You Are Here: Home » Featured, Gallery » ‘அசல்’ துவக்க விழாவில் சூப்பர் ஸ்டார்! - Report & Full Gallery

asal_rajini1

ன்று காலை ‘அசல்’ துவக்க விழாவிற்கு சூப்பர் ஸ்டார் வந்திருக்கிறார் என்ற தகவலை என் பத்திரிகை நண்பர் ஒருவர் அங்கிருந்தபடியே நமக்கு மொபைலில் தெரிவித்தார். அலுவலகத்தில் பணியில் இருந்த படியால் நாம் அங்கு செல்ல முடியாவிட்டாலும், அடுத்த நிமிடம் நான் மானசீகமாக அங்கு சென்று குதித்துவிட்டேன்.

asal_rajini2

ரஜினி என்ன டிரஸ் போட்டிருந்தார், என்ன கெட்டப், எப்படி வந்து இறங்கினார், எத்தனை மணிக்கு வந்தார் போன்ற கேள்விகளை தொடர்ச்சியாக நண்பரிடம் LIVE COMMENTARY கேட்டு நச்சரித்துக்கொண்டயிருந்தேன். அவரும் அவ்வபோது எனக்கு COMMENTARY கொடுத்துகொண்டேயிருந்தார். நான் நேரில் போயிருந்தால் ஏகப்பட்ட விஷயங்களை அள்ளிவந்திருப்பேன். (சூப்பர் ஸ்டார் நிச்சயம் வருவார் என்று உறுதியாக தெரிந்திருந்தால் ஜஸ்ட் ஒரு ரெண்டு மணி நேரம் பர்மிஷன் போட்டுவிட்டு கவர் செய்ய சென்றிருப்பேன். ஊப்ஸ்… மிஸ்ஸாகிவிட்டது… அடுத்த முறை பார்க்கலாம்.)

asal_rajini3

நண்பர் கூறியதிலிருந்து:

அஜீத் பட பூஜை என்பதால் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அஜீத் ரசிகர்கள் வேறு அந்த தெருவையே அமர்க்கலப்படுத்தியிருந்தனர். ரஜினி வரப்போவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 9.30 மணிக்கு விழா துவங்கினாலும் 10.00 மணி வரை ரஜினி வரவில்லை. சுமார் 10.10 க்கு திடீரென்று பரப்பரப்பு தொற்றிக்கொண்டது. உடனே புரிந்துவிட்டது ரஜினி வந்துவிட்டார் என்று. எங்கிருந்து தான் வநதார்களோ தெரியவில்லை அத்தனை ரஜினி ரசிகர்கள். அந்த இடமே ஒரு நிமிடம் திக்குமுக்காடி போய்விட்டது.

asal_rajini4

ராம்குமாரும் பிரபுவும் ஓடிச் சென்று ரஜினியை வரவேற்று அழைத்துவந்தனர். வெள்ளை வேட்டி சட்டையில் பளிச்சென்று ஷேவ் செய்த முகத்துடன் சூரியனாக வந்தார் ரஜினி. உடன் தனது மகள் சௌந்தர்யாவும். முன்னை பிரமுகர்கள் அனைவரும் சென்று ரஜினியிடம் கைகுலுக்கி அவர் வந்ததற்கு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

asal_rajini5

அஜீத் ரஜினியை பார்த்தவுடன் மிகவும் உற்சாகமானார். இருவரும் ஏதோ பேசிக்கொண்டனர். அனைவரும் தங்கள் உரையில் ‘அசல்’ வெற்றிக்கு வாழ்த்து கூறினார்.

asal_rajini6

சூப்பர் ஸ்டார் பேசியதிலிருந்து:

“நான் பொதுவாக சினிமா பூஜைகளுக்கு என் மகளை அழைத்து வந்ததில்லை. ஆனால் நேற்று நான் சொல்லி வைத்துவிட்டேன், “நாளை காலை ரெடியாக இரு. சிவாஜி சார் வீட்டுக்கு அசல் பட பூஜைக்கு நாம் போகணும்” என்று. என் மகள் முதலில் கலந்து கொள்வது சிவாஜி ப்ரோடக்ஷன்சின் பட பூஜையாக இருக்க நான் விரும்பினேன்.

asal_rajini7

இந்த இடம் மிகவும் ராசியான இடம். சந்திரமுகி படத்தின் பூஜையும் இங்கு தான் நடைபெற்றது. அந்த படம் நடிக்கும்போது நான் சற்று டென்ஷனாகவே இருந்தேன். என்னை விட அதிக டென்ஷனாக இருந்தது ராம் குமார் தான். முந்தைய படமான பாபா சரியா போகாததால் இது எப்படி போகுமோ என்ற படபடப்பு அவரிடம் இருந்தது. அனால் சிவாஜி சாரின் ஆசியால் சந்திரமுகி படம் அபார வெற்றி பெற்றது. அன்றைக்கு நான் எப்படி இருந்தேனோ அதே போல அஜீத்தும் இப்போது இருக்கிறார். அவர் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறார். அவருக்கு தேவை இப்போது ஒரு பிரம்மாண்ட வெற்றி. அதை நிச்சயம் ‘அசல்’ கொடுக்கும். இந்த இனிய விழாவில் ஒரே குறை சிவாஜி சாரும் கமலா அம்மாளும் இல்லை என்பது தான். இருந்தாலும் அவர்கள் ஆசி அனைவருக்கும் நிச்சயம் உண்டு. இந்த படத்தின் வெற்றி விழாவிலும் நிச்சையம் நான் இருப்பேன்”

asal_rajini8

எப்படியோ சூப்பர் ஸ்டாரை மறுபடியும் ரசிகர்கள் கண்ணில் காட்டியதற்கு அசல் படக்குழுவினருக்கு தான் நாம் நன்றி சொல்லவேண்டும்.

குறிப்பு: அனைத்து சினிமா விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் ஆஜராகிவிடும் புரட்சித் தமிழன் சத்யராஜின் புரட்சி வாரிசு சிபிராஜ் இந்த விழாவிற்கு வரவில்லை என்பது பெரிய ஏமாற்றம். (ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு படம் கிடைச்சிருக்குறதா சொல்றாங்க!!)

Gallery

31 Responses to “‘அசல்’ துவக்க விழாவில் சூப்பர் ஸ்டார்! - Report & Full Gallery”

  1. T.Subramaniam T.Subramaniam says:

    சுந்தர் போகமலயே இவ்ளோ செய்திகளா,போயிருக்கலாம் ,நாங்களும் மிஸ் பண்றோம் !!!!

    அசல் ஹீரோக்கள் ரஜினி,அஜித் ,சூர்யா …பாக்க சந்தோஷமா தான் இருக்கு !!!!

    அந்த குறிப்பு சுந்தரின் குறும்பு !!!!!

  2. Leo Leo says:

    சுந்தர் ஜி, சூப்பர் சூப்பர் ஐயோ தலைவர் ஸுபெர்ப், ரொம்ப சந்தோசமா

    இருக்கு. தலைவர வெள்ளை வேட்டி, ஷர்ட் ல பார்கறதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. அந்த வசீகரம் எப்பவும் போகவே போகிறது.

    திரும்பவும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .

  3. M.Vijay Anand M.Vijay Anand says:

    இந்த பதிவின் மூலம் விழாவை நேரில் பார்த்த திருப்தியை ஏற்படுத்தி விட்டிர்கள் .simply superb. ஆறாவது போட்டோவில் இருப்பது சூர்யா தானே ????

  4. சூர்யா சூர்யா says:

    தலிவா,

    எப்படி புடிச்சீங்க இந்த படத்தையெல்லாம்…? கலக்கலா இருக்கு… அதுவும் சூர்யா இருக்கிற படம் டாப்… இந்த வாய்க்கொழுப்பு சிபிராஜுக்கு பாடம் சொல்ற மாதிரி இருக்கு… REAL UNSEEN PICTURES…!!!!

  5. R.Gopi R.Gopi says:

    //குறிப்பு: எல்லா விழாவிலும் தவறாமல் ஆஜராகிவிடும் புரட்சித் தமிழன் சத்யராஜின் புரட்சி வாரிசு சிபிராஜ் இந்த விழாவிற்கு வரவில்லை. (ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு படம் கிடைச்சிருக்குறதா சொல்றாங்க!!) //

    ******************

    இந்த பட பூஜையின் முழு விபரம் எப்படியும் நம் எல்லாருக்கும் கிடைத்துவிடும். ஆனால், நான் மேலே அடைப்பிலிட்டுள்ள அந்த குறிப்பு "தல" சுந்தரிடம் மட்டும்தான் கிடைக்கும்.

    அதனால்தான், இவ்ளோ பெரிய நியூஸ் கவரேஜ விட்டுட்டு இந்த குறிப்பை படித்தேன், ரசித்தேன், அதை அடைப்பில் அடைத்தேன்.

  6. Giridharan Giridharan says:

    Sundar,

    Thalaivar is looking awesome. Ajith's new get up is rocking. After Thalaivar, Ajith's stills only making vibrations. Don't think I am comparing Thalaivar and Thala. Thalaivar is so long ahead of all and beyond comparisons. But after Thalaivar, only Thala is in long distance second to Thalaivar in creating vibrations with movie stills.

    Regards,

    Giri

  7. Muthukumar Muthukumar says:

    Photos are of high quality Sundar. Rajini looks very fresh!!! As Vijay Anand sais, we feel like standing next to thalaivar. Excellent clicks… Thnx to you and your friend.

  8. vasi.rajni vasi.rajni says:

    சுந்தர்ஜி இன்னும் நன் இந்த பதிவை படிக்கவில்லை ஜஸ்ட் போடோஸ் மட்டும் பார்தேன் . நிறைய தெரிந்து கொண்டேன் . அவற்றை இங்கே பதிவு செய்ய முடியாது . ஆனால் சூர்யா வின் பணிவு என்னை ஒரு கணம் வியக்க வைக்கிறது .. என்ன ஒரு பணிவு..

    தலைவரின் இந்த விழாவில் கலந்து கொண்டது அஜிதின் போட்டியாளருக்கு வயற்றில் புளியை கரைதது போல் இருக்கும் .
    சும்மாவா பின்னே . அந்த தொடர் தோல்வி நடிகர் தலைவர் பெயர் சொல்லி வளர்ந்தார் . பிறகு சென்ற அண்டு ஒரு பாரபட்சமான கருத்து கணிப்பு அவர்தான் மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் மற்றும் ரஜினியையே மிஞ்சி விட்டார் என்று பெருமிதம் கொண்டு தன்னை mgr அவர்களுடன் ஒப்பிட்டு கொண்டார் .. ஆனால் விதி படம் இந்த அண்டு வெளிவந்த படங்களில் மிகப்பெரிய தோல்வி படம் என்று முத்திரை குத்தபட்டு விட்டது . .. அவருக்கு தெரியாது ரஜினி ரசிகரின் ஆதரவால் தன் வண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது என்று ..

    பாவம் அவரை உசிப்பி விட்டு mgr ருக்கு பிறகு மக்களுக்கு பிடித்த ஒரே நடிகர் இவர் தன் என்று ஒரு பெரியார் மனிக்கவும் ஒரு சிறியார் கூறினர் . பிறகு அவரின் தந்தையின் படமான " ventayam" அதில் தலைவருக்கு எதிரான வசனங்கலும் ஒரு படி மேலே சென்று தலைவரின் உருவத்தில் இருக்கும் ஒரு நடிகரை விட்டு தலைவரை பயங்கரமாக tease செய்தனர் .இந்த படத்தை பார்த்த அடுட்ட நிமிடமே நன் சுந்தர்ஜிக்கு போன் செய்து பேசினேன் அவர் தன் இதையெல்லாம் கண்ண்டுகொள்ள வேண்டம் என்றார் . வில்லு படத்தில் முதல் கட்சியில் ரஜினி ரசிகர்களை கண்பிப்பர்கள் ..
    அதில் அடுத்த ஜனாதிபதி எங்கள் தலைவர்தான் என்று " ரசிகர்கள் " கூருவர்கலம். இந்த கட்சியும் நம் தலைவரை குறிவைத்து எடுக்க பற்ற காட்சி .

    உலகமே எதிர்தலும் ரஜினியின் புகழை எவராலும் அழிக்க முடியாது

    சரித்திரம் சொல்லும் நாளைய வெற்றியை

    rajini will rule tamil nadu

    - vasi.rajni

    ———————————————————————
    அந்த நடிகர் தனக்கு தானே சூன்யம் வைத்துகொள்கிறார். விட்டுத்தள்ளுங்கள்.

    அப்புறம் அயன் படத்தை பார்த்த என் நண்பர்கள் பலரும் படம் fantastic என்றும் ஒரு படத்தில் எப்படி நடிப்பது என்று விஜய் சூரியாவை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார்கள். பொதுமக்கள் மத்தியிலும் சூர்யாவின் இமேஜ் பலமடங்கு உயர்ந்துவிட்டது. கூடிய விரைவில் விஜயை ஓவர்டேக் செய்து விடுவார் சூர்யா.

    - சுந்தர்
    ———————————————————————

  9. puyalaman puyalaman says:

    சுந்தர் வழி தனி வழிதான் ———எல்லா விழாவிலும் தவறாமல் ஆஜராகிவிடும் புரட்சித் தமிழன் சத்யராஜின் புரட்சி வாரிசு சிபிராஜ் இந்த விழாவிற்கு வரவில்லை. (ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு படம் கிடைச்சிருக்குறதா சொல்றாங்க!!)—- இது ஏன்னு போறியளே

  10. suresh suresh says:

    சூப்பர் தலை :) அருமையா இருந்துச்சு

    தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டி
    உங்களுக்கு பிடிக்கும் படியுங்கள்
    http://sureshstories.blogspot.com/2009/04/blog-po...

    ——————————————————-
    நல்ல வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்கள்.

    - சுந்தர்
    ——————————————————-

  11. puyalaman puyalaman says:

    காலுலே விழுந்து வணங்குறேதை என்ன அழகா தடுக்குராறு தலைவரு இதுஎல்லாம் வேற யாருக்கு வரும்

  12. கிரி கிரி says:

    சுந்தர் கலக்கல்..அதிரடி ரிப்போர்ட்

    ஏகப்பட்ட படம் போட்டு கலக்கிட்டீங்க…ஒரே வருத்தம்.. நீங்க சென்று இருந்தீங்கன்னா இன்னும் சுவாராசியமா தகவல்களை கொடுத்து இருப்பீங்க..வர்ணனையுடன்

    அனைத்து படங்களும் அருமை.

    ——————————————————————
    அடுத்த தடவை பார்த்துக்கலாம். ஒன்னு ரெண்டு இப்படி மிஸ்ஸாயிடுது.

    - சுந்தர்
    ——————————————————————

  13. Mohan Kumar Mohan Kumar says:

    Ajith is looking like weird in Virumaandi-Kamal get up.
    Soft hero or soft villain image suits Ajith better.
    This movie may not be the hit he is looking for unless he changes his get-up.
    (One big reason for MGR's success was - MGR put on only the get-ups that suit him. He tried a bit different in நாளை namathe - Dharmendra role he changed to Kari-Appina அண்ணன் role and didn't go well with his fans.)

    -Mohan

    ——————————————————————
    அஜீத்துக்கு இந்த புது கெட்டப் வித்தியாசமா நல்லாத்தான் இருக்கு.

    மொத்த படத்தையும் நீங்க பார்த்த மாதிரி இப்பவே தீர்ப்பு சொல்லிட்டீங்க? ஜஸ்ட் இப்போ தான் பூஜையே போட்டிருக்காங்க. அதுக்குள்ள நீங்க இப்படி சொன்னா எப்படி? ரிலீசுக்கு முன் தவறாக யூகிக்கப்பட்டு ஆனால் பின்னர் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் திரையுலகில் ஏராளம்.

    சூப்பர் ஸ்டார் உளமார வாழ்த்தியதை போலவே, 'அசல்' அசத்தலான வெற்றியை பெரும் என்று நம்பலாம்.

    - சுந்தர்
    ——————————————————————

  14. kppradeep kppradeep says:

    தட்ஸ் ஆப் டு யு சுந்தர் சார்.நீங்கள் நேர போக விட்டாலும் அருமையாக கவர் செய்திருக்கிறிர்கள். தேங்க்ஸ் சூப்பர் சுந்தர் அவர்களே

  15. Tamil Selvan Tamil Selvan says:

    // குறிப்பு: அனைத்து சினிமா விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் ஆஜராகிவிடும் புரட்சித் தமிழன் சத்யராஜின் புரட்சி வாரிசு சிபிராஜ் இந்த விழாவிற்கு வரவில்லை என்பது பெரிய ஏமாற்றம். (ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு படம் கிடைச்சிருக்குறதா சொல்றாங்க!!)

    இரும்பு அடிக்கிற இடத்தில் , ஈக்கு என்ன வேலை ? :)

  16. Prasad-California Prasad-California says:

    Sundar - You made my day…as usual thalaivar rocks !!!!!!!

  17. vishwa vishwa says:

    sooperrrrrrrrrrrrrr

    thalaivar + Thala…nalla combo

  18. Galeel Galeel says:

    // அஜீத்துக்கு இந்த புது கெட்டப் வித்தியாசமா நல்லாத்தான் இருக்கு.

    மொத்த படத்தையும் நீங்க பார்த்த மாதிரி இப்பவே தீர்ப்பு சொல்லிட்டீங்க? ஜஸ்ட் இப்போ தான் பூஜையே போட்டிருக்காங்க. அதுக்குள்ள நீங்க இப்படி சொன்னா எப்படி? ரிலீசுக்கு முன் தவறாக யூகிக்கப்பட்டு ஆனால் பின்னர் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் திரையுலகில் ஏராளம்.

    சூப்பர் ஸ்டார் உளமார வாழ்த்தியதை போலவே, ‘அசல்’ அசத்தலான வெற்றியை பெரும் என்று நம்பலாம்.

    - சுந்தர் //

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .

  19. harisivaji harisivaji says:

    I guess today is the most unlucky .day for me Sundar…

    முன்பு சந்திரமுகி ஷூட்டிங் அங்க தான் பூஜை போட்டாங்க அப்போ எதேர்ச்யா நான் நான் பஸ்சில் அந்த வழியாக போக நேர்ந்தது ரஜினி யின் தரிசினமும் கிட்டியது ஆனால் ஒரு வருடமா நான் அந்த வழிய அக தான் போய்ட்டு இருக்கேன் இன்றைய்குனு பார்த்து நான் லேட்டா தான் என்த்ரிசேன் 11.30 மணிக்கு தான் சுந்தர் மூலமாக vantha ரஜினி வரலாம் என்று message பார்கிறேன் …
    அப்பொழுது நான் கொட்டுர்புரம் ரோடு நந்தனம் சிக்னல் நிக்கிறேன்
    உடனே திரும்பி வேகமா வந்து பார்த்த angu குட்டி டிராபிக் ஜாம் சில ரசிகர் முகத்தில் பெரும் மகிழ்ச்சி வெளியே உள்ள கேட் மூடி இருந்தாங்க கேட் சுத்தி ஒரு 30 பேர் நின்னுட்டு இருந்தாங்க உள்ள என்ன நடக்குது ஏதும் தெர்யல அனால் அங்க இருக்குறவங்க கொஞ்சம் கொஞ்சமா மகிழ்சி யுடன் களைவதை பார்த்த உடன் ரஜினி வந்து போய் உள்ளார் தெரிஞ்சுகிட்டேன் உள்ள அஜித் இருக்கார் சொன்னாங்க ரஜினி அபோதான் போனார் 20 minutes என்றும் சொன்னாங்க நான் நினைத்து போல களைந்து சென்றவர்கள் ரஜினி ரசிகர்கள் தான் அமாம் அவுங்க முகத்த பார்தபவே புரியுதே 10000Watts bulb பிரகாசத்தின் காரணம் ரஜினி வந்து 20 minutes பின்பு இருந்த சுவடுகளே இப்படி இருக்கு என்றால் ரஜினி உள்ளே இருந்த அந்த தருணங்கள் என்னால் உணர முடிகிறது (ஏன் என்றால் எனக்கு அதே இடத்தில முன்பு ஏற்பட அனுபவம் )
    கொஞ்சம் முன்பு வந்துருக்கலாமே வருத்த பட்டுக்கொண்டேன் ஆனால் என்னை போல கோடி கணக்கான ரசிகர்கள் எவளோ தொலைவில் எவளோ பேர் இருகாங்க அவுங்ககலை நினைத்து என்னை ஆறுதல் படுத்திகொண்டேன் நான் அட்லீஸ்ட் ரஜினி வந்து சென்ற இடத்தை உடனே அதே சூடோடு பார்க்கிற ஒரு சந்தர்பம் ஆவது கிடைத்ததே அதுவே என் பாக்கியம்

    கிடைக்கிறது கிடைக்காம இருக்காது
    கிடைக்காம இருக்கிறது என்னைக்கும் கிடைக்காது

    —அதன் அர்த்தமும் புரிந்தது

    கொஞ்சம் மகிழ்ச்சியுடன் :
    ஹரி.சிவாஜி

    ———————————————————————
    அடுத்த முறை உங்களுக்கு சூப்பர் ஸ்டாரை பார்க்கும் வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்.

    - சுந்தர்
    ———————————————————————

  20. sydneysriram sydneysriram says:

    குட் விஷேஸ் டு சிவாஜி ப்ரோடுச்டிஒன்ஸ். இ ஹவே எ வெரி ஸ்ட்ரோங் சொபிட் கோர்னெர் போர் தேம். இட் வாஸ் கிரேட் டு சி தலிவர் பெஇங் ஹி சீப் குஎச்ட்

    ——————————————————
    என்ன ஸ்ரீராம் இந்த புது மொழியை எங்கே கத்துகிட்டீங்க? நல்லாயிருக்கே… ஆனா புரியலே…!!

    - சுந்தர்
    ——————————————————

  21. suresh suresh says:

    //நல்ல வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்கள்.

    - சுந்தர்//

    ரொம்ப ரொம்ப சந்தோசம் எனக்கு நீங்கள் சொன்னது தலைவா.. உங்கள மாதிரி மக்களிடம் தன் கற்று கொண்டேன் .. உங்கள் அன்பிருக்கு நன்றி

  22. smith smith says:

    dear sundar sir,

    YOU HAVE DONE A WONDERFUL JOB BY PROVIDING HUGE NUMBER OF UNSEENS PICTURES.I APPRECIATE YOUR HARDWORK AND SINCERITY THAT YOU ARE SHOWING.WE ALL ARE WITH YOU.MAY GOD BLESS YOU.

  23. sydneysriram sydneysriram says:

    சுந்தர்: One of the biggest regrets I have in life is that I cannot write Tamil though i am a Thanjavur Pachai Tamilian. I can read and write Hindi- not sure if can now-once upon a time because I did schooling in Kendriya Vidayayla. I got carried away and so typed my english conversation in Tamil.
    Sorry for the confusion

    Botttom line: I have a very strong softcorner for Sivaji productions. Hope this movie does well. Good luck to them

    ——————————————————-
    Just kidded you. ha… ha…

    - Sundar
    ——————————————————-

  24. Prasad Prasad says:

    Sundar,

    Excellent coverage.I am very much charged up after seeing the photos.I would have definitely gone there if i have got your msg a little earlier.,

  25. sethu sethu says:

    Dear Mr.Sundar,

    superb message you have given about our rajini sir, I like all your article about rajini sir very much. The photo was excellent. Continue with your work about our rajini sir.All the best.

    ——————————————————————-
    Thanks Sethu. Expecting your views and angles on each post and not mere appreciation.

    - Sundar
    ——————————————————————-

  26. Sekar Sekar says:

    (கொஞ்சம்) லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா நிறைய தந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  27. napoleon.s.kumar napoleon.s.kumar says:

    அசத்தல் புகைப்படங்கள். தலைவரின் பேச்சு உண்மையானது. தலைவரின் முகத்தில் என்ன ஒரு தேஜெஸ். அற்புதமான களை. நன்றிகள் பல திரு.சுந்தர் அவர்களுக்கு.

  28. ARUN ARUN says:

    தலைவரோட ஆசிர்வாதம் எப்போவும் "தலைக்கு" இருக்கு

  29. anand kumar anand kumar says:

    from this function it is clear that, like thalaivar says in arunchalam, "Aandavan sollaran, Arunachalam Seiyran", antha Aandavanae Sollitan Ajith adutha Superstar NO.2 Aaganumnu. odanae namma Thalaivar fans kova padaathinga,

    Romba seekiram antha Andavanae Solliduvan, Mr. RAJINIKANTH adutha TAMIL NADU "CM" Aaganumnu.

  30. anand kumar anand kumar says:

    A very Happy TAMIL New Year 2009 wishes for all Thalaivar and thala, suriya fans and Mr.Sundar

  31. shukri shukri says:

    டியர் சுந்தர்..நம்ம வெப்சைட் நம்ம ரஜினிய பத்தி மட்டும் பேசுவோமே…இந்த நியூஸ்ல சும்மா தேவ இல்லாம சிபிராஜ் ai கிண்டல் அடித்து நம்ம வெப்சைட் இன் தரத்தை நாமலகாவே கெடுக்க தேவள்ள..குறிப்பு: நான் 100% ரஜினி பேன்.

    ————————————-
    Ok. thanks.
    - Sundar

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates