You Are Here: Home » Featured, Superstar Movie News » கே.வி.ஆனந்த் Vs எஸ்.எஸ்.ராஜ மௌலி : சூப்பர் ஸ்டாரை அடுத்து இயக்கப்போவது யார்?

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கப்போவது கே.வி.ஆனந்த் தான் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

தற்போது அந்த படத்துக்கு கே.வி.ஆனந்த் அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகவும், ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மேன்ட் கல்பாத்தி அகோரமும், ஈரோஸ் இண்டர்நேஷனுலும் கூட்டாக அந்த படத்தை தயாரிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில்  தயாராகும் அப்படம் 2014 தமிழ் புத்தாண்டு வெளியாகக்கூடும். இசை: ஹாரிஸ் ஜெயராஜ். சூப்பர் ஸ்டார் இசைப்புயலை பரிந்துரைத்திருப்பதாக தெரிகிறது. எது நடந்தாலும் நமக்கு விருந்து தான்.

‘கோச்சடையான்’ குறித்த பரபரப்பு + எதிர்பார்ப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால் மேற்படி செய்தியை ரகசியமாக வைத்திருப்பதாக தெரிகிறது. ‘கோச்சடையான்’ ரிலீஸ் ஆனதும் மேற்படி படம் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படக்கூடும்.

அதற்கு நடுவே எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது கொசுறு தகவல்.

மேலே சொன்ன வரியை நினைவுபடுத்துவது போல, தற்போது இன்னொரு செய்தியும் கசிந்துள்ளது. ‘நான் ஈ’ படம் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பிளாக்பஸ்டர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பக்கம் சூப்பர் ஸ்டாரின் கவனம் திரும்பியிருப்பதாவும், அவரிடம் தனக்கு ஒரு கதை தயார் செய்யும்படி ரஜினி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக ராஜமௌலி அடிக்கடி சூப்பர் ஸ்டாரை சந்தித்து வருவதாகவும் கதை வெகு சீக்கிரம் இறுதி செய்யப்படும் என்று தகவல்.

சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கப்போவதால், தற்போது மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி தெலுங்கில் தற்போது இயக்கி வரும் படத்தை விரைந்து முடிக்க வேண்டி ஷூட்டிங்கை துரிதப்படுத்திக்கொண்டிருக்கிறாராம்.

Finishing Touch : லட்டு தின்ன ஆசையா? இதோ ரெண்டு லட்டு. எது  வேணும்னாலும் கிடைக்கலாம்.  மேலே சொன்ன ரெண்டு செய்திகள்ல முதல் செய்தி உண்மையாகுறதுக்கு மிக அதிக வாய்ப்பிருக்கிறது. ரெண்டாவது செய்தியையும் ஒதுக்கி விட முடியாது. ‘நான் ஈ’ பார்க்கும் எந்த ஹீரோவுக்கும் ராஜமௌலி டைரக்ஷன்ல கண்டிப்பா ஒரு படம் நடிச்சிடனும்னு ஆசை வர்றது இயல்பு.

இதுல ஒரு விஷயம் கவனிச்சீங்களா? கே.வி.ஆனந்தும் சரி… ராஜமௌளியும் சரி… ரொம்ப அடக்கி வாசிக்கிறாங்க. இவர்களின் படத்தை தயாரிக்கப்போவதாக கூறப்படுபவர்களோ அதை விட அடக்கி வாசிக்கிறாங்க.

[END]

21 Responses to “கே.வி.ஆனந்த் Vs எஸ்.எஸ்.ராஜ மௌலி : சூப்பர் ஸ்டாரை அடுத்து இயக்கப்போவது யார்?”

 1. Ragul Ragul says:

  சுந்தர் சார்

  In case of Rajamouli expecting Raana he is a master in such subjects
  Nadodi Mannan( MGR ) type movie dual roles
  becoz if Thalaivar doing multiple roles/ dual roles like Dr. Saravanan-Vettaiyan, Sivaji-MGR, Vaseegaran-Chitti
  the movie s a hit/will be a hit

  In case of KV Anand
  I guess it will be a bond flick remember Bond movie was planned by Mani sir with Thalaivar after Thalapathy

 2. kumaran kumaran says:

  சூப்பர் நியூஸ், thankyou .

 3. Jegan Jegan says:

  As told by ragul, bond film with k v anand will suit SS.

 4. vasanthan vasanthan says:

  சுந்தர் இதில இரண்டுமே நடக்க சாத்தியம் உள்ளது ,எது நடந்தாலும் சூப்பர் ,சூப்பர் நியூஸ் .

 5. R.Ramarajan R.Ramarajan says:

  Rendu perukum Thalaivar padam panatum .. Ithu double treat a irukum

 6. Sam Sam says:

  Thalaivar do films only with experienced directors. This is false news.

 7. jayakumar @ rajinidasan jayakumar @ rajinidasan says:

  நல்ல விஷயம் தான். ஆனா கே எஸ் ரவிக்குமார் என்னா பண்ணுவார். தலைவருக்காக அவர் ரொம்ப காலம் வீணடித்து கொண்டிருக்கார். தலைவர் அவரையும் கை விடகூடாது

 8. சிதம்பரம் சிதம்பரம் says:

  எனக்கென்னவொ கே.வி ஆனந் இயக்கத்தில் நடித்தால் இளைமை துள்ளலுடன் கூடிய அதிரடி ஆக்ஷன் விருந்து கிடைக்கும் என்று தோன்றுகிறது.

 9. விஜய் ஆனந்த் விஜய் ஆனந்த் says:

  இருவரும் ஆளுக்கு ஒரு படம் பண்ணலாம்….! இருவருமே இந்திய அளவில் பிரபலம் ஆனவர்கள்…..அவர்கள் கதையில் தலைவர் நடித்தல் இன்னொரு பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்ட் உறுதி….!
  -
  சீக்கிரமே அறிவிப்பு வரட்டும்…..!
  -
  “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
  -
  விஜய் ஆனந்த்

 10. vasi.rajni vasi.rajni says:

  நான் கூறுவது ரசிகர்களின் மனதில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தலாம். இருந்தாலும் சொல்கிறேன்.
  .
  தலைவர் அடுத்து KS .ரவிக்குமாருடன் இனைய வேண்டும். அது ராணவகதான் இருக்கவேண்டும் என்றில்லை. ஒரு சாதாரண அதிரடி மசாலா படமாக இருந்தாலும் ஒகே.
  .
  தலைவரின் மார்க்கெட் தற்பொழுது உலக அளவிற்கு சென்றுவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே.குறிப்பாக தலைவருக்கு ஹிந்தியிலும், தெலுகிலும் அந்த மொழி நடிகர்களை விட அதிகம் மார்க்கெட் உள்ளது என்பதும் உண்மை.அந்த மொழிகளில் கூட அதிரடி மசாலா படைகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. தலைவர் இதனை உணர்வார் என்று நம்புவோம்.
  .
  தலைவர் மூலம் தர்விக்கமுடியாத சில காரணங்களால் ksr அவர்களுக்கு சில சங்கடங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.
  .
  அடுத்த படமாக இல்லாவிட்டலும், தலைவருடன் ஒரு படத்திலாவது முழு சுதந்திரம் பெற்ற இயக்குனராக KS .ரவிகுமார் அவர்கள் இணையவேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் நிஜமான ஆசை.
  .
  Rajinikanth will rule Tamilnadu

  • Rajagopalan Rajagopalan says:

   I also recommend this.

  • RAJINI RASIGAN RAJINI RASIGAN says:

   இது நடக்கட்டும் …அனால் பெரிய பட்ஜெட் படமாக இல்லாமல் ..குறுகிய கால படமாக வேண்டும் என்றால் எடுக்கலாம் .ரவிக்குமார் …கடந்த 10 வருடமாக எதுவும் prove பண்ண வில்லை …நன்றி கடன்க்காக வேண்டும் என்றால் செய்யலாம் :)

 11. Joseph Joseph says:

  Sundarji…news that Kochadaiyaan music on 10th October…you have any confirmation…

  ———————————————-
  Till now i didn’t know any such news. If i come across anything i will let you know.
  thanks.
  - Sundar

  • RAJINI RASIGAN RAJINI RASIGAN says:

   சும்மா யாரோ கெளப்பி விட்ட நியூஸ் போல தான் தெரியுது …..ரகுமான் இந்த மாத quota சாருக்கான் படம். :)

 12. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

  I would like KV Anand to work with Super Star soon. This will certainly happen. Moreover fans do not prefer to KSR films nowadays and KSR does not have any stuff/creativity and above all there is no out of box thinking from KSR’s side. There is no substitute for KV Anand & Thalaivar combo. Let us hope all the very best.

 13. murugan murugan says:

  சுந்தர் ஜி - நீங்கள் சொல்வது போல் எது நடந்தாலும் அது நமக்கு விருந்து தான் - எனினும் தலைவரின் முடிவே இறுதியானது - பொறுத்திருப்போம் !!!

 14. vel vel says:

  Thalaivar should not act in SHANKAR,K.V anand,RAJAMOULI……..
  SHANKAR - Corruption and Glamor
  K.V anand - fits only for younger audience
  Rajamoli - no nativity touch
  Murugadoss - Tamilan perumai
  This will sure affect the box office RAJINI
  KSR deosn’t open the mouth and TAMILAN,TELUGU,KERALITE,HINDU,MUSLIM………..yethallam pathi pesa mattarrr………….

  RAJINI missed greatest oppotunity is RAMANAA……….very nice movie…….yellarum THALAIVAR CM postlaaa pakruthu nalaaaa…….v would b happy if he acts in MUDALVAN………..
  but RAMANAAA is RAMANAAAA no where mudhalvan can reach it….

  THALAIVAR is afraid of revolution and it will create a prob…..he wants only peace………

  we are heartly very very much wounded by him……….

  so lets him decide what he wants………

  • RAJINI RASIGAN RAJINI RASIGAN says:

   நண்பரே …அவர் ஒரு படம் கூட வேற மொழியில் முயற்சி செய்யவில்லை ..அப்பரும் எப்படி nativity touch இல்லை என்று கூறுகிறீர்கள் …சரி ஈ படம் தெலுகு வாடை அடிததுது ஆது ஓட வில்லையா….எந்த காட்சி தெலுகு படம் போல இருந்துது …வசனத்தை தவிர …:)…………ராஜமௌலி தமிழ் படங்களை 4 வருடமாக கூர்ந்து கவனிகிராறு ….அவருக்கு தெரியும் ….நம்ம ஆடீன்சே பத்தி ….sure ஹிட் …………:) தமிழ் படம் எடுத்தால் …..குருவி ..பாதி படம் அவர் படம் தான்….சிறுத்தை அவர் படம் தான் ….மாவீரன் ….ஈ ……மரியாதை ராமன ….இந்தியில் காப்பி அடித்தாகி விட்டது …..( சன் ஒப் சர்தார் ) …….தமிழில் வாங்கி வைத்து இருகிறார்கள் rights ….கஜேந்திர தெலுகுவில் அவர் இயக்கிய படம் தான் …..ஸ்டுடென்ட் no 1 ….அவர் படம் தான்………………………:) :D

 15. RAJINI RASIGAN RAJINI RASIGAN says:

  சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கப்போவதால், தற்போது மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி தெலுங்கில் தற்போது இயக்கி வரும் படத்தை விரைந்து முடிக்க வேண்டி ஷூட்டிங்கை துரிதப்படுத்திக்கொண்டிருக்கிறாராம்.
  *********************************************************

  மகேஷ் பாபு இப்போயுழு நடிக்கும் ஒரே படம் …தில் ராசு என்கிற தயாரிப்பாளர் தயாரிக்கும் வெங்கடேஷ் மற்றும் மகேஷ் நடிக்கும் படம் மட்டும் தான் …..வேற படம் நடிக்க வில்லை ….அதுத மகேஷ் படம் …டூகுடு என்கிற ஹிட் குடுத்த இயக்குனருடன் தான் நடிக்கிறார். ராஜ மௌலி வேற படம் செய்யவில்லை அறிக்கையும் விடவில்லை ….இந்தி ஈ இந்த வாரம் ரிலீஸ் ……..தெலுகு பிரபாஸ் நடிக்கும் …பெரிய பட்ஜெட் படம் …மாவீரன் போன்ற சரித்திர படம் தான் இரண்டு வருட பேச்சு அங்கே ………அந்த படம் எடுக்காத பட்சத்தில் …தலைவர் படம் வாய்ப்பு இருக்கிறது ….இரண்டு choise ஆனந்த் அல்லது ராஜமௌலி இருவரும் …updated அண்ட் இந்த trend காண இயக்குனர்கள் ….இவர்கள் தலிவருக்கு பொருத்தமான இயக்குனர்கள் …..:):)

 16. RAJA RAJA says:

  தலைவர் யார் படத்துல்ல நடிச்சாலும் பரவா இல்லை எங்களுக்கு தலைவர் நடிச்சு படம் வந்தாலே அது விருந்துதான்

 17. Kishore Kishore says:

  நல்ல நியூஸ் , அனால் கே.எஸ் ரவிக்குமார் உடன் கண்டிப்பாக தலைவர் ஒரு படம் பண்ணுவார்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates