You Are Here: Home » Fans' Corner, Featured, Superstar Movie News » டிசம்பர் 12 அன்று நீங்கள் எடுத்துக்கொள்ளப்போகும் உறுதிமொழி என்ன?

ம் மற்றொரு முயற்சியான RIGHTMANTRA.COM சார்பாக டிசம்பர் 9 அன்று நடைபெறவுள்ள விழா ஒன்றில் கவனம் செலுத்தி வந்தமையால் கடந்த சில நாட்களாக இந்த தளத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.

டிசம்பர் 12 அன்று வரும் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தடபுடலாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். வழக்கமான கொண்டாட்டங்களுடன் மாநிலம் முழுதும் பல சமூக நலப் பணிகள் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு அதிகளவில் அனைவருக்கும் ஏற்பட இது போன்ற MASS ACTIVITIES மிகவும் உதவும். நாளைய வரலாறு பதிவு செய்யப்போவது இவைகளை தான் என்பதை ரசிகர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

தமிழகம் முழுதும் அந்தந்த மாவட்டங்களில் ரசிகர்கள் சிறப்பான முறையில் ,கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறார்கள். இது குறித்து செய்திகள் பல திக்குகளிலிருந்து வந்த வண்ணமிருக்கின்றது.

என்னை பொறுத்தவரை டிசம்பர் 12 அன்று INSPIRATION DAY. ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுடன் வாழும் ஒரு நல்ல மனிதரின் பிறந்த நாள். கொண்டாட்டங்கள் மற்றும் இதர விஷயங்களில் ஆர்வம் காட்டும் நம் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அன்றைய தினம் ரஜினி அவர்களிடமிருந்து தாம் கற்றுக்கொண்ட நல்ல விஷயம் எது என்பது குறித்து சீர் தூக்கி பார்த்து, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நான் ஏற்கனவே சொன்னது போல, பிறர் தான் அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார்களே தவிர அவர் அந்த நாளில் ஆண்டாண்டு காலமாக ஆத்ம விசாரணை மேற்கொள்வதில் தான் கவனம் செலுத்திவருகிறார்.

அட்லீஸ்ட் பிறந்த நாளின்போதாவது அனைவரும் ரஜினி அவர்களின் வழி நின்று யோசிப்போமாக. ‘நாம் ஏன் பிறந்தோம்? நாம் படைக்கப்பட்ட நோக்கம் என்ன? இந்த உலகிற்கு நாம் அளிக்கும் செய்தி என்ன? இந்த உலகிற்கு என்ன செய்திருக்கிறோம்?’

நம் தளம் சார்பாக 12/12/12 அன்று காலை, பழமையான ஆலயம் ஒன்றில் பிரார்த்தனை, பின்னர் எளிமையான சமூகப் பணி ஆகியவை நடைபெறும். மாலை நண்பர்களுடன் சிவாஜி 3D காணவிருக்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

Sivaji 3D - Newspaper Ads

நம் தளம் சார்பாக டிசம்பர் 12  அன்று நடைபெறும் பிரார்த்தனை மற்றும் சமூகப் பணிகள் குறித்து இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும். இவற்றில் எதில் நீங்கள் விருப்பப்பட்டாலும் கலந்துகொள்ளலாம்.

ஓகே…இப்போது விஷயத்துக்கு வருவோம்….

டிசம்பர் 12 அன்று நீங்கள் எடுத்துக்கொள்ளப்போகும் உறுதிமொழி என்ன?

ரஜினி அவர்களிடம் இருந்து எந்த நல்ல குணத்தை அல்லது குணங்களை பின்பற்றி உறுதி மொழி ஏற்கப்போகிறீர்கள்?

உதாரணத்துக்கு : Simplicity, Never Complaining about anything or anybody, Avoidance of self-pride & self boasting, Activeness, Devotion to God, Respecting others feelings, Never hurting anybody, Fitness, Reading good books, Boldness,

இதெல்லாம் நான் ஏற்கனவே பல பதிவுகள்ல சொன்னது தாங்க…. புதுசா சொல்றதுக்கு எதுவும் இல்லே….

இந்த லின்க்கை செக் பண்ணுங்க… http://onlysuperstar.tamilmovieposter.com/?p=666

‘சிவாஜி 3D’ ரிலீஸ் பத்தி சொல்லனும்னா…. ஏற்கனவே பட்டையை கிளப்பின படம்…. மறுபடியும் பட்டையை கிளப்போகுது.

புத்தம் புது படங்களுக்கு இணையா மிகப் பிரமாண்டமா சிவாஜி 3D ரிலீஸ் ஆகுது. ஏற்கனவே ஓடி ஓடியே பிலிம் சுருள் தேஞ்சுபோன ஒரு படத்தை ஜஸ்ட் 3D யா மாத்தி இந்தளவு ஒரு பிரம்மாண்ட ரிலீஸ் பண்ண முடியுதுன்னா அது சூப்பர் ஸ்டார் ஒருத்தருக்கு  தான் முடியும்.

நமக்கு பிறந்த நாள் அன்று மிக பெரிய விருந்தை தந்திருக்கும் ஏ.வி.எம்.முக்கு தான் நாம் நன்றி சொல்லணும்.

சிவாஜி  3D படம் நல்ல வெற்றியை பெற்று படம் வாங்கியவர்களை வெளியிட்டவர்களை குளிர்வித்து ரசிகர்களையும் மகிழ்விக்க வேண்டுமென வாழ்த்துவோம்.

நன்றி…..!

31 Responses to “டிசம்பர் 12 அன்று நீங்கள் எடுத்துக்கொள்ளப்போகும் உறுதிமொழி என்ன?”

  1. subash subash says:

    எனக்கு தலைவர் கிட்ட எல்லாமே பிடிக்கும். ஆனால் தலைவரை பற்றி யார் தவறாக பேசினாலும் தலைவர் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட திருப்பி தவறாக பேசமாட்டார் அமைதியா இருப்பார். இந்த குணம் தலைவர்கிட எனக்கு ரொம்ப புடிக்கும்……..

    ———————————————————————
    இதை இதை இதைத் தான் எதிர்பார்த்தேன். WELL DONE.
    இந்த தளம் நடத்த நான் படுற சிரமங்கள் எல்லாம் உங்களை மாதிரி புரிதல் உள்ள ஒரு சிலர் நல்ல வார்த்தைகள் பேசும்போது பறந்து போய்டுது.
    நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள்.
    - சுந்தர்

  2. Jegan Jegan says:

    Avoidance of self pride,respecting other’s feelings….morover speaking the truth….these are the things i m going to follow like thalaivar.

  3. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    // நம் மற்றொரு முயற்சியான RIGHTMANTRA.COM சார்பாக டிசம்பர் 9 அன்று நடைபெறவுள்ள விழா ஒன்றில் கவனம் செலுத்தி வந்தமையால் கடந்த சில நாட்களாக இந்த தளத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. //

    தினமும் பலதடவை வந்து பார்ப்பேன்.. என்னடா ஒன்னுமே அப்டேட் பண்ணலையே னு நினைப்பேன் … இப்பதான் காரணம் புரியுது .. சூப்பர் ணா,.. தலைவர் பிறந்தநாள் காலை பிரார்த்தனை நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்கிறேன்… அதை பற்றி கொஞ்சம் சீக்கிரமாக தெரிவித்தால் அலுவலக ஷிப்ட் டைம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பணிக்கலாம்..

    என்றென்றும் தலைவர் வழியில்…
    டிசம்பர் 12 ஐ எதிர்நோக்கி ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

  4. PVIJAYSJEC PVIJAYSJEC says:

    FEAR (FACE EVERYTHING AND RAISE ) இதை நான் பல முறை அவரிடம் பார்த்திருக்கிறேன். இதை நானும் பின்பற்ற முயற்சி செய்து வருகிறேன்..

    யார் என்ன சொன்னாலும் தீமைக்கும் நன்மை செய்கிற அந்த மனபக்குவம் தான் எனக்கு மிகவும் பிடித்தது..

    அவருடைய ரசிகன் என்று சொல்வதில் நான் பெருமை அடைகிறேன்…

    அவரை போன்று ஏழை எளிய மக்களுக்கு நம்மால் முடிந்தவரை உதவி செய்ய வேண்டும்….கண்டிப்பாக செய்வேன்..

    ” IT DOESN’T MATTER HOW LONG YOU LIVE BUT
    HOW YOU LIVE ” எனக்கு மிகவும் பிடித்த வரிகளில் ஒன்று.

    என்றும் தலைவர் ரசிகன்
    VIJAYSJEC

    ————————————————————————
    FEAR (FACE EVERYTHING AND RAISE )
    I like the new meaning you have given to FEAR.
    Keep it up.
    - Sundar

  5. **Chitti** **Chitti** says:

    My Dear Rajni Aficionados,
    ***
    Hope everyone is fine and doing great.
    ***
    I really love calling Sivaji Rao’s b’day as “Inspiration Day” rather than “World style day” or whatever.
    ***
    I really appreciate Sundarji for coining this word for the historic 12-12-12.
    ***
    And you have asked what we’re going to follow. I had listed out so many good qualities on the same day previous year that I was going to follow.
    But to confess myself, not even a month I had followed all those. All due to self depression.
    ***
    But this year, this historic year and day: 12-12-12: Again, I’m framing the things what to follow to the least till the end and hoping would follow as long as I can.
    I would try to follow to speak “Truth” - as much as I can. Because in this Kaliyuga, 100% being truthful is possible only for rishis, yogis like Mahatma Gandhi, Rajnikanth,….(only these two I know as an example. So, please pardon me if I left out any such great person).
    ***
    If you try to speak truth, that itself enough. Since that’s the mother of all good qualities I believe (inspired from the Rajni’s 1995 interview: in that, some asks, “pls tell about your memorable experience in Himalayas”. for that, he had replied so lovely. I can’t resist to hear it again and again).
    ***
    Thanks for this great website and phenomenal lovely content.
    ***
    Be happy always.
    ***
    Very proud to be a fan, admirer and trying-to-be follower of the great man, the phenomenon, Sivaji Rao.
    ***
    **Chitti**.
    Jai Hind!!!
    Dot.

  6. RAJNIhari RAJNIhari says:

    THALAIVAR kitta elamae pudikum…avaru dan yenaku vazhikati/GURU..GURU vin unmayana arthatay therindavargaluku puriyum yenna solren endru!!..
    THALAIVAR kita erukuru ellam gunathulayum namma 1% develop panikita podum-yengayo poidulam-anda muyarchiyil dan irukiren!!
    THALAIVAR oda theemaykum NANMAY seeigira gunam romba mukiyamanadu-GNYANIGAL dan iday seyivaragal !humans cant..
    inda gunathay develop pannanum nu mudivu paniruken..ellam ANDAVAN(THALAIVAR) SEYALL!!
    12/12/12 is a day which speaks volumes of the fact that whatever the MIND conceives & believes U become..simple ah solanum na..
    “WHAT U THINK U BECOME”..enna sundar anna correct dana??
    endrum THALAIVAR in pathayil
    vazhtha vayad illay vendugiren THALAIVAAAA!!!
    RAJNI hari

  7. mnagendra rao mnagendra rao says:

    எனக்கு தலைவர் கிட்ட எல்லாமே பிடிக்கும்
    —————————————————————————-
    அது ஒ.கே.
    அதுல நீங்க எதை ஃபாலோ பண்ணப்போறீங்க?
    - சுந்தர்

  8. PRADEEP KUMAR PRADEEP KUMAR says:

    தலைவர் கிட்ட எனக்கு பிடிச்சது தனக்கு தீமை செய்தவனுக்கும் நன்மை செய்யும் நல்ல குணம்.. சுந்தர்ஜி இந்த வாரம் ராணி வார இதழ் dtd 09 -12 -2012 பாருங்க.. topic ரஜினி சொன்ன மூணு விஷயம்.. சூப்பர் ….படிக்க மறந்துடாதீங்க ….

    ——————————————-
    Ya… thanks Pradeep.
    - Sundar

  9. kumaran kumaran says:

    உண்மை பேச முயற்சி செய்ய உள்ளேன் !

  10. saranya saranya says:

    as said in thirukural,
    இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான
    நன்னயம் செய்து விடல்.
    intha gunam thaan thalaivarkitta irunthu ennaala mudintha alavuku follow pannanum nu nenaikira vishayam.
    btw any updates about the yesterday’s function?

    —————————————————-
    Nothing special about it.
    Thalaivar’s speech was shown in video and that content too we posted last week itself here.
    But yet there’s something interesting.
    Pls check
    http://www.sify.com/movies/sivaji-3d-dolby-atmos-on-dec-12-news-tamil-mmek82hhcfe.html
    and
    http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2012/dec/041212.asp
    thanks.
    - Sundar

  11. vasi.rajni vasi.rajni says:

    தலைவரிடம் என்னை அதிகம் ஈர்த்தது அவருடைய பொறுமையும் அவருடைய தெளிவும் மற்றும் அவருடைய தைரியமும் தான்.
    .
    2004 ஆண்டு தலைவருக்கு ஒரு சோதனையான ஆண்டு. தான் இத்தனை ஆண்டுகள் சேர்த்து வாய்த்த ஓட்டுமொட்ட பேர் புகழுக்கும் பெரிய சோதனை நடந்தது; கிட்ட தட்ட அனைவரும் அவ்வளவுதான் ரஜினி என்று கூறினார் .அப்போது அவர் கொஞ்சம் கூட panic ஆகவில்லை. ஒரு ஞானியிடம் இருக்கும் தெளிவையும் பொறுமையையும் அவர் வெளிபடுதுனார் வெளிபடுத்தினார். நான் யானை இல்லை குதிரை என்று முழக்கமிட்டு சோதனைகளை சாதனையகினார். அது வரை தமிழ் சூப்பர் ஸ்டார் ஆகா இருந்தவர் இந்திய சூப்பர் ஸ்டார் ஆகினார்.
    .
    இது போல உதாரணங்கள் இருக்கின்றன, இருக்கப்போகின்றன. தலைவரின் புகழை கண்மூடித்தனமாக துதிபாடுபவன் அவருடைய துதிபாடியாக மட்டுமே இருக்க முடியும். தலைவரின் குணங்களை கடைபிடிக்க நினைப்பவன் அவருடைய அபிமானியாக அதாவது WELL- WISHER ஆக மாறமுடியும் .
    .
    ஒரு தனக்கு துதிபாடியாக இருப்பதை விட அபிமானியாக இருப்பதையே அவர் விரும்புவார். இதனை நாம் செய்வதே நாம் அவருக்கு அளிக்கும் பெரிய பரிசு.
    .
    rajini will rule tamilnadu

  12. Rajagopalan Rajagopalan says:

    நம் மற்றொரு முயற்சியான RIGHTMANTRA.COM சார்பாக டிசம்பர் 9 அன்று நடைபெறவுள்ள விழா ஒன்றில் கவனம் செலுத்தி வந்தமையால் கடந்த சில நாட்களாக இந்த தளத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை

    Adhu enna function Mr Sundar?

    Also Pl Confirm where u had planned for Sivaji 3D?

  13. Rajagopalan Rajagopalan says:

    First Movie in India in Dolby Atmos - Latest from Dolby is Sivaji 3D.
    Also the first Theatre in India (I Hope) to equip Dolby Atmos is Satyam Cinemas

  14. suryakumar suryakumar says:

    hai,i like him very much because
    1) calmness
    2) cool
    3) simplicity
    4) speed
    5) style
    6) calmness
    7) motivational dialogues
    8) spirituality
    9) humble

    ————————————————-
    Dear Surya,
    My question which qualities are you following or going to follow? That’s it.
    - Sundar

  15. Sakthivel Sakthivel says:

    I will try to follow punctuality. It is one of the good character of Thalaivar.

  16. srikanth . srikanth . says:

    பெரியோரை மதிப்பது பணிவாக இருப்பது.இவையிரண்டும் தலைவரிடம் நான் கற்றுக்கொண்டது.இதை என்றும் தொடர்ந்து பின்பற்றுவேன் என்ற உறுதிமொழியை ஏற்கிறேன்.

    —————————————————————
    அபாரம். மிக்க நன்று. சொல்வதோடு நில்லாமல் செயலில் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நண்பா..

    மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    - சுந்தர்

  17. winston winston says:

    பிறந்தநாள் ஏன் அன்பு தலைவருக்கு..!!
    அம்மா அப்பா என்ற இருவருக்கு பின் நான் விவரம் தெரிந்து முதலில் நேசித்தது உன்னை தான்..!!
    நண்பர்கள் என்றால் என்னவென்று அறியாத வயதில் கூட மனதொட ஒன்றினாய்..!!
    உலகம் என்றால் என்னவென்று தெரியாத வயதில் கூட எண்ணூல் குடியேறினாய்..!!
    குழந்தையாக இருந்த என்னை சிரிக்க வெய்த்தாய், சிந்திக்க வெய்த்தாய்..!!
    உனக்கு பின்னால் ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் நீ முதன்மையானாய் முதல்வன்னானாய்..!!
    எளிமையை கற்று கொடுத்தாய்..!!
    அன்பை கற்று கொடுத்தாய்..!!
    மற்றவரை மதிக்க கற்று கொடுத்தாய்..!!
    தலைகனமில்லாமல் வாழ கற்று கொடுத்தாய்..!!
    மதியை விதியால் வெல்ல கற்று கொடுத்தாய்..!!
    வெளியே தெரியாமல் உதவ சொல்லி கொடுத்தாய்..!!
    நல் வழி படுத்தினாய்..உழைக்க சொன்னாய்..!!
    பெற்றோரை மதிக்க சொன்னாய்..!!
    நட்பை பேண சொன்னாய்..!!
    பதவி முக்கியமில்லை பண்பு தான் முக்கியம் என்று புரிய வெய்த்தாய்..!!
    உண்மையாக இருந்தால் பயப்பட வேண்டாம் என்ற உண்மையை சொல்லி கொடுத்தாய்..!!
    கர்வமுடன் கூறுகிறேன் நான் உன் ரசிகன் என்று..!!
    12 12 12 என்ற மந்திர தேதியில் பிறந்தநாள் கொண்டாடும் தலைவா..!!
    வாழ்க பல்லாண்டு உன் வயது உன் எந்திரன் வசூல் சாதனையை முரியடிக்கட்டும்..!!

    • Thiruvanmiyur Sriram Thiruvanmiyur Sriram says:

      சூப்பர் வின்ஸ்டன், என் மனதில் இருந்ததை உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே பிரதிபலிக்கிறது. தலைவரைப்பற்றி நான் நினைத்தது எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?

  18. Ragul Ragul says:

    Sir,
    I started respecting my mother more after watching Veera Movie , I studied only 5th Std at that time. I imbibed the following from thalaivar
    பெரியோரை மதிப்பது
    பொறுமை
    தீமைக்கும் நன்மை செய்
    Prayer to God even in tough time

  19. R O S H A N R O S H A N says:

    தலைவரோட எல்லா குணங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்……அவரை பின்பற்றுவதால் அவரோட எல்லா குணங்களையும் பின்பற்ற முயற்சி செய்கிறேன் ……சிலவற்றை கடைபிடித்தும் கொண்டிருக்கிறேன்………..தற்பொழுது அதிகமாக முயற்சி செய்வது அவருடைய activeness மற்றும் boldness …….இப்பொழுது ‘Never Complaining about anything or anybody ‘ இதையும் follow பண்ணவேண்டும் என்று உறுதிமொழி எடுப்பேன்…….அடுத்தவன் சரியாக செய்யவில்லை, இது சரியாக நடக்கவில்லை என்று feel பண்ணுவதை விட்டுவிட்டு இனிமேல் என்னை நானே திருத்திக்கொள்ள பார்கிறேன்…….

  20. raajeshtve raajeshtve says:

    என்னை பொறுத்தவரையில் அவரை அருவருப்பாகவும், மனகசபுடனும், பொறாமையிலும், விமர்சித்த அனைவரையும் அவர் பொறுமையுடனும், சகிபுதன்மையுடன் அதை சகித்துகொண்டு எந்த ஒரு பதில் மற்றும் நேர் மறையான விமரசனகளை செய்யாமல் அவர் படங்களை வெற்றி மற்றும் வசூல் மூலமாகவே அனைவருக்கு பதிலடி கொடுக்கும் அவரின் பண்பு மாற குணம் என்னை மிகவும் ஆச்சர்யபடவைதுள்ளது.

  21. harisivaji harisivaji says:

    தலைவர் அவர் வாழ்வில் தனது ஒரு ஒரு காலகட்டத்தில் எலோருக்கும் எல்லா நிலையிலும்
    ஒரு உதாரண மனிதனாக வாழ்கிறார்
    இப்போ இருக்கும் நிலையில்
    முதலில் பெற்றோருக்கு ஒரு நல்ல மகனாக , பல கடமைகளை நிர்வேற்றவேண்டும்
    அதற்கு தலைவர் வழியே என் வழி

  22. மனோஜ் மனோஜ் says:

    நேரம் தவறாமை, உண்மை பேசுதலை நான் ஏற்கனவே சென்ற ஆண்டிலிருந்து கடைபிடித்து கொண்டு இருக்கிறேன்!! இந்த ஆண்டு முதல் ஆன்மீகத்தையும் (பொறுமை, நிதானம், அவசரமின்மை, இறை வழிபாடு), கொடுத்த சொல்லை காபாற்றுவதையும் பின்பற்றுவேன் :)

  23. R.Ramarajan R.Ramarajan says:

    I want to follow Punctuality, simplicity,boldness from Thalaivar.

  24. Veera Veera says:

    மனசாட்சி படி நடக்கிறததை நான் follow பண்றேன்.

  25. raja raja says:

    என்னை பொறுத்த வரை நான் அவரை பின்பற்றுவது ஆன்மிகத்தில் ,முதலில் இருந்தே எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் ஆனால் அவர் மூலம் பாபாஜி பற்றி நிறைய தெரிய வேண்டும் என்று ஆசை படுகிறேன் ,தலைவர் சென்று வரும் இமயமலை யாத்திரை செல்ல வேண்டும் என்று ஆசை படுகிறேன் பார்ப்போம் சிவபெருமான் எப்பொழுது மனது வைக்கிறார் என்று

    அடுத்து ,முக்கியமாக நான் கடை பிடிப்பது எது வென்றாலும் நேருக்கு நேர் அவர்களிடமே பேசுவது அவர்களை பற்றி மற்றவர்களிடம் விசாரிப்பதோ அல்லது குறை கூறுவதோ இல்லை ,மனதில் பட்டதை நேரடையாக கேட்டுவிடுவது

  26. Prasanna Prasanna says:

    12-12-12 தலைவர் பிறந்தநாள். அதைக் கூட்டினால் 36. தலைவர் திரைவாழ்க்கைக்கு வந்து 36 வருடங்கள் ஆகின்றன. அதை மாற்றிப் போட்டால் 63. தலைவருக்கு 63 வயது ஆகின்றது. இது எப்படி இருக்கு!

    • sidhique sidhique says:

      சூப்பர்
      பெரியோரை மதிப்பது பணிவாக இருப்பது.இவையிரண்டும் தலைவரிடம் நான் கற்றுக்கொண்டது.இதை என்றும் தொடர்ந்து பின்பற்றுவேன் என்ற உறுதிமொழியை ஏற்கிறேன்.

      ல் தலைவரை பற்றி யார் தவறாக பேசினாலும் தலைவர் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட திருப்பி தவறாக பேசமாட்டார் அமைதியா இருப்பார். இந்த குணம் தலைவர்கிட எனக்கு ரொம்ப புடிக்கும்……..

  27. R.selvam, rr computer, perambalur R.selvam, rr computer, perambalur says:

    vanakam, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே வாழ்க வளமுடன்

  28. Arunkumar Arunkumar says:

    நான் ஒரு முறை என்னுடைய இதயம் கிட்ட நின்னு போட்டோ எடுக்கணும்…… நான் ஈந்த அல்லாவுக்கு தனம்பிக்கை கோட்டுத ரஜினி தலைவர்ருகு நான் யன்ன பண்ண முடியும் ?????????

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates