You Are Here: Home » Featured, Superstar Movie News » மாதேஷ் உள்ளே; கே.எஸ்.ரவிக்குமார் வெளியே — நடந்தது என்ன?

‘கோச்சடையான்’ படத்தின் மேற்பார்வை இயக்குனராக மாதேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வழக்கம் போல, இந்த செய்திக்கும் கண், காது, மூக்கு, வாய், தொண்டை, கை, கால், விரல் என என்னவெல்லாம் வைக்க முடியுமோ அத்தனையும் வைத்து ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர். விளைவு? குழப்பத்தில் ரசிகர்கள்!

சௌந்தர்யா கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷனில் பட்டப்படிப்பை படித்திருந்தாலும், ஒரு திரைப்படத்தின் இயக்குனர் என்ற பொறுப்பை ஏற்கும்போது நிச்சயம் இண்டஸ்ட்ரி சீனியர் ஒருவரின் GUIDANCE அவசியம் தேவை என்று சூப்பர் ஸ்டார் கருதியதாலேயே கே.எஸ்.ரவிக்குமார் ‘ மேற்பார்வை இயக்குனர்’ (DIRECTING SUPERVISOR) என்ற பொறுப்பில் கோச்சடையானில் நியமிக்கப்பட்டார்.

மேலும் ‘ராணா’ எதிர்பாரதவிதமாக ஒத்திவைக்கப்பட்டதால் கே.எஸ்.ரவிகுமாரை தவிர இந்த பொறுப்புக்கு வேறு எவரையும் அவர்களால் யோசிக்க முடியவில்லை. (‘கோச்சடையான்’ கதையே என்னோடது தான்னு ரவிக்குமார் சொல்றார்!)

இதனிடையே கிராஃபிக்ஸ் மற்றும் அசாத்திய தொழில்நுட்பம் காரணமாக கூடுதல் பணிகளால் ‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்பு பணிகள் குறித்த காலத்துக்கும் மேல் நீடித்துக்கொண்டே சென்றதால் கே.எஸ்.ரவிக்குமாரால் புதிய வாய்ப்புக்கள் எதையும் கமிட் செய்ய முடியவில்லை. முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அவர் எத்தனை நாளைக்குத் தான் பொறுமையாக இருக்க முடியும். மேலும், ஹிந்தியில் ‘சாமி’ படத்துக்கு வேறு அஜய் தேவ்கான் சுளையாக கால்ஷீட் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார். அந்த படம் அங்கு ‘சிங்கம்’ போல சூப்பர் ஹிட்டாகும் பட்சத்தில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஹிந்தியில் மிகப் பெரிய பிரேக் கிடைக்கக்கூடும். அதை நழுவ விட யாருக்கு தான் மனம் வரும்?

சூப்பர் ஸ்டாரிடம் இருந்த நட்பின் அடிப்படையிலும் அவர் மீதுள்ள அன்பினாலும் தான் கே.எஸ்.ரவிக்குமார் கோச்சடையானில் ‘இயக்குனர் மேற்பார்வை’ என்ற பொறுப்பை ஏற்றாரே அன்றி, வாய்ப்புகள் இல்லாமல் அல்ல. எனவே, பாலிவுட்டில் ஒரு மிகப் பெரிய வாய்ப்பு காத்திருக்கும்போது அதை பயன்படுத்திக்கொள்ள அவர் விரும்பியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

எனவே, தாம் இதிலிருந்து விலகிக்கொள்வதாக அவர் தம் விருப்பத்தை தெரிவித்திருக்கக்கூடும். அவ்வளவு தான்.

மாதேஷ் எப்படி வந்தார்?

மாதேஷ் பற்றி முதலில் ஒரு சிறு குறிப்பு. மாதேஷ் இயக்குனர் ஷங்கரின் வலது கரம் போன்று இருந்தவர். ‘முதல்வன்’ படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றியவர். ‘மதுர’, ‘அரசாங்கம்’, ‘மிரட்டல்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். திரைப்பட தயாரிப்பு, விநியோகம், பட்ஜெட் கண்ட்ரோல் உள்ளிட்ட விஷயங்களில் அனுபவம் பெற்றவர். எனவே கே.எஸ்.ரவிக்குமாரின் இடத்திற்கு மிக பொருத்தமானவர். (இவரை இயக்குனர் ஷங்கர் கோச்சடையானுக்காக பரிந்துரைத்ததாக கூறப்படுவது எந்தளவு உண்மை என்று எனக்கு தெரியாது. அதே சமயம் அதை மறுப்பதற்கும் இல்லை!)

இது தான் நடந்தது…!

மற்றபடி மாதேஷ் நியமனத்தில் கூறப்படும் பிற செய்திகள் அனைத்தும் பரபரப்புக்காக கிளப்பிவிடப்படும் யூகங்களே. ரசிகர்கள் குழப்படைய வேண்டியதில்லை.

சரி…. கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

[END]

12 Responses to “மாதேஷ் உள்ளே; கே.எஸ்.ரவிக்குமார் வெளியே — நடந்தது என்ன?”

  1. winston winston says:

    thankyou sundar sir for your explanation

  2. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    நன்றி சுந்தர் அன்ன எங்கள் குழப்பத்தை தீர்த்து வைத்ததற்கு…

    என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்.

  3. Jegan Jegan says:

    Director k s ravikumar was unlucky, bcz he had misd jagubai with thalaivar and even rana.
    There is nothing to blame anyone bcz these decisns were taken as per the situations prevailed at that time.
    But everyone knows that k s ravikumar has spend almost 2 years , unfortnatly for thalaivar, its not thalaivar’s mistake but it is fate.
    Anyhow but my wish is thalaivar shd work with k s in his very next action thriller.

  4. vasi.rajni vasi.rajni says:

    இந்த விஷயத்தில் கோச்சடையான் தயாரிப்பு குழுவினரை ரசிகர்கள் என்ற முறையில் கண்டிக்க வேண்டும்.படத்தின் துணுக்குகள் வெளியாக்குவதும் இல்லை;இது போன்ற major மாற்றங்கள் நிகழும்பொழுது முறையாக தெளிவுபடுத்துவதும் இல்லை. its disappointing !!
    .
    ரவிக்குமார் அவர்கள் எடுத்த முடிவு நிச்சயம் நல்லதது தான். தன்னுடைய கேரியரையும் அவர் பார்த்துக்கொள்ள வேண்டும். ரஜினி ரசிகர்கள் சார்பில் அவருக்கு நன்றி கூற கடமைபட்டுள்ளோம்.. அவருடைய ஹிந்தி படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
    .
    இந்நிலையில் ராணா கைவிடப்பட்டது என்ற செய்தி மீண்டும் பொய் என தெரிகிறது. படம் ஒத்தி தான் வைக்க பட்டுள்ளது. மர்மங்கள் தொடர்கின்றன……..
    .
    Rajini will rule Tamil nadu

  5. prakash prakash says:

    It is better if Rana get dropped, so thalaivar do other projects with better director..

  6. Jegan Jegan says:

    Expecting an action thriller film from Thalaivar soon after kochadaiyan with kamalhasan or ajith

  7. B. Kannan B. Kannan says:

    Thanks sundar for clearing all our doubts..
    Best wishes to ksr for his future commitments..
    Hope Thalaivar do a PADAYAPPA like movie
    with him..
    KOCHADAIYAN team should have held a press
    meet regarding this issue..
    Their marketing strategy too is disappointing.. What Thalaivar is doing?
    Hope atleast Our Movie would turn out to be worth watching one..
    Cheers..

  8. மனோஜ் மனோஜ் says:

    குழம்பிய எங்களை தெளிவுபடுதிவிடீர்கள்!! மிக்க நன்றி அண்ணா :)

  9. RAJA RAJA says:

    தலைவர் எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும் அது திரு ரவிகுமார் அவர்களுக்கும் தெரியும் அது தான் நட்பு

  10. rajini rasigan rajini rasigan says:

    mathesh …..last padam mirattal …veliettathu …media one company than kochadaiyaan ..production pathukura company …jeans padam mathesh ..shankarudan irundhappave …media one thayarippalarudan touchil ullar ….K.s Ravi romba nala ingaye irukkaru …post productionla kooda avaroda part kami thaan adhaala ..avaraagave veru vaaippu varavum poi irukkalam …!!! nalla vishaaym thaan …kochchandaiyaanum mudiyum tharuvaayil thane ullathu …creativvity la vera endha iyakunar thalaiyedum (maadhesh ) irukka vaaippu illai ….avar indha padathukku namakku munnal paarkkum audience avaalave …!!!! 3 varudamaga ..thalaivarukku uruthunaiyaaga irundha K.s.r kku nanrigal …vaazhthukkal …oru super hit adikka ..hindi-yil …..!!!!

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates