









You Are Here: Home » Featured, Superstar Movie News » ‘கோச்சடையான்’ பற்றய செய்திகள் அரிதாகியிருப்பது ஏன்?
மற்ற முன்னணி நடிகர்களின் திரைப்பட ஆடியோ, ட்ரெயிலர் வெளியீடு பற்றிய செய்திகள் இணையத்தை ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் நிலையில், பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி ரஜினி அவர்களின் ‘கோச்சடையான்’ பற்றிய செய்தி எதுவமே சமீபகாலமாக வெளியாகாதது ரஜினி ரசிகர்களை சற்று சோர்வடைய வைத்துள்ளது.
‘கோச்சடையான்’ பற்றி அளவுக்கதிகமான HYPE ஏற்படுவதை சம்பந்தப்பட்டவர்கள் விரும்பவில்லை என்பது தான் உண்மை. ஆகையால் தான் படம் குறித்த தகவல்கள் அதிகளவு தற்போது வெளியாவதில்லை. டுவிட்டரில் ஒன்றிரண்டு டுவீட் அளித்துக்கொண்டிருந்த இயக்குனர் சௌந்தர்யாவும் தற்போது அமைதியாக இருப்பதன் காரணம் அது தான். விநாயக சதுர்த்தி அன்று படத்தின் புது ஸ்டில் ஏதாவது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். நமக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. அட்லீஸ்ட் விஜயதசமி அன்றாவது படம் சம்பந்தப்பட்ட தகவலோ அல்லது புதிய ஸ்டில்லோ எதிர்பார்க்கப்பட்டது. அப்பொழுதும் வெளியாகவில்லை.
மற்ற முன்னணி நடிகர்கள் தத்தங்கள் படங்களின் ட்ரெயிலர் வெளியிடுவதும், ஆடியோ வெளியிடுவதுமாக இருக்கிறார்கள். அதனால் அவர்களது ரசிகர்களும் மிகவும் எனர்ஜிட்டிக்காக இருக்கிறார்கள். நம் ரசிகர்கள் நிலைமை தான் பாவம். சீக்கிரம் அவர்களை இயக்குனர் சௌந்தர்யா உற்சாகத்தில் மூழ்கடிப்பார் என்று நம்புவோமாக.
‘கோச்சடையான்’ படத்தில் பணிபுரிந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம், படம் குறித்து பேசுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆகையால் தான் ‘கோச்சடையான்’ பற்றிய (உண்மையான) செய்தியே தற்போது அபூர்வமாகிவிட்டது.
இந்நிலையில் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது :
“ரஜினியுடன் கோச்சடையானில் நடித்தது மறக்கமுடியாத ஒரு உன்னதமான அனுபவம். செட்டுக்குள் நுழையும்போது அவரிடம் இருக்கும் அந்த எனர்ஜி மற்றும் சுறுசுறுப்பு … வாவ்… வாய்ப்பேயில்லை. தொழில் மீது அவருக்கு இருக்கும் அந்த அர்பணிப்பு அவரது கண்களிலேயே தெரியும். அவர் உடல்நிலை பாதிக்கப்படுவதற்கு முன்பு எந்தளவு ஈடுபாட்டுடன் நடித்தாரோ அதே அளவு ஈடுப்பாட்டுடன் இப்போதும் இருக்கிறார். அது துளி கூட குறையவில்லை. கோச்சடையானில் ஒரு புது டெக்னிக்கை பயன்படுத்தி இருக்கிறோம். எனவே அதில் நடித்தது எனக்கு ஒரு புதுமையான அனுபவம்”
டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தமிழில் கூட தீபிகாவே டப்பிங் கொடுக்கக்கூடும் என்று தெரிகிறது.
“ஜப்பானிய மொழியோ அல்லது தெலுங்கோ எனக்கு தெரியாது. தமிழ் ஓரளவு சமாளித்துவிடுவேன். இந்தியாவிலிருந்து வெளியாகும் ஒரு சர்வதேசத் திரைப்படம் என்ற பெயரை ‘கோச்சடையான்’ பெறவேண்டும் என்பதே இயக்குனர் சௌந்தர்யா மற்றும் தயாரிப்பாளர்களது விருப்பம். ஏனெனில் இது தமிழ் படம் மட்டும் அல்ல.” இவ்வாறு கூறினார் தீபிகா.
———————————————————————————————————————-
இந்த தளத்தின் பிரத்யேக (EXCLUSIVE) பதிவுகள் கீழ்கண்ட முகவரிகளில் :
ரோல்மாடல் சந்திப்புக்கு :
http://onlysuperstar.tamilmovieposter.com/?cat=852
வி.ஐ.பி. சந்திப்புக்கு :
http://onlysuperstar.tamilmovieposter.com/?cat=853
ரஜினி அவர்களின் அரிய & பழைய புகைப்படங்கள் மற்றும் பேட்டிகளுக்கு :
http://onlysuperstar.tamilmovieposter.com/?cat=1
———————————————————————————————————————-
‘Working with Rajnikanth is very inspiring’ - Deepika Padukone
Deepika Padukone’s next release will be opposite Superstar Rajnikanth, and she seems to be quite thrilled about it.
“Working with Rajnikanth in Kochadaiyyan was very inspiring,” Deepika says. “The kind of energy he brings to the sets even after working for so many years… one can see the passion in his eyes. Even after his illness, I saw the same passion. We are trying out a new technique in Kochadaiyyan, which is a new experience for me.”
Deepika might dub for the Tamil version of Kochadaiyyan. “As for Japanese or Telugu, I don’t know these languages. The idea is to make this a big international film coming from India. It isn’t only a Tamil language film.”
News courtesy : Rediff.com
[END]
நன்றி அண்ணா…
கோச்சடையானை எதிர்பார்த்தபடி …
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
சூப்பர் news
ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி….திரு.கல்யாணசுந்தரம் - “அவார்ட் வின்ன்னர் ஒப் மில்லேன்னியும் ” - என்பவரை நமது தலைவர் தனது தந்தையாக தத்து எடுத்து இருக்கிறார். முழு தகவல் தெரிபவர்கள் பரிமாறுங்கள்…
அன்புடன் சம்பத்
———————————————————————
மன்னிக்கவும். இது மிகப் பழைய செய்தி. இது நடந்து பத்து வருடங்களுக்கும் மேல் இருக்கும்.
தலைவர் அவரை சட்டப்படி தத்தெடுக்கவில்லை. தன் வீட்டிற்கு அழைத்துப் போய் வைத்துக்கொண்டார்.
ஆனால்… தலைவரை விட மிக எளிய மனிதரான திரு.கல்யாணசுந்தரம் அவர்களால் அந்த புகழ் பெற்ற மேல்தட்டு சூழ்நிலையில் இருக்க முடியவில்லை.
ஆகையால் வெளியே வந்துவிட்டார்.
- சுந்தர்
மிகவும் நன்றி சுந்தர்…\\\”தலைவரை விட மிக எளிய மனிதரான”\\\ - உங்க நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு….
அன்புடன் sampath
உண்மையில் இது கோச்சடையான் நியூஸ்-ஆ அல்லது தீப்ஸ் போட்டோ காக போட்ட ஒரு பதிவா? - tell me the truth LOL
——————————-
ஹி…ஹி…!
- சுந்தர்
Silent ah padam panni,
sound ah jeyikum inta ‘kochadaiyan’.
————————————————-
Good and meaningful punch Jegan.
- Sundar
போட்டோவில் தலைவர் அட்டகாசமாக இருக்கார்..
It is better to underplay and win hearts than self boosting unnecessarily and biting the dust..
கோச்சடையான் டீம் underplay பண்ணுவதே பெஸ்ட்..
Eagerly waiting for the 3rd still of kochadaiyan