









You Are Here: Home » Fans' Corner, Featured » இதைவிட நமக்கு பெருமை வேறு உண்டா? நம்மை சந்தோஷத்தில் மூழ்க வைத்த ஒரு மின்னஞ்சல்!
ஒரு விஷயத்தை எல்லாருக்கும் தெளிவுபடுத்தனும்னு ஆசைப்படுறேன்…
வாழ்க்கையில் மறந்தும்கூட பிறருக்கு தீங்கு செய்யாதவனும், எப்போதும் எல்லாரிடமும் நாகரீகமாக நடந்துகொள்பவனும், மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவனும், குடும்பத்தை சிறந்த முறையில் பேணிக் காப்பவனும், நட்பை மதிப்பவனும், பெற்றோரிடம் அன்பும், தேச பக்தி, குருபக்தி, தெய்வபக்தி ஆகிய மூன்று முக்கிய பக்திகளை கொண்டு ஒழுகி என்றும் நேர்மறை சிந்தனையுடன் வாழ்பவனே ஒரு உண்மையான ரஜினி ரசிகன்.
(24 மணிநேரமும் ரஜினி பத்தி பேசிக்கொண்டிருப்பதும், அவர் பெயரைச் சொல்லி வீண் அரட்டை அடிப்பதும், அவரை எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பதும் தான் ரஜினி ரசிகரின் இலக்கணம் என்கிற எண்ணம் முற்றிலும் தவறு.)
இதைத் தான் நான் சென்ற ஆண்டு (Dec 11, 2011) பிறந்த நாள் விழாவிலேயே “யார் உண்மையான ரஜினி ரசிகன்?” அப்படிங்கிறதை விளக்குற வகையில ஒரு குட்டிக் கதை சொல்லியிருந்தேன்.
சமீபத்துல வெளியாகியிருக்கும் குமுதம் ரஜினி ஸ்பெஷல் மலரில் கூட அந்த கதை வந்திருக்கிறது. நமது தளத்தின் பெயர் மற்றும் விபரத்தோடு. (அதை பின்னர் ஸ்கேன் செய்து போடுகிறேன்).
சரி விஷயத்துக்கு வருவோம்….
மகாகவி பாரதி பிறந்த நாள் விழாவில் நான் பேசிய முதல் வார்த்தை என்ன தெரியுமா?
“இது வரை நான் ரஜினி ஃபேனாக இருந்தேன். இப்போது தான் ரஜினி விரும்பும் ஃபேனாக மாறியிருக்கிறேன்” என்பது தான்.
இரண்டு பதிவுகளுக்கு முன்னால… “இத்தனை வருடங்கள் இந்த தளம் நடத்தி நான் சாதிச்சது என்ன?” அப்படின்னு ஒரு கேள்வி கேட்டு பதிலை அப்புறமா சொல்றேன்னு சொல்லியிருந்தேன்.
திரு.ஜெயச்சந்திரன் என்ற ஒரு இளைஞர் கடந்த சில வாரங்களுக்கு முன்னாள் எனக்கு இ-மெயில் அனுப்பியிருந்தார். (கீழே தந்திருக்கிறேன்.). இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்.
இவரது இந்த மெயிலை பார்த்து நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. உடனே இவரை தொடர்புகொண்டு www.rightmantra.com சார்பாக பாரதியார் பிறந்தநாள் விழா விரைவில் நடைபெறவிருப்பதாகவும்… திரு.நந்தகுமார் ஐ.ஆர்.எஸ். சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார் என்றும் கூறி இவரையும் விழாவுக்கு வருமாறு அழைத்தேன்.
இவரும் நண்பர்களுடன் வந்திருந்தார். நந்தகுமார் அவர்களுடன் உரையாடினார். சாதனையின் அந்த நெருப்புத் துளிகள் இவர் மீதும் பற்றிக்கொண்டுவிட்டது.
அதே விழாவிலேயே அனைவரது முன்னிலையிலும் இவரை மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தி, ரஜினி அவர்களை பற்றிய செய்திகளை நமது ONLYSUPERSTAR.COM தளத்தில் படிக்கவந்து பின்னர் அதில் இடம் பெற்றிருந்த ஒரு ரோல்மாடல் பேட்டியை படித்து விட்டு இவர் ஐ.ஏ.எஸ். ஆவது என்று லட்சியம் பூண்டிருப்பதாக சொன்னேன். அனைவரும் கைத்தட்டினார்கள். இதை விட எனக்கு பெருமை வேறென்னங்க வேண்டும்?
இத்தனை வருஷம் இந்த தளத்தை நான் அரும்பாடுபட்டு நடத்தினதுக்கு கிடைச்ச மிகப் பெரிய பரிசு இது. இதோட மதிப்பு இப்போ புரியாது. காலம் புரியவைக்கும்.
இவரோட நம்பரை என் மொபைல்ல ஜெயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். என்று தான் சேமித்து வைத்துள்ளேன். தான் ஐ.ஏ.எஸ். ஆகும்வரை அவர் ஓய்கிறாரோ இல்லையோ நான் ஓயமாட்டேன். அவருக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்துகொண்டே இருப்பேன்.
திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் அந்த மின்னஞ்சல்….
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
From: Jayachandran p <p.jayachandran22@gmail.com>
Date: 2012/11/30
Subject: IAS படிக்க தங்கள் உதவி
To: simplesundar@gmail.com
மதிப்பிற்குரிய சுந்தர் அவர்களுக்கு,
தங்கள் தளத்தில் குறிப்பிட்டிருந்த திரு.நந்தகுமார் IRS அவர்கள் கதையை படித்தது முதலாக, ஏன் நாமும் IAS-க்கு முயற்சி பண்ணி பார்க்கலாமே என்ற ஆசை வந்து அது இன்று ஒரு வெறியாக மாறி நிற்கிறது.
இந்த உதவியை மட்டும் நீங்கள் செய்துவிட்டால் தங்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்.
என்றும் நன்றியுடன்,
ஜெயச்சந்திரன்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
[END]
உண்மையிலேயே நாம் சந்தோசப்பட வேண்டிய விஷயம் இது தாங்க…நாம் சொன்ன ஒரு விஷயம் மூலமா ஒருத்தர் தன வாழ்க்கையை மாற்றி காட்ட ஆசைப்பட்டிருக்கார்….புண்ணியம் இது…! என்னைப் பொறுத்த வரையில் இது தான் நாம் தலைவருக்கு செய்திருக்கின்ற முதல் கௌரவம்…! இந்த மாதிரியான விஷயங்கள் தான் நம் தலைவரை சந்தோசப் படுத்தும்.! கண்டிப்பாக இது போன்ற புதுமையான முயற்சிகள் வரும் காலங்களில் தொடரும் என நம்புகிறேன்…!
-
தலைவரின் நல்ல குணங்களைப் பற்றிப் பேசுவது, படங்களைப் பற்றி விவாதிப்பது என்று ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே இருந்து கொண்டிருந்த என்னைப் போன்ற பல வாசகர்களுக்கு, தலைவருக்கு பெருமை சேர்ப்பது எது என்று தெளிவாக உணர்த்திவிட்டது…!
-
நீங்கள் முன்னர் சொன்னது போல், இதுவரை நாம் ரஜினியை விரும்பும் ரசிகர்கள்; இனிமேல் நாம் ரஜினியே விரும்பும் ரசிகர்களாக கண்டிப்பாக மாறுவோம்…!
-
நான் படித்த ஒரு சிறிய கதையை உங்களிடம் பகிர விரும்புகிறேன்..”ஒரு ஊரில் ஒரு விவசாயியும், முனிவரும் வாழ்ந்து வந்தார்கள். முனிவருக்கு கடவுள் நாமத்தை உச்சரிப்பது மட்டும் தான் வேலை. ஆனால் விவசாயியோ காலை எழுந்ததும் வயலுக்கு வேலைக்கு சென்றுவிடுவான்..வயலில் கால் வைக்கும் போது மட்டும் கடவுளின் நாமத்தை சொல்லிக் கொண்டு இறங்குவான்…பிறகு தன வேலைகளில் மூழ்கிவிடுவான்..ஒருநாள் முனிவருக்கு தன்னை விட கடவுளை விரும்புகிறவர்கள் உலகிலேயே எவரும் இல்லை என்று கர்வம் ஏற்ப்பட்டது…தினமும் விவசாயி முனிவரின் வீட்டைக் கடந்துதான் வயலுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஒருநாள் முனிவர் விவசாயிடம் தாம் தான் கடவுளின் சிறந்த சீடர் என்றும், உன்னைப் போன்றவர்களை கடவுள் நினைத்துக் கூட பார்க்கமாட்டார் என்றும் கூறி ஏளனம் செய்தார்..மனம்நொந்த விவசாயி கடவுளிடம் முறையிட, திடீரென்று ஒரு தேவதை அவர்கள் முன்னால் தோன்றியது..அந்த தேவதையின் இரு கைகளிலும் இரு ஓலைச்சுவடிகள்…முனிவர் தேவதையிடம் “கையில் என்ன சுவடிகள்?” என்று வினவினார். தேவதையோ “இந்த சுவடியில் கடவுளை விரும்புகிறவர்களின் பட்டியல் உள்ளது” என்று கூற, முனிவரோ தன பெயர் உள்ளதா என்று கேட்க, அதற்கு தேவதை “உங்கள் பெயர் தான் முதலில் உள்ளது” என்று பதிலளித்தது…! முனிவருக்கோ தலைகால் புரியவில்லை. சந்தோசத்தில் முனிவர் “இன்னொரு கையில் உள்ள சுவடியில் என்ன உள்ளது?” என்று கேட்டார். அதற்கு தேவதை “இது கடவுளுக்கு விருப்பமானவர்களின் பெயர்கள் உள்ளன. அதில் இந்த விவசாயியின் பெயர் தான் முதலில் உள்ளது” என்று கூறி விட்டு மறைந்து…முனிவர் வாயடைத்து போய், செய்வதறியாமல் திகைத்து நின்றார்…!
-
ஆகவே நாம் விவசாயி போல் கடவுள் விரும்பும் பக்தனாக என்றும் இருப்போம்…! பயனுள்ள வாழ்வு வாழ்வோம்..!
-
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
-
விஜய் ஆனந்த்
————————————————————————-
என்ன சொல்வது விஜய் ஆனந்த்…. பின்னி பெடலெடுத்துடுத்துவிட்டீர்கள்.
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன் விஜய் ஆனந்த் என்று இந்த தளத்தில் நீங்கள் ஆரம்பத்தில் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டீர்கள்.
தற்போது ஒரு கதை கூறி இந்த சூழ்நிலையை விளக்கும் அளவிற்கு உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பரிணாம வளர்ச்சி மற்றும் பக்குவம் உண்மையில் உங்கள் பெற்றோரும் பார்த்து பெருமைப்படும் ஒரு வளர்ச்சி.
ஒருக்கால் ரஜினி அவர்கள் இதைக் கேள்விப்பட்டால் உங்கள் பெற்றோரைவிட அதிகம் மகிழ்வார் என்பது மட்டும் உறுதி.
ரஜினி ரசிகரா கொக்கா?
- சுந்தர்
Now only i cud able to understand ur stand properly..thanks sundar anna.
No one can explain more than this, extraordinary story 4m mr vijayanand…
Nice Brother…
Very Much Proud of You !!! You are really gifted… God Bless U always. I Still wonder and feel bad that why these kind of good things are not reaching thalaivar’s ears. I was very much eager to meet thalaivar once in my life time and i use to pray god for that all the time.. But now my wish and prayer is i want u and your social activities to be encouraged and recognized by him. I will pray to god for that.
Everytime thalaivar use to tell “What am i going to do in return for your (Fans) prayers and blessings… I wish he could atleast encourage these kind of social services and peoples rather than entering politics which even he doesnt want to do.
—————————————————————
Mani, thanks for your wishes.
I never dream such things as if it doesn’t happen we will get discouraged and it will affect my attitude towards such activities.
Moreover I have surrendered completely before the ALMIGHTY and rest is with him.
I know that if God delays something it doesn’t mean he denies…. he just wants to give the best out of best.
- Sundar
நண்பர் விஜய் ஆனந்த் அவர்களே தங்களுடைய கதை அபாரம். தற்கால சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தும். இது போன்ற சிறப்பான கருத்துக்களை மெம்மேலும் எதிர்பார்கிறோம். வாழ்த்துக்கள்.
.
இந்த காலத்தில் இலசவசமாக கிடைக்கும் ஒரே பொருள் அறிவுரை தான். பல்வேறு கிழ்த்தரமான காரியம் செய்பவர் கூட வண்டி கணக்கில் அறிவுரைகளும் தத்துவங்களும் கூற மூடியும்.
.
ஆனால், சோதனைகள் வரும் பொழுது அறிவுரைகளையும் தத்துவங்களையும் கடைபிடிப்பவர் மிக மிக சொற்பம்.
.
அந்த வெகு சிலரில் சுந்தர்ஜியும் ஒருவர். சோதனைகள் பல அவரை தாக்கும் பொழுதும் கண்ணியம் தவறாமல் நடந்து கொள்கிறார் என்பதற்கு காலம் சாட்சியாக உள்ளது.
.
தத்துவங்களை கூறுபவன் அதற்க்கு முதலாளி இல்லை;அதனை கடைபிடிபவனே அதற்க்கு முதலாளி. சுந்தர்ஜி நீங்கள் நிச்சயம் முதலாளிதான்.
.
நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, நிச்சயம் உங்களின் உழைப்பு வீண் போகாது. தங்களின் வாழ்கையின் இந்த முக்கியமான பருவத்தை ரஜினி ரசிகன் என்ற உறவிற்காக பல மணி நேரம் பிரதிபலன் இன்றி உழைகிரீர்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
.
Rajini will rule Tamilnadu
Keep it up Sundarji, as I said earlier, your work is amazing.
விஜய் ஆனந்த் கூறி இருக்கும் கதை மிகவும் சிறப்பான ஒன்று.
விஜய் ஆனந்த் மற்றும் அவரை போன்று என்னை போன்று பல ரஜினி ரசிகர்களை பக்குவபடுத்தி ஒரு புதிய பாதையை வகுத்து கொடுத்த கடவுளுக்கு நம் தளம் சார்பாக என்றென்றும் என் நன்றிகள் பல.
ரஜினி ஒரு மந்திர சொல்.. என்றுமே நம் தலைவரின் வழி யே நம் வழி என்று வாழ்ந்து கொண்டிருந்த நமக்கு ஒரு பெரும் மாற்றத்தை கொடுத்தது right mantra என்பது என் கருத்து.
பல புதிய முயற்சிகள் , மிக பெரிய மனிதர்களின் சந்திப்புகள், புதிய ஆலய தரிசனங்கள் இவை எல்லாவற்றையும் விட ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தல் இவை யாவும் நம் right mantra தளம் மூலமாக செய்வதை நாம் மிக பெரும் பாக்கியமாகவே கருதுகிறோம்..
ஒரு முறை காமராஜரிடம் அவரது உதவியாளர் சொன்னார்
” 2 லட்ச ருபாய் இருந்தால் நீங்கள் செய்த சாதனைகளை படமாக்கி வரும் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்”
அதற்கு காமராஜரின் பதில்
” அடேங்கப்பா அதுல நான் நாலு பள்ளிக்கூடம் கட்டி விடுவேனே” எவ்வளவு பெரிய உண்மையான வார்த்தைகள்…
THE THREE C ‘S OF LIFE :
CHOICES
CHANCES
CHANGES
YOU MUST MAKE A CHOICE TO TAKE A CHANGE OR YOUR LIFE WILL NEVER CHANGE …
கண்டிப்பாக மிக பெரும் செயல்களை நம் தலைவர் அவர்கள் பெருமை படும் படி நாம் செய்வோம்..
என்றும் தலைவர் ரசிகன்
PVIJAYSJEC
Very Cool news Sundar..
எவ்வளவு பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது பாருங்கள் இந்த தளம் மூலம்..
இன்னும் எவ்வளவோ பேரை நீங்கள் நினைத்தால் மாற்றலாம் உங்கள் எழுத்து மூலம்..
உங்கள் சேவை கண்டிப்பாக தேவை எங்களுக்கு..
U will cross many barriers and sure will be recognised by
“one and all”.. அது வரை நிறுத்தாதீர்கள்.. அதற்க்கும் மேல் தானாகவே எல்லாமே நடக்கும்..
வாழ்க்கை ஒரு முறை, வாழ்ந்து தான் பார்க்கணும்..
WE R THERE FOR U.. As told earlier we can lend our shoulders in whatsoever way u need..
நண்பர் விஜய் ஆனந்தின் கதை மிக அருமை.. வாழ்த்துக்கள் விஜய்..
Cheers..
—————————————————————————————-
ஐந்து வருடங்களில் இந்த தளம் நடத்தி ஐ.ஏ.எஸ் கனவு கண்ட ஒரு ஜெயச்சந்திரன் உருவானார் என்றால் இது போன்ற பதிவுகளுக்கென்றே துவக்கப்பட்டுள்ள RightMantra.com மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு ஜெயச்சந்திரனை உருவாக்க முடியுமே?
குடத்திலிட்ட விளக்கு குன்றுக்கு போவது மற்றவர் நன்மைக்கே… மேலும் இது இறைவனின் விருப்பம்.
எனது எழுத்துக்கள் நிச்சயம் நான் ஏற்கனவே சொன்னபடி பெரிய வட்டத்துக்குள் செல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த வட்டத்துக்குள் விரும்புகிறவர்கள் வரலாம். அனைவரும் வரவேண்டும் என்று நான் கருதவில்லை. ஓரிருவர் வந்தால் கூட எனக்கு மகிழ்ச்சியே.
மேலும், இறைவனைப் பற்றியும், அவனது திருவிளையாடல்களை பற்றியும், கோவில்களை பற்றியும் பதிவு எழுதிக்கொண்டு இந்தப் பக்கம் என்னால் எனது எண்ணங்களை MOOD SHIFT செய்து இங்கு பதிவுகளை எழுத முடியவில்லை. அது சுலபமுமில்லை.
சரி.. தளம் இருக்கட்டும் என்றால் அதை மெயின்டெயின் செய்வது சுலபமான விஷயம் அல்ல. ஏதாவது ஒன்று என்றால் நானே பொறுப்பேற்க வேண்டும்.
உதவிகள் என்பது சர்வர் கட்டணம், பிராட்பேன்ட் வசதி, கணிப்பொறி மட்டும் உள்ளடக்கியது அல்ல…. எல்லாவற்றுக்கும் மேல் நேரம் என்ற ஒன்று இருக்கிறதே …? அந்த நேரத்தை வைத்து இன்னும் பலர் பயன் பெரும் வகையில் எழுதுவதையே விரும்புகிறேன். இங்கு ஒருவர் பயன்பெறுகிறார் என்றால் அங்கு பலர் பயன்பெறுவார்கள்.
இன்றைக்கு வேண்டுமானால் என் முடிவு சிலருக்கு வருத்தத்தை தரலாம். ஆனால் நாளைய வரலாறு வாழ்த்தும்.
என் உள்ளம் அதன் கனவு இப்போது புரியாது.
மேலும் இங்கிருப்பவர்கள் நல்ல விஷயத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்று Rightmantra.com வர விரும்பினால் அதற்கு தடை இல்லையே? தாரளமாக வரலாம். படிக்கலாம். தெரிந்துகொள்ளலாம். முடிந்தவற்றை பின்பற்றலாம்.
- சுந்தர்
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன் விஜய் ஆனந்த் அவர்களே உங்களது கதை மிக அருமை ……
இந்த தளம் நிறுத்தப்படுவது தொடர்பாக வருத்தப்படுபவர்களுக்கும் மாற்று கருத்துக்கொண்டவர்களுக்கும் முதலில் அவர்கள் அனைவருக்குமே சுந்தர் ஏற்கனவே பதில்சொல்லிவிட்டார்
பணக்கஷ்டமோ அல்லது வேறு வருத்தமோ நிச்சயம் காரணம் அல்ல. ஏனெனில் அது தான் பிரச்னை என்றால் அதை தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால் இதற்கு அடுத்த நிலைக்கு செல்லவேண்டும் என்று அவர் விருப்பப்படுகிறார். அவர் போவதோடு மட்டும் அல்லாமல் நம்மையும் அடுத்த நிலைக்கு கொண்டு சொல்ல விருப்பப்படுகிறார.
இந்த தளத்தின் மூலம் அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைத்து உள்ளார்கள். நம் அனைவரையும் இணைத்தது திரு ரஜினிகாந்த் என்கிற பாலம் தான். அதற்காக நான் பாலத்திலேயே நிற்பேன் அந்த பக்கம் செல்ல மாட்டேன் என்பது தவறு. பாலம் என்பது கடக்கத் தானே தவிர நிற்பதற்கு அல்ல. அந்த பக்கம் சென்றால் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். அதை தான் அந்த பாலமும் (ரஜினிகாந்த்) விரும்பும்.
இந்த தளத்தின் மூலம் நாம் நாம் சாதனையாளர்களை சந்திக்க வேண்டும் என்றால் அது திரைத்துறை சம்பந்த பட்டவர்களை தான் சந்திக்க முடியும். (ஒரு சிலர் விதிவிலக்கு). ஆனால் இப்பொழுது ஆரம்பித்து இருக்கும் Rightmantra.com மூலம் ஆரம்பமே பிரமாண்டம் என்பது போல் மிக பெரிய சாதனையாளர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்து உள்ளத.
அடுத்து… தளம் நடத்த நாங்கள் கூட இருக்கிறோம் என்று சொல்லலாம். நம்மால் என்ன செய்யமுடியும்? பண உதவி செய்யலாம் அல்லது வேறு உதவி செய்யலாம். ஆனால் நேரம் என்பதை அவர் தானே செலவிடமுடியும்? ஒரு கமெண்ட்டை டைப் செய்வதற்கே எனக்கு போதும் போதுமென்றாகிவிடுகிறது.
இந்த தளம் நடத்துவது என்பது மிக பெரிய போட்டியின் இடையே நடத்த வேண்டியுள்ளது. தொழில்முறையாகவும், வணிகரீதியாகவும் தளம் நடத்துபவர்களுடன் சுந்தர் என்னும் ஒரு அலுவலகம் சென்று அன்றாட வேலை பார்ப்பவர் எப்படி போட்டியிட முடியும்? நாம் தூங்கும் நேரங்களில் எல்லாம் அவர் பல மணிநேரங்கள் உட்கார்ந்து நமக்காக பதிவுகளை டைப் செய்து போட்டிருக்கிறார். நாம் என்ன செய்துவிட்டோம் பதிலுக்கு?
தலைவரை பற்றி செய்திகளை உடனுக்குடன் சொல்லவேண்டும். அப்படி சொல்வதால் தான் இந்த தளத்திற்கு இன்னும் மதிப்பு இருக்கிறது. ஆனால் அதில் உள்ள சிக்கலை நீங்கள் பார்க்க. அவர் அலுவலகத்தில் இருக்கும் போது தலைவர் பற்றி செய்திகள் வந்தால் அதை அவர் போட எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கும்? இல்லை இரவு வந்து போடலாம் என்றால் அதற்குள் அது பழைய செய்திகள் ஆகிவிடும். சுட சுட செய்திகள் கொடுத்தால் தான் நீங்கள் கூட மதிப்பீர்கள், ஆனால் ரைட்மந்த்ராவில் அந்த சூழ்நிலை இல்லை. இரண்டு நாளைக்கு ஒரு பதிவு மிகவும் சிறப்பான பதிவாக போட்டால் அதுவே போதுமானது
அவர் இந்த தளத்தை விட்டுவிட்டு போகவில்லை. இன்னும் பெயர் சேர்க்க தான் போகிறார். உண்மையில் தலைவரே கூட இந்த தளத்தை நடத்துவதை விட ரைட் மந்த்ரா மாதிரி தளம் நடத்துகிறார் என்று கேள்விபட்டால் தான் சந்தோஷப்படுவார். பெருமை படுவார்.
நாம் தலைவரை பிடித்தவர்களாய் இருப்பதைவிட தலைவருக்கு பிடித்தவர்களாய் மாறுவோம். அப்பொழுது தான் அவருக்கு நாம் சேர்க்கும் பெருமை.
100% agree. well said, Raja. I deeply appreciate the way you have conveyed the message. Whatsoever, I wanted to say, you have said it in a very pakka manner. Thank you.
***
Chitti.
Thoughts becomes things…
நன்றி சிட்டி
ராஜா எளிமையாக
மிக பெரிய கருத்துகளை இங்கு பதிவு செய்துளீர்கள்
சில நல்ல விசயங்களை எற்துகொள்ள தடுமாறும்
மனம்
அது அவல்லவே ..என்றாவது ஒரு நாள் இது நிறுத்த படும் அது இது முடிவில்லாமல் வேறு ஒரு உருவாக மாறுகிறது என்பது வரவேற்க வேண்டிய ஒன்று
அதுவும் இதை நிறுத்தி விட்டு சுந்தர் வருமானம் ஈடும் ஒரு தளத்தை தொடங்காமல் ஒரு மனதிருக்கு vegumaanaamaaga
சுந்தர் அண்ணா, மிக மிக நன்றி! உண்மையில் அந்த ஒருநாள் என் வாழ்வை மாற்றி விட்டது. தற்போது IAS தேர்விற்கான முயற்சி வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. மிகவும் கவனமாக படித்துக்கொண்டிருக்கிறேன்….
தங்கள் உதவியை என்றும் மறக்கமாட்டேன்…
——————————————————-
வணக்கம் ஜெயச்சந்திரன்…..
நீங்கள் ஐ.ஏ.எஸ். தேர்வை வெற்றிகரமாக முடித்து தேர்ச்சி பெற்றதும் மீண்டும் அதே போல ஒரு விழாவில் உங்களை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அறிமுகப்படுத்தும் வண்ணம் இறைவன் எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
மிக்க நன்றி!
- சுந்தர்
ஹாய் சுந்தர் அண்ணா … தங்கள் எழுத்து பல ஜெயச்சந்திரன்-களை உருவாக்கும் என்பதில் சிறிதளவும் மாற்றம் இல்லை..
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
இதற்குமேல் இதற்கு விளக்கம் கொடுக்கமுடியாது….அந்த அளவுக்கு நண்பர் ராஜா எடுத்துரைத்துள்ளார்….
.
மாரீஸ் கண்ணன்
hai my name is thiru i am reading this webside news last 2 years i am bigfan of rajinkanth. but this webside news and messages make me cofident in my life thanks for everybody
சுந்தர், தங்களின் தற்போதைய மனநிலை, சூழல் அனைத்தையும் எங்களால் முழுமையாக உணர முடிகிறது. இங்கு நண்பர் ராஜா அவர்களின் கருத்து அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று. அவர் சொன்னது போல எங்களுக்கு ஒரு கமெண்ட் கொடுக்கவே நேரம் இல்லாத சூழ்நிலையில் நீங்க உங்க தனிப்பட்ட வாழ்கையும் பார்த்துகிட்டு இந்த வியாபார எண்ணத்தோடு செயல்படும் பத்திரிக்கை போட்டியையும் சமாளித்துக்கொண்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 5 வருடங்களுக்கு மேலாக வெற்றி நடை போடுவது லேசுபட்ட காரியம் அல்ல! உங்களின் எதிர்கால சிந்தனை பரந்த எண்ணம் கொண்டது. அதற்க்கு எங்களின் ஆதரவு எப்பொழுதும் இருக்கும் அதே நேரத்தில் இந்த தளத்தின் சுவாசத்தை முழுமையாக நிறுத்தி விடாதீர்கள்….இது என்னுடைய தாழ்மையான விண்ணப்பம்….ஏனென்றால் இன்று முகம் தெரியாத எத்தனையோ நண்பர்கள் இணைக்க பட்டிருப்பது உங்களின் நேர்மையான எழுத்துகளால்…… அப்படிபட்ட ரஜினி சமூகம் மீண்டும் தனிமை படுத்தப்படுமோ என்ற சுயநலம் கலந்த பயமுண்டு! rightmantra தளத்தின் மூலம் வாழ்கைக்கு தேவையான வழிக்காட்டுதல் நிச்சயமாக உங்களால் தர முடியும் என்ற நம்பிக்கை எங்கள் அனைவர்க்கும் உண்டு…அதே நேரத்தில் மனதிற்கு உத்வேகம் தர கூடிய தலைவர் செய்திகளை உங்கள் ஸ்டைல்-லில் படிக்க ஆவலாக உள்ளோம். எங்களுக்காக இதே தளத்தில் மாதமொருமுறை ஒரு செய்தி உங்கள் நேர சூழ்நிலை பொருத்து தாருங்கள் போதும்!
தங்களின் அனைத்து முயற்சிகளும் மாவெற்றி பெற அனைவர் சார்பிலும் வாழ்த்துக்கள்.
“இது வரை நான் ரஜினி ஃபேனாக இருந்தேன். இப்போது தான் ரஜினி விரும்பும் ஃபேனாக மாறியிருக்கிறேன்”
ரொம்ப சரி சுந்தர். விஜய் ஆனந்த் கதையும், ராஜா கருத்தும் மிக அருமை. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். உங்களுடைய புதிய தளம் பலருக்கு பயனுள்ளதாக அமையட்டும்.
“இது வரை நான் ரஜினி ஃபேனாக இருந்தேன். இப்போது தான் ரஜினி விரும்பும் ஃபேனாக மாறியிருக்கிறேன்”
ரொம்ப சரி சுந்தர். விஜய் ஆனந்த் கதையும், ராஜா கருத்தும் மிக அருமை. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். உங்களுடைய புதிய தளம் பலருக்கு பயனுள்ளதாக அமையட்டும்.
Am So Proud to be onlysuperstar viewer on reading this article.and proud to be thalaivar fan who connects all of us.and as a Reader of ost and a well wisher i asked you before to reconsider your decision but i always respect your decision. yes i accept & know how hard is to take such desicion. keep in touch and invite me also for such programme (மகாகவி பாரதி பிறந்த நாள் விழா) whom i admire always.and i wish jayachandran All the best.may his dream come true. for that he has to work lot with lot of confidence which he already got.the only thing he should not lose that confidence at any point until he achieves.
i wish you and all of our website viewrs a happy & prosperous new year 2013.