You Are Here: Home » Gallery » ராகவேந்திரா மண்டபத்தில் மோர் பந்தல் - ‘More’ images!!

maalai-malar-buttermilkj பொதுமக்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு கடந்த சில ஆண்டுகளாக ரஜினி தனது ராகவேந்திர மண்டபத்து வாயிலில் மோர் பந்தல் அமைத்து பராமரித்து வருகிறார். கோடைக் காலங்களில் செயல்படும் இந்தப் பந்தலில் குடிப்பதற்கு ஜில்லென்று மோர்  தாராளமாக தரப்படுகிறது.

எந்த வித விளம்பரமும் இன்றி அவர் இதை செய்தாலும், செய்வது ரஜினி என்பதால் அது இன்னும் சிறப்பு பெற்றுவிடுகிறது. இது குறித்து நமது தளத்தில் நாம் நேற்று புகைப்படத்துடன் விரிவான செய்தி அளித்திருந்தோம். அது நேற்றைய மாலை மலர் நாளிதழில் வெளியானது. தற்போது கூடுதல் படங்களை இணைத்துள்ளோம்.

பல தரப்பட்ட மக்கள் தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்வதை புகைப்படங்களில் காணலாம். இந்த புகைப்படங்கள் பந்தல் திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் (காலை 9.30) எடுக்கப்பட்டவை.

குறிப்பு:
இந்த புகைப்படத்தொகுப்பை நான் ஆழ்ந்த யோசனைக்கு பிறகே வெளியிட்டேன்.
தமிழகத்துக்கு வெளியே மற்ற மாநிலங்களில், அயல் நாடுகளில் இருக்கும் நம் ரசிகர்களுக்கு ரஜினியை பற்றிய இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் தான் மிகப்பெரிய சந்தோஷம். அந்த காரணத்துக்காகவே இவற்றை தருகிறேன். நான் முன்பே கூறியபடி, தலைவர் இது போன்று ஆத்மார்த்தமாக செய்யும் சிறு சிறு நற்பணிகளை வெளிச்சம் போட்டு காட்டுவது நம் நோக்கமல்ல.

அதே போல அவர் இது போன்று செய்யும் நல்ல காரியங்கள் தமிழகத்திலுள்ள மற்ற ரசிகர்களுக்கும் ஒரு உந்துதலாய் இருக்கும் என்ற காரணத்தால் மாலை மலர் கேட்டுகொண்டதற்க்கிணங்க புகைப்படம் தரப்பட்டது. சென்ற ஆண்டு ரஜினி மோர் பந்தல் அமைத்த விஷயத்தை கேள்விப்பட்டு ஆங்காங்கே நம் ரசிகர்கள் அதே போல அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

Gallery

END

5 Responses to “ராகவேந்திரா மண்டபத்தில் மோர் பந்தல் - ‘More’ images!!”

  1. vasi.rajni vasi.rajni says:

    தலைவர் எதை செய்தாலும் விளம்பரம் இன்றி செய்வர் .

    அததற்கு இது ஒரு சிறந்த உதாரணம் .அவரின் எண்ணம் போல தன் அவர் வாழ்வு அமைந்துள்ளது .

    நாளை அவரும் நாம் அனைவரும் நினைப்பது நடக்கும் .

    கடமையை செய்வோம் பலனை எதிர்பார்ப்போம் .

    rajini wil rule tamil nadu

    -vasi.rajni

  2. R.Gopi R.Gopi says:

    //பல தரப்பட்ட மக்கள் தங்கள் "தாக்கத்தை தீர்த்துக்கொல்வதை" புகைப்படங்களில் காணலாம்//

    ************

    "தல" - சின்ன தப்பு தான். ஆனா, அர்த்தம் அனர்த்தம் ஆக கூடாது என்ற நல்லெண்ணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    —————————————————————————————-
    Corrected. சுட்டிக்காட்டியதற்கு நன்றி கோபி அவர்களே. (கோபியின் கண்களிலுருந்து எதுவும் தப்பாதுங்க்றது இது தானோ?)

    - சுந்தர்
    —————————————————————————————-

  3. கிரி கிரி says:

    Excellent Coverage Sundar!

  4. Sakthivel Sakthivel says:

    Hi Sundar,

    Did you see today's dinamalar news. Once again they proved that they always against thalaivar.
    http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_i...

    —————————————————————
    சக்தி, நீங்கள் இத்தனை ஆவேசப்படும் அளவிற்கு இது ஒன்று பெரிய செய்தியல்ல. சும்மா சிறிய குசும்புடன் வந்துள்ள சாதாரண செய்தி. இதை விட அவர்கள் மோசமாக எழுதியெல்லாம் நாம் பார்த்தாகிவிட்டது. இதெல்லாம் ஜூஜூபி. விட்டுத்தள்ளுங்க.

    - சுந்தர்
    —————————————————————

  5. Rajesh J Rajesh J says:

    Even a small polio drops campaign the government will display banner, mike advertisement and all that……see our super star their is nothing behind the "pandhal" glorifying himself. This is called "Pure Pothu Nalam".

    Tamil Nadu is blessed with this Kind hearted person.

    Rajesh J

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates