









You Are Here: Home » Featured, Happenings » உலக நாயகன் கமல் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உயர்ந்த நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினி!
சென்ற வாரம் நவம்பர் 7 ஆம் தேதி அன்று உலகநாயகன் கமல் அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடினார் அல்லவா? அதையொட்டி தனது திரைத்துறை நண்பர்களுக்கு மிகப் பெரும் விருந்து ஒன்றை அவர் அளித்தார். இதில் மிக முக்கிய விருந்தினர் யார் தெரியுமா? நம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான்!
மேற்படி நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் எங்கும் எதிலும் வெளியாகவில்லை. இருந்தால் என்ன?
எப்படியும் புகைப்படத்துன் தான் இந்த செய்தியை வெளியிடவேண்டும் என்று காத்திருந்தேன். இதோ… கமல் அவர்களின் பிறந்தநாள் விழாவில் சூப்பர் ஸ்டார் கலந்துகொண்ட அந்த பரவச காட்சி!
நிகச்சிக்கு வந்து கமலை வாழ்த்தியதோடல்லாமல் அங்கு கிட்ட தட்ட இரண்டு மணிநேரத்துக்கும் மேல் செலவிட்ட ரஜினி, நண்பர் கமலுடன் ஜாலியாக சிரித்து பேசியபடி காணப்பட்டார்.
கலந்துகொண்ட மற்றவர்கள் : மலையாள நடிகர்கள் மம்மூட்டி, டைரக்டர் ப்ரியதர்ஷன், லிஸ்ஸி ப்ரியதர்ஷன், நடிகர் திலீப், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட பலர். நடிகர் விஜய் கொண்டாட்டம் துவங்குவதற்கு முன்னர் வந்திருந்து சிறிது நேரம் கமலுடன் பேசிவிட்டு சென்றுவிட்டார்.
எந்தவித ஆரவாரமுமின்றி மிகவும் அமைதியாக இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. சுவையான உணவு வகைகளும், சாட் வகைகளும் விருந்தில் பரிமாறப்பட்டன. இந்த கொண்டாட்டத்தில் மிக முக்கிய அம்சமே அனைவரும் உலகநாயகனுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கையெழுத்திட நிறுவப்பட்டிருந்த WISH TREE தான்.
கமலின் திரைப்பட பாடல்களுடன் துவங்கியது விருந்து நிகழ்ச்சி. ஆனால் போகப் போக சுவாரஸ்யம் கூட்டவும் அனைவரையும் ஆடவைக்கும் வகையிலும் லேட்டஸ்ட் ஹிட் பாடல்கள் இசைக்கப்பட்டன. பிரபலங்கள் தங்களை மறந்து மேற்படி பாடல்களுக்கு ஆடியது கண்கொள்ளா காட்சி.
ரஜினி — கமல் இருவரின் நட்பு யூகங்களுக்கும் ஆரூடங்களுக்கும் அப்பாற்ப்பட்டது என்பது இதன் மூலம் மற்றொரு முறை உணரத்தப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு பெரும் கலைஞர்களும் மேலும் பல வெற்றி திரைப்படங்களை அளித்து அவர்களது ரசிகர்களை மகிழ்விக்க வேண்டுமென வாழ்த்துவோம்!
(புகைப்பட உதவி : டைகர் பாலா)
[END]
வயசு என்பது என்ன என்று இருவரும் கேட்பாங்க போல
உண்மையில் எனக்கும் மிக பெரிய ஆச்சரியம் அவர்கள்
தலைவர் மிக அழகாக உள்ளார் .
Thalaiva super look Kochadaiyan audio lunch date 12-12-12 ???
Nice snap Sundar. Thanks a million for the update.
வருந்தி உழைத்து வயதை தொலைத்தவருக்கு வாழ்த்து சொன்னவர் வான்புகழ் வசீகரனல்லவா ?
வாழ்க நட்பு .
தலைவர் ஒரு சூப்பர் பொழுது போக்கு படம் நடிக்கலாம் . அதற்க்கு தகுந்த உடல் வாகுடன்தான் உள்ளார் .
Thalaivar always respect kamal sir. Other actors should learn from them.
வற்றாத திறமையும், அளவுக்கு அதிகமான கடின உழைப்பும், இந்திய சினிமாவின் மீது மாறா காதலுடன் அற்புதமான படைப்புகளை தந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் என்கின்ற ஒரு மகத்தான கலைஞனுக்கு நம் தலைவர் ரஜினி தகுந்த மரியாதை செய்திருக்கிறார். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தலைவரை அழைத்ததின் மூலம் கமல் அவர்களும் தலைவர் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவிற்கு நட்பின் உதாரணமாக திகழ்கிறார்கள்.
நம் தலைவரின் பெருந்தன்மை யாருக்கு வரும் அவர் ஓர் நிறைகுடம்
i am really shocked to see that Murugdoss and vij are using our superstar name , Murugadoss is trying to owe our superstar fans , and he tweeted that rajini sir has seen two times and has praised the movie, but the comments of the movie is average only but now they want to make the film hit , they started trying in all level to make hit the movie even , all websites have become syndicate and propogating that the movie is hit ,
Both are without doubt living legends
of Indian cinema..
Their success and logevity says it all..
Their friendship is a glowing tribute to their understanding weathering times and paying mutual respect to one another..
Hats off to Thalaivar and kamal sir..
Hope to see u both in silver screen for many more years to come..
Lets hope against hope that Thalaivar enters the long waiting politics or atleast do any
social reforms activity..
Thalaivaa V R WAITING..
Cheers..
அன்பு தலைவனின் பெருந்தன்மை