









You Are Here: Home » Featured, Happenings » பால் தாக்கரே மறைவு – சூப்பர் ஸ்டார் ரஜினி இரங்கல்!
திரு.பால் தாக்கரே மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மிகப்பெரும் தலைவராக விளங்கியவர் தாக்கரே என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சிவசேனா தலைவர் பால் தாக்கரே, மும்பையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
திரு. பாலாசாகேப் தாக்கரே மிகப்பெரும் தலைவராக திகழ்ந்தார். எனக்கும், எத்தனையோ பேருக்கும் அவர் தந்தை போன்று விளங்கினார். அவரது மறைவு அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், உலகமெங்கும் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
மறைந்த பால்தாக்கரே மீது சூப்பர் ஸ்டார் பெருமதிப்பு வைத்திருந்ததும் மும்பையில் 2010 ஆம் ஆண்டு ‘எந்திரன்’ வெளியீட்டையொட்டி அவரை சந்தித்து ஆசிபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் பூர்வீகம் மராட்டியம் என்பதால் ரஜினி மீது மறைந்த பால் தாக்கரே அவர்களுக்கு பெரு மதிப்பு உண்டு. பல்வேறு பேட்டிகளில் ரஜினியை அவர் பாராட்டியுள்ளார்.
[END]
ஒரு நல்ல தலைவர் ஒரு சில விசயங்களில் அவர் செய்தது சரி இல்லை என்றாலும் ஈழ தமிழகர்களின் நியாமான போராட்டத்தை ஆதரித்தவர் ,ஒரு மிக பெரிய அரசியல் கட்சியை நிர்வகித்தாலும் எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் ,பதவிகளுக்கு ஆசை படாமல் இருந்தவர்
சிறு விசயத்துக்கு எல்லாம் கலவரம் பண்ணும் ஷிவ் sainks கடந்த இரு நாட்களாக காட்டிய பக்குவம் அப்பா மிகவும் பாரட்டதக்கது ,தலைவரை இழந்தும் அமைதி காத்தது அவர்களை பக்குவ படுத்தி உள்ளதை காட்டுகிறது
அவரது ஆத்மா சாதி அடைய கடவுளை பிராத்திக்கிறேன்
Do let us know how are you preserving all nice relevant snaps
அமரர் ;திரு.பால்தாக்கரே அய்யா அவர்களின் ஆன்மா சாந்தியடைய தலைவரோடு நாங்களும் இறைவனைப் பிராத்திக்கிறோம்.