You Are Here: Home » Featured, Rajini Lead » ரசிகர்கள் நடத்திய விழாவில் முதல் முறையாக கலந்துகொண்ட ரஜினி - மனதில் உள்ளதை அருவியாக கொட்டித் தீர்த்தார்!

நண்பர்கள் முதலில் என்னை மன்னிக்கவேண்டும். ஒரு மாபெரும் நிகழ்வு நடந்து முடிந்த தருணத்தில் அதை உடனடியாக உங்களிடம் பகிர்ந்துகொள்ளமுடியாததற்கு வருந்துகிறேன். கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சில சமயம் நான் பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வேறென்ன சொல்ல?

இப்போதைக்கு தினத்தந்தியில் வெளியானவற்றை தந்திருக்கிறேன். (புகைப்படங்கள் நம்முடைய தளத்தின் ஸ்பெஷல் ஆகும்.) இருப்பினும் வரவிருக்கும்  அப்டேட்டுகளை பொருத்தவரை உங்களுக்கு தாமதாமாக நான் அளித்தாலும் நிச்சயம் அவை உங்களை விழா நடந்த ஒய்.எம்.சி.ஏ. கிரவுண்டுக்கு அழைத்து செல்லும் என்பது மட்டும் உறுதி. சற்று பொறுமையாக இருக்கவும்.

நடந்ததெல்லாம் நன்மைக்கே; நடக்காததும் நன்மைக்கே!

நன்றி…

- சுந்தர்

————————————————————————————————————————————————————————————————————-

“ஒவ்வொரு மாநிலத்திலும், நாட்டிலும் யார் தலைவராக வரவேண்டும் என்பதை நிர்ணயிக்க ஒரு சக்தி இருக்கிறது”

ரஜினிகாந்த் பேச்சு

சென்னை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் அவருடைய 63–வது பிறந்த நாள் விழா, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. விழாவில் கலந்துகொண்டு ரஜினிகாந்த் பேசியதாவது:–

‘‘பொதுவாக நான் என் பிறந்த நாளில் சென்னையில் இருப்பதில்லை. ஏதாவது வெளியூருக்கு சென்று விடுவேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒரு முறை நான் சென்னையில் பிறந்தநாளை கொண்டாடியபோது, வெளியூரில் இருந்து வந்த ரசிகர்கள் மூன்று பேர் ஊருக்கு திரும்பி போகும்போது, விபத்தில் சிக்கி இறந்து விட்டார்கள். அந்த ரசிகர்களின் பெற்றோர்கள் என்னை சந்தித்து, ஒரு கேள்வி கேட்டார்கள். என்னால் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. அதில் இருந்து நான் பிறந்த நாள் அன்று சென்னையில் இருப்பதில்லை.

ரசிகர்கள் பிரார்த்தனை

நான் உடல்நலக்குறைவாக இருந்தபோது, எனக்காக எத்தனையோ ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அந்த பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். அந்த ரசிகர்களை சந்திப்பதற்காகவே இந்த பிறந்தநாளின்போது சென்னையில் இருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு என் உயிர் நண்பன், என் வலது கை, எனக்கு அனுமார் மாதிரி இருந்த நண்பன் காந்தி மாரடைப்பால் இறந்து விட்டான். எங்க அப்பா, அம்மா, அண்ணன், சில நண்பர்கள் இறந்தபோது கூட நான் அத்தனை துக்கப்பட்டதில்லை. அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை.

ஆண்டவன் செயல்

மறுநாள் காலை உங்களை எல்லாம் பார்த்ததில், எனக்கு மகிழ்ச்சி. அது, ஆண்டவன் செயல். காந்தியின் மரணத்தினால் ஏற்பட்ட சோகத்தை போக்க, ஆண்டவன் உங்களை அனுப்பியிருக்கிறார். ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் கூட, இது யாருக்கும் கிடைக்காது. நான் எதற்கும் கூட்டம் சேர்க்க ஆசைப்பட்டதில்லை. ‘ஷோ’ பண்ண வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டேன். என் பிறந்த நாள், மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது. ரசிகர்கள் ஊர்களுக்கு பத்திரமாக திரும்பி போக வேண்டும் என்ற கவலை எனக்கு உண்டு.

