You Are Here: Home » Featured, Flash from the Past » பாரதிராஜா & ரஜினி நட்பு! (நெய்வேலி போராட்டத்துக்கு முன்பு) “தீமைக்கும் நன்மை செய்” — பகுதி 3

‘தீமைக்கும் நன்மை செய்’ தொடரில் அடுத்து நாம் பார்க்கப்போவது இயக்குனர் சிகரம் திரு.பாரதிராஜா.

தொடருக்குள் போகும் முன் சில விஷயங்கள்…

ரஜினியை ‘தெய்வமே, கடவுளே’ என்று விளிப்பதையும் பாக்ஸ் ஆபீசில் அவருக்கு இணை எவரும் இல்லை என்றும் ஆக்ரோஷமாக வாதிடுவதையும் தான் உண்மையான ரசிகர்களுக்கு இலக்கணம் என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். இது ரசிப்புத் தன்மை அல்ல. வெறித்தனம். தனிமனிதன் ஒருவனின் பேரில் நாம் வளரத்துக்கொள்ளும் ஒரு வித அர்த்தமற்ற பயனற்ற பற்று. இதன் மூலம் அவர்களை அவர்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்பது தான் உண்மை. இது  அல்ல ஒரு உண்மையான ரசிகனின் இலக்கணம்.

ரஜினி அவர்களின் வாழ்க்கை முறை, அவரது பழகும் தன்மை, சினிமாவுக்கு அப்பாற்ப்பட்டு அவர் உணர்த்தும் நல்ல விஷயங்கள் இவற்றை கடை பிடிக்க அனைவரும் முயற்சி செய்யவேண்டும். அது தான் ஒரு உண்மையான ரஜினி ரசிகனுக்கு அழகு. ரஜினி அவர்களை பற்றி தேவையற்ற புகழ்ச்சிகளை அள்ளி இறைப்பதால் உங்களுக்கு இங்கே எவ்வித பயனும் இல்லை. இதை காலம் உங்களுக்கு உணர்த்தும்.

அதற்கு பதிலாக அவரது விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடவுள் பக்தி, அர்பணிப்பு, எளிமை, பணிவு, வேகம், சுறுசுறுப்பு, உண்மை, எங்கேயும் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் அவர் கூறும் இன்சொல், பிறரை மதிக்கும் பாங்கு இவற்றை கற்றுக்கொண்டு அவரை பின்பற்றினால் நீங்களும் வாழ்வில் உயர்வீர்கள். அவரும் உங்கள் இதய சிம்மாசனத்தில் என்றும் இருப்பார். அந்த இடத்தை விட்டு அவரை அகற்ற எவராலும் முடியாது. இந்த ஒரு அந்தஸ்தின் பெயர் தான் ‘சூப்பர் ஸ்டார்’.  அந்த இடத்தை யாரோ ஒரு நடிகர் ஜஸ்ட் ஒன்றிரண்டு ஹிட்கள் கொடுப்பதால் பெற்றுவிடமுடியும் என்று அந்த நடிகர்களின் ரசிகர்கள் நினைப்பார்களேயானால் அது நகைப்புக்குரிய விஷயமே தவிர எதிர்ப்புக்குரிய விஷயம் அல்ல.

அந்த இடத்தை யாரோ ஒரு நடிகர் ஜஸ்ட் ஒன்றிரண்டு ஹிட்கள் கொடுப்பதால் பெற்றுவிடமுடியும் என்று அந்த நடிகர்களின் ரசிகர்கள் நினைப்பார்களேயானால் அது நகைப்புக்குரிய விஷயமே தவிர எதிர்ப்புக்குரிய விஷயம் அல்ல.

“ரசிகர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்ல நீங்கள் யார்?” என்று கேட்டீர்களானால், “உங்களில் நான் ஒருவன். என் சக தோழர்கள் மீதும் அன்பும் அக்கறையும் கொண்டவன்!” என்பதே என் பதிலாக இருக்கும்.

சரி… விஷயத்துக்கு வருவோம். நாம் மேற்கூறிய ரஜினி அவர்களின் குணங்களில் ஒன்று தான் “தீமைக்கும் நன்மை செய்”யும் அவரது குணம். அதாவது தீங்கு செய்தவர்களுக்கும் நன்மையே செய்வது. அதை அடிப்படையாக வைத்து ரஜினி அவர்களை புரிந்துகொள்ளாமல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவரோடு மோதி, அவரை இகழ்ந்து, பின்னர் அவர் குணத்தை புரிந்துகொண்டு உருகி மீண்டும் நட்பாகி போனவர்களை பற்றி இந்த தொடரில் பார்த்துவருகிறோம்.

ரஜினி அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து பின்னர் மீண்டும் அவர் குணம் புரிந்து நட்பாகிப் போனவர்களில் இயக்குனர் பாரதிராஜா மிக மிக முக்கியமானவர். இது தொடர்பாக சூப்பர் ஸ்டாரின் அணுகுமுறை மற்றும் அவரது ரீயக்ஷன்கள் நமக்கு உணர்த்தும் பாடங்கள் அநேகம் அநேகம். இது வரை நடிகர் மன்சூரலிகான், ஆச்சி மனோரமா ஆகியோரை பார்த்தோம். இப்போது பார்க்கப்போவது இயக்குனர் சிகரம் பாரதிராஜா.

பாரதிராஜா அவர்களுடன் ரஜினி அவர்களுக்கு மோதல் ஏற்பட்ட சம்பவத்தை (2002 நெய்வேலி போராட்டம் & காவிரி உண்ணாவிரதம்) பற்றி எடுத்தவுடன் தெரிந்துகொள்ளாமல், மேற்படி சம்பவத்துக்கு முன்னர் ரஜினி அவர்கள் மீது பாரதிராஜாவுக்கு உண்மையில் முதலில் இருந்த அபிப்பிராயம் என்ன ? ஒரு திரையுலக முக்கியப் பிரமுகராக, இயக்குனராக பாரதிராஜா ரஜினி அவர்களை பற்றி கொண்டிருந்த கருத்து என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.

அடுத்த பகுதியில் (Next Part) இப்படி பேசிய மனிதர் ஏன் நெய்வேயில் ரஜினி அவர்களை கருப்பு ஆடு என்றும் கூறினார் & பின்னர் அதே பாரதிராஜா 2010 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற இயக்குனர்கள் சங்கத்தின் D40 நிகழ்ச்சியில் “ஈர இதயம் கொண்ட இரும்பு மனிதன் ரஜினி” என்று சொல்லும் அளவுக்கு ரஜினி செய்தது என்ன ? என்றும்  பார்ப்போம். இது தான் ரஜினி. இந்த பண்பு தான் ரஜினி.

“புகழுரைகளுக்கு மயங்கும் மனது ரஜினிக்கு கிடையாது” - பாரதிராஜா

1999 ஆம் ஆண்டு ரஜினி -25 கொண்டாடப்பட்டபோது ரஜினி அவர்களை பற்றி பாராதிராஜா ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டி தான் இது.

“ரஜினி நடிப்பது ஆக்ஷன், மாஸ் கமர்சியல் படங்களாக இருந்தாலும் மனதார அதில் அவருக்கு உடன்பாடு இல்லை. நல்ல கலையம்சம் உள்ள திரைப்படங்களில் தான் ரஜினிக்கு அதிக நாட்டம் உண்டு” என்கிறார் இயக்குனர் பாரதிராஜா.  ‘பதினாறு வயதினிலே’, ‘கொடி பறக்குது’ ஆகிய படங்களை ரஜினியை வைத்து இயக்கியவர் இவர்.

ரஜினியைப் பற்றி மேலும் கூறுகையில் ‘கொடி பறக்குது’ படத்தில் ரஜினியை நடிக்கவைத்ததே ஒரு தனிக்கதை என்றபடியே பேச ஆரம்பித்தார்.

“பதினாறு வயதினிலே சினிமாவுக்கு பிறகு எனக்கும் ரஜினிக்கும் பெரிய கேப் இருந்தது. அவர் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது கூட சந்திக்க தோன்றவில்லை. அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்பாராத வகையில் சந்தித்துக்கொண்டோம்.

அப்போது அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு வந்திருந்த நேரம். ஆனால் மனிதத் தன்மையில் அவரிடத்தில் எந்த மாற்றமும் இல்லை, இன்றும் அப்படித்தான். ஒரே மாதிரி இருப்பது தான் அவரது சுபாவம். அந்த சந்திப்பு முடிந்த சில மாதங்களுக்கு பின்னர் அவரை வைத்து படம் இயக்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

ரஜினியிடம் இதை சொன்னபோது, “இப்போதைக்கு முடியாது” என்றார் ஆனால், அவர் சில மாதங்களுக்கு பிறகு இது விஷயமாய் ஃபோன் செய்து நடிக்க ஒப்புக்கொள்வதாக கூறினார். “உங்கள் டைரக்ஷனில் நடிக்க பயமாக இருக்கிறது” என்றும் அப்போது அவர் கூறினார்.

நான் பதிலுக்கு “ஒரு சூப்பர் ஸ்டாருக்கு நான் சொல்லித் தரவேண்டியதில்லை” என்றேன்.

உடனே அவர், “என்ன சார்! நீங்களும் சூப்பர் ஸ்டாருன்னு சொல்லி ஒதுக்கிடுறீங்களே?” பொய்யாக கோபித்துக்கொண்டார்.

அதன் பிறகு நாங்கள் முன்பிருந்ததைவிட நெருக்கமாகிவிட்டோம். படப்பிடிப்பின்போது அவரது நடிப்பு எனக்கு வியப்பாக இருந்தது. அவ்வளவு வேகம். அதன் வேகம் தான் அவரை வித்தியாசப் படுத்திக்காட்டுகிறது. வசனங்களை முன்பின் இடம் மாற்றிப் பேசும் ரஜினி ஸ்டைல் அலாதியானது. எந்த நேரத்தில் எதைச் செய்வார் என்று எதிர்பார்க்க முடியாதபடி அவரிடம் அந்த வேகமும் ஸ்டைலும் இருந்து கொண்டே இருக்கும்.

அப்போது தான் அவருக்குள் இருக்கும் அபாரமான கலைத் திறமையை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. ரஜினியிண்டம் கூறினேன், “ரஜினி என்ற இந்த மனிதன் சாதாரண மனிதனே அல்ல” என்று. அவரின் நடிப்பு என்பது அமைதியான ஆழ்கடல் போல் பறந்து விரிந்துள்ளது. அந்த கடலில் “ரஜினி” என்ற படகை பிடிக்கும் எவரும் எளிதில் எந்தவித எதிர்ப்பையும் மீறி கரை சேர்ந்துவிடலாம். ஆனால் எவ்வளவு தான் புகழுரைகள் அவருக்கு நாம் கூறினாலும் புகழுரைகளுக்கு மயங்கும் மனது அவருக்கு கிடையாது. மாறாக அடக்கமும், எளிமையுமே அவரிடம் அதிகாக வெளிப்படும் என்றால் அது மிகையல்ல.

இப்படத்தில் ரஜினி செய்த மறக்க முடியாத காட்சிகள் பலப் பல. நமக்கு தேவையான நடிப்பை விடவும் அவர் அதிகமாகவே அவர் நடித்துவிடுவதால் அனைத்து காட்சிகளுமே என்னால் மறக்கமுடியாத காட்சிகள் தான். என்றாலும் குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு காட்சி, தாதா கேரக்டரிலுள்ள ரஜினி குடிசைப் பகுதியில் நடக்கும் அநியாய செயலை கண்டு வெகுண்டு எழுதவது போன்ற ‘ஆக்ஷன்’ செய்யவேண்டுமென நான் கூறியதை, ரஜினி வித்தியாசமாக செய்ய விரும்பி, “இது நல்லாயிருக்கு. ஆனா இப்படி செய்யலாமா ? என்று கேட்டு “சற்றே பக்கவாட்டில் திரும்பி தனது கண்களை ஒரு வெட்டு வெட்டி பார்த்தார் பாருங்கள் ஒரு பார்வை” அடடா! என்னவொரு அற்புத ஆக்ஷன். அங்கு அவர் கண்கள் மட்டுமல்ல கன்னங்கள் உட்பட முகம் முழுவதும் வெளிப்பட்ட அந்த உணர்ச்சிப் பூர்வமான நடிப்பு என்னை மிகவும் பாதித்தது.

அவரிடம் சினிமா பேசிக்கொண்டிருந்தால் பல புதிய விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். அப்படி ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது தான் அவருக்குள்ளும் ஒரு நல்ல இயக்குனர் இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டேன். அவரது இயக்குனர் திறமை ஒரு நாள் வெளிப்பட்டே தீரும் என்று நம்புகிறேன்.

ஆனால், ‘கொடி பறக்குது’ நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை என்றாலும் கீழ்மட்டத்தில் அதற்குரிய வசூலை பெற்றுவிட்டது. (அது தான் சூப்பர் ஸ்டார்!). அந்த படத்தை பொறுத்தவரை ரஜினிக்கு அது திருப்தியாகவே இருந்தது.

‘பதினாறு வயதினிலே’ அனுபவம் என்று பார்த்தால் ரஜினிக்கு அது ஒரு முக்கியமான காரக்டர். எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செய்திருந்தார். இன்று அவர் “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என்று வசனம் பேசினால் ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். இதற்கு, முன்பே அதாவது, ‘பதினாறு வயதினிலே’ படத்திலேயே ரஜினி இது போன்ற வசனங்களை பேச ஆரம்பித்து ரசிகர்களை கவர ஆரம்பித்துவிட்டார் என்பது தான் உண்மை.

“இது எப்படி இருக்கு?” வசனத்தை இதற்க்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ரஜினி அப்போது ராயப்பேட்டையில் அறை ஒன்றில் தங்கியிருந்தார். ‘பதினாறு வயதினிலே’ படத்தில் நடிக்குமாறு கேட்டதும்…”ஓஹோ… சரி ஆகட்டும்” என்று ஒற்றை வார்த்தையை அதையும் வேகமாக சொன்னார். இது தான் அவரது இயல்பு. அந்த இயல்பே திரைப்படங்களில் அவரது ஸ்டைலாக எதிரொலித்தது.

அதே போல, புதுகாக அவர் நடிக்க ஆரம்பித்தது முதல் இன்று வரை ‘கருத்தாக’ நடந்துகொள்வதும் அவரது தனிச் சிறப்பு தான்….!” - இவ்வாறு கூறியிருக்கிறார் பாரதிராஜா.

(அடுத்த பகுதியில் : ரஜினி - பாரதிராஜா இருவரிடயே பிளவை ஏற்படுத்திய நெய்வேலிப் போராட்டம்! )

[END]

13 Responses to “பாரதிராஜா & ரஜினி நட்பு! (நெய்வேலி போராட்டத்துக்கு முன்பு) “தீமைக்கும் நன்மை செய்” — பகுதி 3”

 1. harisivaji harisivaji says:

  அது நகைப்புக்குரிய விஷயமே தவிர எதிர்ப்புக்குரிய விஷயம் அல்ல……….

  உண்மை …இதை பின்பற்றுவது முன்பு கடினமாக இருந்தது …இப்போ பழகி விட்டது

 2. Ganesh Ganesh says:

  Sundarji, any update on Thalaivar’s next movie after Kochadiyan? BTW, I don’t think anyone can overtake Thalaivar’s Sivaji & Endhiran’s records.

 3. ragul ragul says:

  waiting for Bharathiraja portion to be completed to give comments Sundar sir pl update quickly can’t wait

 4. Ravikumar Ravikumar says:

  சுந்தர், எங்களுக்காக நெய்வேலி போரட்டத்தின் பொது தலைவர் இருந்த உண்ணாவிரத வீடியோ லிங்க் செய்தால் நான்றாக இருக்கும் . நான் இதை சன் டிவி இல் லைவ் செய்த பொது பார்த்தேன் , அதில் நடிகர்கள் தலைவர் பற்றி பேசியது நன்றாக இருந்தது , இந்த சமயத்தில் பார்த்தல் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் . நன்றி

 5. மனோஜ் மனோஜ் says:

  சும்மா பிரிச்சி மேஞ்சிடீங்க அண்ணா :) சூப்பர்!! ஒன்னு ரெண்டு படம் ஹிட் கொடுத்தால் சூப்பர்ஸ்டார் ஆகிவடலாம் என்று எண்ணி கொண்டிருக்கும் சிலருக்கு செம்ம பதில்!! அதுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்!!!

 6. RAJA RAJA says:

  உண்மையில் தலைவரை அவரது ரசிகர்கள் மாஸ் என்ற ஒரு வட்டத்திற்குள் வைத்து அவரது நடிப்பு திறமை முழுவதுமாக வெளிய கொண்டு வரவிட வில்லை என்ற வருத்தம் நல்ல இயக்குனர்கள் ,விமர்சகர்கள் அனைவருக்குமே இருக்கிறது.கார்டூனிஸ்ட் மதன் அவர்களும் இது போல் பல இடங்களில் சொல்லி இருக்கிறார் ,தலைவருக்குள் மிக பெரிய நடிகர் ஒளிந்து இருக்கிறார்.இதை கொஞ்சம் 35 டு 50 வயதான பெண்களிடம் கேட்டு பாருங்கள் ,தலைவரின் பழைய வில்லன் நடிப்பை பார்த்து அவரை பார்த்து பயந்தவர்கள் பல பேர் அது தான் அவரது நடிபிர்க்கு கிடைத்த பரிசு அதை தக்க வைக்க விடாமல் ஒரு வட்டத்திற்குள் மாடி விட்டு விட்டோம் பாவம் தலைவர் அதனால் தான் மூன்று வருடத்திற்கு ஒரு படம் என்று குறைக்க காரணம்

  திரு பாரதிராஜா அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் உணர்ச்சிவசப்பட்டு வாயில் வந்ததை வெளிபடையாக சொல்லி விடுகிறார் இவர்களை போன்றவர்களை கூட நம்பி விடலாம் ,ஏன் என்றால் வெளிபடையாக பேசுபவர்கள் மனதில் ஒன்றும் இருக்காது (தலைவர் ஜக்குபாய் பட வசனம் ஏன் வந்தது என்று இப்பொழுது புரிகிறதா )

 7. aanad aanad says:

  wat u wrote in tamil?english plz

 8. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

  Great compilation. Nice to see the standing stills of Thalaivar. The freshness of the still remains the same even after 2 decades.

 9. B. Kannan B. Kannan says:

  As sundar told just laugh it out instead of getting angry when Thalaivar been cheaply compared with others..
  Waiting for the next part..
  Cheers..

 10. prakash prakash says:

  Already 2 yrs after Endhiran..no thalaivar movie yet..fed up..Kochadiyan 2 not very promising..I hope thalaivar start new project with good directors soon..

 11. RAJA RAJA says:

  @பிரகாஷ் என்னங்க தலைவர் உடல் நலம் குன்றி இருந்த பொழுது ஐயோ அவர் நடிக்கலாம் வேண்டாம் அவர் எங்களுக்கு நல்லபடியா குணமாகி கிடைத்தாலே போதும் என்று சொன்ன ரசிகர்கள் பல பேர் நினைத்த ரசிகர்கள் பல பேர் ,இப்பொழுது மீண்டு வந்து விட்டார் அவரால் முடிந்த அளவு நடித்து கொண்டு இருக்கிறார் மீண்டும் அவர் மீது சுமையை ஏற்றாதீர்கள் விடுங்கள் ,

 12. ரசிகன் ரசிகன் says:

  இந்த ஆக்ககளை முறையாக இணையத்தில் வரிசைப்படுத்தவும். பகுதி 2 ஆச்சி மனோரமா பற்றி உள்ள ஆக்கத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.

  ————————————————————-
  நன்றி. இந்த தொடர் FLASH FROM THE PAST என்ற CATEGORY யின் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
  http://onlysuperstar.tamilmovieposter.com/?p=16580
  - Sundar

 13. Muralidharan Muralidharan says:

  Waiting for the next edition !!!

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates