









You Are Here: Home » Featured, Superstar Movie News » வாய் மொட்டுடைந்தால் பூவாசம்; வாசத்துகேது சிறைவாசம்? ‘கோச்சடையான்’ பாடல் வரிகள்!
விகடன் மேடையில் கவிஞர் வைரமுத்து பதிலளித்து வருகிறார். இந்த வாரம் ‘கோச்சடையான்’ பாடல் வரிகள் சிலவற்றை ரஜினி அவர்களின் ஒப்புதலோடு வெளியிட்டிருக்கிறார்.
இன்று காலை இதை விகடனில் படித்து ரசித்து இன்புற்றேன். நான் ரசித்த மகிழ்ந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் எப்படி இருப்பது? மனசு கேட்கவில்லை. இதோ உங்களுக்காக அந்த வரிகள்…..!!!
உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்… ‘கோச்சடையான்’ பாடல்களில் சில வரிகளாவது சொல்லுங்களேன்…
(ரஜினி முருகன், வேலூர்)
வைரமுத்து : உங்கள் கோரிக்கையை ரஜினியின் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது சம்மதத்துடன் இங்கு சில வரிகள் தருகிறேன்…
ஊடகத்தில் வெளியிடப்படும் ‘கோச்சடையான்’னின் முதல் பாடல் இது தான்.
சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார் தளபதி இளைய ரஜினி. அழுது பாடுகிறாள் அவரது காதலி தீபிகா படுகோனே. சரித்திரக் காதல் என்பதால் சங்கத் தமிழில் நடக்கிறது பாட்டு…
தீபிகா :
செந்தீ விழுந்த
செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின்
முட்டையாய்
இதயம் உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே
நல்ல மரத்தின் நறுங்கிளை இழந்து
வெல்லச் சுழியில் விழுந்து மலராய்….
இதயம்
கரைகள் மறந்து திசைகள் தொலைத்து அலைந்து போகுதே
சிறுகோட்டுப் பெரும்பழம்
தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே
ரஜினி :
பூப்பது மறந்த கொடிகள்
புன்னகை மறந்து மின்னல் காஇப்பத்கு மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒளியைப் பிரியும் காற்று
உளியை பிரியும் சிற்பம்
யானோ நின்னை பிரிகிலேன்
வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துகேது சிறைவாசம்
அப்பப்பா…. இசையோடு கேட்க்கையில் உயிர் உருகி ஓடுகிறது தரையில்….
(கவியரசே நீர் செய்வது நியாயமா? இசையோடு கேட்கும்போது இன்னும் சிறப்பாக
இருக்கும் என்று கூறி எமது ஏக்கத்தை அதிகப்படுத்திவிட்டீரே?)
[END]
Quick silver update sundar..
Cool..
WOW! Thanks a lot Sundarji for ur instant update…u r really great. Atlast we r getting a update of kochadaiyaan! Thalivar sirayil adaika paduvaar endru sollambodhey excitement thaaga mudiyala, wat wl happen aftr Thalaivar cmes frm prison aiyyo super pulse rate s increasing:-! Vairamuthu lyrics pullarikudhu indha paatey ippadinaa
then think abt Thalaivar paadina song with Vairamuthu sir lyrics…sure This film wl b an EPIC;-);-) tel me ur opinion sundarji abt ths song & abt Kochadaiyaan story!!! All the Thalaivaaaaa
வாவ்
சங்க கால தமிழ்!!!! இது எப்படி இன்றைய தலைமுvறைக்கு சாத்தியமாகும்?? தமிழை கொன்றால் தான் அந்த பாடல் ஹிட் ஆகும்
கவியரசு தமிழுக்கு உயிர் கொடுத்து வளர்க்கிறார், அதும் ரஜினி எனும் மந்திரன் மூலமாக பாடும் போது கண்டிப்பாக ஹிட் ஆகும்!!
Superb words. Get ready folks, THALAIVAR is coming very soon.
தமிழ் சினிமா பாட்டுலகில் கோலோச்சிய பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி, கு.மா. பாலசுப்ரமணியம், மருதகாசி, தஞ்சை N .ராமையாதாஸ், பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் கண்ணதாசன், வாலி ஆகியோர் காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்தார்கள்.
இப்பாடல்கள் தமிழ் மொழி உள்ளளவும் வாழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த
வரிசையில் வைரமுத்துவை என்னால் எப்போதும் வைக்க முடியவில்லை. வாலிக்கு வயதாகி விட்டது. ஆகவே வைரமுத்துவை விட்டால் வேறு வழியில்லை. என்ன செய்வது ?
இப்போது வரும் பாடல்கள் ஏதாவது மனதில் தங்குகிறதா? படம் வெளியான மூன்று மாதம் கழித்து அப்பாடல் இருக்கும் இடமே தெரியாது. சூப்பர் ஸ்டார் படம் என்பதால் பாடல் வெற்றி பெரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை..