









You Are Here: Home » Fans' Corner, Featured, Gallery » அரும்பாக்கம் ரஜினி ரசிகர்களின் அரும்பணி
தன்னுடைய ரசிகர் மன்றங்களில் ரஜினி எதிர்பார்த்து காத்திருந்த சமூக மாற்றங்கள் நன்கு தெரிய ஆரம்பித்துவிட்டன. போஸ்டர் ஒட்டவும், பாலாபிஷேகம் செய்யவும் மட்டுமே தெரிந்தவர்களல்ல ரஜினி ரசிகர்கள். அவர்கள் சமூக பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர் நம் ரசிகர்கள். ரசிகர்களின் சமீபத்திய ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் பட ரிலீஸ் தொடர்பான விழாக்களே இதற்க்கு சான்று. அவர்களை ஊக்கப்படுத்தவே நம் வலைத்தளத்தில் ‘Fan Club News’ என்ற இந்த புதிய பகுதி துவக்கப்பட்டுள்ளது.
சமூகத்துக்கு பயன்தரக் கூடிய மன்றப் பணிகள், மற்றும் பிறருக்கு உத்வேகமளிக்கக்கூடிய ரசிகர்களின் அரும்பணிகள், தொண்டுகள் ஆகியவை குறித்த செய்திகள், புகைப்படங்கள் இந்த பகுதியில் இனி தொடர்ந்து வெளியிடப்படும். அர்த்தமற்ற கொண்டாட்டங்கள் மற்றும் சர்ச்சைக்கு இடமளிக்கும் எதற்கும் இங்கு இடம் கிடையாது. இது முழுக்க முழுக்க நற்பணிகள் செய்யும் ரசிகர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் அரும்பணிகளை பிறருக்கு தெரியச் செய்வதற்கே.
உங்கள் பகுதியில் நடைபெறும் இது போன்ற நம் ரசிகர் மன்றம் தொடர்பாக நற்பணிகள் குறித்த புகைப்படங்களை நீங்கள் இந்த தளத்தில் வெளியிட விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளவும். படங்களை, செய்திகளை இ-மெயில் மூலமும் simplesundar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
மிக்க நன்றி,
Onlysuperstar.com
——————————————————————————————————————————
அரும்பாக்கம் ரஜினி ரசிகர்கள் நடத்திய மெகா ரத்த தான முகாம்
அரும்பாக்கம் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் மற்றும் லயன்கிளப் ரோசஸ் இணைந்து சமீபத்தில் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் ரத்த தான முகாமை நடத்தின. அரும்பாக்கத்தில் உள்ள கமலாம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில், சென்னை மாவாட்ட ரஜினி மன்ற தோழர்கள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மொத்தம் 60 க்கும் மேற்ப்பட்ட ரசிகர்கள் மேற்படி முகாமில் கலந்துகொண்டு தங்கள் ரத்தத்தை தானமளித்தனர்.
சென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் ஓம். சேகர் தலைமையில் நடைபெற்றது. சென்னை மாவட்ட ரனினி மன்ற செயலாளர் என்.எஸ்.ரமேஷ் மற்றும் பொருளாளர் என்.ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அண்ணா நகர் மு.ரஜினிடில்லி, ஷெனாய் நகர் ஜி.எஸ்.ஸ்ரீகாந்த், வில்லிவாக்கம் எம்.கே. ரஜினி சுகுமார், கொடுங்கையூர் என்.ரஜினி ஆனந்தன், வலசை எம். ஆனந்தன், எல்.ஐ.சி. ஸ்ரீதர், லயோலா எல்.மகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த ரத்த தான முகாம் ஏற்பாடுகளை அரும்பாக்கம் டி. தாமஸ், கே.டி. காசி விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
——————————————————————————————————————————
Exciting features in Gallery
Just click any of the images in the gallery and scroll easily with the buttons provided. Also try Pic Lens provided below. You will be stunned to see our gallery through pic lens. Try out… you will love it!!
——————————————————————————————————————————
[END]
Good change, still many gud change development will bring attitude change for many towards fans & SuperStar.
அரும்பாக்கம் ரஜினி ரசிகர்களுக்கு என் சார்பாக ஒரு வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் சுந்தர்.
இந்தியாவில் (தங்க தமிழ்நாட்டில் இருக்கும்போது) தொடர்ந்து ரத்த தானம் செய்து வந்த நான், துபாய் வந்தவுடன் ஒரு பெரிய ரத்த தான முகாம் (ரஜினி ரசிகர்கள் பெயருடன்தான்), நடத்த நினைத்து, ஒரு சில காரணங்களால், தள்ளிக்கொண்டே போகிறது (நடைமுறை சிக்கல்கள் தான்).
விரைவில் அதை இங்கு துபாயில் நடத்த வேண்டும் என்பது என் எண்ணம். கடவுளும் மனசு வைக்க வேண்டும். நண்பர்களும் துணை புரிய வேண்டும், பார்ப்போம்.
நான் தொடர்ந்து ரத்த தானம் செய்ததை குறிக்கும் விதத்தில், ரத்த தான வங்கியால், எனக்கு அளிக்கப்பட்ட ரெகுலர் டோனர் சர்டிபிகேட் இப்போதும் என்னிடத்தில் பத்திரமாக உள்ளது. (இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மன் ராகுல் திராவிட் மற்றும் நயன் மோங்கியா (அவர் அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்) கையொப்பமிட்டது).
——————————————
Wow… Super Gopi. My best wishes.
- Sundar
——————————————
Now,
Gopi is a Blood donars Super Star. Am i wright?
naren
Well done. Congratz to arumbakkam friends.
Congrats Arumbakkam Fans…..
Thanks Sundar sir for posting this article….
Good post moderator.
Endrum anbudan,
Shivaji
proud to be thailvar fan. Keep up great work dear rajini fans.
Hats off to you all great fans. Keep going on the great way shown by our Thalaivar.
சூப்பர் நியூஸ்