









You Are Here: Home » Featured, Happenings » நண்பரின் மகள் தயாரிக்கும் படம் - ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு திடீர் விசிட் செய்த ரஜினி! இசைஞானியுடன் சந்திப்பு!
நண்பர்களுக்கு சர்ப்ரைஸ் தருவதில் ரஜினிக்கு நிகர் ரஜினியே. சமீபத்தில் அவர் அப்படி சர்ப்ரைஸ் தந்தது மோகன்பாபுவுக்கும் அவரது மகள் லக்ஷ்மி மஞ்சுவுக்கும்.
தெலுங்கு நடிகர் மோகன் பாபு சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ரஜினி அவர்களை வாடா போடா என்று அழைக்கும் அளவிற்கு உரிமை பெற்றுள்ள மிகச் சிலருள் மோகன் பாபுவும் ஒருவர்.
அவரது மகள் லக்ஷ்மி மஞ்சு, தற்போது குமார் நாகேந்திர என்பவற்றின் இயக்கத்தில் மறந்தேன் மன்னித்தேன் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதற்கு இசை யார் தெரியுமா? இசைஞானி இளையராஜா!!
சமீபத்தில் சென்னை வந்திருந்த மோகன்பாபு சூப்பர் ஸ்டாரை தொலைபேசியில் அழைக்க, இருவரும் பரஸ்பரம் நல விசாரித்துள்ளனர். அப்போது லக்ஷ்மி மஞ்சு படத்தின் முன்னேற்றம் பற்றி கேட்ட சூப்பர் ஸ்டார், நண்பருக்கு அவர் அறியாமல் இன்ப அதிர்ச்சி தர முடிவு செய்திருக்கிறார்.
உடனே, படத்தின் ரெக்கார்டிங் நடைபெறும், இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு (பிரசாத் ஸ்டூடியோவில் தான் இளையராஜா கம்போஸ் செய்வார்) காரில் கிளம்பிவிட்டார். அங்கு திடீரென சூப்பர் ஸ்டாரை பார்த்த மோகன்பாபு, லக்ஷ்மி மஞ்சு, மனோஜ் மஞ்சு, உள்ளிட்ட படக்குழுவினருக்கு ஒரே மகிழ்ச்சி. இசைஞானி வேறு இருந்திருக்கிறார். கேட்கவேண்டுமா என்ன?
இது பற்றி படக்குழுவில் ஒருவர் தெரிவித்ததாவது : “ரஜினி சார் வந்து, சர்ப்ரைஸ் கொடுத்தார். படத்தின் ரீ-ரெக்கார்டிங்கை பார்த்தார். லக்ஷ்மி மஞ்சு, இயக்குனர் நாகேந்திரா, இசைஞானி இளையராஜா, உள்ளிட்ட படக்குழுவினருடன் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். குறிப்பாக படத்தின் ஒளிப்பதிவாளர் பழனி குமாரின் பணியை வெகுவாக பாராட்டினார்”
சூப்பர் ஸ்டார் தந்த இந்த இன்ப அதிர்ச்சி பற்றி லக்ஸ்மி மஞ்சு கூறியதாவது : “படம் குறித்த எனது நம்பிக்கை மற்றும் என் மீது எனக்கிருந்த நம்பிக்கை ரஜினி அங்கிளின் வாழ்த்துக்களால் இரண்டு மடங்காகிவிட்டது” என்று கூறுகிறார்.
[END]
தகவலுக்கு நன்றி ,,தினமும் எதிர்பார்க்கிறோம் ,,,,
KOCHADAIYAAN audio ayuthapoojaku varuma? How is maatraan?
தலைவர் இப்போது அதிகமாக வெளியே வர தொடங்கியுள்ளார்!!! நல்லது
நான் ஒரு ரஜினி ரசிகன் பல வருடங்களாக இந்த வெப்சைட் டை பார்த்து படித்துவருகிறான் இதுதான் முதல் மெயில் நீங்கள் தரும் நியூஸ் மிகவும் நன்றாக உள்ளது.
———————————-
நெஞ்சார்ந்த நன்றி!
- சுந்தர்
இசைஞானி &தலைவரை தொடர்ந்து ஒன்றாக பார்ப்பது ,மிகவும் சந்தோஷமாக உள்ளது .
சக கலைஞர்களை ஊக்குவிப்பதில் தலைவருக்கு நிகர் தலைவரே
நன்றி சுந்தர்
kochadaiyaan audio lunch poster eantru relase ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
சுந்தர் அவர்களே:
தலைவர் சபரிமலைக்குப் போகிறாரா?
-மிஸ்டர் பாவலன்
—————————————————-
இல்லையென்று தான் நினைக்கிறேன். சும்மா ஒப்புக்கு மலைக்கு அவர் செல்பவரல்ல அவர். ஆத்மார்த்தமாக இருக்கும் அவரது விரதம். அவரின் உடல்நிலைக்கு கல்லும் முள்ளும் நிறைந்த மலையேறுவது ஒத்துக்கொள்ளுமா? மேலும் 48 நாட்கள் விரதமெல்லாம் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.
- சுந்தர்
தலைவரை அடிக்கடி நிகழ்சிகளில் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது
தலைவர் கருப்பு வேஷ்டி கட்டி உள்ளார் ஒரு வேலை மாலை போட்டு இருக்கிறாரோ
Hi All,
கம்பன் விழா going to be telecast in MEGA tv . They didn’t announce the date and time.
Tharun
Nice snaps and update Sundar. Thanks a million. It is quite evident that Thalaivar & Isai Gnanni are going to work soon for a new film.Wait & see. My thought will come into reality soon.
நன்றி சுந்தர் ஜி சார்.