You Are Here: Home » Fans' Corner, Featured » இது முடிவல்ல… இனி தான் ஆரம்பம்! It’s a new beginning!

ஜினி அவர்களுக்காக அவர் மீது பேரன்பு கொண்ட ரசிகர் ஒருவரால் நடத்தப்படும் ஒரு இணையதளம் என்பதையும் தாண்டி நமது தளம் இத்தனை ஆண்டுகளாக எத்தனை சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது, எத்தனை கண்ணியத்துடன் நடத்தப்பட்டு வந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். என் மீது குறை காண்பவர்கள் கூட நான் செதுக்கிய இந்த தளத்தை குறை சொல்லமுடியாத அளவிற்கு நடத்தி வந்தேன்.

ரஜினி அவர்கள் பற்றி நான் எண்ணற்ற செய்திகள் /அப்டேட்டுகள் ஆண்டுக்கணக்கில் அளித்துவந்தாலும் ரஜினி என்கிற தனி மனிதன் மேல் வெறி ஏற்றாமல் அவரது நற்குணங்களையும் அவர் கடந்து வந்த பாதை நமக்கு உணர்த்தும் பாடங்களையுமே நான் ஃபோகஸ் செய்து வந்தேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் வலியுறுத்தி வரும் பல விஷயங்களை நாமும் பின்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்கூறி வந்துள்ளோம் என்பதை அனைவரும் அறிவீர்கள். சமீபத்தில் ரஜினி அவர்கள் ரசிகர்களிடையே ஆற்றிய உரையின் சாராம்சம் கூட நமது தளத்தில் நாம் பல்வேறு தருணங்களில் அளித்துவந்துள்ள பதிவுகளில் உள்ளடக்கியிருக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

எந்த நிலையிலும் உணர்ச்சிவசப்படாது, செய்திகளை தீர விசாரித்து உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே வெளியிட்டு வந்திருக்கிறோம். சூப்பர் ஸ்டார் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களின் தேவைக்காக கண்ட கண்ட தளங்களை ப்ரோமோட் செய்யாது நமது தளத்திற்கு என்றே ஸ்பெஷலாக புகைப்பட பீரோ ஒன்றை உருவாக்கி புகைப்படங்களை பணம் கொடுத்து தருவித்து வெளியிட்டு வந்தோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். புலி புசித்தாலும் புல்லை தின்னாது என்பது போல, எவ்வளவு பெரிய நிகழ்ச்சி அல்லது அரிய நிகழ்ச்சி என்றாலும் பிற தளங்களின் வாட்டர் மார்க் உள்ள புகைப்படங்களை நாம் பயன்படுத்துவதை தவிர்த்தே வந்துள்ளோம்.

செய்திகளை பிற நம்பகமான SOURCE களில் இருந்து கையாண்டால், மறக்காமல் அவர்களுக்கு உரிய CREDIT ஐயும் வழங்கி வந்துள்ளோம்.

வெறும் சினிமா செய்திகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல் தளத்திற்கு வருபவர்களின் வாழ்க்கைக்கும் இது பயனாக இருக்கவேண்டும் என்று நீதிக்கதைகள், ஆன்மிகம், சாதனையாளர் சந்திப்பு, உத்வேக தொடர்,  நல்ல கருத்துக்கள், கட்டுரைகள் என நமது தளம் பரந்து விரிந்து ஊடகங்கள் மத்தியில் பிரமிப்போடு நமது தளத்தை பார்க்கும் வண்ணம் உருவாக்கினோம். இவை அனைத்தும் நீங்கள் அளித்த ஆதரவினால் சாத்தியமாயிற்று என்றால் மிகையாகாது.

இந்த தளத்தில் நாம் வெளியிட்ட பல பகுதிகளுக்காகவும், செய்திகளுக்காகவும் எப்போது வேண்டுமானாலும் நாம் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

செய்திகளை வெளியிடும்போது கூடுமானவரை எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை தவிர்த்தே அளித்து வந்திருக்கிறேன். எனது தன்மானத்தை கூட இங்கு வருபவர்களின் விருப்பத்திற்காக நான் விட்டுக்கொடுத்து பல முறை செய்திகளை அளித்துள்ளேன். அதற்கு எனக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா? சரி அதை விடுங்கள். கதம். கதம்.

மற்றபடி நம் தளத்தில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளையும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு நம்மை திருத்திக்கொண்டு வந்துள்ளோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

“கடமையை செய்; பலனை எதிர்பார்” என்று சொன்னார் திரு.ரஜினி. ஆனால் நண்பர் வஸி இங்கு கூறியதைப் போல அதையும் தாண்டி நான் செயல்பட்டு வந்துள்ளேன் என்பதை எவர் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ நிச்சயம் அந்த இறைவன் ஒப்புக்கொள்வான்.

இத்தனை நாள் இந்த தளம் தொடர்பாக நான் எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் நான் நினைத்தபடியே ஒருவேளை நடந்திருந்தால் நிச்சயம் என் வாழ்க்கையின் பாதையே வேறு மாதிரி இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது. நல்லவேளை அது போல நடக்கவில்லை. கடினமான காலகட்டங்களில் ஒவ்வொரு தருணத்திலும் எனது மனவுறுதி குலையாமல் பார்த்துக்கொண்டது தலைவரின் வார்த்தைகளே! (If everything were a smooth riding, i wouldn’t have turned towards other new path. The obstacles i faced tuned me well! Thanks thalaivar for inspiring me so much during such odd days!)

முதலில் நான் என்னென்னவோ இங்கு பேச நினைத்தேன். ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லை. உங்களுக்கு தீங்கு செய்வதாக நினைத்து யாரேனும் உங்களுக்கு நல்லது செய்தால் நீங்கள் புகார் சொல்லிக்கொண்டிருப்பீர்களா? அல்லது சந்தோஷப்படுவீர்களா? அதுப் போலத் தான் இதுவும். If somebody has done good to me thinking that they are doing bad why should i complain or groan? I thank them from my heart.

எது நடந்ததோ அது நன்மைக்கே. எது நடக்கவில்லையோ அது இன்னும் நன்மைக்கே! என்ற இந்த அற்புதமான சூட்சுமத்தை நான் புரிந்துகொள்ளவே சில காலம் பிடித்தது. மற்றவர்களும் புரிந்துகொள்ள இன்னும் சில காலம் பிடிக்கும்.

நம்ம முயற்சிகள் வெற்றிபெறுவதும் தோல்வியடைவதும் எவற்றில் என்பதில் கூட நமது வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது. ஒரு அற்பமான விஷயத்துக்கு முயற்சி செய்து வெற்றியடைவதில் என்ன பெருமை இருக்கமுடியும்? ஒரு நல்ல விஷயத்துக்கு முயற்சி பண்ணி தோல்வியடைவதில் என்ன சிறுமை இருக்க முடியும்?

கொஞ்சம் யோசிச்சு பாருங்க. நல்ல விஷயத்துக்கு முயற்சி பண்றதே நம்மளை பக்குவப்படுத்திடும். ஆரம்பத்துல தோல்வி கிடைத்தாலும் போகப் போக வெற்றிகள் குவிய ஆரம்பித்துவிடும். ஆனால் தவறான முயற்சிகளில் கிடைக்கும் வெற்றி? சூதாட்டத்தில் ஐநூறு ரூபாய் பரிசு விழுவதைப் போலத் தான். அது வெற்றியல்ல…. மிகப் பெரிய தண்டனை. (சூதாட்டத்துல ஜெயிக்கிறவன் என்ன பண்ணுவான் தெரியுமில்லே?)

தளத்தை நான் நிறுத்தப்போவதாக அறிவித்தது ஏதோ பரபரப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஆதாயம் பெறுவதற்கு அல்ல. இந்த தளத்தை மேற்கொண்டு நடத்த வழி தெரியாமலோ இல்லே முடியாமலோ நான் இந்த முடிவை சொல்லவில்லை. உண்மையில் ஒரு மாற்றத்தை ஏற்றத்தை விரும்பியே அதை அறிவித்தேன். மறுபடியும் சொல்றேன். நான் கோழை அல்ல. கையாலாகாதவனும் அல்ல. (ஒருவேளை பெருந்தன்மைக்கு அர்த்தம் கோழைத்தனம்னு யாராவது நினைச்சீங்கன்னா அப்போ நான் கோழை தான்!!!!!!!!!!).

ஒரு விஷயம் தெளிவா எல்லாரும் தெரிஞ்சிக்கணும். நீங்க ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்ன பார்த்த சுந்தர் வேற. இப்போ பார்க்குற சுந்தர் வேற.

“இது போதும்…. அடுத்த நிலைக்கு உயரனும்”னு நான் ஆசைப்படுறேன். உங்களையும் அடுத்த லெவலுக்கு உயர்த்தனும்னு ஆசைப்படுறேன். விருப்பப்படுறவங்க கூட வாங்க.

சின்னக்குழந்தையா இருக்கும்போது ஃபேரக்ஸ், CERELAC, கொடுக்குறாங்க. விரும்பி சாப்பிடுறோம். கொஞ்சம் வளர்ந்தா நல்லா வேக வெச்ச காய்கறி, மசிய வெச்ச சாதம் அப்படின்னு கொடுக்குறாங்க. அதுக்கு அடுத்து கொஞ்சம் ஹெவியான உணவுன்னு நாம வளர்றதுக்கு ஏத்தமாதிரி பெத்தவங்க கொடுக்குறாங்க. நாமும்  சாப்பிடுறோம். நல்லா வளர்ந்த பையன் ஒருத்தன் “எனக்கு இதெல்லாம் வேண்டாம்… FAREX தான் பிடிக்குது. அது தான் வேண்டும்”னு அடம் பிடிச்சா எப்படி இருக்கும்? அவனை பத்தி நீங்க என்ன நினைப்பீங்க?

ஆளும் வளர்ந்து அறிவும் வளர்ந்து… அது தானே வளர்ச்சி..? நம்மை பெற்றவர்களுக்கும் மகிழ்ச்சி…? இந்த தளம் நடத்துவது தொடர்பா என் நிலைப்பாடும் அது தான்.

என்னுடைய சில நண்பர்கள் தளத்தை மேற்கொண்டு எப்படி கொண்டு போவது என்பது பற்றி எனக்கு பயனுள்ள அர்த்தமுள்ள ஆலோசனைகளை சொல்லியிருக்காங்க அதையெல்லாம் பரிசீலனை பண்ணி, சாதக பாதகங்களை அலசி முடிவெடுக்கனும்னு ஆசைப்படுறேன். அதுக்கு எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும்.

உங்களுக்கே தெரியும்….விடுமுறை என்பதே கூட விடாமல்  இந்த தளத்திற்கு கடந்த ஐந்து வருடங்களா நான் உழைத்த உழைப்பு…. நானே அதை சொல்லக்கூடாது… இந்தத் தளத்திற்கு வருபவர்களுக்கு தெரியும்.

இப்போதைக்கு கொஞ்ச நாள் ஒய்வு எடுத்துக்குறேன். ஒன்னு ரெண்டு பதிவு நடுவுல வரும். நல்ல தீர்க்கமான ஒரு முடிவை எடுத்துவிட்டு உங்களிடம் சொல்கிறேன். ஏதாவது உதவி தேவைப்பட்டா அதை பகிரங்கமாவே சொல்றேன். அதனால் தளம் நடத்த வசதியில்லாம நான் இந்த முடிவை எடுத்திருக்குறதா யாரும் நினைக்கவேண்டாம்.

நீண்ட வருடங்களாக நான் அறிந்த ஒரு நல்ல நண்பரிடம் “இப்படி ஒரு பதிவை போடப் போகிறேன். என்னை அறியாமல் கூட எவர் மனதையும் புண்படுத்திவிடக்கூடாது. அதே சமயம் என்னுடைய நிலைப்பாட்டையும் அனைவரும் சரியாக  புரிந்து கொள்ளவேண்டும். படித்துவிட்டு சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்” என்று அவர் மதிப்பீட்டுக்கு அனுப்பியிருந்தேன். அவர் படித்துவிட்டு, “இதை விட தெளிவாக அழுத்தமாக நாகரீகமாக கூறமுடியாது. அந்தளவு பக்குவமா சொல்லியிருக்கீங்க. ‘பாபா’ திரைப்படத்தில் ரஜினி அவர்கள் மஹாவதார் பாபாஜியிடம் வாங்கி வந்த வரங்களை அற்ப விஷயங்களை சோதிக்க பயன்படுத்திக்கொண்டிருப்பார். அதற்கு அவர் தந்தை நம்பியார் கடிந்துகொள்வார். பிறகு தான் ரஜினி உணர்ந்துகொள்வார் தான் வாங்கி வந்த வரம் எத்தகைய சக்திமிக்கது என்று. காண்பதற்கே அரிய மகான்கள் மற்றும் யோகிகளுடன் தனக்கு ஏற்பட்ட பழக்கம் எத்தனை மகத்தானது என்று அவருக்கு புரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு தான் அந்த வரங்களை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த முடிவு செய்து சுயநலம் இல்லாது பிறரு நலனுக்காக பயன்படுத்துவார். இறுதியில் புகழ் பெறுவார். அதுப் போலத் தான் உங்கள் முடிவும்!” என்றார்.

இதுவரை எத்தனையோ பெரிய மனிதர்களை, சாதனையாளர்களை நான் பேட்டிக்காக சந்தித்திருக்கிறேன். அவர்களுடன் உரையாடியிருக்கிறேன். அவர்களிடம் பல அரிய  குணங்களை கண்டு வியந்திருக்கிறேன். அவற்றில் நான் பின்பற்றக்கூடியவற்றை பின்பற்றி வருகிறேன். சிலவற்றை முயற்சித்து வருகிறேன்.

எனது – வாழ்வில் – அணுகுமுறையில் – ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு இதுவும் ஒரு காரணம்.

* இரு கண்களையும் பிறவியில் இருந்தே இழந்து பார்வையற்ற சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போட்டு, மிகப் பெரிய சாதனைகளை அனாயசமாக செய்திருக்கும் திரு. இளங்கோவை சந்தித்த பின்பு என் அறிவுக் கண்கள் திறக்காமல் இருக்குமா? அப்படி திறக்கவில்லை என்றால் நான் அல்லவா மிகப் பெரிய குருடன்?

* பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லாட்டரி விற்பது முதல் டூ-வீலர் மெக்கானிக் ஷாப் வரை பல வேலைகளை பார்த்து பின்னர் ப்ரைவேட்டாக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ என எழுதி இறுதியில் ஐ.ஏ.எஸ். தேர்வில் மாநிலத்திலேயே முதலாவது வந்த திரு.நந்தகுமார் அவர்களை சந்தித்து உரையாடிய பின்பு அவரது நட்பு கிட்டிய பிறகு… என்னுடைய தோல்விகளுக்கு விதியின் மீது பழி போடும் எண்ணம் எனக்கு வருமா? அப்படி வந்தால் நானும் ஒரு மனிதனா?

* சொந்தக்காரர்களின் வீட்டிலேயே பெற்ற தாய் பத்து பாத்திரம் தேய்த்து அதன் மூலம் படிக்க வைத்து, வளரும் காலத்தில், உத்தியோகம் சென்ற இடத்தில் என, எங்கும் அவமானம் எதிலும் அவமரியாதை, சூழ்ச்சிகள், துரோகங்கள் என்று சந்தித்த நிலையிலும் இறை நம்பிக்கை கொண்டு அவற்றை தூள் தூளாக்கி இன்று மிகப் பெரிய ஒரு வணிக குழுமத்தின் தலைவராக இருக்கும் ‘மதுரை அப்பு க்ரூப் ஆஃப் ரெஸ்டாரண்ட்ஸ்’ திரு.R.சந்திரசேகரன் அவர்களை பார்த்த பிறகு எனக்கு ஏற்பட்ட அவமானங்களை பற்றி நான் கவலைப்படுவேனா?

அண்மையில் கோவை சென்று 4000 பேருக்கும் மேல் வேலை கொடுத்திருக்கும் ஒரு முன்னணி வணிகக் குழுமத்தின் நிறுவனரை RIGHTMANTRA.COM தளத்திற்காக பேட்டி எடுத்து வந்தேன். மிகப் பெரிய விஷயங்களின் தொடக்கம் எத்தனை எளிமையாக, சிறியதாக இருந்திருக்கிறது என்று மற்றுமுறை அனுபவப் பூர்வமாக தெரிந்துகொண்டேன்.

அடுத்த சில நாட்களில் இங்கே சென்னையில் சாதனையாளர்களுக்கெல்லாம் சிகரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் திரு.பாலம் கலியாணசுந்தரம் ஐயா அவர்களை சந்திக்க நேர்ந்தது.

என்ன சொல்வது எப்படி சொல்வது? என்னிடம் மிச்ச மீதியிருந்த அழுக்குகளை எல்லாம் துடைத்து எறிந்து என்னை மேலும் பக்குவப் படுத்திவிட்டார் இந்த மனிதர். இவருடன் பேசப் பேச சில இடங்களில் வெட்கப்பட்டேன். பல இடங்களில் வியப்பின் எல்லைக்கே சென்று கைகளை தட்டி மகிழ்ந்தேன்.

இப்படி நான் சந்தித்த ஒவ்வொரு சாதனையாளர்களும் இந்த களிமண்ணை செதுக்கியதால் தான் இன்று ஒரு பிம்பத்துடன் உங்கள் முன் நிற்கிறேன். இல்லையெனில் என் வாழ்வில் அடித்த சூறாவளியில் சிக்கி  சின்னாபின்னமாகி என்றோ மண்ணோடு மண்ணாகியிருப்பேன்.

சாதனையாளர்களை தொடர்ந்து சந்திக்கும் ஆவல், அவர்கள் நட்பு + அறிமுகம் வேண்டும் என்கிற தாகம், நாமும் வாழ்ந்துக் காட்ட வேண்டும் என்கிற வெறி இதன் மூலம் தான் எனக்கு ஏற்பட்டது.

இந்த மாற்றம் உங்களிடமும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஒரு விஷயத்தை மட்டும் அனைவருக்கும் சொல்லிக்கொள்கிறேன். SIMPLE SUNDAR சாதிக்காததை RIGHT MANTRA SUNDAR நிச்சயம் சாதிப்பான். இது அந்த திருவண்ணாமலை ஈசன் மீது ஆணை! இது சவால் அல்ல….. சபதம்!!

உங்களுக்கே தெரியும், இத்தனை வருஷம் நான் என்னை ஒரு பெரிய ரஜினி ரசிகன் என்று சொல்லிக்கொண்டதில்லை. இப்போ சொல்றேன்…. இனிமே தான் நான் ரஜினி ரசிகன்! ரஜினி அவர்கள் விரும்பும் ஒரு ரசிகன்!!

[END]

60 Responses to “இது முடிவல்ல… இனி தான் ஆரம்பம்! It’s a new beginning!”

 1. vasanth vasanth says:

  அன்புள்ள சுந்தர்ஜி…

  தலைவர் பிறந்தநாளுக்கு முகநூலில் எழுதிய வரிகள் ::

  ’இருளில் எய்த அம்பு எங்கெல்லாம் தைத்தது என்பதை வில்லாளி அறியான். அரங்கின் இருளுக்குள் அதிர்ந்த உங்கள் சொற்கள் எங்களை எங்கெல்லாம் கொண்டு சென்றிருக்கின்றன என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். ’

  அதேபோல் இந்த தளத்தின் மூலமாக நாங்கள் கற்றுக் கொண்டதெல்லாம் என்னென்ன என்பதை நீங்களே… ஏன் நாங்களே அறிய மாட்டோம். விதைக்குள் உறங்கும் ஆலமரம் கண் விழிக்கும் போது தான் அது தெரிய வரும். அப்போது உங்களை நினைத்துக் கொள்வோம்.

  வாழ்க வளமுடன்.

  ————————————————————————-
  எத்தனையோ கமெண்ட்டுகள் என்னை உற்சாகப்படுத்த நண்பர்கள் அவரவர்க்கு தெரிந்த மொழியில், அன்பில், வார்த்தைகளில் இங்கு அளித்திருக்கிறார்கள். ஆனால் உங்கள் கமெண்ட் நிச்சயம் ஒரு மிகப் பெரிய மைல் கல் மகிழ்ச்சி தான் எனக்கு.
  நன்றி…!
  - சுந்தர்

 2. மாரீஸ் கண்ணன் மாரீஸ் கண்ணன் says:

  இந்த தளத்தின் மூலம் நான் தெரிந்துகொண்ட விஷயங்கள் ஏராளம் என்றாலும்…உங்களின் நட்பு கிடைத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்…..அந்த வகையில் இந்த தளத்திற்கும் நம்மை இணைத்த நம் தலைவனுக்கும் கோடி நன்றிகள்…..
  .
  ஒரு நண்பனா இந்த பதிவை ஆதரித்தாலும்…ரசிகனாக இது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது. இருப்பினும் மேற்கொண்டு தளத்தை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து நீங்கள் நல்லதொரு முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எடுக்கும் அந்த நல்ல முடிவுக்கு எனது ஆதரவும், அரவணைப்பும் உண்டு.

  ///ஒரு விஷயத்தை மட்டும் அனைவருக்கும் சொல்லிக்கொள்கிறேன். SIMPLE SUNDAR சாதிக்காததை RIGHT MANTRA SUNDAR நிச்சயம் சாதிப்பான். இது அந்த திருவண்ணாமலை ஈசன் மீது ஆணை!///…..
  .
  இந்த தன்ம்பிகைதான் உங்களை மென்மேலும் உயர்த்துகிறது….

  (ஆனால் SIMPLE சுந்தர் சாதிக்கவில்லை என்பதைத்தான் ஏற்றுகொள்ள முடியவில்லை).. உங்களின் இந்த சபதம் வெற்றி அடைய அந்த திருவண்ணாமலை ஈசனை பிரத்திகிறேன்….
  .
  மாரீஸ்வரன் (மாரீஸ் கண்ணன்)

 3. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  //. SIMPLE SUNDAR சாதிக்காததை RIGHT MANTRA SUNDAR நிச்சயம் சாதிப்பான்// - கண்டிப்பாக இது நிறைவேறும் இறைவனை பிராத்திதுக்கொள்கிறேன்…

  என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 4. venkatesan venkatesan says:

  ஆல் தி very பெஸ்ட் anna…

 5. Ragul Ragul says:

  Sir,
  You are true Rajini fan sir. I won’t type more as Iam floored by ur attitude towards life and its approach best wishes for Right Mantra.com
  Pl post moral stories, inspiration stories

  If possible any update about Rajini sir

  Once again hats off

  —————————————————-
  Ragul i would never want to miss friends like you. Let’s hope for good.
  - Sundar

 6. thiru thiru says:

  சுந்தர் அவர்களுக்கு,
  இந்த தளத்தில் பதிவு செய்த பல செய்திகள் எனக்கு பல வகையில் உதவியிருக்கிறது. ஓர் ஆசிரியர் போல் இருந்து இத்தனை நாள் வழி நடத்தி வந்தீர்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துகள்…

 7. siva446 siva446 says:

  anna, this is what our thalaivar expects. go ahead. all the best.

 8. Venky Venky says:

  Sundarji….Wish You all the Best for your next steps…
  With God’s blessings, you will rock whatever you do.

  This is tough decision only, but everyone and everything has to move forward…your ‘blog’ world will expand to the next level with RIGHTMANTRA….Thalaivar always used to say this to us..”Take care of yourself, your family & Parents” …So even Thalaivar happen to see this post..He will be very happy for you…

  We will keep in touch thru RIGHTMANTRA and I will try to participate in our Temple visits as much as i can…

  Till now we considered this site as our own site..and we used to believe if any Thalaivar related information only if it present in this site…..GOD will be always with Good ppl….So dont worry…

  எது நடந்ததோ அது நன்மைக்கே. எது நடக்கவில்லையோ அது இன்னும் நன்மைக்கே!

 9. Jegan Jegan says:

  Meaningful article….inspired a lot..thanks anna,
  After reading this, a dialogue 4m shivaji film comes into my mind
  ‘ini neenga pora paathai singa paathai’
  wish you all success…

 10. Ganesh Ganesh says:

  All the Best Sundarji. Even though, I haven’t written any comment, I am one of the regular readers of ur writings since 2005. I am being visiting this website everyday for these 5-7 years. Anyone who have read your articles for years, can surely realize that you have got some transformation. Most of the times, I have felt happy seeing your knowledge. Best Wishes for all your efforts. I know it is selfish but I still request you to continue this website, may be one article per month. I would be visiting your RightMantra.com website regularly. We would surely miss you.

 11. Jagankumar Jagankumar says:

  Sundar,

  Very Good Decision. I’m very much inspired by all your approach and works so far…I’m sure you will succeed in all your efforts…I will start following in RightMantra as well… Finally want to thank you for keeping us updated and tuned for these years…All the Best again…

 12. arun arun says:

  சுந்தர் சார்
  நான் ரொம்ப போஸ்ட் பண்ணது இல்லை.. ஆனாலும் ஒரு நல்ல நண்பர் நம்மை விட்டு கொஞ்சும் தள்ளி போற மாதிரி தோணுது. அவரோட வளர்ச்சி காக அப்படின்னு நினைக்கும் போது அதை தடுக்க முடியல

  என்னோட அப்பா நான் வெளி நாடு கிளம்புறப்ப எப்படி வருத்தமா அனுப்பி வெச்சாரோ அப்படி தான் இங்க எல்லாரும் நினைக்குறோம்.. வழி அனுப்பி வைக்குறோம் உங்களை… பல வெற்றிகள் உங்கள தேடி வரணும் அதை சூப்பர் ஸ்டார் மாதிரி தன்னடகதோட நீங்க ஏத்துகிட்டு வளரனும்..

  மீண்டும் வாழ்த்துக்கள் சுந்தர் சார்..
  - அருண்

 13. kamal kamal says:

  சுந்தர் அவர்களுக்கு

  இந்த 5 ஆண்டுகள் தங்கள் வலை பக்கத்திற்கு தவறாமல் வருபவன் நான். தங்களுடைய நேர்த்தி மிகவும் வியப்பானது. பத்திரிகைகளில் வரும் முன்னே ஒரு தகவலை ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களிடம் பகிர்வதில் தங்களுக்கு நிகர் தங்கள் தான். இந்த திறன் உங்களுடைய புதிய முயற்சி மற்றும் இன்னும் நீங்கள் காண போகும் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
  தங்குளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

 14. Manojscen Manojscen says:

  Late decision but latest!!

 15. Antony prabu Antony prabu says:

  Thanks……. for the past
  Good luck for the future….

 16. Kana.S.D. Kana.S.D. says:

  Dear Sundar Ji,

  My best wishes for you!!!

  Thanks & Regards,
  Kana.S.D.

 17. Somesh Somesh says:

  If an individual has a conviction and determination, he can make a big difference all alone !!!! . This is what I infer from your work to this site!!. Given your time management skills, I think you could still manage couple of articles per month to this site. All the best Sundarji!!!

 18. sb sb says:

  good luck to you , sir. i will follow you in right mantra.

 19. Viji Viji says:

  வாழ்த்துக்கள் சுந்தர் சார்

 20. dr.naren dr.naren says:

  all the best sundar.i wish you all the sucess for right mantra.

 21. R.Gopi R.Gopi says:

  சிங்க நடை போட்டு
  சிகரத்தில் ஏறு

  சிகரத்தை அடைந்தால்
  வானத்தில் ஏறு

  நல்வாழ்த்துக்கள் சுந்தர்…. இந்த இனிய நாள் போல், இனி வரும் நாட்களும் தங்களுக்கு இனிதாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்….

 22. RAJA RAJA says:

  ஒரு மனிதன் எப்பொழுது தான் போகும் பாதையில் இடையூறுகளை சந்திகிறானோ அப்பொழுது தான் அவன் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறான் என்று அர்த்தம் ,இடையூறு இல்லாமல் சென்றால் அவன் போகும் பாதை தவறு என்று அர்த்தம் ,இடையூறு என்பது கடவுள் நமக்கு கொடுக்கும் சோதனை,சில அலுவலகத்தில் பதவி உயர்வு கொடுபதற்க்கு முன் நிறைய வேலை கொடுத்து சம்பளம் குறைவாக கொடுத்து சோதிப்பார்கள் ,அது இவன் தலைமை பதவிக்கு வந்தால் எத்தகைய சோதனைகளையும் தாங்குவானா என்று பரிசோதித்து பார்ப்பது,அது போல் தான் கடவுளும் ஒரு பெரிய வரத்தை நமக்கு கொடுபதற்க்கு முன் சில சோதனைகளை கொடுப்பார் அந்த சோதனைகளை கடந்து வந்தாலே போதும் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் அதற்க்கு நமக்கு தேவை விடா முயற்சி நேர்மை கடவுள் பக்தி பெரியோரை மதிப்பது அவ்வளவுதான் ,அதனால் திரு சுந்தர் அனுபவித்த சோதனை கடவுள் முன்னேற வாய்த்த பரிட்சை அதில் வெற்றி பெற்றதால் தான் கனவிலும் சந்திக்க நினைக்க முடியாத மிக பெரிய சாதனையாளர்களோடு அருகில் அமர்ந்து பேச வாய்ப்பு கிடைத்தது

  மேலும் வளர வாழ்த்துக்கள்

 23. veea veea says:

  சென்று வா …..
  வென்று வா அறிவை வென்று வா…
  கன்று தாயை விட்டு பிரிந்த பின்னும் ….
  நின்ற பூமி தன்னை மறப்பதில்லை ……

 24. mnagendra rao mnagendra rao says:

  மேலும் வளர வாழ்த்துக்கள் ! சுந்தர் .

 25. murugan murugan says:

  உங்களை நாங்கள் அறிவோம் - எங்களை நீங்கள் !!!

  உங்கள் முயற்சியில் நீங்கள் மென் மேலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் !!!

 26. Sakthivel_Kovai Sakthivel_Kovai says:

  சுந்தர், இந்த தளம் மூலம் தான் உங்கள் நட்பு கிடைத்தது. கடந்த ஐந்து வருடங்களாக,தினமும் இந்த தள செய்திகளை பார்க்க தவறியதில்லை. குறிப்பாக சிவாஜி மற்றும் ஏந்திரன் ரிலீஸ் நேரத்தில் நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைவரது எதிபார்பையும் பூர்த்தி செய்வதாய் இருந்தது. அந்தளவு நம்பகத்தன்மையும் அனைத்து செய்திகளிலும் இருந்தது. கடந்த ஒரு வருடமாக நீங்கள் சந்தித்த முக்கிய நபர்களின் பேட்டிகள் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. இந்த பேட்டிகள் வேறு எந்த தளங்களிலும், பத்திரிகைகளிலும் கிடைப்பது அரிது. அந்த பேட்டிகள் உங்களை மட்டுமல்ல நம் தள நண்பர்களையும் நிறைய மாற்றியுள்ளது. அதற்கு இங்கு வெளியாகி இருக்கும் comments ஏ சாட்சி. நீங்கள் மட்டும் வாழ்வில் முன்னேற நினைக்காமல் நண்பர்களையும் முன்னேற்ற வேண்டும் என்ற உங்கள் எண்ணம் மிகவும் உயர்ந்தது. உங்களது எல்லா முயற்சிகளிலும் எனது ஆதரவு எப்போதும் இருக்கும். வாழ்க வளமுடன்.

 27. S.Siva Sankar S.Siva Sankar says:

  சுந்தர்ஜி

  நம் தலைவர் ரஜினிகாந்த் அவர்களால் நம் தளம் ஒன்லிசூப்பர்ஸ்டார்.காம் மூலம் உங்களுடைய நட்பு கிடைத்ததை நான் பெருமையாக கருதுகிறேன். இவ்வேளையில் பொன்ராஜ்க்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
  சுந்தர் இந்த 5 ஆண்டுகள் உங்களின் இந்த உழைப்பை நினைத்தால் மிகவும் பிரமிப்பாக உள்ளது. நீங்கள் கூறியதை போல உங்களின் அடுத்த முயற்சி வெற்றிகரமாக நடைபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் என்னுடைய முடிந்த உதவி கண்டிப்பாக இருக்கும்.
  நம் தளம் ஒன்லிசூப்பர்ஸ்டார்.காம் மூலம் நீங்கள் செய்த பேட்டிகள், நிகழ்ச்சிகளில் உங்கள் அணியில் நானும் ஒருவராக இருக்க முடியவில்லையே என நான் பலமுறை வருந்தியதுண்டு………………………….
  ஆனால் சிவகாசி சோகம் — மனமிருந்தது உதவிட, மார்க்கம் பிறந்தது கண்ணீரை துடைக்க! என்ற நிகழ்வு மூலம் உங்களில் நானும் ஒருவன் என்று என்னையும் ஏற்றுக்கொண்டீர்கள்……….
  என்னாலும் இந்த மாதிரி நல்ல காரியம் செய்யமுடியும் என்ற எண்ணத்தை என்னுல் வர காரணமாக இருந்தீர்கள் என்றால் மிகையாகாது…………………………
  நீங்கள் குறுப்பிட்டது போல // ஒன்னு ரெண்டு பதிவு நடுவுல வரும். // என்ற வரிகள் நிஜமாக வேண்டும். ஏன் என்றால் தலைவரை பற்றிய உண்மையான செய்திகளுக்கு நாங்கள் எங்கே செல்வது……………………………….
  நம்முடைய RIGHTMANTRA.COM மூலம் நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் விழா போல் இன்னும் பயனுள்ள நிகழ்ச்சிகள் பல்வேறு நீங்கள் நடத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
  ஆம் கண்டிப்பாக இது முடிவல்ல… இனி தான் ஆரம்பம்! It’s a new beginning!
  பாரதியார் பிறந்த நாள் விழாவில் நம் பாலம் அய்யா கலியாணம்சுந்தரம் அவர்கள் கூறியதை போல நாம் அனைவரும் தலைவர் ரஜினி அவர்களின் ரசிகர்களாகவும், தலைவர் ரஜினி ரசிக்கும் ரசிகர்களாக மாறுவோம்!!!!!!!!

  சௌ.சிவசங்கர், சிவகாசி

 28. Dharma Dharma says:

  sundar, Good decision, best of luck and best wishes to you. Good things will follow you very soon

  ——————————————————
  Thank you Dharma.
  - Sundar

 29. Rajagopalan Rajagopalan says:

  SIMPLE SUNDAR சாதிக்காததை RIGHT MANTRA SUNDAR நிச்சயம் சாதிப்பான்.
  This is not true… Who said Simple Sundar Sadhika Villayendru?…
  But i expected this only by 31st Dec? Why so early?
  But All is Well… Anyway our friendship will sail forever!!!

 30. vasi.rajni vasi.rajni says:

  சுந்தர்ஜி இப்படிபட்ட முக்கியமான பதிவில் எனது பெயர் இருந்ததற்கு நன் என்ன பாக்கியம் செய்தேன் என்றே தெரியவில்லை.
  .
  சுந்தர்ஜி, நீங்கள் இந்த தளத்தின் ஆரியராக ரஜினியின் மீது அபிமானம் கொண்டவர்களை ரஜினி ரசிகர்களாகவோ அல்லது ரஜினி வெறியர்களாகவோ ஆக்கவில்லை மாறாக எங்களை “ரஜினி”-ஆக மாற்ற முயன்றுளிர்கள்.
  .
  சைவசமயத்தில் அத்வைதம் என்ற மகாவாக்கியம் ஹிந்து சமய வரலாற்றையே புரட்டிபோட்டது, சொல்லபோனால் உலக வரலாற்றையே மற்றிபோட்டது. அந்த மகாவாகியத்தை வெளிபடுத்தியவர் ஆதிசங்கரர். பக்தி என்ற பரிமாணத்தையும் தாண்டிய அடுத்த கட்டம் ஆதிசங்கரர் பெருமான் வெளிபடுத்தினார்.

  இன்று தங்களும் ரசிகன் என்ற பரிமாணத்தையும் தாண்டிய அடுத்த கட்டத்திற்கு ரசிகர்கள் நுழைய என்று தங்கள் எழுத்துக்கள் மூலம் INSPIRE செய்கிறீர்கள்
  .
  “கீழ்த்தரமான தந்திரங்கள் மூலம் இந்த உலகத்தில் எந்த மகத்தான் காரியத்தையும் சாதித்துவிட முடியாது என்று நான் உறுதியுடன் நம்புகிறேன்” என்று சுவாமி விவேகானந்தர் கூறியது எத்தனை அர்த்தமிக்கது. (RIGHTMANTRA பேஸ்புக்கில் சமீபத்தில் இதை பார்த்தேன்.) அப்படி கிடைக்கும் வெற்றிகள் நிச்சயம் தற்காலிகமே. ஆனால், நிரந்தர வெற்றிகளை கொடுத்ததாக சரித்திரம் இல்லை. நீங்கள் செல்லும் திசை நிச்சயம் உங்களுக்கு நிரந்தர வெற்றியை கொடுக்கும் ஜி. இதில் சந்தேகமே இல்லை.
  .
  சுந்தர்ஜி உங்களுக்கு நிச்சயம் ஒரு மாதமாவது ஓய்வு தேவை. இருப்பினும் முழுமையாக நிறுத்தப்போவதில்லை; ஆக்கப்பூர்வமான வழிகளை பரிசீலிக்கிறேன் என்ற முடிவு எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. உங்களை போன்றவர்களின் எழுத்துக்கள் தான் எங்களுக்கு தேவை.

  இவ்வளவு வெளிபடையாக பேசியதற்கு நன்றி ஜி.
  .
  தொடரட்டும் உங்கள் சேவை.
  .
  Rajini will rule Tamilnadu

 31. RAJNIhari RAJNIhari says:

  all the best for your new innings anna:)
  UR standards are raised by a big margin,amazing to see the positivity and conviction in d article.
  U have d attitude that come what may , u will reach ur destination.!!(which is not an easy one to have..)
  THALAIVAR sonna madri “Nallavanga vazhuvanga, enna konjam neram agum!!”..and another dialogue dedicated for your efforts for dis website and also for your future dreams/goals—
  “PODA ANDAVANAE NAMMA(UNGA) PAKKAM IRUKAN!!”
  ini neenga pora padha singa padha!!

 32. Lakshmi Narayanan Lakshmi Narayanan says:

  நான் உங்களுடைய தளத்தின் வாசகன். எல்லாம்
  வல்ல இறைநிலை உங்களுக்கு அனைத்து வளங்களையும் அளிக்க வேண்டுகிறேன்

 33. deepanyuvaraja deepanyuvaraja says:

  all the best anna

 34. winston winston says:

  All the best for your future work sir..!! go ahead.. even the changes from our thalaivar made him as a World best man today.. you are showing the same now.. but my request is dont keep dot to this website. whenever good news is coming u try to post it. especially at the time of Kochadayaan release you post the news.. this is my request sir..

 35. Ananth Ananth says:

  Good Luck Sundar!

  Visiting your site is a habit for me. Hard to change. See you @ http://www.rightmantra.com :) .

 36. R O S H A N R O S H A N says:

  எப்படியும் நீங்கள் நூற்றுக்கு இருநூறு முறை யோசித்து தான் இந்த பதிவை, உங்கள் முடிவை எடுத்திருப்பீர்கள்…….எதுவாயினும் நல்லதே நடக்கும்………உங்களின் இந்த மாற்றம் எனக்கு பெரிய தாகத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்……ஏன் என்றால் கடந்த ஓரிரு வருடங்களாகவே நீங்கள் செய்யும் பதிவுகள் ஒவ்வொன்றும் வெற்றியாளர்கள் பற்றியதாகவே இருந்தது…..அர்த்தமுள்ளதாக இருந்தது……..எங்களுக்கும் ஒரு உத்வேகத்தை நல்ல சிந்தனையை அளித்து……..கண்டிப்பாக இவையெல்லாம் உங்களுக்கு மாற்றம் தரும் என்று என் உள் மனது சொல்லிக்கொண்டே இருந்தது……..அது இந்த வடிவில் வந்திருக்கிறது…….மிக்க மகிழ்ச்சி…..

  நீங்கள் எது செய்வதாக இருந்தாலும் நல்லது ஜி…….தலைவர் மூலமாக உங்களை போன்ற ஒரு நல்ல நட்பு கிடைத்தது எனக்கு……….அது இன்று போல் என்றும் தொடரும்……….தொடரவேண்டும்……..நீங்கள் மேலும் மேலும் பல வெற்றிகள் அடைந்து ஜெயிக்க வேண்டும்…….என் போன்ற ரசிகர்களின் சந்தோசம் உங்களின் பெரிய முயற்சிக்கு தடையாக இருக்க கூடாது……..ஆனாலும் எப்பொழுதாவது உங்களை எதிர்பார்ப்போம் இந்த தளத்தில்……வாழ்த்துக்கள்…..

 37. jayachandran jayachandran says:

  வழிகாட்டுறதுக்கும் வாழ்ந்து கட்டுறதுறதுக்கும் மேலே போய், கைய பிடிச்சு கூட்டிட்டு போறேன்-னு சொல்றீங்க!
  மறுப்போமா! மறுத்தால் எங்களுக்கு அல்லவா இழப்பு….

 38. B. Kannan B. Kannan says:

  All the very best buddy..
  Hope u take a positive decision in running ur(our) site, only superstar.com..
  We can render our help in whatsoever way u prefer..
  U post once in 10 days atleast.. That will satisfy us..
  Between simple sundar is and will be
  even more successful..
  Dont worry, WE r there for u..
  The clicks and comments posted here itself shows what u have acheived in running our site..
  Pl consider our requests and dont ever think of closing our site..
  Let it stay alive.. U be very choosy in posting the articles.. Thanks in advance..
  Hope to hear the good news..
  Cheers..

 39. Prasath Prasath says:

  RajiniFans சுந்தருக்கும் OnlySuperStar சுந்தருக்கும் இலை அளவு வித்தியாசம் என்றால், OnlySuperStar சுந்தருக்கும் RightMantra சுந்தருக்கும் மலை அளவு வித்தியாசம்….

  மற்றவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாய், நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு படியாய் மேலே மேலே செல்கிறீர்கள் ….நாங்கள் இந்த தளத்தின் மூலம் உங்களை படிக்கின்றோம் …

  மற்றவர்கள் குறுக்கு வழயில் சென்று புகழை தேடும் இந்த காலத்தில், நேர் வழியில் நின்று நீங்கள் ஆத்மாவை தேடுகிறீர் ..இல்லையென்றால் இத்தனை ஆண்டுகளாக புகழோடும் நேர்மையோடும் நடத்திவந்த இந்த தளத்தை நிறுத்துவது என்ற முடிவு அத்தனை சாதரணமானது இல்லை ..

  சிவாஜி, எந்திரன் படங்கள் சமயத்தில் எத்தனை எத்தனை Scoop செய்திகள்.. பொழுதுபோக்கு என்று மட்டும் இல்லாமல் ஆன்மிகம், நேர்காணல், நீதி கதைகள் என்று
  நங்கள் இந்த தளத்தின் மூலம் நிறைய கற்றுகொண்டோம்!

  உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை ….
  தேடும் பணம் ஓடி விடும், தெய்வம் விட்டு போவதில்லை …
  நீங்களும் எங்களை விட்டு போவதில்லை ..
  நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உங்களை வணங்கும் …

 40. Kumar Kumar says:

  மீண்டும் சந்திபோம் சுந்தர் …உங்களின் வெற்றி பதிவில் …..

  உங்களின் நம்பிக்கை, விடா முயற்சி மற்றும் நேரம், வெற்றியை உங்கள் வசமாக்க என் வாழ்த்துகள்

 41. **Chitti** **Chitti** says:

  My Dear Rajni Humane Aficionados,

  Hope all of you’re fine and doing great.

  My Dear Sundarji,

  So far, you have given so much of authentic information some of which were not possible even for professional news agents.
  I have known you for the past two yrs almost in person. The way you dedicated for this site is indescribable.

  Like me, there would be so many persons out there who don’t even like to spend least 10min to appreciate/give feedback to your posts. But you have had gone to so many places amid of your work hours and collected the news from the authentic source, gather, organize them and had made many statues out of the ordinary stones with fine precision and dedication.

  That too, in times of Enthiran and last yr b’day celebrations and all, you were under fire and made many great things.

  And as I put myself in your shoes, I do regret the feeling that some recognition you should have got from the great source of inspiration for us.

  However, for everything, there are some reasons. As you had put, what had happened is for our goodness. And what doesn’t happen to us, its even more good to us.

  See, you would not have evolved as such great person if it had happened as you had wished. Now, you have joined hands along with so many great persons like Ilango, Nandakumar, Chandrasekaran, Palam Ayya….etc.

  So dont worry about the past. Concentrate on present and future. And I’m very sure that phenomenal future is awaiting for you. As you had rightly put, you will be the person whom would be loved and love to meet by our super star.

  And I don’t need to say anything about ur rightful another venture “Rightmantra”. Already, so many have said about it within a very short span of time it had come to light.

  Look upon your future. Dwell on love with your life by doing the things what you love always. be happy. God bless you.

  Dot.
  ***
  Finally, I am very, very grateful for this wonderful site. It made me happy and consoled my heart and soul when some bad/worrying things had happened by re-reading the wonderful golden posts about Sivaji Rao’s life and good characters.
  Wish you all the best for your bright future with ‘our’ Rightmantra team. Dot.
  ***
  **Chitti**.
  Jai Hind!!!
  Dot.

 42. Mano Thamot Mano Thamot says:

  Hello Sundar
  This is Mano aunt from Canada. I read it so many time. The way you wrote you touched everyone’s heart. I hope God is with you. You are not a normal person. All the best for your future. Do your best & God will do the rest.
  Take care. Mano aunt

 43. VENKAT VENKAT says:

  all the best sunderji…expecting your friendship always in all the ways…tx

 44. SANKAR SANKAR says:

  All the best for your success in all your endeavors. Pray that God be there with you and all of us throughout our life….!
  Wish you once again.

  Special thanks for the special archana pooja you have done
  for me.. I am recovering fast now…Thanks

  Sankar S
  Nanganallur…

 45. Sambath Sambath says:

  ஆல் தி பெஸ்ட் சுந்தர்..

 46. Ponraj Ponraj says:

  நட்பின் இலக்கணமே,
  புதிய முயற்சிக்கு என் வாழ்த்துகள்.

  தலைவர் வாழ்க.

 47. madhavan madhavan says:

  I’ve learned that people will forget what you said, people will forget what you did, but people will never forget how you made them feel.
  All the very best sunder ji……..

 48. K RAJA K RAJA says:

  Dear sundar ,
  good luck to you and may god bless u . I would like to thank you several hundred times for your wonderful updates. but we will miss you next year . since it is your personal decission wish u all the best in future.

 49. சிதம்பரம் சிதம்பரம் says:

  நிறைய நாளாக Comment அளிக்கவில்லை அதற்கு முதலில் மன்னித்துக் கொள்ளுங்கள்.எழுத்தாளனை ஊக்குவிப்பது Comments தான் என்பதை நானறிவேன்.Comment அளிக்காவிட்டாலும் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் படித்துவருகிறேன்.
  தங்களுக்கான பாதை எங்கோ திறந்திருக்கிறது தாங்கள் செல்லும் பாதையில் வெற்றியடைய ல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.

 50. RAMARAJAN.R RAMARAJAN.R says:

  உங்களின் அடுத்த கட்ட பயணத்திற்கு வாழ்த்துகள் .
  ஒரு மாசமா கமெண்ட் பண்ண முடியல .
  எந்திரன் ஷூட்டிங் ஆரம்பத்துல இருந்து (எந்திரன் ஷூட்டிங் starts ad ல இருந்த ஸ்பீட் 1 terra hz , மெமரி 1 zeta byte பத்தி detail ல நீங்க போட்ட பதிவு தான் நான் நம் தளத்தை முதலில் பார்த்தது)
  படிக்கும் உங்கள் எழுத்தின் ரசிகன். உங்கள் கடும் உழைப்பிற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்
  வாழ்த்துகள் அண்ணா.

 51. மு.முத்துக்குமார் மு.முத்துக்குமார் says:

  வாழ்த்துக்கள் சுந்தர்ஜி. உங்கள் திட்டம் நிறைவேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

 52. kabilan kabilan says:

  அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா .நீங்க எப்படி மாறனணு சொன்னிங்களோ,என் வாழ்கையில் நிறைய நடந்து என்ன பக்குவ படுதனுன்ம்னு ஆண்டவன வேண்டிகிறேன் அண்ணா .

  —————————————————————-
  உங்கள் தேடல் துவங்கிவிட்டதர்க்கான அறிகுறி உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது. நீங்கள் உள்ளத்திலிருந்து அவை வந்திருப்பது தான் விசேஷம்.
  வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்.
  - சுந்தர்

 53. kabilan kabilan says:

  ரொம்ப ரொம்ப நன்றி சுந்தர் அண்ணா

 54. sudarshan sudarshan says:

  anna i am a coll student i have not commented many times in this site but i have visited and read all the things you posted sply the stories and interview they just gave me valuable lessons tat i should follow in my life i don’t have age to wish u but wishing u my best of luck na .you just don’t no how ur article changed me i can jus thanks anna for chiseling me and shown me how to lead a peaceful and respectful life,only thing i shall assure u that i will follow it in my life till the end(ithu sabadam)..thanks na and best of luck to your future work.

  —————————————————-
  Very happy to hear.
  God bless your for bright future.
  Arise Awake Not stop until you reach your goal.
  - Sundar

 55. sethu sethu says:

  ஆல் தி பெஸ்ட்

 56. மிஸ்டர் பாவலன் மிஸ்டர் பாவலன் says:

  நான் இணைய தளங்களில் பதிவு செய்வதை நிறுத்தி ரொம்ப நாட்கள்-மாதங்கள் ஆகி விட்டது என்றாலும், இந்த கட்டுரைக்கு பதில் அளிக்க விரும்புகிறேன்.

  சுந்தர் அவர்கள் நேர்மையானவர், கடினமாக உழைப்பவர், நல்ல மனிதர். நேரில் பார்த்ததில்லை - ஆனால் அவரது திறமையை கட்டுரைகள், பதிவுகள் மூலம் அறிய முடிகிறது.

  உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும், நீங்கள் வாழ்வில் மேன்மேலும் சிறக்க, பெரும் பேறுகள் அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் உங்களுக்கு கிட்டட்டும்.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  வாழ்க வளமுடன், நன்றி!

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 57. soundar soundar says:

  வாழ்த்துக்கள் சுந்தர்….தங்களுக்காக…என்னுடைய பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு என்றும் உண்டு..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates