You Are Here: Home » Featured, Flash from the Past » ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி - ரஜினி @ காவிரி உண்ணாவிரதம் - Part 1

‘கோச்சடையான்’ பற்றி தயாரிப்பாளர்கள் எதுவும் கூறாத நிலையல் நாம் எதுவும் கூற இயலாது. அதே சமயம் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எதையும் எழுத நான் விரும்பவில்லை. பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளபடியால் நேரம் என்பது எனக்கு மிகவும் அரிதாகிக்கொண்டிருக்கிறது.

எனவே கிடக்கும் சொற்ப நேரத்தில், இக்கட்டான ஒரு சூழ்நிலையை தனது ஆன்ம பலத்தின் மூலம் ரஜினி எப்படி கடந்துவந்தார் என்பதை உங்களுக்கு நினைவூட்டி நானும் நினைவுபடுத்திக்கொள்ளவே இந்த பதவி அளிக்கிறேன். மற்றபடி  வேறு நோக்கம் எதுவும் இல்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

தீமைக்கும் நன்மை செய் - தொடரில் அடுத்த பாகத்தை (பாரதிராஜா) எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த காலகட்டங்களில் அதற்கு பிறகு நடைபெற்றவைகளை பற்றி உங்களுக்கு இந்த பதிவு உணர்த்தும். இது ஒரு தொடர் பதிவு. அதாவது ஒரே பதிவில் அனைத்தும் எழுத முடியாது என்பதால் இரண்டு மூன்று பகுதிகளாக வெளிவரும்.

(Double click on the above image to ZOOM & READ)

காவிரி பிரச்னையில் கலையுலகம் போராட்டத்திற்காக நெய்வேலியில் திரண்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஜினி, சேப்பாக்கத்தில் தனியாளாக உண்ணாவிரதம் அமர்ந்தார்.

ரஜினி எதிர்ப்பதன் காரணம் புரியாமல் அவரை பல்வேறு பத்திரிக்கைகளும் ஊடகங்களும் விமர்சித்து வந்த சூழ்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, சுமார் முக்கால் மணி நேரம் மடை திறந்த வெள்ளமாக பேசினார்.

அவர் பேசப் பேச தான் நெய்வேலி போராட்டம் எத்தனை அர்த்தமற்றது என அனைவருக்கும் புரிந்தது.

ஒரேநாளில் ஒட்டுமொத்த ஊடகங்களும் ரஜினி பக்கம் சாய்ந்தன.

‘உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்பு; அதை மதிக்காமல் செயல்படுவது ஆண்டாவன் தீர்ப்பையே அவமதிப்பதாகும்’ என்று கூறி சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் அமர்ந்தார்.

ரஜினியின் உண்ணாவிரதம் பிசுபிசுத்துவிடும் என்று எதிர்பார்த்தவர்களின் நினைப்பில் மண் விழுந்தது. நெய்வேலி போராட்டத்தை ரஜினி என்னும் ஒற்றை மனிதனின் உண்ணாவிரதம் புஸ்வாணமாக்கியதோடு மட்டுமல்லாமல், ‘பாபா’ திரைப்படத்தின் ரிசல்ட்டை ஒட்டி எழுந்த பல்வேறு விமர்சனங்களை கண்டு  “ரஜினியை மக்கள் புறக்கணித்துவிட்டனர். அவருக்கு வயதாகிவிட்டது” என்று பேசியவர்களுக்கு சம்மட்டி அடியாகவும் அமைந்தது.

இது பற்றி எழுத எழுத எழுதிக்கொண்டே போகலாம். இப்போதைக்கு அன்றைக்கு வந்த தினமலர் நாளிதழின் ஸ்கேனிங் பக்கம் ஒன்றை தருகிறேன்.

ரஜினி என்ற தனிமனிதனின் பின்னால் தமிழகமே அணிதிரண்ட அதிசயத்தை இது பறைசாற்றும். அன்றைக்கு நடந்தது என்னவென்றும் உங்களுக்கு புரியும்.

