You Are Here: Home » Fans' Corner, Featured » தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை!

ந்த பதிவுக்கு உணர்ச்சி வசப்படவேண்டாம்னு தான் நினைச்சேன். ஆனா என்னால உணர்ச்சி வசப்படாம இருக்க முடியலேங்க. முழுசா படிங்க…உங்களுக்கே புரியும்.

‘ஆனந்த விகடன்’ இதழுடன் இலவச இணைப்பாக வந்தது ‘என் விகடன்’ என்னும் சிற்றிதழ். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, புதுவை ஆகிய ஐந்து நகரங்களின் பதிப்பாக தனித் தனியாக வெளிவருகிறது என் விகடன். இதன் வாசகர் அடித்தளமே இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தான். ஆனந்த விகடனுடன் இணைப்பாக வந்த இந்த இதழ், தற்போது இணையத்தில் வருகிறது (ONLINE EDITION). ஆயிரக்கணக்கான வாசகர்கள் இதற்கு உண்டு. மேற்படி தமிழக முக்கிய நகரங்களில் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் செய்திகளை தனக்கேயுரிய பாணியில் வழங்குவது ‘என் விகடன்’ ஸ்டைல்.

நமது அடுத்த மைல் கல்‘என் விகடன்’ வலையோசை பகுதியில் நமது தளம்!

இப்படி பல்சுவை பகுதிகளின் கூடவே, பதிவுலகில் இருக்கும் பிரபல பதிவர்களை (Bloggers) அடையாளம் காட்டும் ‘வலையோசை’ என்ற பகுதியும் இடம் பெற்று வந்தது. வலையுலகில் பட்டையை கிளப்பி வரும் டாப் பதிவர்கள் பலர் இந்த பகுதியில் இடம்பெற்றுள்ளனர். அந்த பதிவர்களின் புகைப்படம் மற்றும அவர்களது தள முகவரி மற்றும் அவர்களை பற்றிய சிறு குறிப்பு கூடவே அவர்களின் தளத்திலிருந்து இருந்து சுவாரஸ்யமான சில பதிவுகள் என்று இந்த பகுதியில் வழங்கப்படும். சம்பந்தபட்ட பதிவர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய டானிக்காக அமைந்தது என்பதில் ஐயமில்லை.

‘வலையோசை’யில் நமது தளம் இடம் பெற வேண்டி பல மாதங்களுக்கு முன்பு நான் விகடனுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்கு ரெஸ்பான்ஸ் எதுவும் இல்லை. அப்புறம் அப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பியதையே மறந்து விட்டேன்.

சென்றவாரம் ஒரு நாள் விகடன் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. ‘வலையோசை’ பகுதியில் வெளியிட நமது தளம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறினார்கள். மகிழ்ச்சியில் இன்ப அதிர்ச்சியில் ஒரு கணம் திக்கு முக்காடினேன். வாய்ப்புக்கு நன்றி கூறினேன்.

பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் தினசரி விசிட் செய்யும் என் விகடனில் நமது பகுதி இடம்பெற்றிருப்பது நம் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். இதன்மூலம் இந்த தளத்தில் நான் அரும்பாடுபட்டு அளித்த பல பதிவுகள் மற்றும் கட்டுரைகள் இனி ஒரு பெரிய வட்டத்தில் பரவுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

http://en.vikatan.com/article.php?mid=31

இதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கும் விகடன் குழுமத்திற்கு நம் தளம் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வலையோசையில் நமது தளம் இடம்பெறும் போது அதில் இடம் பெற வேண்டிய பதிவுகளை அவர்கள் தான் தேர்வு செய்வார்கள் என்றாலும் இதற்கான மின்னஞ்சலை விகடனுக்கு நான் அப்போது அனுப்பும்போது அந்த நேரத்தில் நம் தளத்தில் வெளியான சில டாப் பதிவுகள், வி.ஐ.பி.பேட்டி, நீதிக்கதை உள்ளிட்டவற்றை ரெஃபர் செய்து
அனுப்பியிருந்தேன். ஆனால் அதற்குள் மாதங்கள் பல உருண்டோடிவிட்டபடியால் அதை விட மிக அருமையான பதிவுகளை (CURRENT பதிவுகளை) தேர்ந்தெடுத்து அதன் ESSENCE சிறிதும் குறையாமல் அற்புதமாக அளித்துள்ளனர் ‘என் விகடன்’ குழுவினர்.

இதுல தாங்க விஷயமே இருக்கு…

ஆறுமாதங்களுக்கு பிறகு இது வந்திருப்பதால் நமது சமீபத்திய சந்திப்பான உழைப்பாளி ஐயரின் பேட்டி இடம்பெற்றுள்ளது. திரையுலகினர் கிட்டத்தட்ட மறந்தேவிட்ட அந்த பெரியவருக்கு இதன் மூலம் ஒரு மிகப் பெரிய பிரபல்யம் கிடைத்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் விரும்பியதும் அது தானே?

அடுத்து ராகதேவன் இசைஞானி இளையராஜா பற்றிய வந்துள்ள செய்தி.

அடுத்து… ஸ்ரீ ராகவேந்திரர் பற்றிய நம் தளத்தின் பதிவு. இந்த பதிவு இடம் பெறும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. (ஆறு மாதங்களுக்கு முன்பே நான் அனுப்பிவிட்ட படியால் இதை நான் அப்போது அனுப்பியிருக்கவும் முடியாது என்பதை நினைவில் கொள்க!)

ஒருவேளை அப்போதே நமது தளம் ‘வலையோசை’ பகுதியில் வந்திருந்தால் இந்த ராகவேந்திரர் பற்றிய பதிவு அதில் இடம்பெறாமலே போயிருக்கும். தற்போது இந்த தாமதத்தின் மூலம் ‘வலையோசை’ பகுதியில்…. ராகவேந்திரர் இடம் பெற்றுவிட்டார். மந்த்ராலயத்தின் அற்புதமான புகைப்படம் ஒன்றுடன் கூட. இதை விட எனக்கு பெரிய ஆசி ஏதேனும் கிடைக்குமா? இதுக்கு எப்படிங்க நான் உணர்ச்சி வசப்படாம இருக்கிறது சொல்லுங்க..!

அடுத்து இன்னொரு விஷயம்….

‘வலையோசை’யில் இடம் பெற்றிருக்கும் எனது புகைப்படம் எங்கே எடுத்தது தெரியுமா? சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயலில் நடிகர் லாரன்ஸ் கட்டியிருக்கும் ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலுக்கு சென்ற வருடம் நான் போயிருந்தபோது எடுத்த புகைப்படம் அது! இது எப்படி இருக்கு?!!

[END]

49 Responses to “தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை!”

 1. Jegan Jegan says:

  Nallavangala aandavan sothipan ana kai vida matan……its true

 2. dr suneel dr suneel says:

  வாழ்த்துக்கள் ஜி..

 3. rajini ramachandran rajini ramachandran says:

  சூப்பர். எந்த ப்ரதிபலனையும் எதிர்பார்க்காமல் உண்மையான அன்புடன் பதிவிடும் உங்களுக்கு தலைவரின் ஆசியும் கடவுளின் ஆசியும் நிச்சயம் உண்டு.வாழ்த்துக்கள்.

 4. B. KANNAN B. KANNAN says:

  Congrates buddy..
  Lots more to come.. Be ready..

 5. David Baasha David Baasha says:

  உங்கள் பணிவு உங்களை மென்மேலும் உயர்த்தும்.மிக்க மகிழ்ச்சி.நல்லவங்க வாழ்வாங்க கொஞ்சம் லேட் ஆகும்,அவ்வளவுதான்.

 6. R O S H A N R O S H A N says:

  ji, nam thalathukku ithu nichayam migaperiya angeegaaram……..ungaludaya vaarthaigal ini neraya peraal vasikka padum…….vaazhthukkal sundar ji……..

 7. Ragul Ragul says:

  சுந்தர் சார்

  Its because of your hardwork, smart work you are rocking sir

  U have many people wishes, Thalaivar’s blessings

 8. Gokul Gokul says:

  Congrats Sudarji… I’m also very happy that you have got recognition for the hard work & dedication… I’m sure this will give you more strength and Confidence to move towards further..
  “நல்லவங்க வாழ்வாங்க…! என்ன கொஞ்சம் லேட் ஆகும் … அவளளவு தான்… “

 9. PVIJAYSJEC PVIJAYSJEC says:

  வாழ்த்துக்கள் சுந்தர் ஜி..

  நம் தளம் இன்னும் நிறைய சிறப்புகளையும் பெருமைகளையும் அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  நல்லவங்க வாழ்வாங்க என்ன கொஞ்சம் டைம் எடுக்கும்..

  இனி துன்பங்கள் விலகி ஓடும் இன்பங்கள் நம்மை வந்து சேரும்..

  என்றும் தலைவர் ரசிகன்
  விஜய்

 10. Sankaranarayanan Sankaranarayanan says:

  உங்களது எல்லா முயற்சிகளும் வெற்றி பெற எல்லாம் வல்ல அந்த இறை அருளை பிரார்திகின்றோம்.

  நன்றி
  ப.சங்கரநாராயணன்

 11. Sakthivel Sakthivel says:

  வாழ்த்துக்கள் சுந்தர்.

 12. harisivaji harisivaji says:

  எது நடந்ததோ அது நன்றாக நடந்தது
  எது நடக்கவேண்டுமோ அது நன்றாக நடக்கிறது
  எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கும்

  இந்த உலகத்தில் உள்ள ஒரு அணுக்கள் அசைவுக்கும் ஓர் ஒரு காரணம் உண்டு

 13. ARAN ARAN says:

  வாழ்த்துக்கள் சுந்தர்ஜி .

 14. RAJNIhari RAJNIhari says:

  anna u r an inspiration to all who wanna make their mark in this world!!congrats anna!!this is just the beginning of a great journey!!keep rocking anna!!

 15. veera veera says:

  “சிம்பிள்” சுந்தர் ………. அட்டகாசமான அடைமொழி .

 16. veera veera says:

  பூமி உள்ளவரை தலைவரின் புகழ் நிலைத்திருக்கும் .

 17. RAJA RAJA says:

  வாழ்த்துக்கள் சுந்தர் ஜி.

  தளம் இன்னும் மென் மேலும் வளர போகிறது என்பதற்கு இது ஒரு ஆரம்பம். தாங்கள் இந்த வெப்சைட்டை நிறுத்தப்போவதாக சொன்னதாக LIVINGEXTRA.COM ல் சொல்லி இருந்தார்கள். அதனால் தான் கடவுள் இப்பொழுது இந்த சந்தோசத்தை கொடுத்துள்ளார். இதன் மூலம் கடவுள் உங்களுக்கு சொல்ல வருவது “தம்பி நீ புதிய எதாவது ஒன்றை தொடங்கு தவறில்லை அதுகூடவே பழையதையும் நடத்து. அதற்க்கு உண்டான சக்தி தெம்பு நான் தருவேன்” என்று உங்களுக்கு சொல்லி இருக்கிறார். அதனால் இந்த OnlySuperstar.com வெப்சைட் மூடும் என்னத்தை தயவு செய்து நீங்கள் குழியில் போட்டு மூடி விடுங்கள். நல்லதே நடக்கும்.

 18. Venky Venky says:

  Congratz JI….As I mentioned in the rightmantra article…
  http://rightmantra.com/?p=717

  God always answers us, in anyone of the 3 Ways (yes/No/Wait)…
  YES..and gives us what we want..
  NO..and gives us the one which better suits for us..
  WAIT..and searching the best for us…

  So Its time for you to get the Best wishes from God…
  Vaazhthukkal JI !!!

  நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ..ஆனா கை விட மாட்டான்….

 19. sudrar hats off..congrats.keep it up sundar.

 20. விஜய் ஆனந்த் விஜய் ஆனந்த் says:

  இது போன்ற இன்னும் பல வெற்றிகளை உங்கள் உழைப்பு வாரி வழங்கட்டும்….!
  -
  “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
  சொல்லிய வண்ணம் செயல் ”
  -
  “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
  -
  விஜய் ஆனந்த்

 21. **Chitti** **Chitti** says:

  Hi my dear Rajni aficionados,
  Hope all of you’re doing fine and great.
  ***
  @ Sundarji,
  It’s really pleasure to know that whatever you have sowed, you’re reaping one by one. Of course you have sown everything with out expecting anything in return.

  And I’m really happy that through our website, Whatever Thalaivar did to mantralaya, it came to light. Good. It might be definitely god’s blessings alone for Sundarji and of course for our great phenomenon Super Star Rajinikanth - My dear ‘Sivaji Rao’. That’s chance went to our ‘manoj’ before the saddest exp he felt.
  ***
  Already things have started to happen for Sundarji. Soon, with his awesome-going-to-be another website, he will serve large number of people with what he is really destined to be. He will do that with 100% OF HAPPINESS ALONE! THAT’S GUARANTEED!!!
  ***
  Rest everything is assured for Sundarji.
  ***
  “இனி தான் ஆரம்பம்” - சுந்தர் அவர்களுக்கு. வாழ்வில் மென்மேலும் வெற்றி பெற்று நிம்மதியாக, சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.
  ***
  **சிட்டி**.
  ஜெய் ஹிந்த்!!
  dot .

 22. kumaran kumaran says:

  உழைப்புக்கு மரியாதை. congrats

 23. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  உண்மையான உழைப்பிற்கு கிடைத்த உண்மையான வெற்றி…
  கலக்கல் சுந்தர் அண்ணா ..

  என்றும் தலைவர வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 24. CHITHAMPARAM CHITHAMPARAM says:

  வாழ்த்துக்கள்

 25. manojscen manojscen says:

  வாழ்த்துகள் சுந்தர் !!

 26. Somesh Somesh says:

  இது வெறும் டிரைலர்தான் !!! Hearty wishes to you Sundar!!!

 27. Ganesan