You Are Here: Home » Videos » கொடுக்கும் எண்ணம் இருந்தால்…. Video Clip

சூப்பர் ஸ்டாரின் படங்களில் சமூக கருத்துக்குள் தத்துவங்கள் சும்மா ஜஸ்ட் லைக் தட் ஆங்காங்கே புதைந்துகிடக்கும்.

இதற்க்கு எண்ணற்ற உதாரணங்களை கூறலாம்.

ரஜினி படத்தில் இடம் பெரும் தத்துவங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை பல்கலைகழகத்தில் ஒருவர் டாக்டர் பட்டம் கூட பெற்றார் என்று நான் படித்திருக்கிறேன்.

சினிமா இளைஞர்களை கெடுக்கிறது என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கி அவர்களை ஆன்மீக, மெய்ஞானம், உழைப்பு, குடும்ப நலன், பெற்றோர் பக்தி, நாட்டு பற்று என்று பல விஷயங்கள் நோக்கி திருப்பியதில் ரஜினியின் படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றால் மிகையாகாது. இதற்கு அப்படி மாறிய எண்ணற்றோர் சாட்சி.

உபதேசம் என்பது மருந்துபோல. அதை நேரடியாக கொடுத்தால் கசப்பு என்று துப்பிவிடுவார்கள். அதில் தேன் தடவி தான் கொடுக்கவேண்டும். அந்த பணியை செவ்வனே கற்றவர் ரஜினி. தனது படங்களில் அருமையான கருத்துக்களை sugar coat செய்து பார்ப்பவர்கள் இன்முகத்தோடு அதை ஏற்றுக்கொள்ளும்படி அவர் கொடுக்கும் அதிசயமே அதிசயம் தான்.

இதோ அதிசயப் பிறவி படத்தில், ஈகைப் பற்றி சூப்பர் ஸ்டார் என்ன கூறுகிறார் பாருங்கள்…

Video Clip

[media id="18"]

END

3 Responses to “கொடுக்கும் எண்ணம் இருந்தால்…. Video Clip”

  1. பாசகி பாசகி says:

    100% உண்மை-ஜி… தளபதி படத்துல ஷோபனா வளையலை கழட்டி தந்து அந்த பாட்டிக்கே கொடுத்துடுங்கனு சொல்லும்போது தலைவர், "யாருக்காவது உதவி பண்ணறதுன்னா அதை நீயே உன் கையால பண்ணு"- ம்பாரு… எவ்வளவு உண்மை. இதையே சமீபத்துல நடந்த ரசிகர் சந்திப்பிலையும் சொன்னாரு…

    இந்த மாதிரி இன்னும் எத்தனையோ…

  2. murugan murugan says:

    தலைவரின் பாடல் வரிகள் - கஷ்ட்டப்பட்டு உழைச்சு முன்னேறப்பாரு ஈஸ்ட்டப்பட்டு எல்லோரும் பின்னால் வருவார் - பதவியே ஏங்கும் ஒரே தலைவர் நம் தலைவர் தான்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates