You Are Here: Home » Featured, Moral Stories » ரஜினி (சொன்ன) கதை 2 – மாறுவேடத்தில் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட போஜராஜன்!!

rajini-beardj

1999 ஆண்டு, எம்.ஜி.ஆர். ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற ரஜினி 25 விழாவில் வரவேற்புரை ஆற்றியபோது ரஜினி சொன்ன கதை இது:

போஜராஜன் என்ற அரசனின் நண்பர் கவிஞர் காளிதாசன் என்பவர் பாடல்கள் இயற்றுவதில் வல்லவர். அவர் பாடல்களை நாளெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கலாம். அத்துணை சுகம் அவை. அதிலும் அவரது இரங்கர்ப்பாக்கள் (ஒருவர் இறந்த பின்பு பாடுவது) கேட்போர் ஊனை உருக்கும் வண்ணம் அற்புதமாக இருக்கும்.

மன்னர் போஜராஜனுக்கு காளிதாசரின் பாடல்கள் என்றால் உயிர். தாம் இறந்தால் காளிதாசர் பாடக்கூடிய இரங்கர்ப்பாவை கேட்க மன்னருக்கு மிகவும் ஆசை. (ஏனெனில் ஒருவர் மீது பாடப்படும் இரங்கற்பாவை அவரால் கேட்கமுடியாது அல்லவா? அடுத்தவர்கள் தானே கேட்க்கமுடியும்…)

எனவே காளிதாசரிடம் போய் “நான் இறந்தால் பாடக்கூடிய இரங்கற்பாவை நீங்கள் எனக்காக ஒரு முறை பாடிடுங்கள்… நான் அதை இறந்த பிறகு கேட்கமுடியாது என்பதால் இப்போதே கேட்க ஆசைப்படுகிறேன்” என்றார் போஜராஜன். ஆனால் காளிதாசர் அதற்க்கு மறுத்துவிட்டார்.

பிறகு ஒரு நாள் போஜராஜன் மாறுவேஷத்தில் காளிதாசரிடம் வந்து “போஜராஜன் இறந்துவிட்டார்” என்று எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடியை காண்பிக்க, உடனே அவரை அறியாமல் காளிதாசர் மிகவும் உருக்கமாக போஜராஜன் மீது இரங்கற்பா ஒன்றை பாடினார். அதை போஜராஜன் கேட்டு அகமகிழ்ந்தார்.

ரஜினி மேலும் தொடர்கிறார்: “அது போல என்னைப்பற்றி நான் இருக்கும்போதே யார் யார் என்ன வெல்லாம் பேசுவார்கள், பத்திரிக்கைகளில் எப்படி எழுதுவார்கள், டிவிக்களில் எப்படி செய்தி போடுவார்கள் என வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன்.” இவ்வாறு சூப்பர் ஸ்டார் அந்த விழாவில் பேசினார்.

(பத்திரிகைகளில் ரஜினி மீதான கடும் விமர்சனம்,  மேடையில் தலைவர்களின் பாராட்டுரை, எதையும் பொருட்படுத்தாது  நிகழ்ச்சியை காண திரண்டு வந்த ரசிகர் கூட்டம் என பரப்பரப்பான காலகட்டம் அது. அதை தான் தலைவர் நான் எல்லாவற்றையும் உயிருடன் இருக்கும்போதே பார்த்துவிட்டேன் என்ற  பொருள்படும்படி கூறியிருக்கிறார்.)

ரஜினி கூறாத போஜராஜன் கதையின் anti-climax :

காளிதாசரின் நாவில் காளிதேவி மந்திரத்தை எழுதியுள்ளபடியால் அவர் கூறுவது அத்தனையும் பலித்துவிடும். (எனவே தான் இரங்கற்பா மன்னர் கேட்டுக்கொண்டாலும் இரங்கற்ப்பா பாட அவர் மறுக்கிறார்). இவ்வாற இரங்கற்பா பாடி முடித்தவுடன் தமது நண்பர் காளிதாசரின் மடியிலேயே போஜராஜன் உயிர் துறந்துவிடுகிறார். (எங்கோ படித்ததாக ஞாபகம்!!)

—————————————————————————————-

போஜராஜன் பற்றி தலைவர் பேசியதை நினைவு கூர்ந்தவுடன், இக்கதையில் கூறப்பட்டுள்ள காளிதாசர், போஜராஜன் இருவரைப் பற்றியும் மேலும் அறிந்துகொள்ள ஆவல் எழுந்தது. இணையத்தில் தேடியபோது இருவரைப் பற்றியும் கிடைத்த சுவாரஸ்யமான ஒரு பதிவு.

http://srikkanthan.blogspot.com/2005/03/blog-post.html

இது பற்றியெல்லாம் தலைவர் எப்பொழுதோ படித்திருக்கிறார் என்பதை நினைத்த போது சிலிர்த்துவிட்டேன். தலைவர் உண்மையில் ஒரு Encyclopaedia தான் .

——————————————————————————————-
ரஜினி (சொன்ன) கதை 1:

http://onlysuperstar.tamilmovieposter.com/?p=3791
——————————————————————————————-

[END]

6 Responses to “ரஜினி (சொன்ன) கதை 2 – மாறுவேடத்தில் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட போஜராஜன்!!”

  1. harisivaji harisivaji says:

    சுந்தர் இது ஒரு மகான் பேச்சு

    என்னை போன்ற சாதரண பாமரனுக்கு புரியவில்லை

    சற்று விளக்குங்களேன்

  2. harisivaji harisivaji says:

    மிக்க நன்றி சுந்தர்

    ரஜினி மாத்ரி அதிஷ்டசாலி யும் யாரும் இல்லை

    அனால் அதுவே அவருக்கு சிலசமயம் துரதிஷ்டமா மாறிவிடுகிறது

  3. kumar kumar says:

    hey sundar… sorry i'm not sure whther i can express my opinon here which is not relevant under this article. I dont have your email id, to mail..so im posting here……

    Why is not that superstar is not attending awards function like vijay awards..He is an actor, since vijay awards is getting big..why not participate and encourage youngsters.. im not sure why? Yes, he is avoiding media and dont want to be in their eyes..but still he has to face themm…I

    sundar sorry to put here but its like kicking my head why not he attend???

  4. murugan murugan says:

    தலைவர் ஒரு தத்துவ ஞானி - எந்திரமயமான இந்த யுகத்தில் வாழ்கை மேலும் அவருக்கு பல்வேறு அனுபவ பாடங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது - ரசிகர்களான நம்மைப்போருதவரை தலைவரது வாழ்கையே ஒரு பாடம்தான் - அவரது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை சிந்திக்கத்தூண்டும் பக்குவப்படுத்தும் தெளிவடயசெய்யும் - இது போன்ற கதைகளை அவர் வாயால் சொல்லக்கேட்பது ஒரு இனிய அனுபவம்.

  5. vasi.rajni vasi.rajni says:

    தலைவர் என்றுமே ஒரு Encyclopaedia தான் சுந்தர்ஜி . அவரிடம் ஆன்மிகம் , அரசியல் , பொருளாதாரம் , என அணைத்து துறைகள் பற்றியும் பிச்சி ஒதருவார் . அவருடைய உரையை கேட்பதற்கு கொடுத்துவைத்திருக்க வென்றும் . ஒரு மனிதனை (தலைவனை ) அவர் பேசும் விஷயங்களிலிருந்து சுலபமாக கண்டுபிடித்து விடலாம் . நாம் ரஜினி ரசிகர்கள் எனவே நம்முடைய தலைவரும் முதல்வர் பதவிக்கு செல்ல வேண்டும் என்று நாம் கூறவில்லை . அவரிடம் உள்ள நிர்வாக திறமையும் அவரின் குணம் , அவரின் தெய்வ பக்தி , போன்ற விஷயங்கள் தான் அவரின் அரசியல் எதிர்பார்பை அதிகரிக்க செய்கிறது . இன்று நமக்கு தெரிந்த இந்த விஷயங்கள் நாளை மக்களுக்கும் புரியும் . மக்கள் தலைவரை அரசியலுக்கு அழைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை .

    rajini will rule tamil nadu

  6. Sharath Sharath says:

    Sundar, this section is really good .. no… very great. It helps those who had not heard Rajini speak to know it. And those who already had seen/heard his speech, it will make them go nostalgic.

    By the way, I had heard about this Kalidasan-Bhojarajan story in my childhood days. My mother had told this to me. :)

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates