You Are Here: Home » Featured, Flash from the Past » “ரஜினியும் நானும் சந்தித்துக்கொண்டால்?” — இசைஞானி இளையராஜா கூறுவது என்ன?

தொழில் ரீதியாக சூப்பர் ஸ்டாரும் இசைஞானியும் இணைந்து 17 வருடங்கள் ஆகின்றன என்றால் நம்பமுடிகிறதா? இதோ ‘வீரா’ நேத்தைக்கு வந்த மாதிரி இருக்கு. ஆனா அதுக்குள்ளே எத்தனை வருஷம் ஓடிபோச்சு!

1994 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று வெளியான ‘வீரா’ திரைப்படம் தான் ரஜினி - இளையராஜா காம்பினேஷனில் வந்த கடைசிப் படம். அதற்கு பிறகு இருவரும் இணையும் வாய்ப்ப்பு ஏற்படவேயில்லை.

(உங்களுக்கு தெரியுமா பாட்ஷா, முத்து, அருணாச்சலம், ஆகிய படங்களுக்கு இசையமைக்க இசைஞானி தான் முதலில் பரிசீலிக்கப்பட்டார் என்பது? ஏனோ சில காரணங்களினால் அது கைகூடவில்லை!)

படங்களில் தான் இருவரும் இணையவில்லையயே தவிர மன ரீதியில் இருவரும் இணைந்தேயிருக்கின்றனர். அப்படி இருவரையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இரண்டு: ஒன்று ஆன்மிகம். மற்றொன்று திருவண்ணாமலை.

குமுதத்தில் இசைஞானி இளையராஜா வாசகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். சும்மா வழ வழ கொழ கொழ என்பதே ராஜாவிடம் கிடையாது. நறுக்குத் தெறித்தாற்போல அவரது பதில்கள் அத்துனை வெளிப்படை. ஆகையால், இதுவரை விடை கிடைக்காமல் இருந்த பல விஷயங்களுக்கு இதன் மூலம் விடை கிடைத்து வருகிறது.

இவற்றுள், சூப்பர் ஸ்டார் பற்றி இசைஞானி கூறியிருக்கும் இரு பரபரப்பான பதில்களை பார்ப்போமா?

திருவண்ணாமலை பற்றி இசைஞானி கூறியுள்ள ஒரு அற்புதமான பதில் நமது புதிய தளமான  WWW.RIGHTMANTRA.COM ல் திருவண்ணாமலை பற்றி விரைவில் வரப்போகும் ஸ்பெஷல் பதிவு ஒன்றில் இடம்பெறும்!

(OK. இங்கே கடைசியில் நாம் தந்துள்ள Finishing Touch பகுதியை படிக்க மறக்காதீர்கள்!)

கேள்வி 1: ரஜினியை சந்தித்தால் என்ன பேசுவீர்கள்? (எஸ்.சூரிய நாராயணன், காஞ்சிபுரம்)

இசைஞானி இளையராஜா :

நானும் ரஜினியும் சந்தித்துக்கொண்டால் நாங்கள் பேசாத விஷயம் கிடையாது. பண்ணாத வேலை இருக்காது. எல்லாவற்றையும் பேசுவோம். ஜோக் அடிப்பேன். ரஜினியும் ஜோக் அடிப்பார். நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டேயிருப்போம்.கேள்வி: புது புது அர்த்தங்கள் படத்திற்கு பிறகு நீங்கள் பாலசந்தர் படங்களுக்கு இசையமைக்கவில்லையே, ஏன்? (ஷாலினி ராஜன், மும்பை.)

இசைஞானி இளையராஜா :

‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்திற்கு ரீ-ரெக்கார்டிங் நடக்க வேண்டிய நேரத்தில் இங்கே ஸ்ட்ரைக் இருந்தது. அதனால் ‘சிவா’ என்கிற படத்துக்காக நான் பாம்பே போயிருந்தேன். அப்போ கவிதாலயாவிலிருந்து அனந்தும் பிரமிட் நடராஜனும் வந்து என்னைச் சந்திச்சாங்க. ‘சார், ‘புதுப்புது அர்த்தங்கள்’ ரிலீஸ் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. ஆனால் ஸ்டிரைக் நடந்துகிட்டிருக்கு. நீங்களும் பாம்பேயிலிருந்து வர முடியாது. நாங்க உங்களுக்காக காத்திருந்து ரெக்கார்ட் பண்ணுறதுக்கும் டைம் இல்லாமல் இருக்கு. அதனால் நாங்க ட்ராக் எடுத்து போட்டுக்குறோம்,’ என்றார்கள்.

‘அப்போ உங்களுக்கு டைட்டிலில் ‘இளையராஜா’ என்று பெயர் மட்டும்தான் போட வேண்டும். என் மியூசிக் உங்களுக்கு தேவையில்லைன்னு இதுல இருந்து தெரியுது. என்னோட பெயரை வியாபாரத்திற்காக பயன்படுத்திக்கப் போறீங்க. இதுக்கு டைரக்டரும் உடந்தையா இருக்காரு இல்ல. நீங்க பண்றதை பண்ணிக்கோங்க,’ன்னு சொல்லி விட்டுவிட்டேன். அப்புறம் ரொம்ப நாள் கழித்து கவிதாலயாவிலிருந்து வந்து மியூசிக் பண்ண சொன்னபோது ‘இவங்களுக்கு நம் பெயர் மட்டும்தான் முக்கியமா இருக்கு. நம்மோட இசை இல்ல, அதனால் நாம் ஏன் மியூசிக் பண்ணணும்னு நினைச்சேன். அப்புறம் ரஜினியை வெச்சு படம் எடுத்தபோது ரஜினியையே பாலசந்தர் என்கிட்ட அனுப்பினார். ஆனால் ‘ஏன் நீங்க அவர் படத்துக்கு இசையமைக்க மறுத்தீங்கன்னு’ ரஜினியும் என்கிட்ட கேட்கல. நானும் சொல்லல. அவர் என் படத்துக்கு மியூசிக் பண்ணணும்னுதான் கேட்டார். பாலசந்தரே ரஜினிகிட்ட நடந்த விஷயங்களை சொல்லி என்கிட்ட அனுப்பியிருக்கலாம். இல்ல ரஜினியாவது கே.பி சாரை நான் பேச சொல்றேனு சொல்லியிருக்கலாம். எதுவும் நடக்கல. அதனால ரஜினி கேட்டும் நான் அந்த படத்துக்கு மியூசிக் பண்ணல. இதுதான் காரணம்.

(Finishing Touch : சூப்பர் ஸ்டார் ரொம்ப ஜாக்கிரதையா இந்த விஷயத்தை அணுகியிருப்பது மிகத் தெளிவாக தெரிகிறது. தான் ஏதாவது நல்லது செய்யப்போக இருவருக்குள்ளும் (கே.பி. & இசைஞானி) இருக்கும் மனவருத்தம் இன்னும் அதிகமாகிவிடப்போகிறது… நம்ம குருநாதர் என்ன சொன்னாரோ அதை மட்டும் செய்வோம். மத்தது ஆண்டவன் விட்ட வழி என்றே இதை அவர் அணுகியிருப்பதாக எனக்கு படுகிறது. மற்றபடி ரஜினி எள்ளளவும் ஈகோ பார்ப்பவரல்ல என்பது நமக்குத்தான் தெரியுமே!)

6 Responses to ““ரஜினியும் நானும் சந்தித்துக்கொண்டால்?” — இசைஞானி இளையராஜா கூறுவது என்ன?”

 1. Sankaranarayanan Sankaranarayanan says:

  மேன் மக்கள் மேன் மக்களே.

 2. murugan murugan says:

  தகவல்களுக்கு மிக்க நன்றி சுந்தர் ஜி !!!
  புகைப்படங்கள் அருமை !!!
  தலைவரை நெற்றியில் திருநீற்றோடு காண்பதே ஒரு கண்கொள்ளா காட்சி !!!
  நம்மையும் அறியாமல் நமது இரு கரங்கள் குவிவதை உணரமுடிகிறது !!!
  இந்த மனிதரின் முகத்தினில் தான் என்ன ஒரு வசீகரம் - உலகின் மூளை முடுக்கில் உள்ள அனைவரையும் தன்பால் சுண்டி இழுக்கிறது !!!
  தலைவர் - உலகுக்கு கடவுள் அளித்த வரம் !!!

 3. Thiruvanmiyur Sriarm Thiruvanmiyur Sriarm says:

  சிகரங்களுக்கிடையில் சிக்கல் வந்தால் தீர்த்துவைப்பது சிரமம்தான். ஈகோ பார்க்காமல் யார் முதலில் விட்டுக்கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்து பிரச்னை முடியும் அல்லது நீளும். நம் தலைவர் இதற்க்கு விதிவிலக்கு. இருந்தாலும் கேபி படத்திற்கு இசையமைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். தலைவர் சொன்னது போல் Thaane Thaanepe likha hai khanewale ka naam!

 4. RAJA RAJA says:

  ஒரு சில கேள்வி பதில் களை நானும் படித்தேன் ,சும்மா கலக்குறார் நெத்தில அடிச்சா மாதிரி தான் தெளிவா அது இது நு மாதிலம் கிடையாது பிடிச்ச பிடிச்சது அப்படி நு செம தில் இளையராஜா அவர்களுக்கு ,கண்டிப்பாக நீங்களும் எங்கள் தலைவரும் ஒன்று சேர்ந்து ஒரு படம் செய்வீர்கள் அது கலக்கும் ,இதுக்கு நீ தானே என் பொன் வசந்தம் பாடல்களே சாட்சி என்ன இசை சூப்பர் சார்

 5. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

  This clearly demonstrates how Thalaivar tackles issues without harming/hurting any one. He does not do anything for his own benefit. That is the reason he is emerging as No.1 in Asia. May God bless Thalaivar to make us happy.

 6. Kumar Kumar says:

  For chandramukhi also, thalaivar suggested Illayaraja to the director but P.vasu chose Vidyasagar…

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates