









You Are Here: Home » Featured, Superstar Movie News » “ரஜினியுடன் கோச்சடையானில் நடிப்பது ஒரு புது அனுபவம்” — சரத்குமார் பெருமிதம்!
கோச்சடையானில் எதிர்பாராத ஒரு ஆக்ஷன் சர்ப்ரைஸ் சரத்குமார் பிரவேசம் தான். சரித்திரக் கதை என்பதால் சரத்துக்கு படத்தில் ஸ்கோப் சற்று அதிகம். மனிதர் செம ஜாலி மூடில் இருக்கிறார். ஒரு பக்கம் அரசியல் பனி மறுப்பக்கம் சினிமா என்று பிசியாக இருக்கிறார் சரத்.
இந்த வார ஆனந்த விகடன் இதழில் அளித்துள்ள அவர் பேட்டியில் முதல் கேள்வியே ‘கோச்சடையான்’ பற்றி தான்.
ரஜினியுடன் ‘கோச்சடையான்’ படத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி?
ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கார் ரஜினி. பல வருஷங்களுக்கு முன்னாடி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு கதை சொல்லியிருந்தார். அதை லண்டன்ல ரஜினிகிட்டே நினைவுபடுத்தினேன். ‘இவ்ளோ நாள் மறக்காம வெச்சிருக்கீங்களா? நல்ல கதைல்ல… பண்ணுவோம்… பண்ணுவோம்… ‘காஞ்சனா’வில் ரொம்ப போல்தான காரக்டர் பண்ணியிருந்தீங்க. சூப்பர்… சூப்பர்’னு… பாராட்டினார். ‘கோச்சடையான்’ முழுக்க மோஷன் கேப்சர் டெக்னாலஜில பண்ற படம். ஒவ்வொரு நடிகரும் கேமராவை ஹெல்மட் மாதிரி மாட்டிகிட்டு நடிக்கணும். 48 காமிரா 48 ஆங்கிள்ல ஷூட் பண்ணும். ரொம்ப புது அனுபவமா இருக்கு ‘கோச்சடையான்!’.
——————————————————————————————————————————————————-
சிறப்பு தகவல் : இப்போதைய நிலவரப்படி…. டிசம்பர் ஆடியோ ரிலீஸ். ஜனவரி பட ரிலீஸ். ஒரு வேளை ஆடியோ ரிலீஸ் சற்று முந்திக்கொண்டாலும் ஆச்சரியமில்லே. ஆனா படம் கண்டிப்பா ஜனவர் 2013 தான்.
——————————————————————————————————————————————————-
[END]
Great show Sundar. It may be easy for those who are in South. But your update will be of more use for all and particularly for non-South/abroad guys.
நன்றி சுந்தர் அவர்களே!! அதுவும் முக்கியமாக சிறப்பு தகவல் அமர்க்களம்!!!
சிறப்பு தகவல் சூப்பர்..
காத்திருக்கிறோம் எங்கள் கோச்சடயானுக்காக…
என்றும் தலைவர் ரசிகன்
விஜய்
தலைவா படத்த பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணுங்க
wait for kochadaiyan
தலைவா உங்கள்படம் பொங்கலுக்கு வந்த எங்களுக்கு கண்டிப்பா அது இரட்டைப் பொங்கலாக அமையும் ,காத்திருக்கிறோம் …
audio to be released on 12/12/12 . something memorable should be done on 12/12/12.
Better Sivaji 3D may be released…
சும்மா அதிர போகுது பொங்கல் எல்லோரும் காணும் பொங்கல் அன்று ஊருக்கு போகாமல் தலைவர் படத்தை பார்க்க போக போகிறார்கள்
மாஸ் ஹீரோ மக்கள் ஹீரோ ரெண்டுமே தலைவர் தான் அண்ணாஹசாரே மேட்டர் கு வேற டைட்டில் வச்சு இருக்கலாம்
//இப்போதைய நிலவரப்படி…. டிசம்பர் ஆடியோ ரிலீஸ். ஜனவரி பட ரிலீஸ். ஒரு வேளை ஆடியோ ரிலீஸ் சற்று முந்திக்கொண்டாலும் ஆச்சரியமில்லே. ஆனா படம் கண்டிப்பா ஜனவர் 2013 தான்.//
இதை சொல்லுங்கப்பு முதல்லே..
Thanks for your reliable update on our கோச்சடையான்..