









You Are Here: Home » Featured, Flash from the Past » தனிப்பட்ட முறையில் விமர்சித்த மனோரமா; என்ன செய்தார் ரஜினி? — “தீமைக்கும் நன்மை செய்” — # 2
ரஜினி அவர்களின் அபிமானிகள் மற்றும் ரசிகர்கள் அவரை திரையில் ரசிப்பதோடு மட்டும் அல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையில் திரு.ரஜினி கடைபிடித்து வரும் நற்குணங்களையும் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த புதிய தொடர் துவக்கப்பட்டது. நமது தளத்தில் மிக அதிக ஹிட்ஸ் பெற்ற பதிவுகளில் “தீமைக்கும் நன்மை செய்” முதல் பகுதியும் ஒன்று என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அது தவிர வேறு சில முக்கிய விஷயங்களை உங்க கிட்டே சொல்லணும். சந்நியாசம் வாங்க முடிவு பண்ணி எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு காசிக்கு கிளம்புற நேரத்துல வடை பாயசத்தோட உங்களுக்கு விருந்து பரிமாறினா உங்களுக்கு எப்படி இருக்கும்? இந்த கடவுளுக்கு இதே வேலையாப் போச்சுங்க.. கொஞ்சம் பொறுங்க விபரத்தை
சொல்றேன்… ஒ.கே.?
————————————————————————————————————————————————
Friends, if you happen to see any of our content ‘Copy & Pasted’ somewhere else including FB and other blogs please insist them to give courtesy for our website. Posting our content without giving credits to our website is strictly prohibited. Our contents are the result of my sheer hard work and simply stealing it, is a shameful activity. If the same persists, LEGAL ACTION would be taken against those indulge in such activities.
And at the same time we would like to express our SINCERE THANKS to those who have duly acknowledged us by mentioning the source.
- Sundar, OnlySuperstar.com
————————————————————————————————————————————————
ஆச்சி மனோரமா ரஜினி அவர்களை விமர்சித்த நிகழ்வுகளை பார்ப்போமா??
1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சமயம். அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரத்தில் உச்சகட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரம்.
மறுபடியும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று ரஜினி அவர்கள் கூறி, பின்னர் அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்களில் தி.மு.க. - த.மா.கா. கூட்டணியை அமெரிக்காவிலிருந்தபடியே ரஜினி அவர்கள் உருவாக்கி அதற்கு ஆதரவும் தெரிவித்திருந்தார். ரஜினி அலை தமிழகம் முழுதும் பயங்கரமாக வீசிக்கொண்டிருந்ததால் தி.மு.க. - த.மா.கா. கூட்டணிக்கு அது ஒன்றே போதுமானதாக இருந்தது. பிரச்சாரத்தில் அண்ணாமலை சைக்கிள் அது இது என்று தூள் கிளப்பிக்கொண்டிருந்தனர் அக்கூட்டனியினர்.
கட்சி வேறுபாடுகளை எல்லாம் மறந்து ரஜினி ரசிகர்கள் மேற்படி கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். தி.மு.க.கூட்டணியின் வெற்றி கிட்ட தட்ட உறுதி செய்யப்பட்டது என்றே பத்திரிக்கைகள் எழுதின.
செய்வதறியாது கைகளை பிசைந்த அதிமுக மேலிடம், ஆச்சி மனோரமாவை களமிறக்கியது. (அப்போது ஆச்சி அவர்கள் சில பிரச்சனைகளில் சிக்கியிருந்ததால், அவரை மேற்படி பிரச்சாரத்தில் ஈடுபடவைக்கும் பணி ஆளுங்கட்சிக்கு சுலபமாக இருந்ததாக பத்திரிக்கைகளில் கூறப்பட்டது).
அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஆச்சி… ரஜினி அவர்களை மேடைக்கு மேடை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். அவ்விமர்சனங்கள் அரசியல் ரீதியாக இல்லாமல் தனிப்பட்ட ரீதியில் அமைந்திருந்தன என்பது தான் விஷயமே.
அப்போது (1996) நான் திருச்சியில் திருவானைக்காவலில் இருந்தேன். ஆச்சி மனோரமாவின் முதல் பொதுக்கூட்டம் சன்னதி வீதியில் நாங்கள் இருந்த வீட்டுக்கு பக்கத்துல தான் நடைபெற்றது. அதனால என்ன பேசுகிறார்கள் என்று கேட்க ஒரு எட்டு போயிருந்தேன். அதிமுக அரசின் சாதனைகளை (?!) பட்டியலிட்ட மனோரமா, அதற்கு பிறகு ரஜினி அவர்களை பிடி பிடி என்று பிடிக்க ஆரம்பித்தார்.
“நீங்க தலைவர்னு சொல்றீங்களே.. தலை……வர்…வர்…அவர் அமெரிக்காவுல என்ன பண்ணாரு தெரியுமா? என்னப்பா உனக்காக இங்கே தமிழ்நாட்டுல எல்லாரும் காத்துக்கிட்டுருக்காங்க.. நீ அமெரிக்காவுல என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்னு கேட்டா… “நான் குடிச்சேன்… சூதாடினேன்… அப்படின்னெல்லாம் சொல்றாரு. இவரெல்லாம் உங்க வழிகாட்டியா…..? என்ன தகுதி இருக்கு ஒரு குடிகாரனுக்கு அம்மாவை குறை சொல்ல? இவருக்கு இன்னொரு பேர் இருக்கு தெரியுமா?” அதற்கு மேல் அவர் பேசிய வார்த்தைகள் எழுத்தில் ஏற்ற முடியாது.
ரஜினி அவர்களை மேலும் தனிப்பட்ட ரீதியில் மனோரமா வசைப்பாடிக்கொண்டிருக்க, அங்கு நின்றிருந்த கூட்டம் அதை கேட்டு ஆர்பரித்தது. (இது தாண்டா உலகம்!). கேட்டுக்கொண்டிருந்த எனக்கு உட்பட நம் ரசிகர்கள் பலருக்கு ஆத்திரம் தலைக்கேறியது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. தலைமை மன்றத்தில் சத்தியநாராயணா அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த ரசிகர் மன்றப் பிரமுகர்கள் உடனே சத்திக்கு ஃபோன் போட்டு விஷயத்தை கூறி உடனே ஏதேனும் செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போல்லாம் மொபைல் கிடையாது. எஸ்.டி.டி. தான். தலைவர் வீட்டுக்கு ஃபோன் செஞ்சி விஷயத்தை சொன்னோம். அவங்க பெரிசா ரீயாக்ட் பண்ணலை. இவங்க எப்பவுமே (??!!) இப்படித்தாண்டான்னு வெறுத்துப் போய் அப்புறம் ரசிகர்களோட உணர்வை தலைவருக்கு தெரியப்படுத்தனும் என்பதற்காக எங்கள் பகுதியில் உள்ள ரசிகர்களை திரட்டிக்கொண்டு நேரே ஸ்ரீரங்கம் தபால் தந்தி அலுவலகத்துக்கு போய், சுமார் 50 பேர் தலைவர் வீட்டுக்கு MANORAMA ABUSING THALAIVAR PERSONALLY. FANS FEEL HURT. PLS TAKE LEGAL ACTION AGAINST HER அப்படின்னு தந்தி கொடுத்தோம்.
நமது படங்களில் எல்லாம் பாசமிக்க தாயாகவே மனோரமாவை பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு ரஜினி மீதான அவரது தாக்குதல்களை ஜீரணிப்பது கஷ்டமாக இருந்தது. ஆனால் இந்த தகவல்கள் சூப்பர் ஸ்டாரை எட்டியபோது அவர் கண்டுகொள்ளவே இல்லை. ரியாக்ட் செய்யவும் இல்லை.
மனோரமா மேல நாங்க ஏதாவது கேஸ் போடா முடியுமான்னு ஆலோசனை பண்ணி லாயர்ஸை எல்லாம் போய் பார்த்தோங்கிறது தனிக்கதை.
நமது படங்களில் எல்லாம் பாசமிக்க தாயாகவே மனோரமாவை பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு ரஜினி மீதான அவரது தாக்குதல்களை ஜீரணிப்பது கஷ்டமாக இருந்தது. ஆனால் இந்த தகவல்கள் சூப்பர் ஸ்டாரை எட்டியபோது அவர் கண்டுகொள்ளவே இல்லை. ரியாக்ட் செய்யவும் இல்லை.
அந்த சமயம் குமுதம், விகடன், உள்ளிட்ட பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்த ஆச்சி, தன்னோட மேடைப் பேச்சை நியாயப்படுத்தினாங்க.
குமுதத்துல ரஜினியோட அட்டைப் படம் போட்டு, “இவரெல்லாம் ஒரு வழிகாட்டியா?”ன்னு மனோரமா சொல்ற மாதிரி பேட்டியே வந்துச்சு. ஆச்சியின் செயலால் திரையுலக சீனியர்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர்.
குமுதத்துல ஒரு பக்கம் மனோரமாவோட காரசாரமான பேட்டி, மறுப்பக்கம் தலையங்கத்துல சூப்பர் ஸ்டாரோட சன்.டி.வி. பேட்டியை ஆஹா.. ஓஹோன்னு… புகழ்ந்து தள்ளியிருந்தாங்க. அப்போ குமுதம் பொறுப்பாசிரியரா மாலன் இருந்தாரு. அதுல, “தேர்தல் பிரச்சாரம் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று ரஜினி வழிகாட்டுகிறார், பின்பற்றுங்கள் அரசியல் தலைவர்களே”ன்னு சொல்லியிருந்தாங்க. (அந்த ஸ்பீச் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு… ONE OF THE WONDERFUL SPEECH OF THALAIVAR!)
குமுதத்துல ஒரு பக்கம் மனோரமாவோட காரசாரமான பேட்டி, மறுப்பக்கம் தலையங்கத்துல சூப்பர் ஸ்டாரோட சன்.டி.வி. பேட்டியை ஆஹா.. ஓஹோன்னு… புகழ்ந்து தள்ளியிருந்தாங்க. அப்போ குமுதம் பொறுப்பாசிரியரா மாலன் இருந்தாரு. அதுல, “தேர்தல் பிரச்சாரம் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று ரஜினி வழிகாட்டுகிறார், பின்பற்றுங்கள் அரசியல் தலைவர்களே”ன்னு சொல்லியிருந்தாங்க. (அந்த ஸ்பீச் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு… ONE OF THE WONDERFUL SPEECH OF THALAIVAR!)
இதுக்கு பிறகு ரஜினி அலை சுழட்டி அடிச்சதில, அதிமுக படுதோல்வி அடைஞ்சி, பர்கூர்ல முதல்வர் ஜெயலலிதாவே தோத்தாங்க. திமுக-தமாக கூட்டணி மிகப் பெரும் வாக்கு வித்தியாசங்களில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பத்திரிக்கைகளில் ரஜினி அவர்களே கட்சி ஆரம்பிச்சு ஜெயிச்ச கணக்கா ரஜினியோட போஸ்டரை தான் ரிசல்ட் அன்னைக்கு போட்டாங்க. (ஹூம்… அது ஒரு கனாக்காலம்!)
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக பதவியேற்றவுடன், ஆச்சிக்கு யாரும் தர்றாமலே
சோதனைகள் ஏற்பட துவங்கிச்சு. அவரை ஒப்பந்தம் செய்திருந்த பல படங்களில் இருந்து நீக்கினாங்க. பலர் அட்வான்சை திரும்ப வாங்கிட்டாங்க. அவங் வந்த சக்தி மசாலா விளம்பரத்துல இருந்து கூட அவங்களை தூக்கிட்டாங்க (இது நிச்சயம் தி.மு.க. சொல்லி இல்லே. மக்களோட உணர்வுகளுக்கு எதிரான ஒருத்தரை நாம எதுக்கு படத்துல நடிக்கவைக்கணும் என்கிற சம்பந்தப்பட்டவர்களின் தயக்கம் தான் காரணம்.)
ஒரேயடியாக பட வாய்ப்புக்களும், விளம்பர வாய்ப்புக்களும் வற்றிப் போய்விட, ஆச்சி கதி கலங்கிவிட்டார். என்ன செய்வதென்று அவருக்கு தெரியவில்லை. அதிமுகவும் படுதோல்வியடைஞ்சி முடங்கிப் போயிருந்தபடியால் அவருக்கு அடுத்து என்ன என்றே புரியவில்லை. அப்போது தான் தான் எவ்ளோ பெரிய தவற்றை செய்தோம் என்று புரிந்தது.
இண்டஸ்ட்ரியின் மூத்த கலைஞரான அவருக்கு ஏற்பட்ட நிலைமை கண்டு வருந்திய சூப்பர் ஸ்டார், அவரை தமது ‘அருணாசலம்’ படத்தில் நல்ல தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்தார். அருணாச்சலம் படத்தில் மனோரமா பாத்திரம் இல்லையென்றாலும் அது உருவாக்கப்பட்டு படத்தில் வைக்கப்பட்டது. காரணம், மனோரமா அவர்கள் திரையில் நீண்ட வருடங்கள் நடிக்கவேண்டும்.. அதற்கான பிள்ளையார் சுழியை தாமே போடலாமே என்கிற எண்ணம் ரஜினி அவர்களுக்கு ஏற்பட்டது தான்.
‘அருணாச்சலம்’ பட கதை விவாதத்தின் போது ஒருநாள், சுந்தர் சி. சூப்பர் ஸ்டாரிடம், “படத்தில் ஆச்சி உங்க கிட்டே மன்னிப்பு கேட்பது போல ஒரு ஸீன் வெச்சிடலாமா?” என்று கேட்க, சூப்பர் ஸ்டார் பதறிப்போய், “நோ…நோ… ஆச்சி ரொம்ப பெரியவங்க. சீனியர் ஆர்டிஸ்ட். அந்த மாதிரி ஏதாவது காட்சி வெச்சு அவங்க மனசை கஷ்டப்படுத்திடாதீங்க” என்று பெருந்தன்மையாக கூறி, அந்த எண்ணத்திற்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தலைவர் நிலையில், வேறு எந்த நடிகராவது இருந்திருந்தால், ஆச்சி அவர்களது காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல கூட காட்சி வைத்திருப்பார்கள். (இப்போ வடிவேலு நிலைமையை நினைச்சு பார்த்தீங்களா?)
“படத்தில் ஆச்சி உங்க கிட்டே மன்னிப்பு கேட்பது போல ஒரு ஸீன் வெச்சிடலாமா?” என்று கேட்க, சூப்பர் ஸ்டார் பதறிப்போய், “நோ…நோ… ஆச்சி ரொம்ப பெரியவங்க. சீனியர் ஆர்டிஸ்ட். அந்த மாதிரி ஏதாவது காட்சி வெச்சு அவங்க மனசை கஷ்டப்படுத்திடாதீங்க” என்று பெருந்தன்மையாக கூறி, அந்த எண்ணத்திற்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
தலைவர் ஏன் ஆச்சியிடம் அந்தளவு பெருந்தன்மையாக நடந்துகொண்டார் என்பதற்கான காரணம் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடைபெற்ற ஆச்சி அவர்களின் பாராட்டு விழா மேடையில் தெரிந்தது.
முதல்வர் கருணாநிதி அவர்கள தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார், “ஆச்சி அவர்களுடன் ‘குப்பத்து ராஜா’ படத்தில் முதல்முறையாக நடித்தேன். அப்போது என் தமிழ் உச்சரிப்பு, ஸ்டைல் இவற்றையெல்லாம் பார்த்து “இப்படியே பேசுப்பா; நல்லா இருக்கு’ என்று சொல்லி என்னை ஊக்குவிச்சாங்க. ஒருசமயம் “பில்லா’ படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் ஒரு குப்பத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் படத்துல டான்ஸ் பண்ற மாதிரி ஒரு சீனை ஷூட் பண்ணிகிட்டுருந்தாங்க. கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக்கிட்டுருந்த ஒருத்தர் “பரவாயில்லையே; பைத்தியம் நல்லா ஆடுதே” என்று குரல் கொடுத்தார். மெண்டல் டிப்ரெஷன் காரணமாக நான் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்ட சமயம் அது. அந்தக் காலகட்டத்தில் என்னைப் பற்றி ஒருவிதமாக செய்திகள் வந்துகொண்டிருந்தன. அப்போது என் அருகில் இருந்த மனோரமா ஓடிப் போய் அந்த நபரின் சட்டையைப் பிடித்து அடித்து, “அவரை படப்பிடிப்பிலிருந்து வெளியேற்றினால்தான் நடிப்பேன்’ என்று கூற அந்த நபர் வெளியேறிய பின்னர் தான் படப்பிடிப்பே நடைபெற்றது. அந்த அளவுக்கு என் மீது அன்பு காட்டியவர் ஆச்சி. இக்கட்டான நேரத்தில் என்னை ஒரு முறை அனைச்சவங்க அவங்க. அவங்க நூறு முறை என்னை அடிச்சாலும் ஏத்துக்குவேன்” என்றார்.
(ஷூட்டிங் கூட்டத்துல அந்த வக்கிரம் பிடிச்சவன் அப்படி குரல் விட்ட அந்த நேரத்துல தலைவருக்கு எப்படி இருந்திருக்கும்? நூறு பேருக்கு மத்தியில் உடைகளை கலைந்ததைப் போன்ற அவமானம் அல்லவா அது? ஐயோ.. நினைக்கவே நெஞ்சு பதறுகிறது! அந்த மாதிரி ஏளனப் பேச்சுக்களில் இருந்தெல்லாம் மீண்டு வந்து மக்கள் மகுடம் தர தயாராக இருந்தபோதும் அதை மறுதலித்துவிட்டு, பலவருடங்கள் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாக வீற்றிருக்கிறார் என்றால் அவரது வில் பவர் எந்தளவு இருந்திருக்கவேண்டும்? யோசிச்சு பாருங்க!)
இந்த சம்பவத்தை படிச்சதுலயிருந்து புரியுதா… தன்னை பற்றிய ஆச்சி அவர்கள் அரசியல் நிர்பந்தத்தில் பேசிய ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் ரஜினி அவர்கள் ஏன் சட்டை செய்யவில்லை என்று?
அதற்கு பிறகு தமிழகத்தில் இரண்டு முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. முதல்வர் ஜெயலலிதா மீது மனோரமா அவர்கள் எப்போதும் போல தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டி வருகிறார். ஆனால் அரசியல் பரபரப்புக்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
தற்போது கூட ஆச்சி அவர்களின் உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது ரஜினி அவர்கள் ஃபோன் செய்து விசாரித்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் மனோரமா.
(அடுத்து… பாரதிராஜா!)
————————————————————————————————————————————————
Visit www.rightmantra.com, our new website dedicated to Spirituality, Self-Development, Health & Moral values! Thank you!!
- Sundar
————————————————————————————————————————————————
[END]
ரஜினிகத் இஸ் தி ஸ்டார் ஒப் தி millenium
Thalaivarku rempa peria manasu tan
Thalaivarin mannikum manam yarukum varathu.
சூப்பர் போஸ்ட் சுந்தர் ஜி..
அண்மையில் ஒரு செய்தி கேள்விபட்டேன்.. நம் தலைவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே தன்னை தேடி வந்த டாக்டர் பட்டதை வேண்டாம் என்று சொன்னவர்..
FB இல் இதை பற்றி படித்ததாக ஞாபகம்..
இதை பற்றி செய்தி நம் தலத்தில் சற்று விரிவாக சொல்லவும்..
என்றும் தலைவர் ரசிகன்
விஜய்
——————————————————
இது பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். சர்வரை மாற்றும்போது அந்த பக்கங்கள் காணமல் போய்விட்டது. Anway விரிவாக தருகிறேன். Just wait.
- சுந்தர்
தலைவா
உங்க அளவுக்கு எங்க யாருக்கும் பொறுமையோ சகிப்பு தன்மையோ இல்லை…. கண்டிப்பா அதா வளர்த்துக்க நாங்க முயற்சி பண்றோம்
அருமையான பதிவு சுந்தர் சார்
அடுத்த பதிவு காக காத்திருக்கிறேன்
————————————-
ரஜினி அவர்களின் ஸ்டைலை பின்பற்றுவதைவிட அவரது லைஃப் ஸ்டைலை பின்பற்றுபவனே உண்மையான ரசிகனாக இருக்கமுடியும். அந்த வகையில் உங்கள் முயற்சி வெற்றியடைய வேண்டுகிறேன்.
- சுந்தர்
மன்னிக்கும் மனப்பான்மை இறைவனின் குணம்!! அது என் தலைவனுக்கு அதிகாமாகவே உள்ளது!! எதிரிகளை தன் அன்பாலே நண்பர்களாகும் ஒரே உன்னத மனிதர் தலைவர் ரஜினிகாந்த்
தலைவரின் அரசியல் பற்றிய செய்தியை கேட்கும்பொழுது, ஒருவித அசுரபலம் வந்துவிடுகிறது.
.
தலைவரின் மக்கள் சக்தி இன்னும் எதனை நாட்களுக்கு தான் சினிமாவையே நோக்கி இருக்க முடியும்??? எனக்கு புரிகிறது தமிழகத்தில் நிச்சயம் 2016 இகபெரிய அரசியல் புரட்சி வெடிக்கும்.
.
நடந்த ஆட்சியும், நடக்கும் ஆட்சிகளின், இன்னல்களை எதனை ஜென்மம் எடுத்தாலும் மக்களால் மறக்க முடியாது.
.
இதனை ஆண்டுகளுக்கு பிறகு தலைவர் அரசியல் பிரவேசம் செய்ய அருமைய நேரம் நெருங்கி வருகிறது!!! தலைவர் இதனை உணர்ந்து ரசிகர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
.
ஆண்டவா தலைவருக்கு உத்தரவிடு !!!! தலைவா எங்களுக்கு உத்தரவிடு !!!!
.
அது சரி, சுந்தர்ஜி அது என்ன வடை பாயாச விருந்து ???? கேட்க்க மனமெல்லாம் ஆவல்!!
.
Rajini will rule Tamil Nadu
Sundar Sir,
Tears in my eyes, A man with a big heart. Can u post articles on some infos i mailed you?
———————————————
Ragul, surely will consider your all requests and post article.
thanks.
- Sundar
சுந்தர் இது மிகவும் உணர்வுபூர்வமான பதிவு ,அந்த நேரத்தில் என்னைப்போன்ற ரசிகர்கள் மனதளவில் சொல்லமுடியாத கவலையடைந்தோம் ,ஆனால் தலைவர் தன் நேர்மையால் அனைத்தையும் வெற்றிகொண்டு ,இளையர்களுக்கு கலிகாலத்திலும் நல்ல தலைவராக திகழ்கிறார் .சுந்தர் என்னப்பா அது வடா பாயசம் ,கற்பன எங்கோயோ எல்லம்போகுதே ,,,,,,,,,
அருமையான பதிவு சுந்தர்..
இன்று நிறைய பேருக்கு அந்த சூழ்நிலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
நான் அப்போது திருச்சியில் இருந்தேன்..
எங்களுக்கு(நமக்கு) அனைவரும்(மக்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள்) மிக பெரிய ஒரு மதிப்பு தந்து கொண்டிருந்த தருணம்.. சட்டை காலரை தூக்கி விட்டு திரிந்த நேரம் அது.. அது திரும்ப வாராதோ!!!!!!!!!!!
யார் எந்த மேடையில் பேசினாலும் நம் தலைவரை பற்றி பேசாமல் இறங்க மாட்டார்கள்..
அந்த தருணத்தில் தான் மனோரமா அவர்கள் யாரோ சொல்லி சூழ்நிலை காரணமாக, செய்வது தெரியாமல் தேனீ கூட்டில் கை வைத்து விட்டார்..
பின் நன்றாக அனுபவித்தார்..
சுந்தர் சொன்னது போலவே நாங்களும் நூறு பேர் கொதித்து போய் தலைவருக்கு தந்தி அனுப்பினோம்..
மனோரமா அவர்கள் தேர்தல் முடிவுக்கு பிறகு சுந்தர் சொன்னது போலவே எல்லா விளம்பரத்தில் இருந்து தூக்க பட்டார்..
அது போலவே கிட்ட திட்ட 20 படங்களில் இருந்து தலைவரை எதற்கு தேவை இல்லாமல் மனசை கஷ்ட படுத்த வேண்டும் என்று (எதிர்ப்பானேன் என்று) தூக்க பட்டார்..
11 மாதங்கள் மனோரமா அவர்கள் எந்த மீடியாவிலும் வர வில்லை.. ஒதுக்கி வைக்க பட்டார்..
ஆனால் தலைவர் “ஒரு முறை தாங்கிய கை எத்தனை முறை அடித்தாலும் வாங்கி கொள்வேன்” என்பது போல மனோரமாவை தனது அருணாசலம் படத்தில் ஒரு character உருவாக்கி நடிக்க வைத்தார்..
மனோரமாவை பாராட்டும் விழா நடந்த பொது அவரே தான் செய்த தவறை கண்ணீர் வடித்து ஒத்து கொண்டார்..
“இன்னா செய்தாரை” என்று தொடங்கும் குறளுக்கு தலைவர் உயிர் கொடுத்தார்..
இது மாதிரி பல விஷயங்கள் தலைவர் பார்த்து விட்டார்..
ஆனால் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல் ஒரு யோகி போல வாழ்கிறார்..
மற்றவர்களை தன் சுயநலனுக்காக பயன் படுத்தும் பலர் நம்மை சுற்றி வாழ்த்து கொண்டிருக்கும் போது தலைவர் ஒரு தனி பிறவி..
அவருடைய வாழ்கையை நாம் எல்லோரும் பின் பற்றினாலே நம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் வருவது நிச்சயம்..
Very proud and saying with pride that am a Thalaivar fan..
Cheers
பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன், ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன். நம் தலைவர் புனிதன் என்பதற்கு அவருடைய மன்னிக்கும் & மறக்கும் பண்பு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இத்தகைய உயர் பண்புகளை நமக்கு அவ்வப்போது ஞாபகமூட்டும் சுந்தருக்கு நன்றி.
ஒரு சில வீட்டில் பெற்றோர் பிள்ளைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் அவர்களை வசை பாடுவார்கள் ,குறை கூறுவார்கள் (முக்கியமாக திருமணம் ஆனவர்களுக்கு தெரியும் ) ,அதற்காக அவர்களுக்கு அந்த பிள்ளைகள் மேல் பாசம் இல்லை என்று கூற முடியுமா ,இல்லை அந்த பிள்ளைகள் தான் நீங்கள் என்னை திட்டினீர்கள் அதனால் நீங்கள் என் பெற்றோர் இல்லை என்று தான் கூற முடியுமா ,அவர்களாக நம்மை புரிந்து கொள்ளுவார்கள் என்று நாம் நமது வேலையே செய்வது உண்டு, அது போல் தான் தலைவரும். ஆச்சி அவர்களை தன தாய் போல் மனதில் நினைத்து உள்ளார் அதனால் தன தாய் சூழ்நிலையால் திட்டியதை நினைத்து கொண்டு பழி வாங்க எந்த மகனும் நினைக்க மாட்டான்,நம் தங்கமகன் நினைப்பாரா,அதன் விளைவு தான் மீண்டும் தன் படத்தில் நடிக்க வைத்தது.
உண்மையில் தலைவர் மாட்டும் பக்குவப்படவில்லை ரசிகர்களையும் பக்குவபடுத்தி உள்ளார் ,ஏன் என்றால் இந்த பிரச்சனை நடக்கும் போது எனக்கு இருந்த கோபம் எல்லாம் மனோரமா ஆச்சி மீது அவ்வளவு கோபம் ,என்னடா தலைவரை பொய் இப்படி பேசுகிறாரே என்று ,ஆனால் இப்பொழுது ஒரு சில வலை தளங்களில் தலைவரை குறை கூறுவதற்கு என்றே ஒரு சில பேர் உள்ளார்கள் ,முதலில் அந்த வலை தளங்களுக்கு சென்று வலுகட்டாயமாக ஏன் அப்படி பேசினீர்கள் என்று சண்டை போடுவேன் ,ஆனால் இப்பொழுது எல்லாம் அதை கண்டுகொள்வதே இல்லை ,வேறு யாரவது வம்படியாக வந்து என்னிடம் தவர்கா தலைவரை பற்றி பேசினாலும் ஒ அப்படியா சரி சரி என்று எதவுமே சொல்லாமல் நகர்ந்து விடுகிறேன் ,இப்படி செய்வதால் நான் தலைவரை நேசிப்பது இல்லை என்று அர்த்தம் இல்லை ,பொய்யை எவ்வளவு முறை உரக்க சொன்னாலும் அது பொய் தான் அது தெரியாமல் பேசுபவர்களிடம் நமது நேரத்தை ஏன் வீண்டடிக்க வேடனும் என்று தான் விலகி வந்து விடுகிறேன்
இதனால் தான் என்னவோ , நம் சான்றோர்கள் சொன்னங்க, ” பொறுத்தார் பூமி ஆள்வர்” என்று.
தலைவா! உங்கள புரிஞ்சிக்கவே முடியவில்லை எங்களால். கடவுள் தான் எங்களுக்கு புரிய வைக்கணும்…. U are the Greatest!!
Great work Sunder.
Dev.
தலைவரை படத்தில் ரசிப்பதை விட தனிப்பட்ட வாழ்கையில் அவரை ரசிக்க ஆரம்பித்தது என்றால் சந்திரமுகி வெற்றி விழா அன்று பேசிய பேச்சு. அன்றிலிருந்து அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் பின்பற்றுவதில் அக்கறை காட்டுகிறேன். அதாவது எந்த ஒரு விசயத்திலும்(ஆன்மிகம்,சினிமா,அரசியல்,பொதுவாழ்க்கை,அனைவரிடமும் ஒத்து போதல் etc ) அவருடைய involvement maturitya இருக்கும். இன்னும் சொல்லபோனால் இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்று தெரியவந்ததே அந்த பேச்சின் மூலமாகத்தான். இதை போல் நிறைய அவர் பேசி இருக்கிறார்.நான் சிறிது சிறிதாக முக்கியமாக இந்த website மூலமாக நிறைய தெரிந்து கொள்கிறேன். நன்றி சுந்தர்.
மன்னிப்பவன் மனிதன் மன்னிப்பு கேட்பவன் மாமனிதன்
தலைவர் மாமனிதன் மட்டுமல்ல மகாத்மாவும் கூட
1996 ல நடந்த சம்பவத்தை இவ்ளோ விரிவா சொல்லி இருக்கீங்க சுந்தர் அண்ணா .. இப்ப படிச்சா கூட ரத்தம் கொதிக்குது.. அப்ப ஆச்சி பேசும் போது நம்ம தலைவர் ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்… பேப்பர் கட்டிங்கோட இந்த அர்டிகில் கொடுதுர்கீங்க செம சூப்பர்ணா..
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
சுந்தர் அண்ணாமனோரமா அவர்கள் ஒரு கூடத்தில் பேசிய பொது தந்தி அடித்து,மிகவும் கோபமுற்று,வக்கில் எல்லாம் சென்று பார்த்திர்கள் என்று குறிபிட்டு உள்ளீர்கள்.இணையத்தில் ப்ளாக் வைத்து அதிகமாக எழுதும் ikaalathil யாரும் விமர்சனத்தில் இருந்து தப்ப முடியாது,அனால் இந்த ******, ************ போன்ற தளங்கள் தலைவரை கீழ்த்தரமாக சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் விமர்சிகின்றன.அதை பார்க்கும் போது எனக்கு மிக கோபம் வருகிறது.நம் தலைவர் ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து இதற்கு எதாவது செய்யவேண்டும் சுந்தர் அண்ணா.
———————————————————-
It was 1996 when Manorama incident happened. I was very young and prematured.
And reg websites that speak bad about thalaivar…. So what? Just ignore them. They can’t change anything. If we start throwing stones at each every barking dogs we can’t reach our destination.
- Sundar
Dear Sundarji,
Just one correction on the episode of Arunachalam - Sundar C offered the role of Vadivukarasi to Manorama. It was thalaivar who suggested that Manorama plays a subtle role as Fans were very angry and female antagonist went to Vadivukarai.
Another example of Thalaivar’s magnanimity
Best Regards,
Krish
(Germany)
———————————————————
Ya… you are right. I too read this somewhere that time. But couldn’t confirm. So i didn’t speak about this.
- Sundar
உண்மை சுந்தர் அண்ணா.வாழ்க தலைவர் !
Good article & your writing skills going to next step day by day.. Keep it up Sundarji.. Yes i also watch that Thalviar speech audio on “Manroma 50″ .. What a pure Soul… As a human being we need to learn and follow many things from him..
Cant Forget the “Chandramugi 175 & 800 days function speech”// Still i feel down i used to watch that videos….
.
ரொம்ப நல்ல பதிவு இது… மிக்க நன்றி.. தொடரட்டும் உங்கள் நல்ல சேவை…
I want to be like thalaivar in real life. We r proud of u thalaiva. U r great.
————————————————
This is what i expect from you friends. Keep it up!
- Sundar
//ரஜினி அவர்களின் ஸ்டைலை பின்பற்றுவதைவிட அவரது லைஃப் ஸ்டைலை பின்பற்றுபவனே உண்மையான ரசிகனாக இருக்கமுடியும்.//
அருமையிலும் அருமையான, ஆணித்தரமான வார்த்தைகள்.இந்த அற்புதமான பதிவை கொடுத்தமைக்காக உங்களுக்கு நன்றிகள் பல.
மிக பெரிய மனது. மறப்போம் மன்னிப்போம். நான் பின்பற்றிய ஒரு நல்ல பாடம்.
நன்றி. நல்ல பதிவு.. ஆச்சியின் பேச்சுகளை இன்று வாசிக்கும் போது கூட ஜீரணிக்க முடியவில்லை.
பல நல்ல தகவல்களை தரும் இந்த இணையத்துக்கு நன்றி.