வித்தைகள்

பெரிய பெரிய மகான்கள் தங்களுக்கு தெரிந்த வித்தைகளை தங்கள் சிஷ்யர்களுக்கு கற்றுக் கொடுத்து விடுவார்கள். அப்படி கற்றுக் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் பிரம்ம ராட்சதர்கள் ஆகிவிடுவார்கள். மரங்கள், குளங்களில்தான் அவர்கள் இருப்பார்கள். அதனால் எல்லா மகான்களும், சித்தர்களும் தங்கள் சிஷ்யர்களை தேடிப்பிடித்து, வித்தைகளை கற்றுக் கொடுத்து விடுவார்கள். அதுமாதிரி என் ரசிகர்கள் பலம் மிகுந்த ஆட்கள்.

அரசியல்

நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று இங்கே சிலர் பேசினார்கள். அரசியல் கடல் மாதிரி. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். தமிழ் மக்களை சார்ந்தவன். தமிழ் மக்கள், என்னை வாழ வைத்த தெய்வங்கள்.

1996–ல் ஒரு சூழ்நிலை என்னை அரசியலில் ஈடுபட வைத்தது. இப்போது நீங்கள் உங்கள் நிலையை தெரிவிக்கவில்லை என்றால், உங்களை கோழையாக நினைத்து விடுவார்கள் என்றார்கள். நான் பிச்சை எடுத்தாலும் எடுப்பேன். கோழையாக வாழ விரும்ப மாட்டேன். நான் ஆதரித்து விட்டேன் என்பதற்காக, 5 வருடங்கள் அவர்களை ஆதரித்தேன். அப்புறம் நான் யாரையும் ஆதரிக்கவில்லை.

பிறகு என் படம் தொடர்பாக, ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியிருந்தது. அவர்களை கீழே தள்ள வேண்டும் என்று எதிர்க்கவில்லை. அந்த சமயத்தில் நான் சிகரெட் பிடிப்பதை விட்டேன். இன்றுவரை தொடவில்லை.

சாதாரண விஷயம் அல்ல

அரசியல் சாதாரண விஷயம் அல்ல. யாரையும் சந்தோஷப்படுத்துவதற்காக, பொய்யான வாக்குறுதியை அளிக்க நான் விரும்பவில்லை. அரசியல் தலைவர்கள் யாரும் ஜனங்களுக்கு கெட்டது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. நல்லது செய்யத்தான் விரும்புவார்கள். ஆனால் அவர்களால் செய்ய முடியாது. ‘சிஸ்டம்’ அப்படி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. எல்லா மாநிலங்களிலும் இதுதான் நடக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், நாட்டிலும் யார் தலைவராக வரவேண்டும் என்பதை நிர்ணயிக்க ஒரு சக்தி இருக்கிறது.

‘சிறுநீரகம்’ பாதிப்பு

ஒரு காலத்தில், நான் நிறைய குடித்தேன். குடி இல்லையென்றால் தூங்க முடியாமல் அவதிப்பட்டேன். திருமணம் ஆனபின், என் மனைவி லதாவின் அன்பினால் குடிப்பதை குறைத்துக் கொண்டேன். ஆனால், சிகரெட்டை மட்டும் விட முடியவில்லை. என் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு அந்த சிகரெட்தான் காரணம். தயவு செய்து ரசிகர்கள் யாரும் சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள். அந்த பழக்கம் இருந்தால் விட்டு விடுங்கள்.

‘மிராக்கிள்’

நான், ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது, எனக்கு சுய நினைவில்லை. அதன்பிறகு சிங்கப்பூருக்கு போய் சிகிச்சை பெற்றேன். அங்கு கொடுத்த மருந்தின் பாதிப்பு 6 மாதங்களுக்கு இருந்தது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக 100 சதவீதம் நன்றாக இருக்கிறேன். டாக்டர்கள் எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். இது, ஒரு ‘மிராக்கிள்’ என்கிறார்கள். அந்த ‘மிராக்கிள்’ என் ரசிகர்களின் பிரார்த்தனைதான். பிரார்த்தனைகள்தான் என்னை வாழவைத்தது. உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அம்மா, அப்பாவை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையையும், வீட்டையும் சொர்க்கமாக்கிக் கொள்ளுங்கள்.’’ இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

விழாவில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கருணாஸ், பாண்டு, கே.ராஜன், பட அதிபர்கள் எஸ்.தாணு, எஸ்.வி.ரமணன் ஆகியோரும் பேசினார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் ராமதாஸ், சூர்யா, சினோரா அசோக் ஆகியோர் செய்திருந்தார்கள்.

25 Responses to “ரசிகர்கள் நடத்திய விழாவில் முதல் முறையாக கலந்துகொண்ட ரஜினி - மனதில் உள்ளதை அருவியாக கொட்டித் தீர்த்தார்!”

  1. Rajiniramachandran Rajiniramachandran says:

    சூப்பர் . இப்படி உண்மையா இருக்கறதால தான் உலகம் போற்றும் மனிதராக இருக்கிறார்.தலைவர் …

  2. Ram Ram says:

    Man with integrity, we need to follow it

  3. Ganesh Ganesh says:

    Thalaivaa, you are great. I am proud to be your fan. You have given such a wonderful, lovely, truthful & lively speech. Long Live Thalaiva.

  4. harisivaji harisivaji says:

    In this Dinathanthi edition so many info is chopped off…not sure whos interventions….

  5. subbhhu subbhhu says:

    என்ன சொல்றதுனே தெரியல… இப்படி ஒரு மா மனிதனை , தன் ரசிகர்கள் ஒவோருவர் மேலும் , அவர் யார் நல்லவனா கெட்டவனா என்று தெரியா விட்டாலும் அவர்கள் அனைவர் மேலும் அன்பு வைத்திருக்கும் இந்த மனிதரை தலைவர் என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன் . ஒரு விரல் அசைத்தால் கோடி கணக்கான ரசிகர்களை கூட்டம் கூட்டகூடிய வல்லமை இருந்தும் , அவர்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் தன்னால் வந்து விட கூடாது என்று அந்த சக்தியை உதறி விட்டு போதும் இவரை தலைவராக அடைந்ததில் பெருமிதம் கொள்கிறேன்.தலைவர் என்பதையும் தாண்டி நம் எல்லோருக்கும் ஒரு குரு வாக இருந்து வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறார் என்பதே சரி. இவருக்கு இறைவன் அழிவே இல்லாத நிலையை தர வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன்

  6. kumaran kumaran says:

    உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை ,ஆனால் தலைவரின் ஆசி உங்களுக்கு கிடைக்கும் !. அந்த அளவுக்கு இது நாள் வரை உழைத்து உள்ளீர்கள் .

  7. Thalapathy Muthukumar Thalapathy Muthukumar says:

    தலைவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல என்பதை மீண்டும் நிருபித்துவிட்டார். விரைவில் வீடியோ வை வெளியிடுமாறு கேட்டுகொள்கிறேன்.

  8. RAJA RAJA says:

    என்ன பேச்சு தலைவர் சும்மா கலகிட்டாறு தலைவர் நிறைய பேருக்கு பதில் சொல்லாமல் போனது பயத்தினால் அல்ல என்று அனைவருக்குமே புரிந்து இருக்கும் இந்நேரம்

    கீழே தலைவரின் பேச்சு வீடியோ லிங்க் கொடுத்துள்ளேன் பார்க்கவும்

    http://behindwoods.com/new-videos/tamil-movies/rajini-met-fans/rajini-met-fans-event.html

  9. Rajagopalan Rajagopalan says:

    I also attended the function. seing thalaivar after a very long time…
    its a wonderful speech…dinakaran edited the speech & published. not covered the crowd also…

  10. B. Kannan B. Kannan says:

    வாவ்.. என்ன ஒரு பேச்சு!!!
    இன்னும் தலைவர் நிறைய பேசி இருப்பார்.. ஆனால் ஏனோ முடித்து கொண்டார்.. இது நேரில் பேச்சை கேட்டவர்களுக்கு புரிந்திருக்கும்..
    அரசியல் பற்றிய பேச்சும் , ராணா பற்றிய பேச்சையும் தான் நான் சொல்கிறேன்..
    மேலும் தினகரன் மற்றும் தந்தியில் தலைவருடைய முழு பேச்சு வர வில்லை.. ஏன்!!!!!!!!!
    மேடையில் பேசிய பலரும் தலைவர் அரசியலுக்கு வர அழைப்பு விட்டார்கள்..
    தலைவர் இந்த முறையும் எஸ்கேப் ஆகி விட்டார்..
    There was huge vibration as long as thalaivar was there..
    நாங்கள் அனைவரும் தலைவர் கிளம்பிய உடன் கிளம்பிவிட்டோம்..
    சரியான போக்குவரத்து நெரிசல்..
    தலைவர் கலக்கி விட்டார்..
    Hoping against hope that Thalaivar one day will come to politics..
    கனவு மெய் பட வேண்டும்..
    Cheers..
    Drop in ocean of Thalaivar Fans,
    B. Kannan.

  11. saranya saranya says:

    did any tv channels telecast this news.

  12. Sankaranarayanan Sankaranarayanan says:

    ஜி உங்கள் பதிவிற்கு என்றுமே எப்போதுமே தனி மதிப்பு தான் தலைவர் பல கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டார். நன்றி தலைவா……

    ப.சங்கரநாராயணன்

  13. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    தலைவா தலைவா னு கத்தி குரலே மாறிபோச்சு எனக்கு.. மறக்க முடியாத நாள் நம் தலைவரின் ரசிகர்கள் அனைவருக்கும் … இனியும் அது போல் ஒரு தருணத்தை எதிர்பார்த்து …

    என்றென்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்…

  14. karna karna says:

    sundar y r u nt publishing my comments?

    —————————————————————-
    Sorry…. i have reasons friend.
    - Sundar

  15. RAJA RAJA says:

    https://www.youtube.com/watch?v=2duHOUAVnvk

  16. murugan murugan says:

    தகவல்களுக்கு மிக்க நன்றி சுந்தர் ஜி !!!

    உங்களது வழக்கமான அப்டேட் படிக்காமல் இந்த நிகழ்வு எங்கள் மனதில் அமர மறுக்கிறது. நீங்கள் அங்கு சென்றீர்களா அல்லது செல்லவில்லையா என்றே தெரியவில்லை.

    தலைவர் நீண்ட இடைவேளிக்கு பின் தமது ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு பல நல்ல அறிவுரைகளை வழங்கியதோடு தன மனதில் உள்ள பல கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார் !!!
    அவரது உடல்நலம் மனநிம்மதி மற்றும் சந்தோஷம் மட்டுமே இப்போது நமக்கு தலையாய பிரார்த்தனை !!!
    தலைவர் எதை எப்போது யாருக்கு செய்ய வேண்டும் என்பது மிக நன்றாக தெரியும் !!!
    தனது நண்பர் இறந்த துக்கத்தில் இருந்த அவர் தமது ரசிகர்களுக்காக எல்லா வருத்தத்தையும் மனதுக்குள் பூட்டி வைத்து விட்டு வந்தாரே அது போதாதா நமக்கு !!!
    தலைவர் தமைந்து பிறந்த நாளில் எத்தனையோ அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் கூறியுள்ளார் !!!
    அவற்றில் ஏதேனும் ஒன்றையாவது நாம் கடைபிடிப்போமேய்யானால் அதுவே நாம் அவருக்கு செய்யும் மிக்க பெரிய நன்றி கடன் !!!

    விழா நல்ல படியாக நடந்தது - தலைவர் அருமையாக பேசினார் என்று நாம் சந்தோசமாக இருந்தாலும்
    தலைவரின் மனம் முழுவதும் விழாவிற்கு வந்தவர்கள் நல்லபடியாக அவரவர் இருப்பிடம் சென்று சேரவேண்டுமே என்ற கவலையில் இருக்கும் !!!
    இந்த நொடி வரை அவர் அதை தனது உதவியாளரிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டு இருப்பார் !!!
    அது தான் தலைவர் !!!

    தலைவரின் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம் !!!
    அவருடைய வழிகாட்டுதல் படி வாழ்ந்து காட்டி தலைவருக்கு மேலும் பெருமை சேர்ப்போம் !!!
    வாழ்க தலைவர் - வளர்க அவர் புகழ் !!!

  17. vignesh vignesh says:

    such a wonderful speech.. words of true heart..
    all 3 parts of thalaivar speech here..

    http://www.youtube.com/watch?v=J4c4R4ggOaQ
    http://www.youtube.com/watch?v=B8RXdCgLxBA
    http://www.youtube.com/watch?v=zmBB1o094bc

  18. srikanth . srikanth . says:

    நான் ஒரு மாற்றுத்திரனாளி எனவே விழாவிற்கு என்னால் செல்லமுடியவில்லை இணையத்தளத்தில்தான் பார்க்கமுடிந்தது.

  19. Mettustreet K.Muthu Mettustreet K.Muthu says:

    @subbhhu//என்ன சொல்றதுனே தெரியல… இப்படி ஒரு மா மனிதனை , தன் ரசிகர்கள் ஒவோருவர் மேலும் , அவர் யார் நல்லவனா கெட்டவனா என்று தெரியா விட்டாலும் அவர்கள் அனைவர் மேலும் அன்பு வைத்திருக்கும் இந்த மனிதரை தலைவர் என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன் . ஒரு விரல் அசைத்தால் கோடி கணக்கான ரசிகர்களை கூட்டம் கூட்டகூடிய வல்லமை இருந்தும் , அவர்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் தன்னால் வந்து விட கூடாது என்று அந்த சக்தியை உதறி விட்டு போதும் இவரை தலைவராக அடைந்ததில் பெருமிதம் கொள்கிறேன்.தலைவர் என்பதையும் தாண்டி நம் எல்லோருக்கும் ஒரு குரு வாக இருந்து வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறார் என்பதே சரி. இவருக்கு இறைவன் அழிவே இல்லாத நிலையை தர வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன்.//

    உண்மை இப்படி ஒருவரைத் தலைவர் என்று அழைப்பதில் கர்வப்படுகிறோம், பெருமைப்படுகிறோம், சந்தோசப்படுகிறோம் !

  20. Karna Karna says:

    Thanx for your brilliant contributions dear sundar…Appreciate it.

  21. RAJNI hari RAJNI hari says:

    what a speech by THALAIVAR..chance less..amazing..first time i saw THALAIVAR off screen..what an experience-feel..thanks to sundar anna,..!!yevlo naal thavam EN GURU va pakka!!ippo dan piranda karangalil ondru adaiden..!!inum onru irukinranna-adu ellam andavan seyall!!
    sundar anna I am glad i met THALAIVAR-avara pathuthu varthamo/sogama irukamudiyuma??no way!!

  22. Vazeer - Kuwait Vazeer - Kuwait says:

    என்ன அருமையான பேச்சு… வாவ்… சுந்தர் சிவாஜி 3D பார்த்தீங்களா? படம் எப்படி இருக்கு & ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு? இங்கு குவைத்தில் படம் வெளியாகவில்லை….

    —————————————————-
    இன்றைக்கு கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் படம் ஹவுஸ் ஃபுல் என்னுமளவுக்கு பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. படம் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது என்னுமளவுக்கு ஒரு பேண்டசி விருந்து. அதுவும் 3D எனும்போது கேட்கவேண்டுமா?
    - சுந்தர்

  23. Rajagopalan Rajagopalan says:

    Saturday i went to Sathyam Escape Cinemas to Waitch Sivaji.
    It was full & i didnt get ticket. Luckily got one cancellation ticket at the nth moment. 3D convertion & Dolby Atmos was brilliant….and the audience you have to see it to beleive it.It was as if some new movie playing with lots of whistles & bells.
    The sadest part was after the sahana song, projector failed & the theatre people struggled hard to rectify it. But they cant. So they refunded the full money. Missed the adhiradikaran & motai boss in 3D:(

  24. Rajagopalan Rajagopalan says:

    I agree with Kanna தலைவர் இந்த முறையும் எஸ்கேப் ஆகி விட்டார்..
    As usual shown hands at sky but in more dignified way

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates