You Are Here: Home » Featured, Superstar Movie News » ‘கோச்சடையான்’ முதல் பிரதி பார்த்த சூப்பர் ஸ்டார் – “என் வாழ்வில் மைல் கல்லாக அமையும் என சிலிர்ப்பு!”

ராஸ் இன்டர்நேஷனல் வழங்க மீடியா ஒன் க்ளோபல் என்டர்டெயின்மென்ட் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் தான்  “கோச்சடையான்”.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,R.சரத்குமார்,தீபிகா படுகோன், ஜாக்கி ஷேரோப், ஆதி, நாசர், ஷோபனா,ருக்மினி ஆகியோர் நடிக்கும் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு (2012) மார்ச் மாதம் 19 ஆம் தேதியன்று லண்டனின் பைன்வுட் ஸ்டுடியோவில் துவங்கி 25 நாட்கள் நடைபெற்றது.

பிறகு ஏப்ரல்,மே மாதங்களில் சில நாட்கள் திருவனந்தபுரத்தில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து  அத்துடன் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்தது.ஜேம்ஸ்பாண்ட், ஹாரிபாட்டர்,அயன் மென், ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடந்த லண்டன் பைன்வுட் ஸ்டுடியோவில் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஆங்கில படங்களான “அவதார்”, “டின் டின்” ஆகிய படங்களில் கையாண்ட மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கலை–வேலு,நடனம்-சரோஜ்கான்,சின்னிபிரகாஷ்,ராஜுசுந்தரம்,  உடைகள் வடிவமைப்பு – நீத்தா லுல்லா ,சண்டைபயிற்சி – மிராக்கிள் மைக்கேல்,

படத்தொகுப்பு – ஆன்டனி, ஒலிப்பதிவு – ரஸுல் பூக்குட்டி, தயாரிப்பு மேற்பார்வை – உதயக்குமார், பாடல்கள் – கவிஞர் வாலி , கவியரசு வைரமுத்து , கிரியேட்டிவ் கன்சல்டன்ட் - R. மாதேஷ் , இசை – இசைப்புயல்  A.R.ரஹ்மான், கதை திரைக்கதை வசனம் – K.S. ரவிக்குமார் , இயக்கம் – சௌந்தர்யா R  அஷ்வின் .

கடந்த சில மாதங்களாக லண்டன், சென்னை ஆகிய இடங்களில் கோச்சடையான் படத்தின் போஸ்ட் புரோடக்க்ஷன் பணிகள் நடைபெற்று முடிந்தது.

இன்று காலை “கோச்சடையான்” முழுப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , கதாசிரியர்  K.S. ரவிக்குமார் இருவரும் பார்த்து விட்டு வியந்த வண்ணம் உள்ளனர்.

கோச்சடையான் படத்தின்  கதாசிரியரான K.S. ரவிக்குமார் அவர்கள் கூறியதாவது, “நான் நினைத்ததை விட பத்து மடங்கு  பிரம்மாண்டமாக வந்துள்ளது” என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு “என் வாழ்க்கையில் கோச்சடையான் ஒரு மைல் கல்லாக அமையும் , மிக பிரமாதமாக வந்திருக்கிறது “ என்று தன் மகளும் கோச்சடையான் படத்தின் இயக்குனருமான  சௌந்தர்யா R  அஷ்வின்  அவர்களை வெகுவாக பாராட்டினார். தமிழ், தெலுங்கு , இந்தி ஆங்கிலம், ஆகிய மொழிகளில் தயாராகும் கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளான டப்பிங் , ரீரிகார்டிங் , ஸ்பெஷல் எபெக்ட்ஸ் , ஆகிய பணிகளை மார்ச் மாதம் 15ஆம் தேதி துவங்கி ஒரே நேரத்தில் மூன்று பிரிவுகளாக லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், ஹாங்காங் ஆகிய இடங்களில் பணியாற்ற திட்டமிட்டுள்ளனர் .

கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடை பெற்று வருகிறது.

[END]

18 Responses to “‘கோச்சடையான்’ முதல் பிரதி பார்த்த சூப்பர் ஸ்டார் – “என் வாழ்வில் மைல் கல்லாக அமையும் என சிலிர்ப்பு!””

  1. VIJI VIJI says:

    Our site is back with a bang and a fabulous news for every one who follows Thalaivar…

    Super sundar sir

  2. ரஜினிமனோஜ் ரஜினிமனோஜ் says:

    தலைவா!! தலைவா தலைவா தலைவா!! சீக்கிரம் வா

  3. vasi.rajni vasi.rajni says:

    proud to comment first (i thing so)
    மிக்க நன்றி சுந்தர்ஜி !!!! கடந்த 2 மாதங்களில் நமது
    தளத்தை ஒரு நாளைக்கு 3 முறையாவது பார்த்துவிடுவேன். இன்னமும் பதிவை கூட படிக்க வில்லை!!! மிக்க நன்றி சுந்தர்ஜி….
    .
    தங்களுடைய சேவை ரஜினி ரசிகர்களுக்கு என்றும் தேவை.

    Rajinikanth will rule TamilNadu
    .

  4. RAJA RAJA says:

    சீக்கிரம் வாங்க தலைவா,எந்திரன் வசூல் முறியடிக்க பட்டுவிட்டதுன்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க ,கோச்சடயான் வந்த அப்புறம் தான் தெரியும் தலைவர் வசூல் சாதனை தலைவர் தான் முறியடிப்பார் நு

  5. Arun Arun says:

    Sundar anna, Thanks for coming back :-) So nice to see a post in our site !
    Cheers,
    Arun

  6. Ganesh Ganesh says:

    Welcome back Sundarji. Great news. Thanks for it. I look for any update in this website everyday atleast once. I have a question, whenever I come to this site, it redirects to someother website. I don’t know if it happens only to me. Can you please confirm me on this?

  7. Devaraj Devaraj says:

    Thanks Sunder. at last some news in our website.
    Happy for you and Thaliver fans.
    God Bless.
    Cheers
    Dev.

  8. Venky Venky says:

    சூப்பர் Ji…
    I know you have very big responsibility thru rightmantra.com…but Pls continue the important updates about Thalaivar…minimum 2 per month in our one & only website….

  9. Thamizhisai Appa Thamizhisai Appa says:

    செய்தி சந்தோஷம் தருகிறது ….. இந்த தளத்தில் புது பதிவை பார்க்கும் போது இரட்டிப்பு சந்தோஷம் ….. தின சரி தேவை இல்லை …வாரம் ஒரு பதிவாவது நீங்கள் வெளியிட்டால் நாங்கள் அனைவரும் ரொம்ப சந்தோஷ படுவோம் …..

  10. B. Kannan B. Kannan says:

    உங்கள் வருகைக்காக(Updates) தினமும் ஒரு முறையாவது பார்த்து பார்த்து நொந்து போய் இன்று இதை பார்த்தவுடன் என்ன ஒரு சந்தோஷம் தெரியுமா! Very much Excited.. எங்கு நாம் தலைவர் செய்திகளை, பார்த்தாலும் படித்தாலும் இங்கு படிப்பதை போலில்லை..
    Welcome back buddy.. Again, keep rocking asusual..
    Cheers..
    A drop in an ocean of Thalaivar Fans,
    B. Kannan.

  11. மாரீஸ் கண்ணன் மாரீஸ் கண்ணன் says:

    மீண்டும் நம் தலத்தில் பதிவுகளை பார்க்கும்போது மிக்க சந்தோசமாக இருக்கிறது….
    .
    மாரீஸ் கண்ணா

  12. Roshan Mumbai Roshan Mumbai says:

    மிக்க நன்றி சுந்தர்ஜி !!!! கடந்த 2 மாதங்களில் நமது
    தளத்தை ஒரு நாளைக்கு 3 முறையாவது பார்த்துவிடுவேன்.
    .
    தங்களுடைய சேவை ரஜினி ரசிகர்களுக்கு என்றும் தேவை.

    WELCOME BACK Mr சுந்தர்.

  13. Naveen Naveen says:

    WELCOME Sundar! Happy to get you back. Please don’t shutdown yourself too much by giving such a long gap. Pls upload some good stuff whenever u get time. good to hear about kochadaiyan. Thanks.

  14. RAJNI~MOHAN MADURAI. RAJNI~MOHAN MADURAI. says:

    நன்றி சுந்தர் அண்ணா, உங்களிடம் இருந்து வரும் தகவலுக்காகத் தான் இதனை நாளாய் காத்துகொண்டு இருந்தோம் அண்ணா….. நம்ம தலைவர் ” படம் நல்ல வந்துருக்குனு” சொன்னாலே படம் அவ்வளோ பிரமாண்டமாய் இருக்கும்….. இதுல நம்ம தலைவரே “எனக்கு ஒரு மைல்லா இருக்கும்னு” சொல்லி இருக்காரு அப்போ படத்த பத்தி கேக்கவா வேணும்……? நமக்கு தீபாவளி ஆரம்பிச்சாச்சு!!!!!!!!!!!!!!!

  15. Antony prabu Antony prabu says:

    உங்கள் பணியை தொடர்ந்ததற்கு நன்றி ஜி. வாரந்தோறும் இதை எதிர்பார்க்கிறோம்.

  16. Mano Mano says:

    Happy to hear a news abt thalivar from sundar……

  17. Ram Ram says:

    எங்களை இப்படி தவிக்க விட்டுவிட்டேர்களே . Good to see u back

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates