You Are Here: Home » Featured, Happenings » 12/12/12 அன்று ராகவா லாரன்ஸ் வெளியிடவுள்ள ஒற்றை பாடல் ஆல்பம் - அவரே தோன்றி நடிக்கிறார்!

சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி அவர்களின் பிறந்த நாள் வருகிற டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி வருகிறது. ஊர் உலகமே அதை கொண்டாட தடபுடலான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் நிலையில், அவரோ அது குறித்து சிறிதும் யோசிக்கவில்லை. அதாவது அதை கொண்டாடுவதற்கு அவர் திட்டங்கள் எல்லாம் தீட்டிக்கொண்டிருக்கவில்லை.

ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், வெளியூர் அல்லது வெளிமாநிலம் என்று எங்காவது சென்றுவிடுகிறார். சில சமயம் வீட்டில் குடும்பத்தினரின் அன்புத் தொல்லை
காரணமாக எளிமையாக கொண்டாடியிருக்கிறார். படப்பிடிப்பு இருக்கும் சமயங்களில் படப்பிடிப்பில் கொண்டாடுவது உண்டு. மற்றபடி பிறந்த நாள் என்பது அவரை பொறுத்த வரை ஆத்ம விசாரணை செய்துகொள்ளும் ஒரு நாளே தவிர வேறு ஒன்றும் இல்லை.

சரி…. இதெல்லாம் அப்புறம் பேசுவோம்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். இவர்களுடன் திரைத் துறையினரும் களமிறங்கியுள்ளனர்.

சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான பிரபல நடிகர் கம் நடன இயக்குனர் ராகவேந்திரா லாரன்ஸ் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளையொட்டி அவரது பாடல்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றை ரிலீஸ் செய்கிறார்.

இது குறித்து லாரன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நானும் அவரது ரசிகன். இந்த ஆண்டு ரஜினியின் பிறந்த நாள் 12-12-12 அன்று வருகிறது. இது விசேஷமான தேதி. எனவே ரஜினிக்கு அன்பு பரிசாக வழங்க இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறேன். 12-12-12 அன்று இந்த குறுந்தகடு வெளியிடப்படும். ரஜினி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஆல்பத்தை உருவாக்கி வருகிறேன்.

இதற்கான பாடல்களுக்கு திரைப்பட இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இது அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

(In reference with Maalaimalar & Deccan Chronicle)

Lawrence’s gift for a superstar

It is common knowledge that choreographer-actor-filmmaker Raghava Lawrence was introduced to the film industry by Superstar Rajinikanth and is an ardent fan of the latter.

With the impending birthday of Superstar Rajinikanth which falls on the special day of 12/12/12 (which happens only once in 100 years), Lawrence will be adding his mite to the living legend’s millions of fans worldwide.

Lawrence is bringing out a music video hailing his mentor Rajinikanth with Vija Antony composing a unique track for his Thalaivar’s birthday. Speaking to DC from Hyderabad where he is busy with his forthcoming Tollywood flick, Lawrence said, “It’s a special day for me and I was keen that should do something memorable as my contribution to my Thalaivar Rajini sir.

The idea struck and I collaborated with Vijay Antony who is roping in a lyricist and penning a song to suit the occasion. This is occasion. This is the humblest way I can show my love towards my guru.”

He also revealed that he would be choreographing a special piece as well as appear in the music video. An athiradi title would be given to it, taking from the lyrics itself he added Lawrence had also organised a mass prayer when Rajini fell sick couple of years back.

[END]

7 Responses to “12/12/12 அன்று ராகவா லாரன்ஸ் வெளியிடவுள்ள ஒற்றை பாடல் ஆல்பம் - அவரே தோன்றி நடிக்கிறார்!”

 1. Mohamedamhar Mohamedamhar says:

  Woow 12.12.12
  Ithuve Special…

  Athukkumela
  Verenna
  Thalaivar Thalaivarthaan…

 2. murugan murugan says:

  விஜய் ஆண்டனி இசையில் தலைவரின் இசை ஆல்பமா?
  படிக்கும்போதே வித்தியாசமா இருக்கே - கண்டிப்பா கலக்குமுன்னு நம்புவோம் !!!
  ஆவலுடன் காத்திருக்கும் …!!!

 3. srikanth . srikanth . says:

  ஊருக்குள் வாழ்பவர்,பலராவார்.உள்ளத்தில் வாழ்பவர்,சிலராவர். ஆயிரம் ஆண்டுகள் ,ஆனாலும் காவியம் போல உன்பேர் வாழும்.

 4. kumaran kumaran says:

  ரசிகனுக்கு ரசிகன்

 5. RAJA RAJA says:

  தலைவரின் உண்மையான ரசிகர்களில் ஒருவர் திரு லாரன்ஸ் அவர்கள் வாழ்த்துக்கள்

 6. ravi ravi says:

  12.12.12’ ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே அமையும் அபூர்வ தேதி இது. ரஜினிக்கு இந்த ஆண்டு வருவது 63 வது பிறந்த நாள். அவரது பிறந்த நாள் அமையும் தேதி 12.12.12. இந்த மூன்றையும் கூட்டினால் 36 வருகிறது (12 12 12). ரஜினி சினிமாத் துறைக்குள் காலடி வைத்து 36 ஆண்டுகள் ஆகின்றன! இந்த 36-ஐ திருப்பிப் போட்டால், அவரது வயது 63 வந்துவிடுகிறது. இது ஒரு தன்னிச்சையான ஒற்றுமையாக இருந்தாலும், வேறு எந்த நடிகருக்கும் அல்லது தலைவருக்கும் அமையாத ஒரு அபூர்வ விஷயம் என்பதால், இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

 7. rajiniragu rajiniragu says:

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா………….

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates