You Are Here: Home » Featured, Rajini Lead » “ரஜினியை யாரோடும் கம்பேர் பண்ணக்கூடாது!” — யூத் சர்வேயில் கல்லூரி மாணவிகள் நெத்தியடி!

‘குமுதம்’, ‘விகடன்’, ‘குங்குமம்’ உள்ளிட்ட முன்னணி வார பத்திரிக்கைகளில் கல்லூரி மாணவிகளிடம் நடத்தப்படும் ‘யூத் சர்வே’ அவ்வப்போது இடம்பெறுவதுண்டு.

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை அந்த சர்வேக்களில் எல்லாம் ஒவ்வொரு முறையும் கல்லூரி மாணவிகளின் ஹாட் ஃபேவரைட்டாக நம்பர் ஒன் ரேங்க்கில் சூப்பர் ஸ்டாரே இடம்பெற்று வந்தார். பிறகு அவர் ஒரு அபிமான நடிகர் என்கிற கட்டத்தை தாண்டி ‘தலைவர்’ என்கிற கட்டத்துக்கும் அதற்கு பிறகு DEMIGOD என்கிற ஒரு நிலைக்கும் அவர் சென்றுவிட்டதால், காலப்போக்கில் மேற்படி யூத் சர்வேக்களில், மற்ற வளரும் (?1) நடிகர்களோடு அவரை ஒப்பிட்டு கருத்து கேட்பதோ கூறுவதோ சரியாக இருக்காது என்று இந்த ஓட்டெடுப்பில் அவரை தவிர்த்து விடுவார்கள் சம்பத்தப்பட்ட பத்திரிக்கையினர். ரஜினி அவர்களின் சமகால ஹீரோ என்பதால் கமலுக்கும் இதே நிலை தான்.

போட்டியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் “ரஜினியே எங்கள் ஹாட் பேவரைட்” என்று கல்லூரி மாணவிகள் பல முறை மேற்படி சர்வேக்களில் கூறிய சம்பவங்களும் உண்டு.

கடந்த வாரம் வெளியான குமுதம் தீபாவளி ஸ்பெஷலில் ஒன்று ‘காலேஜ் & யூத் ஸ்பெஷல்.’ அதில், யூத் சர்வே ஒன்று இடம் பெற்றிருக்கிறது.

கல்லூரி மாணவிகள் சிலரை தேர்ந்தேடுத்ஹ்டு அவர்களிடம் தற்போதைய நடிகர்களை வரிசைப்படுத்தும்படி கேட்க, அவர்கள் அளித்த ரேங்க்கில் சூர்யா, அஜீத், விஜய், தனுஷ், சிம்பு ஆகிய நடிகர்கள் முறையே முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

சரி… சூப்பர் ஸ்டார்?

அவர் தான் எப்பவுமே எல்லாத்துக்கும் மேலாச்சே…!

“எத்தனை இளம் ஹீரோக்கள் வந்தாலும் ரஜினிக்கு இருக்கும் அதே பழைய செல்வாக்கு இன்னும் இருக்கிறது. ஸ்டைல், வயசானால்ம் மாறாத சுறுசுறுப்பு, ஏற்ற இறக்கத்துடன் பேசும் பன்ச் டயலாக், இதெல்லாம் தான் ரஜினியின் அசையா சொத்து. இவ்வளவு உயரத்திற்கு போன பின்னாலும் அவரது சிம்ப்ளிசிட்டி இளசுகளை மயங்கவைத்திருக்கும் மந்திரமாக உள்ளது. ரஜினியை யாரோடும் கம்பேர் பண்ணக்கூடாது என்கிறார்கள்.” - இது எப்படி இருக்கு!

[END]

14 Responses to ““ரஜினியை யாரோடும் கம்பேர் பண்ணக்கூடாது!” — யூத் சர்வேயில் கல்லூரி மாணவிகள் நெத்தியடி!”

 1. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  //“எத்தனை இளம் ஹீரோக்கள் வந்தாலும் ரஜினிக்கு இருக்கும் அதே பழைய செல்வாக்கு இன்னும் இருக்கிறது. ஸ்டைல், வயசானால்ம் மாறாத சுறுசுறுப்பு, ஏற்ற இறக்கத்துடன் பேசும் பன்ச் டயலாக், இதெல்லாம் தான் ரஜினியின் அசையா சொத்து. இவ்வளவு உயரத்திற்கு போன பின்னாலும் அவரது சிம்ப்ளிசிட்டி இளசுகளை மயங்கவைத்திருக்கும் மந்திரமாக உள்ளது. ரஜினியை யாரோடும் கம்பேர் பண்ணக்கூடாது என்கிறார்கள்.” – இது எப்படி இருக்கு!//

  வாவ் …..

  என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 2. harisivaji harisivaji says:

  சும்மா நச்சுனு இருக்கு (மூன்று முகம் ஜான் ஸ்டைல்இல்)

 3. winston winston says:

  சுந்தர் சார், கோச்சடையான்ல ரவிக்குமார் இல்லையா, மாதேஷ்அஹ் நம்ப முடியுமா… என்ன ஆனார் ரவிக்குமார்…
  —————————————-
  KSR is going to direct hindi film with Akshay kumar.
  - Sundar

 4. senthil senthil says:

  “ரஜினியை யாரோடும் கம்பேர் பண்ணக்கூடாது என்கிறார்கள்.” – இது எப்படி இருக்கு! Super punch…

 5. murugan murugan says:

  தலைவரை யாரோடும் ஒப்பிட முடியாது - இது உலகறிந்த உண்மை !!!
  அவருக்கு நிகரும் அவர் தான் - அவருக்கு போட்டியும் அவர் தான் !!!

 6. விஜய் ஆனந்த் விஜய் ஆனந்த் says:

  //இவ்வளவு உயரத்துக்கு போனாலும் அவரது மாறாத சிம்ப்ளிசிட்டி இளசுகளை மயக்கும் மந்திரமாக உள்ளது..!//
  -
  தலைவரை விமர்சிப்பவர்கள் கூட ஏற்றுக் கொள்ளும் விஷயம் இது..! கூடவே பிறந்தது…என்றும் நீங்காது…!
  -
  “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
  -
  விஜய் ஆனந்த்

 7. veera veera says:

  டிசம்பர் பனிரெண்டு உனக்காக ….
  ரசனை கண்ணிரண்டும் உனக்காக…
  கல்லூரி கன்னிகளின் கணக்காக …
  கம்பேர் பண்ணவே முடியாதுங்க …

 8. Siva Siva says:

  தலைவர் மாதிரி வரணும் ன்னு நெனைக்கலாம் தப்பில்லை ஆனா தலைவர் ஆகா ஆகணும் ன்னு நெனச்சா அழிவு தான். பல உதாரணம் தமிழ் சினிமா வில் தற்போது தறுதலையாய் திரியுது .

 9. There is one moon, one Sun & one and only Super Star - our Thalaivar forever.

 10. RAJA RAJA says:

  தலைவர் அவர்களுக்கும் திரு கமல்ஹாசன் அவர்களுக்கும் இருக்கும் ரசிகர் கூட்டம் என்றுமே மாறாது குறையாது

 11. Shiva Shiva says:

  Superstar Rajinikanth can produce fire by rubbing to ice cubes….
  Superstar Rajnikanth doesn’t see his watch. He decides what time it is.
  Once Superstar Rajnikanth was playing cricket match in monsoon, so the rain had to be cancelled due to the match…Thalaiva you always rocks…

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates