன் முதல் கலைப்புலி தாணு வரை அவருக்கு கோடிகளை கொட்டி கொடுத்து படத்தை தயாரிக்க காத்திருந்தும் அவர் பார்வை அவர்கள் பக்கம் திரும்பவில்லை. //
தலைவர் நட்புக்கு, அனுபவத்துக்கு, வயதுக்கு மரியாதை தருவார். பணத்துக்கு மயங்க மாட்டார். பணத்தால் அவரை விலைக்கு வாங்க முடியாது. சக்சேனாவுக்கு ஒரு காலமும் தலைவரின் கால்ஷீட் கிடைக்க வாய்ப்பில்லை.
அருமையான பதிவு சுந்தர்ஜி ,
தலைவர் எப்ப பணம் பார்த்து நடிச்சிருக்கார்?….தயாரிப்பாளர் “மனம்” பார்த்து நடிப்பவர் தலைவர்….நேற்று (வெள்ளி) வெளியான தி ஹிந்து நாளிதழில் கூட இந்த செய்தி வெளியாகி இருந்தது….அதில் சக்சேனா நான் மற்ற தயாரிப்பாளர்கள் போல ஒரு படத்துக்கான ப்ரோபோசலை ரஜினியிடம் அளித்திருக்கிறேன் என்று தான் சொல்லி இருக்கிறார்….பணம் பற்றி எதுவும் சொன்னதாக தெரியவில்லை…!
-
எது நடக்கணுமே அது கண்டிப்பா நடக்கும்….!
-
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
-
விஜய் ஆனந்த்
Hi Sundar. Very good analysis. But this can never happen.
தலைவர் அன்புக்கு மட்டுமே அடிமையானவர் !!!
வேறு எவரும் எதற்காகவும் அவரை அடிமை படுத்தவோ அல்லது அவ்வாறு நினைக்கவோ கூட முடியாது !!!
ரசிகர்களாகிய நமக்கு இந்த நேரத்தில் வேண்டியது பொறுமை மட்டுமே !!!
தலைவர் கண்டிப்பாக அவ்வளவு சீக்கிரம் ஒத்துகொள்ள மாட்டார் ,ஏன் என்றல் சுந்தர் சொன்னதை போல் தாணு ,குஞ்சுமோன் ,ஆஸ்கார் ஆகியோர் பணம் உள்ளவர்கள் ,அவர்களுக்கு தலைவர் நடித்தால் மேலும் பணம் சேரும் அதில் யாருக்கு பயன் அதனால் தான் தலைவர் எந்த தயாரிப்பாளர்கள் கஷ்டத்தில் இருகிறார்களோ அவர்களுக்கு உதவ படம் நடித்து கொடுப்பார் அப்படி செய்தது தான் சந்திரமுகி ,சிவாஜி , சந்திரமுகி தலைவர் நடிக்க ஒத்துகொண்டதே திரு சிவாஜி குடும்பத்தினர் மிக பெரிய பண கஷ்டத்தில் ,திரு சிவாஜி கணேசன் அவர்கள் ஆசையை வாங்கிய சிவாஜி கார்டனை விற்கும் நிலைமைக்கு சென்றார்கள் ,அது தலைவருக்கு தெரிந்து தான் நடித்து அவர்களுக்கு நல்லது செய்தார் ,ஏன் என்றால் பணம் கொடுத்து உதவினால் அது ஒரு சிறு தொகையாக தான் இருக்கும் ,ஆனால் நடித்து கொடுத்தால் அது அவர்களுக்கு மிக பெரிய உதவியாக இருக்கும் ,அதே தான் திரு ஏவிஎம் அவர்களுக்கும் தலைவர் செய்தது .
என்னை பொறுத்தவரை தலைவர் மீண்டும் ஒரு மிக பெரிய commercial படத்தில் நடிக்க வேண்டும் அதில் தலைவர் அருணாசலத்தில் செய்தது போல் நலிந்து உள்ள சிறு தயாரிப்பளர்களை பங்குதாரர்களாக போடு அவர்களுக்கு உதவ வேண்டும் ,அதுவும் தலைவரின் அபிமான தயாரிப்பாளர் திரு பஞ்சு அருணாசலம் அவர்கள் கஷ்டத்தில் இருப்பதால் அவருக்கு ஒரு படம் நடித்து கொடுக்க தலைவர் நினது இருபதாக செய்திகள் வந்தது பாப்போம் நம் அருணாசலம் (தலைவர் ) மனதில் என்ன இருக்கிறது என்று
பாட்சா வசூல் குறித்த ஆதாரம், பேப்பர் கட்டிங், பேப்பர் செய்தி எதாச்சும் உள்ளதா?!? வசூல் சாதனை பற்றி கேட்கவில்லை. எவ்வளவு வசூல், தியேட்டர் நாட்கள் விபரம் போன்றவை கேட்கிறேன்.
————————————————-
இருக்கிறது. அதற்க்கு என்ன அவசியம் இப்போது என்று தெரிந்து கொள்ளலாமா? நீங்கள் அது பற்றி குறிப்பிடவில்லை. பொதுவாக கேட்டிருக்கிறீர்கள். இருப்பினும், யாருக்கோ எதையோ நிரூபிக்க என்றால் மன்னிக்கவும்.
நட்புடன்…
- சுந்தர்
நான் தெரிந்துகொள்வதற்காக கேட்கிறேன். அதில் எந்தத்தவறும் இருப்பதாக தெரியவில்லை.
அதே நட்புடன்
Kamalfan
————————————————-
அது பற்றி ஒரு விரிவான பதிவு அளிக்க இருக்கிறேன். அப்போது நிச்சயம் நீங்கள் அந்த விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.
நன்றி.
- சுந்தர்