இந்த தொடரின் அடுத்த பகுதியில் மேலும் பல சிறப்பு தகவல்களும், அரிய படங்களும் இடம்பெறும்.

(குறிப்பு : இப்பதிவில் கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள், அந்த நேரத்தில் ரஜினிக்கெதிரான நிலைப்பாடுகொண்டிருந்தவர்களை விமர்சிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அவ்வாறு செய்தால் என் நோக்கம் நீர்த்துவிடும்!)

28 Responses to “ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி - ரஜினி @ காவிரி உண்ணாவிரதம் - Part 1”

 1. amar amar says:

  I can’t forget this incident. During that time in oct 2002, when Baba was running successfully towards 75 days, it was stopped abruptly due to Cauvery issue. Hats off to Superstar for coming out victoriously during this issue when some groups in Tamil Cinema were against, but still THALAIAVAR PROVED : WHAT IS RAJINIKANTH? WHY HE IS RAJINIKANTH? & WHAT MAKES THE RAJINIKANTH B-)

 2. Jegan Jegan says:

  Sundar anna,
  can u upload some more photos regarding this fast?

  ———————————————-
  It will come in forthcoming episodes.
  - Sundar

 3. மாரீஸ் மாரீஸ் says:

  எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது…ஒவ்வொரு ரசிகனுக்கும் மட்டுமல்லாது ஒட்டுமொத நடுநிலையாளர்களும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வு இது…செய்தி பழையது என்றாலும் புதுபொலிவுடன் பதிவு செய்து அடுத்த பாகம் எப்பவரும் என்று தூண்டவைகிறது…
  .
  நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சியை நினைவுபடுத்தியதற்கு நன்றி….விரைவில் அடுத்த பதிவை போடுங்கள் சுந்தர்….

 4. Ragul Ragul says:

  Sundar sir,

  I was astonished to see thalaivar sitting literally not even drinking water,without makeup and announcing 1 crore but made a soft target (Always)
  Mass power used in constructive way

 5. Jegan Jegan says:

  Every fan of thalaivar will never forget thalaivars interview(expecially in orange colour T shirt) and how he overcome that crucial situation…

 6. ananth ananth says:

  ஆனந்த பரவசம்

 7. vasi.rajini vasi.rajini says:

  நிச்சயமாக சொல்கிறேன், தலைவர் இப்பொழுது கட்சி ஆரம்பித்தாலும், அடுத்த தேர்தலில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆவார். ஆவர் அரசியலுக்கு வந்தால் தமிழ் நாடே ஒட்டுமொத்தமாக அவர் பின்னல் நிற்கும்.
  .
  இல்லை 1996 இல் தான் அப்படி ஒரு வாய்ப்பு இருந்தது இப்பொழுது இல்லை!! என்று கூறுவது முட்டாள் தனமானது. அப்போது அரசியல் பிரவேச எதிர்பார்ப்பின் காரணம், தலைவரே நேரடியாக ஜெயலலிதாவின் அரசை விமர்சித்தார். மக்கள் திலகதிற்கு பிறகு சரியான முதல்வர் இல்லாமல் தவித்த மக்கள் ரஜினிகாந்தை அவர் இடத்தில ஏற்ற தயாராயினர். ஆனால், தனக்கு இன்னும் அந்த தகுதி வரவில்லை என்று அந்த பதவியையே ஏற்க்க வில்லை தலைவர்.
  .
  அதன் பிறகு கலைஞர், ஜெயலலிதா தல இருமுறை மாறி மாறியே அந்த பதவிகளில் இருந்தனர்; இருகின்றனர். இடைபட்ட களத்தில் சில நடிகர்கள் கட்சி ஆரம்பித்தாலும், மக்கள் இவர்களை முழுமையாக ஏன்றுகொள்ள மாறுகிறார்கள்.
  .
  மக்கள் தலைவரின் மௌனத்தை கண்டு விரக்தி அடைந்தார்களே தவிர அவரை வெறுக்க வில்லை. விறகினுள் எப்படி தீ ஒழிந்திருகிறதோ அதேபோல தலைவரின் அரசியல் சக்தியும் ஒழிந்திருகிறது. கடந்து 20 ஆண்டுகளாக அட்சிசெய்தவர்கள், செய்கிறவர்கள் மிகப்பெரிய அரசியல் வேற்றிடத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.நாளையே ரஜினி அரசியல் பக்கம் திரும்பினால் ஒட்டு மொத்த தமிழகமே அவர் பின்னல் நிற்கும். உலகமே பார்க்காத மிகபெரிய எழுச்சியும், புரட்சியும் தமிழ் நாட்டில் ஏற்படும்.
  .
  Rajini will rule Tamilnadu

  • kumaran kumaran says:

   உடம்பெல்லாம் சிலிர்க்குது , உங்கள் ஒருவரது கருத்துக்கே இப்படின்னா! நடந்துவிட்டால்?

  • எஸ்.பி.ஜேம்ஸ் எஸ்.பி.ஜேம்ஸ் says:

   உண்மைதான், இன்று தலைவரின் ஒவ்வொரு அசைவையும் மக்கள் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள், மக்கள் ரசிக்கவில்லை என்றால் பத்திரிக்கைகள் தலைவரின் அசைவுகளை போட்டிபோட்டு தலைப்பு செய்தியாக போடாது,எனக்கு தெரிந்த ஒரு பத்திரிக்கை நண்பர் கூறியது, ரஜினியின் செய்தி உண்டு என்றால் அன்று செல்ஸ் அதிகம் என்பது எல்லா பத்ரிக்கைகாரர்களுக்கும் தெரியும் என்றார், ஆகையால் அவர் என்றுமே மக்களின் ராஜாவாகத்தான் இருக்கிறார்,அதனால்தான் சொல்கிறேன் நண்பர் வசி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை

  • karthik karthik says:

   மக்கள் தலைவரின் மௌனத்தை கண்டு விரக்தி அடைந்தார்களே தவிர அவரை வெறுக்க வில்லை.
   -100 % உண்மை

  • மனோஜ் மனோஜ் says:

   வசீ :) :) என்ன கமெண்ட் யா இது!!! பின்னிடீங்க வசீ!! உங்களை போல் உள்ள மனிதர்கள் பேசும் posiive பேச்சுக்கள் தான் இன்னும் என் மனதில் நம்பிக்கை வைத்திருக்கிறது!!! நல்லதே நடக்கும் நண்பா!!

 8. Raja Raja says:

  சுந்தர் மிக அருமையான பதிவு. இன்றைய தலைமுறையில் நிறைய பேருக்கு தெரியாத விஷயம் இது. நீங்கள் குறிப்பிட்ட முக்கால் மணிநேர வீடியோ ஒரு பொக்கிஷம். அதை இந்த பகுதியில் இனைத்தால் அருமையாக இருக்கும்.

 9. RAJA RAJA says:

  உண்மையில் நெய்வேலி போராட்டம் எவ்வளவு அர்த்தமற்றதாக இருந்தது எவ்வளவு பிரச்சனைகள் நடந்தது என்று அதற்க்கு அப்புறம் சின்னத்திரை கலைஞர்கள் சங்க தலைவராக இருந்த sve சேகர் கூறினார் ,சின்னத்திரை கலைஞர்களுக்கு உணவு கிடைக்க வில்லையாம் ,போராட்டம் முடிந்து பாதி பேருக்கு பேருந்து இல்லாமல் சொந்த காசு போட்டு திரும்பி வந்தார்கள் ,இறுதியில் அவர்கள் போன நோக்கமும் நிறைவேறவில்லை ,ஆனால் ஒரு மனிதன் அஹிம்சை வலையில் எந்த செலவும் இல்லாமல் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் யாரையும் கட்டாய படுத்தாமல் சாதித்தார் .காந்தி அவர்களின் உண்ணா நோன்பு எவ்வளவு வலிமையானது என்று பல இளைய தலை முறையினருக்கு புரிய வைத்த நாள் அன்று ,என்னால் தலைவரை ஒரு தொலைவில் இருந்து தான் பார்க்க முடிந்தது.

  ஒரு சின்ன வருத்தம் நதிநீர் இணைப்பை தலைவர் சொன்னது போல் முநின்று நடத்தி இருந்தால் இந்நேரம் குறைந்தது தென்னக நதிகாலவது இணைத்து இருக்கலாம் ,அதே போல் மக்கள் இயக்கமும் சொன்னது போல் ஆரம்பித்து இருந்தால் இன்று அது ஒரு ஆலமரமாக வளர்ந்து இருக்கும்.

 10. RAJA RAJA says:

  நிறையபேர் அன்று தலைவர் கூறியதை எதிர்த்தார்கள் சினிமா நடிகர்கள் என்ன செய்ய முடியும் என்று ,ஆனால் இந்த முறை ஏன் எந்த நடிகர்களும் போராட்டம் செய்ய வில்லை ,இதில் இருந்தே தெரியவில்லை அன்று அவர்கள் செய்தது ஒரு தனிமனிதனுக்கு எதிரான போராட்டம் ,அதை எல்லாம் எங்கள் தலைவர் தனி ஆளாக இருந்து முறி அடித்தார்

 11. kumaran kumaran says:

  சூப்பர் சார்

 12. David Baasha David Baasha says:

  அந்த நாளை யாரும் மறக்க முடியாது.ஒட்டுமொத்த திரையுலகமே நெய்வேலி போய் கூட்டத்தை பார்த்தஉடன்,மறுநாள் உண்ணாவிரதம் காலி என்று நினைத்து தவறாக பேசியதை மறுநாள் அமைதியாக,அகிம்சை வழியில் நடந்த நமது போரட்டத்தின் வாயிலாக கலியுகத்திலும் அகிம்சை வாழ்கிறது என்று இந்தியாவிற்கு தலைவர் மூலம் உணர்த்தியது.

 13. Shankar K R Shankar K R says:

  வணக்கம் சுந்தர் ஜி….
  தலைவர் உண்ணாவிரதம் இருந்த அன்று..காலை, குளித்துவிட்டு, பூஜை அனைத்தையும் முடித்துவிட்டு….
  தலைவர் உண்ணாவிரத மேடைக்கு வரும் முன், டிவி முன் அமர்ந்து, தலைவர் உண்ணாவிரதத்தை முடிக்கும் வரை நகராமல், அவர் பழரசம் அருந்தி, பேட்டி அளித்த பிறகு என்னுடைய காலை உணவை அருந்தினேன்…. தலைவருக்கு இது தெரியாது..ஆனால் என் வீட்டில் உள்ளவர்களுக்கும் நம்மை ஆளும் ஆண்டவனுக்கும் நன்கு தெரியும். அந்த நாள் மட்டும் அல்ல, இப்பொழுது நினைத்தாலும் மெய் சிலிர்கிறது…. தலைவர் நினைத்தால் இன்னும் எவ்வளவோ (என்னில் அடங்கா) நம் மக்களுக்கு நன்மை பண்ணலாம் (அனைவருக்கும் தெரிந்து…). ஏன் என்றால், மக்களை பொறுத்தவரை… அனைவருக்கும் தெரிந்து, விளம்பரத்துடன் உதவி பண்ணினால் தான் ஏற்று கொள்வார்கள்.
  ஆண்டவனின் அருளோடு, கருணை உள்ளத்தோடு, தலைவருக்கு நல் ஆசியும் வழங்கி, நம் மக்களுக்கு நன்மை புரிய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்
  அன்புடன்
  Shankar K R

  • senthilnathan senthilnathan says:

   Hi Friends,
   அன்று உங்களை போல் நானும், நம்மை போல் பலரும் தாங்கள் வசிக்கும் இடத்தில் தலைவருக்கு ஆதரவாக போரட்டத்தில் கலந்துகொண்டதும் உண்மை ..
   நாளை தேவைப்பட்டால் முன்பைவிட பலரும் தலைவருக்கு ஆதரவாக போராட வருவார்கள் என்பதும் உண்மைதான் ..

   - உங்களில் ஒருவன்,
   செந்தில்நாதன்

 14. veera veera says:

  இனி இப்படி ஒரு தலைவன் கிடைக்க மாட்டான். விழித்து கொள்ளுங்கள் தமிழக மக்களே. தலைவர் சிலர் மீது வைத்துள்ள மிகுந்த மரியாதையின் காரணமாக அமைதி காக்கிறார். ஒரு மிகப்பெரிய வெற்றிடத்திற்காக காத்திருக்கிறார், புரிந்து கொள்ளுங்கள் ரசிகர்களே. காலம் கனியும். கலியுக கர்ணனின் ஆட்சி மலரும்.

 15. Nice flash back Sundar. Thanks for your untiring efforts and don’t know how you are digging 9 years old news paper for scanning. Great effort. Eagerly awaiting part 2 & 3.

 16. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  இவ்ளோ நாளைக்கு அப்புறம் கூட இந்த பதிவை படிக்கும் போது உடல் சிலிர்க்கிறது… இந்த உண்ணாவிரதத்தின் வீடியோ லிங்க் இருந்தால் இதனுடன் இணையுங்கள் சுந்தர் அண்ணா …

  என்றும் தலைவரின் தனி வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 17. Gokuladass Gokuladass says:

  முதன் முதலில் தலைவரை பார்த்த நாள் நண்பர்களே என் வாழ்வின் அதி முக்கியமான நாள் அப்பா என்ன ஒரு நிகழ்வு மறக்க முடியாத நாள் மூன்று நான்கு முறை சேப்பாக்கம் ஸ்டேடியம் சுத்தி காலு வலிக்கிறது என்று நண்பனிடம் சொன்னவுடன் அருகில் இருந்த அண்ணன் கேட்டு தம்பி உக்காருங்க என்று இடம் கொடுத்தார் மறக்க முடியாத நாள் சுந்தர்

 18. Rajpart Rajpart says:

  நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் அமைதி புறா ஒன்றை ரஜினி கையால் பறக்க விட்டு வாழ்த்து கூறிய போது நெகிழ்ந்து விட்டேன்.ரஜினிக்கு ஆதரவாக இருந்த பலரை நான் அடையாளம் கண்ட நிகழ்வு அது.

 19. sidhique sidhique says:

  சுந்தர் மிக அருமையான பதிவு. இன்றைய தலைமுறையில் நிறைய பேருக்கு தெரியாத விஷயம் இது. நீங்கள் குறிப்பிட்ட முக்கால் மணிநேர வீடியோ ஒரு பொக்கிஷம். அதை இந்த பகுதியில் இனைத்தால் அருமையாக இருக்கும்.

  இனி இப்படி ஒரு தலைவன் கிடைக்க மாட்டான். விழித்து கொள்ளுங்கள் தமிழக மக்களே. தலைவர் சிலர் மீது வைத்துள்ள மிகுந்த மரியாதையின் காரணமாக அமைதி காக்கிறார். ஒரு மிகப்பெரிய வெற்றிடத்திற்காக காத்திருக்கிறார், புரிந்து கொள்ளுங்கள் ரசிகர்களே. காலம் கனியும். கலியுக கர்ணனின் ஆட்சி மலரும்.

 20. விஜய் ஆனந்த் விஜய் ஆனந்த் says:

  இந்த நிகழ்வு நடந்தது நினைவில் இருந்தாலும், முழுமையான தொகுப்பு இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை…! இந்தப் பதிவும், இதன் தொடர் பதிவும் போராட்டம் பற்றிய விவரங்களை முழுமையாக எங்களிடம் சேர்க்கும் என்று நம்புகிறேன்…!
  -
  “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
  -
  விஜய் ஆனந்த்

 21. suresh suresh says:

  நிச்சயமாக சொல்கிறேன், தலைவர் இப்பொழுது கட்சி ஆரம்பித்தாலும், அடுத்த தேர்தலில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆவார். ஆவர் அரசியலுக்கு வந்தால் தமிழ் நாடே ஒட்டுமொத்தமாக அவர் பின்னல் நிற்கும்.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates