You Are Here: Home » Featured, Happenings » இனிதே நடைபெற்ற GRAND BRAND RAJINI புத்தக வெளியீட்டு விழா! திரு.பால்கி, திருமதி.லதா ரஜினி பங்கேற்பு!

தொழில் முறையில் சார்ட்டட் அக்கவுண்டன்ட்டுகளான திரு.பி.சி.பாலசுப்ரமணியம் மற்றும் திரு.ராம்.என்.ராமகிருஷ்ணன் ஆகியோர் எழுதியிருக்கும் நூல் GRAND BRAND RAJINI.

திரு.பி.சி.பாலசுப்ரமணியம் பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் என்ற நூலின் ஆசிரியர். நமது நண்பர். திரு.ராம்.என்.ராமகிருஷ்ணன் முன்னணி சார்ட்டட் அக்கவுண்டன்ட்டுகளில் ஒருவர். வர்த்தகம் மற்றும் பிரண்டிங் துறையில் அபார நிபுணத்துவம் பெற்றவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயருக்குள்ள பிராண்ட் வேல்யூ எனப்படும் வர்த்தக மதிப்பை கருப்பொருளாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

வெற்றிகரமான பிராண்டுகள் எவை, சில பிராண்டுகள் தோல்வியை தழுவுவது ஏன் என்பது உள்ளிட்டவற்றை விரிவாக இந்த நூலில் அலசியுள்ளனர்.

ஒரு சாதாரண நடிகராக தனது திரையுலக பயணத்தை துவக்கிய ரஜினி இன்று உலகம்தழுவிய அளவில் நம்பத்தகுந்த ஒரு வர்த்தக குறியீடாக மாறியது எப்படி உள்ளிட்டவற்றை சுவையாக விளக்கியுள்ளனர்.

சென்னை சிட்டி சென்டரில் உள்ள லேண்ட்மார்க்கில் 27/11/2012 அன்று மாலை நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல இயக்குனரும் விளம்பர நிறுவன இயக்குனருமான பால்கி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் துணைவியார் திருமதி.லதா ரஜின்யும் கலந்துகொண்டனர்
நூலாசியர்களில் ஒருவரான திரு.பாலா நமக்கு இந்த விழாவில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் வேலைப்பளு காரணமாக என்னால் செல்ல முடியவில்லை. நமது தளம் சார்பாக நண்பர் திரு.ஹரிஹரசுதனை நிகழ்ச்சிக்கு அனுப்பியிருந்தோம். அவரும் குறித்த நேரத்தில் நிகழ்ச்சிக்கு சென்று அதில் பங்கேற்றார். நூலாசியரகளுக்கு வாழ்த்துகூறி, ஒரு புத்தகத்தையும் நம் தளம் சார்பாக வாங்கினார்.

புத்தகம் ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் போலவே விற்பனையில் சாதனை படைக்க வாழ்த்துகிறோம்.

மேலும் விபரங்களுக்கு www.grandbrandrajini.com என்ற தளத்தை பார்க்கவும்.

[END]

9 Responses to “இனிதே நடைபெற்ற GRAND BRAND RAJINI புத்தக வெளியீட்டு விழா! திரு.பால்கி, திருமதி.லதா ரஜினி பங்கேற்பு!”

  1. amar amar says:

    superb pics, have ordered the book last week, waiting with excitement to read, expecting it to be better than rajini punchtantra. good to see sabu cyril sir too in the launch along with latha mam

  2. RAJNIhari RAJNIhari says:

    thank you for providing me that wonderful oppurtunity anna..!!will cherish those moments forever!!

  3. RAJA RAJA says:

    இந்த வருடம் நமக்கு ஒரு மறக்க முடியாத பிறந்தநாள் தான் , சிவாஜி ரிலீஸ் ,லாரன்ஸ் அவர்கள் பாடல் வெளியீடு ,இப்பொழுது இந்த புத்தகம் சும்மா அதிர போகுது .

    இந்த புத்தகம் பஞ்ச்தந்த்ரா பெற்ற வெற்றிகளை போல் பெற வேண்டும் என்று வாழ்த்துக்கள்

  4. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Great news. Let us wish this book will break all the previous records in Sales.

  5. kumaran kumaran says:

    GRAND BRAND , GRAND SALE ஆக வாழ்த்துகள்

  6. B. Kannan B. Kannan says:

    Lets hope that this book too sells like
    Pancha thantra and create record..
    Cheers..

  7. B. Kannan B. Kannan says:

    Lets hope that this book too sells like the earlier
    punch thantra and create record..
    Cheers..

  8. prakash prakash says:

    Hi Sundar,
    Is it true that Thalaivar joining hands with Maniratnam for his next movie? Please clarify. Thanks

  9. SURYAKUMAR SURYAKUMAR says:

    waiting for more news as we are nearing to our superstars birhtday

    ——————————————————-
    Sorry buddy. I was continuously engaged in some important work for the past few days. Will update whenever i find time.
    thanks.
    - Sundar

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates