You Are Here: Home » Featured, Happenings » “ரஜினி காட்டிய வழியும்; ஒரு லட்ச ரூபாய் சம்பளம் ஒரு கோடியானதும்!” — மனம் திறக்கிறார் லாரன்ஸ்!

திரையுலகில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்களுள் ராகவேந்திரா லாரன்ஸும் ஒருவர். கடவுள் பக்தியோடு சமூக அக்கறையும் மிக்கவர். எளிமைக்கு பெயர் பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேல் ரஜினி ரசிகர்.

நம்பிக்கையுடன் உழைத்து, கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொண்டால் எப்பேர்ப்பட்ட சாதனையும் சாத்தியமே என்பதற்கு உதாரணமாய் திகழ்கிறார் லாரன்ஸ். அதே சமயம், “நீ வறியோர்க்கு கொடுப்பதையே இறைவன் உனக்கு பன்மடங்கு திருப்பித் தருகிறான்” என்றும் கூறுகிறது இவர் தற்போது எட்டியிருக்கும் உயரம்.

இந்த வார ‘குங்குமம்’ தீபாவளி சிறப்பிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் லாரன்ஸ் கூறியிருக்கும் சில முக்கியமான தகவல்களை பார்ப்போம்….

சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட கேள்வி-பதிலை மட்டும் தான் நான் இங்கு தருவதாக இருந்தேன். ஆனால் முழு பேட்டியையும் படித்த பின்னர் இந்த பேட்டியை உணர்த்தும் உண்மை மற்றும் வாழ்வியல் பாடங்கள் அவசியம் உங்கள் அனைவரையும் சென்று சேரவேண்டும் என்று கருதி மேலும் சில கேள்வி-பதில்களை இணைத்திருக்கிறேன்.

அனைவரும் படியுங்கள்… கருத்துக்களை உள்வாங்குங்கள்… சிகரத்தை எட்டுங்கள்!

க்ரூப் டான்சர், டான்ஸ் மாஸ்டர், இப்போ பார்த்தா, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குற டைரக்டர்.. இதுல நீங்க யாரு?

லாரன்ஸ்: “நமக்கு மெட்ராஸ் தான் அட்ரஸ்! மூலக்கொத்தளம்0. அப்பாவுக்கு எல்.ஐ.சி.ல வேலை. மூக்கு முட்ட குடிச்சிட்டு எங்கேயாவது மல்லாந்து கிடப்பார். ‘மாமே… தியேட்டர்ல இங்கிலீஷ் படம் போட்டுருக்கான் வாயே… சொம்மா வூடு கட்டி ஆடிகினு வரலாம்’னு நண்பர்கள் கூப்பிடுவாங்க. நான் படத்துல் வர்ற இங்கிலீஷ்காரன் மாதிரியே ஷோக்கா ஆடுடுவேன். தியேட்டர்னு இல்லே… ‘மச்சான், ஆட வர்றியா”னு யார் கூப்பிட்டாலும் எழுந்து ஓடுவேன். அது கல்யான வீடு, கோவில் திருவிழான்னு எதுவா இருந்தாலும் கவலையில்லே. எனக்கு டான்ஸ் ஆட ஒரு சான்ஸ் வேணும். சாவு ஊர்வலங்களில் கர்ச்சீப் கட்டிக்கிட்டு ஆடிய காலமெல்லாம் இருந்தது. படிப்பு விளங்கலை. இப்பவும் சரியா எழுதப் படிக்க தெரியாது. இதைச் சொல்ல நான் வெட்கப்படலே.”

திடீர்னு அப்பா இறந்துட்டார். குடும்பம் நடுரோட்டுக்கு வந்தது. அம்மா காலையில எட்டு மணிக்கு வேலைக்கு போய் ராத்திரி எட்டு மணிக்கு வருவாங்க. ஸ்கூல் படிக்கும்போது சாப்பாட்டுக்கே கஷ்டம்.

திடீர்னு அப்பா இறந்துட்டார். குடும்பம் நடுரோட்டுக்கு வந்தது. அம்மா காலையில எட்டு மணிக்கு வேலைக்கு போய் ராத்திரி எட்டு மணிக்கு வருவாங்க. ஸ்கூல் படிக்கும்போது சாப்பாட்டுக்கே கஷ்டம். ஸ்கூல்ல ரெண்டு வாலி தண்ணி அடிச்சு கொடுத்தா, மூணு கரண்டி சோறு எக்ஸ்ட்ரா கிடைக்கும். அதுக்கு கையை தூக்கிட்டு முன்னாடி நிப்பேன். எல்லாரும் சிரிப்பாங்க. மானம் அவமானம் பார்த்தா மூணு தங்கைகளுக்கும் ஒரு தம்பிக்கும் சாப்பாடு கிடைக்காது.

அப்புறம் மாமா ஒருத்தர் ஸ்டான்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் கிட்டே அசிஸ்டெண்ட்டா சேர்த்துவிட்டார். அவர் காரை தொடைச்சேன். ஷூவுக்கு பாலீஷ் போட்டேன். பாக்கு வெத்தலை மடிச்சி கொடுத்தேன். ஷூட்டிங் பிரேக்ல ஆடச் சொல்லி பார்ப்பார். ஒரு சமயம் சூப்பர் ஸ்டார் வந்திருந்தார் அவருக்காக சுப்பராயன் சார் ஆடச் சொன்னார். ரஜினின்னா எனக்கு உயிரு. அதையே கொடுத்து அவருக்காக ஆடினேன்.

ரஜினி தான் டான்ஸ் அசோசியேஷனில் கார்டு எடுத்துக்கொடுத்தாரு. வாழ்க்கையில ஒளி தெரிஞ்சதெல்லாம் அதுக்கு பிறகு தான்.

60 அனாதை குழந்தைகளை வெச்சு காப்பாத்துறதுக்கு எப்படி மனசு வந்தது?

லாரன்ஸ்: “நான் சாப்பாடு, தண்ணி இல்லாமல் தெருவுல சுருண்டு கிடந்திருக்கிறேன். ‘சந்தோஷம்னா என்னன்னு மனுஷனுக்கு அதை அனுபவிக்கும்போது தெரியுறதில்லே’ன்னு கமல் சார் சொல்வார்.

இப்படி கொடுத்தாத் தான் வரும். இப்படி உதவி பண்ண ஆரம்பிச்ச பின்னாடி தான் உயர்ந்தேன். ஒரு லட்ச ரூபாய் வாங்கினவன் ஒரு கோடிக்கும் மேல் வாங்கினது எல்லாமே இவங்களை குழந்தைகளா ஏத்துகிட்ட பிறகு தான். இன்னைக்கு என் பெண்ணோட சேர்த்து 61 குழந்தைகளுக்கு ஸ்கூல் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்ல கையெழத்து போடுறேன். இவங்க சிரிப்புல தான் என் சந்தோஷத்தை பார்க்குறேன். வாழ்க்கையில சுயநலம் மட்டும் தான் உண்டுன்னா….மகான்கள் தோன்றியிருக்க மாட்டாங்க. எத்தனையோ பேர் என்கிட்டே வந்து, “ஏன்… பணத்தை அள்ளிக்கொட்டுறீங்க?”ன்னு. என் மேல பாசமா இருக்குற இந்தக் குழந்தைகளோட மாசு இல்லாத அன்பை பாருங்க. எல்லாத்தையுமே எனக்கு கொடுக்கணும்னு தோணுது. இந்த 60 பேர்ல யாராவது ஒரு காந்தி, மதர் தெரசா இருக்கலாம் இல்லையா?”

இப்படி உதவி பண்ண ஆரம்பிச்ச பின்னாடி தான் உயர்ந்தேன். ஒரு லட்ச ரூபாய் வாங்கினவன் ஒரு கோடிக்கும் மேல் வாங்கினது எல்லாமே இவங்களை குழந்தைகளா ஏத்துகிட்ட பிறகு தான்.

நீங்கள் ரஜினிகாந்த்துக்கு ரொம்ப தோஸ்த் இல்லையா?

லாரன்ஸ்: “கிட்ட தட்ட அவரை வழிபடுவேன். ‘உங்களக்கு பிடிச்ச ஹீரோ யாரு’ன்னு கேட்டா அவர் பேரைத் தான் சொல்லுவேன். ஒவ்வொரு படத்துக்கும் அவருக்கு கோடிக்கணக்கில் பணம். ஆனா பாருங்க…கவலைப்படாம வீட்ல இருக்கார். திடீர்னு கிளம்பி இமயமலைக்கு போறார். மூணு மாசத்துக்கு ஒரு படம்னு சம்பாதிக்கலாம் அந்த எண்ணமே அவருக்கு வந்ததில்லை. நினைச்சா வீட்ல இருக்குற தைரியம் அவருக்கு இருக்கு. இவ்வளவு புகழையும் பயன்படுத்தாத தன்மை அவருகிட்டே இருக்கு. எனக்கு அடிக்கடி பேசுவார் எல்லாம் பேசுவார். நவராத்திரி கொலுவுக்கு கூப்பிட்டார். நானும் மனைவியும் குழந்தையும் போயிருந்தோம். “உங்க மனைவி பேர் என்ன?”ன்னு கேட்டார். ‘லதா’ன்னு சொன்னேன். ‘அட உங்களுக்கு லதா எனக்கும் லதா. உங்களுக்கும் ராகவேந்திரா எனக்கும் ராகவேந்திரா…. சூப்பர் சூப்பர்’னு சொன்னார். எப்பவும் அவரை நான் நினைச்சால் சந்திக்கலாம் அது எனக்கு அவர் அளித்திருக்குற இடம்!”

மூணு மாசத்துக்கு ஒரு படம்னு சம்பாதிக்கலாம் அந்த எண்ணமே அவருக்கு வந்ததில்லை. நினைச்சா வீட்ல இருக்குற தைரியம் அவருக்கு இருக்கு. இவ்வளவு புகழையும் பயன்படுத்தாத தன்மை அவருகிட்டே இருக்கு.


வெற்றியை தக்க வெச்சுக்க உங்க டிப்ஸ் என்ன?

லாரன்ஸ்: “எங்கேயும் மிதந்துடாதீங்க மிஸ்ஸாகிடாதீங்க. ‘நீ பெரிய கலைஞன்டா ? உன்னை மாதிரி எவன்டா?”ன்னு புகழ்ச்சி வார்த்தையில மயங்கிடாதீங்க. வெற்றி, தோல்வி இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஆயுசுக்கும் அன்பு செளுத்துறதும்… உழைப்பும் தான் நமக்கு மரியாதை கொடுக்கும்.”

[END]

14 Responses to ““ரஜினி காட்டிய வழியும்; ஒரு லட்ச ரூபாய் சம்பளம் ஒரு கோடியானதும்!” — மனம் திறக்கிறார் லாரன்ஸ்!”

  1. kumaran kumaran says:

    எல்லாவற்றுக்கும் மேல் ரஜினி ரசிகர். super

  2. Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

    ஆயுசுக்கும் அன்பு செலுத்துறதும் உழைப்பும்தான் நமக்கு மரியாதை கொடுக்கும் - எவ்வளவு சத்தியமான சொற்கள். லாரன்ஸ் அவர்கள் நற்பணி தொடர அவர் மென்மேலும் வாழ்வில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  3. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    //ரஜினின்னா எனக்கு உயிரு. அதையே கொடுத்து அவருக்காக ஆடினேன்.// - கலக்கல் கலக்கல்…

    // லாரன்ஸ் க்கு திருமணம் ஆய்டுச்சு ன்ற விசயமே இப்பதான் எனக்கு தெரியும்… //.. ச்சே…

    நம்ம தலைவருக்கு அடுத்தபடியா எனக்கு ரொம்ப புடிச்சது நாம லாரன்ஸ் மாஸ்டர் தான்..

    -என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

  4. Siva Siva says:

    ரஜினி அவர்களை வழிபட்டவன் கெட்டு போனதா சரித்திரம் இல்லை .

  5. மாரீஸ் மாரீஸ் says:

    கஷ்டபடாம எதுவும் கிடைக்காது னு தலைவர் சொல்லுறத பின்பற்றும் ரசிகன் இந்த லாரன்ஸ்….உண்மையான ரசிகன் எப்படி இருக்கவேண்டும் என்பதை மிகதெளிவாக தன பதில்ன்மூலம் கூறியிருக்கிறார்….
    .
    “நீ வறியோர்க்கு கொடுப்பதையே இறைவன் உனக்கு பன்மடங்கு திருப்பித் தருகிறான்” பின்பற்ற முயற்சி செய்கிறேன்….

  6. David Baasha David Baasha says:

    தலைவர் காட்டிய வழியில் தெரிந்த லாரன்ஸ், தெரியாத லாரன்ஸ் எத்தனை பேர் செல்கிறார்களோ?

    உண்மையும் உழைப்பும் உறுதியும் இருந்தால் யாரும் உலகை வெல்லலாம். Rs.600/- சம்பளத்தில் சென்னைக்கு வந்தேன். Rs.20,000/- இப்போ வாங்குறேன். என் தகுதிக்கு இது பெரிய விஷயம். என் மனஉறுதி, தலைவர் காட்டிய வழிதான்.

    இன்னும் முனேறவேண்டும் என்ற லட்சிய பாதையில் பயணிக்கிறேன். நாமெல்லாம் ஆராதிக்க வேண்டிய விஷயமே தாய், தந்தைக்கு பிறகு தலைவரின் நடைமுறைகளை.

  7. RAJA RAJA says:

    லாரன்ஸ் மிக அருமையான மனிதர். சிறிது பந்தா இல்லாதவர்.

    தலைவர் உடல் நலம் குன்றி இருந்த வேலையில் அவர் செய்த பிரார்த்தனைகளில் நானும் நமது டீமோடு சேர்ந்து சிறிது பங்களிப்பை அளித்தோம். அது மிக பெரிய பாக்கியம். மனிதர் அன்று சொன்னது தான் ரசிகர்களுக்கு ஒரு நல்ல பாடம். “யாரும் வீட்டின் முன் போய் நின்று தொந்தரவு செய்யாதீர்கள் ,வதந்திகளை நம்பி அவசரபடதீர்கள்” என்று.

    தலைவரின் உண்மையான ரசிகர்களுக்கு அவரின் நடிப்பை விட தலைவரின் பல அரிய பண்புகள் இருக்கும் என்று இவரை போன்றவர்களை பார்த்தால் புரியும்

    இவ்வளவு பணம் இருந்தும் “எனக்கு இன்னும் சரியாக எழுத படிக்க தெரியாது” என்று உண்மையை ஒத்துகொள்ள எத்தனை பேருக்கு தைரியம் இருக்கும்.

    அருமை திரு லாரன்ஸ் சார் அருமை நீங்கள் மென் மேலும் பணம் புகழ் பெற்று மேலும் இது போல் பல குழந்தைகளுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்று கடவுளை ப்ராதிக்க்றேன்

  8. Chitti Chitti says:

    My Dear Rajni Aficionados,
    Hope all of you’re fine and doing great. Wishing you all a very great, loving Diwali.
    ***
    What a great picture you have posted, Sundarji.
    I am very happy to see this. Hearty thanks for such a good photo.
    ***
    And all the info told by Mr. Lawrence reveals him as such a great person.
    He is such a great person whom I respect among few cine ones.
    ***
    Rest is, we all have to follow Rajni’s principles like him.
    ***
    **Chitti**.
    Jai Hind!
    Dot.

  9. Murugesan Murugesan says:

    தலைவர் தான் இதற்கு மூல காரணம் .. எனவே தலைவேற்கே எல்லா பெருமைகளும்

  10. murugan murugan says:

    அருமையான உரையாடல் !!!
    எளிமையான அதே நேரம் முற்றிலும் உண்மையான பதில்கள் !!!
    திரு லாரன்ஸ் அவர்கள் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்கவும், தொடர்ந்து சமூக தொண்டு ஆற்றிடவும், வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் !!!

  11. B. Kannan B. Kannan says:

    Nice interview from lawrence..
    His down to earth nature and humility epitomises a true Thalaivar fan and he has also set an example of how we should be in our life..
    Thanks lawrence.. We will thrive to be one and make our Thalaivar proud..
    Thanks sundar for bringing this interview to us..
    Cheers..

  12. veera veera says:

    எதிர்கால பள்ளி பாடப்புத்தகத்தில் தவிர்க்க முடியாத பாடமாக தலைவரின் வாழ்க்கை விளங்கும். இது நிச்சயம் நடக்கும். மகான்கள் மறைவதில்லை. மகாத்மாக்கள் மறக்கப்படுவதுமில்லை.

  13. Muralidharan Muralidharan says:

    Yes thats true!!!

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates