You Are Here: Home » Fans' Corner, Featured, Gallery » அடேங்கப்பா… ஒரு தேர்ந்த இயக்கம் போல வளசை ரசிகர்கள் நடத்திய மன்ற விழா!!

னைவரும் வியக்கும் வண்ணம் ஒரு மன்ற நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்திக்காட்டியிருக்கிறார்கள் வளசரவாக்கம் பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தினர். கட்டுக்கோப்பாக ஒரு தேர்ந்த அரசியல் இயக்கத்தின் நிகழ்ச்சி போல இந்த மன்ற விழாவை நடத்திக்காட்டியதன் மூலம் தாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துள்ளனர் நம் ரசிகர்கள்.

இது ஏதோ பரபரப்புக்க்காகவோ விளம்பரத்துக்காகவோ நடத்தப்பட்டது அல்ல. மரம் நடுதல், பள்ளி சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல நற்பணிகளை வருடா வருடம் வளசை ரசிகர்கள் மன்ற விழா மூலம் செய்வதுண்டு. இந்த முறை தங்கள் மன்றத்தின் 30 வது ஆண்டு விழாவையும் சேர்த்து பிரமாண்டமாக நடத்தியிருக்கின்றனர்.

valasai-bj2

முப்பெரும் விழா

வளசரவாக்கம் நகர ரஜினி ரசிகர் மன்றத்தினர் சென்ற வாரம் வளசை நகர தலைமை ரஜினி மன்றத்தின் 30 வது ஆண்டு விழாவை வளசரவாக்கத்தில் உள்ள டாகடர் அம்பேத்கார் திடலில் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடினர். திருவள்ளூர் மாவட்ட தலைமை மன்றம் சார்பாக திரு. வலசை ஆனந்த் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து, விழாவை முன்னின்று நடத்தினார்.

அம்பேத்காருக்கு முதல் மரியாதை

விழா துவங்குவதற்கு முன்பு ரஜினி ரசிகர்கள் திடலில் இருந்த அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் 10,000 வாளா சரவெடி வெடிக்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

வளசை நகர் சேர்மன் ஈ.சி. சேகர் கலந்துகொண்டு தாய்மார்களுக்கு சேலைகள் வழங்கினார். பிரபல ஆர்ட் டைரக்டர் திரு.ஜி.கே. கலந்துகொண்டு முதியோர்களுக்கு வேட்டிகள் வழங்கினார். நகராட்சி துணை சேர்மன் எம்.கதிரவன் அவர்கள் நேசம் காப்பகத்தில் ஆதரவற்ற மாணவ மாணவியருக்கு உணவு வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் க.அன்பழகன் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் பரிசுப் பொருட்களும் வழங்கினார். சென்னை மாவட்ட செயலளார் என்.எஸ். ரமேஷ் இனிப்புகள் வழங்கினார். மாவட்ட பொருளாளர் என்.ராமதாஸ் தாய்மார்களுக்கு அரிசி வழங்கினார்.

maalai-malar-fan-club-newsjநிகழ்ச்சியில் எஸ்.பி.ஜி. சௌந்தர் ராஜன், ஜீ.பி.சீனு, வி.பழனி, கொடுங்கையூர் ரஜினி ஆனந்த், எம்.கே. சுகுமார், ரஜினி டில்லி, கே.அப்பன் ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட ரஜினி நற்பணி மன்ற பொறுப்பாளர் வளசை ரஜினி ஆனந்த் செய்திருந்தார்.

இன்றைய மாலை மலரில் நாம் அளித்த இந்த விழாவின் புகைப்படம் +  செய்தி இடம்பெற்றுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல அண்டை மாவட்டங்களிலிருந்தும் மன்ற தோழர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தினர்.

விழாவையொட்டி விழா நடைபெற்ற திடல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விழா நடைபெற்ற இடத்தின் அருகில் ரஜினி மன்ற கொடிகள் நடப்பட்டிருந்தன. அந்த பகுதியில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

——————————————————————————————————————————
Check e
xciting features in the Gallery
For easy viewing try Pic Lens provided below. You will be stunned to see the gallery through pic lens.  Try out… it is fast and easy!!
——————————————————————————————————————————

[END]

13 Responses to “அடேங்கப்பா… ஒரு தேர்ந்த இயக்கம் போல வளசை ரசிகர்கள் நடத்திய மன்ற விழா!!”

 1. Muthukumar Muthukumar says:

  Congrats to the organisers. Be prepared, more such programes to be organised in the near future.

 2. RAJINI RAJESH RAJINI RAJESH says:

  nam sagotharargalukku vazhthukkal.

  thalaivar padai endral summava………………. athirumulla

 3. Ravi Ravi says:

  நம்ம தலைவர் அரசியலுக்கு வருவதற்கு நம் வலசை நற்பணி மன்ற தோழர்கள் நல்ல ஒரு முன்னோட்டம் அமைத்துள்ளனர்.

  நமது இதய தெய்வம் ரஜினி அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழகத்தில் ஒரு ராம ராஜ்யம் அமைவது உறுதி.

  வாழ்க ரஜினி. வளர்க அவர்தம் தோழர்களின் தொண்டு.

  ———————————————————-
  இது ஏதோ பரபரப்புக்க்காகவோ விளம்பரத்துக்காகவோ நடத்தப்பட்டது அல்ல.

  மரம் நடுதல், பள்ளி சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல நற்பணிகளை வருடா வருடம் வளசை ரசிகர்கள் மன்ற விழா மூலம் செய்வதுண்டு. இந்த முறை தங்கள் மன்றத்தின் 30 வது ஆண்டு விழாவையும் சேர்த்து பிரமாண்டமாக நடத்தியிருக்கின்றனர். அவ்வளவுதான்.

  - சுந்தர்
  ———————————————————-

 4. vasi.rajni vasi.rajni says:

  தலைவர் இந்த மாதிரியான ரசிகர்களை பார்தால் நிச்சையம் சந்தொஷபடுவார் ,. கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சனையில் ரசிகர்கள் இருந்த பொறுமை நிச்சையம் அவரையே ஒரு கணம் யோசிக்க வைத்திருக்கும் . அதனாலேயே நமக்கு பரிசு தரும் விதமாக அன்றைய 3-11-2008 அன்று நடந்த சந்திப்பில் நம் அனைவருக்கும் பல இன்ப அதிர்சிகளை கொடுத்தார் தலைவர்.

  தலைவர் அந்த சந்திப்பில் சொன்னார் " சுயநலமில்லாமல் நம் வெளியே ஒரு நல்லது பன்னல் மதிப்பும் மரியாதையும் தானாக தேடி வரும் "

  இந்த ரசிகர்களை நம் எந்த சொல்லலால் வழ்துவது என்றே தெரிய வில்லை . தலைவர் இட்ட கோடை இவர்கள் பெரிய highway - யாக போடுவார்கள் . இந்த அறிய நிகழ்வை உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கும் ,ரசிகர்களுக்கும் , publish பண்ணியதற்கு சுந்தர்ஜி அவர்களுக்கு என்னுடைய மட்டற்ற நன்றிகள் .

  rajini will rule tamil nadu

  -vasi.rajni

 5. GokulDass GokulDass says:

  என்ன சுந்தர் ஆவீ ஒரு கரடி விட்டுருக்கானுங்க இளைன்யர் ஒட்டு யாருக்குன்னு என்ன ரிசல்ட்?

  —————————————-
  Nothing spl. Will check once again and will tell you.
  (I used to check Viktan in ஓசி only)

  - Sundar
  —————————————-

 6. ROBO sathya ROBO sathya says:

  vow… great !! nice to hear about our thalaivar fans doing குட் to the society.

  could any1 pls ans this. who s the actual stunt master of endiran ? peter hein or yuen woo ping.

  and who s the actual costume designer of endiran ? is dat manish malhotra or SAI or mary e vogt ?

  ——————————————————-
  Yeun woo ping and Petre heynes both are stunt masters for the movie.

  Normal Costumes would be designed by Manish and for Robot there would be another to take care.
  - Sundar
  ——————————————————-

 7. T.Subramaniam T.Subramaniam says:

  தலைவா………

  ஒரு நாள் , ஒரு மாலை எங்களுக்காக இந்த முப்பெரும் விழா கலந்துகுறேனு சொலுங்க …அணைத்து ரசிகர் மன்றம் சரப விழா ……நீங்க வந்தா மட்டும் போதும் …நீங்க வந்தா மட்டும் போதும் …சும்மா தமிழ்நாடே அதிருமுள்ள !!!

  KB உங்களுக்கு ஒரு சான்ஸ் குடுத்தாருள்ள ,எங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க தலைவா !!!!

 8. Skandamurthy Skandamurthy says:

  Hats off வளசை ரசிகர்களுக்கு மற்றும் மன்றத்திற்கு…

 9. Skandamurthy Skandamurthy says:

  சுந்தர் ஜி I have selected an image in the Gravatar site, please publish this comment so that i would know whether this image is appearing here…

 10. harisivaji harisivaji says:

  ரஜினி ரசிகர்கள் பேச்சுல மட்டும் இல்ல

  செஞ்சும் காட்டு வாங்க proof பணிடீங்க

  மேலும் வளர்ந்து நாடு போற்றும் செய்யல்களை செயா வாழ்த்துகள்

 11. T.BABAPARTHIBAN T.BABAPARTHIBAN says:

  VALASARAVAKKAM மன்றம் Hats off to you.

 12. rajakannan rajakannan says:

  ரஜினி கிரேட் நடிகர் அண்ட் சூப்பர் star

 13. Rajni.ansari Rajni.ansari says:

  Kalakitinga Valasai fanz….

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates