









You Are Here: Home » Moral Stories » ரஜினி (சொன்ன) கதை 3: பிரம்மாஸ்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?
ஒரு மகத்தான லட்சியத்துடன் ஒரு மிகப் பெரிய காரியத்திற்காக களம் இறங்குபவர்களுககு அந்த லட்சியம் தான் கண்களுக்கு தெரிய வேண்டுமே தவிர, இடையில் ஏற்படும் இன்னல்களோ சலசலப்புக்களோ தெரியக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் ரஜினி சொன்ன கதை இது.
1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி, அப்போதைய அதிமுக ஆட்சிக்கு எதிராக சூப்பர் ஸ்டார், சன்.டி..வி.யில் தோன்றி உரை நிகழ்த்தினார். சூப்பர் ஸ்டாரின் முதல் தேர்தல் பிரச்சாரம் அது வென்றே எடுத்துக்கொள்ளலாம். முதல் பிரச்சாரத்திலேயே டபுள் சிக்சர் அடித்தார் தலைவர். பத்திரிக்கைகள் ரஜினியின் பேச்சாற்றல் கண்டு வியந்தன. தலையங்கங்கள் தீட்டின. இவரல்லவோ நமக்கு வேண்டும் என்று புளங்காகிதம் அடைந்தன. (உரை முழு விபரம் விரைவில் தனியாக!!)
சரித்திர புகழ் பெற்ற அந்த உரையில், அதிமுக அரசை வீழ்த்த மக்களுக்கு இருக்கும் இறுதி வாய்ப்பை புரியவைக்கும் நோக்கில் சூப்பர் ஸ்டார் ஒரு அருமையான கதையை கூறினார். அரசியல் ரீதியாக மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையில் இடையூறுகளை பொருட்படுத்தாது ஒரு பெரிய லட்சியத்துடன் போராடுபவர்களுக்கு கூட இந்த கதை பொருந்தும்.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் கூறிய கதை இது. அப்பொழுதே இப்படி ஒரு மெச்சூரிட்டி என்றால், இப்பொழுது?
அவரின் வார்த்தைகள் எப்படி இருந்தனவோ அப்படியே தருகிறேன்.
“இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல விரும்புறேன். அதாவது மக்களுக்கு. ஒரு பெரிய கழுகு இருக்கு. ராட்சச கழுகு. துரோணாச்சாரியார் சொல்றார் யாராலும் அந்த கழுகை வீழ்த்த முடியாது. அதை அழிக்க வேண்டுமென்றால் ஒரு பெரிய அஸ்திரம் இருக்கிறது. அதாவது பிரம்மாஸ்திரம். அந்த பிரம்மாஸ்திரத்தை ஒரு முறை தான் உபயோகிக்க முடியும். அதுக்கப்புறம் உபயோகிக்க முடியாது. அது வந்து ஒரு அம்பு. அந்த அம்பை வைத்து துரோணாச்சாரியார் ஒருத்தரை கூப்பிடுறார்.
“என்ன தெரிகிறது?” என்று கேட்கிறார்.
அவன் சொல்றான், “ஒரு கிளை தெரிகிறது.” “அந்த கிளைக்கு மேல ஒரு கழுகு உட்கார்ந்திருப்பது தெரிகிறது.”
“நீ போ” என்று அவனை அனுப்பிவிடுகிறார்.
அடுத்தவனை அழைக்கிறார். “உனக்கு என்ன தெரிகிறது?”
“அந்த கழுகோட கண், மூக்கு எல்லாம் தெரிகிறது” என்கிறான் அவன்.
“நீயும் வேண்டாம்….!” அவனையும் அனுப்பிவிடுகிறார் துரோணாச்சாரியார்.
அடுத்து ஒருவனை கூப்பிடுகிறார். அவனிடம் கேட்கிறார்.
சரியா குறிபார்த்து, “எனக்கு கழுகோட கழுத்து தான் தெரியுது குருவே” என்கிறான் அவன்.
“இப்போ விடு அம்பை” என்கிறார் குரு. அவன் தான் அர்ஜூனன். (சரித்திரத்தில் வில்வித்தைக்கு பெயர் பெற்றவன் அர்ஜூனன் தான்! பூர்வ ஜென்மத்தில் இவன் தான் வாலி!!!)
கழுகை வீழ்த்த ஒரு பிரமாஸ்திரம் தேவைப்பட்டது. அந்த பிரம்மாஸ்திரம் தான் மக்கள் சக்தி. மக்களின் கையில் இருக்கும் வாக்கு. அஸ்திரம் என்றால் சக்தி கொடுப்பது. எல்லாரும் சேர்ந்து சக்தி கொடுத்தால் அது பிரம்மாஸ்திரம் ஆகிறது. அப்படி கழுகை குறிவைக்க சேர்ந்தது தான் இந்த அணி. தி.மு.க - தா.மா.க. அணி. அவர்களிடம் பொறுப்பை விடுங்கள்.”
(எப்படி தலைவர் சொன்ன கதை? இதுவே ஒரு சஸ்பென்ஸ் படம் மாதிரி இருக்குல்ல…!)
இந்த கதையை கொஞ்சம் ஆழமா படிச்சீங்கன்னா, சூப்பர் ஸ்டாரோட வாழ்க்கை முறையும் அதுல இருக்கு.
ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டும் செய். அதை சிறப்பாக செய். அதில் முழு கவனம் செலுத்து. உன் கவனமும் சிதறாது. வெற்றி உன் வசமாகும். ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதால் தோல்வியை தான் தழுவ வேண்டும்.
சூப்பர் ஸ்டார் வெற்றி வீரர். சாதிக்கப் பிறந்தவர்.
————————————————————————————————-
English version:
This is a story told by Rajini during his speech in Sun TV (April 23, 1996) in support of DMK-TMC combine.
The winning focus
Guru Dronacharya was teaching his disciples the skill of archery, the art of using bow and an arrow. He decided to test his students.
Dronacharya hung a giant bird from a tree and told his disciples to aim to shoot the bird down. First he called Yudhishtira. As Yudhishtira was taking aim, Dronacharya asked him, “what can see at this moment?’’
“Guruji, I see everything’’, replied Yudhishtira, “I see the bird, I see the branches and I see the leaves.’’
“Put your bow aside,’’ commanded the Guru.
“You are unable to take the aim. You have not learnt the art of archery.’’
The next to try was Duryodhana. Once again Dronacharya asked the question. Duryodhana replied, “Maharaja! I can see the bird, the bird’s eye, the tree, the branches and the leaves. I can see everything.’’
Dronacharya called upon his other student to try and from all of them he received the same answer.
Finally, Dronacharya called upon Arjuna to take the aim. When he repeated the question, Arjuna replied, “Guruji, at this moment I cannot see any thing expect the neck of the bird.’’
Guru Dronacharya was happy. “You, Arjuna, are the only one who has understood the art of taking aim,’’ he said.
In real life too, this should be your aim. You should concentrate with you mind and body on whatever work you are doing. You should pay full attention in the class. When you are reading a book or learning a lesson, your attention should be entirely focused on what you are doing.
When you do one thing at a time, you are able to pay full attention. You are not distracted. If try to do too many things at one time, you will not be successful.
So, do one thing at a time. Do it carefully. Pay your full attention to it, concentrate on it. You will be a winner.
(English version story courtesy: Sportales.com)
[END]
தலைவர் பேசினாலே அதற்கு கூடுதல் ஈர்ப்பு. அதிலும் தலைவர் கதை சொல்றார் என்றால் அதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. பேச்சாற்றல் என்னங்க பேச்சாற்றல்? சொல்ற கருத்தை சரியாக எளிதில் புரியறா மாதிரியும் ஆணித்தனமாவும் சொல்றவர்தான் சிறந்த பேச்சாற்றல் மிக்கவர். சும்மா நானும் தமிழ்ல பேசுறேன்னு சொல்லி ஒருத்தனுக்கும் புரியாம கடமைக்குன்னு பேசி கைதட்டு வாங்குறவங்கள விடுங்க.
what a guidance for people like me
சுந்தர்ஜி, சத்தியமா சொல்றேன். நீங்க எனக்கு பெரிய உதவி பண்ணியிருக்கீங்க… மனசு நிறைய சஞ்சலத்தோட சும்மா ஒரு மனமாறுதலுக்கு நெட்ல உக்காந்து இருந்தேன். 'நச்'சுன்னு இந்த கதை. அப்படியே கண்ணு கலங்கிடுச்சி. இதோ, உற்சாகமா மத்த வேலையை பாக்க கிளம்பிட்டேன். எங்க தலைவரை உயிர் இருக்கும்வரை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
——————————————————-
மிக்க மகிழ்ச்சி சூர்யா.
உங்களைப்போன்ற இளைஞர்களுக்கு புத்துணர்வு ஊட்ட நம் தளமும் அதில் வந்த ஒரு பதிவும் பயன்படுகிறது என்பதை அறியும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தலைவர் ஒரு பல்கலைக் கழகம். நாம் அவரிடமிருந்து கற்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. வரும்காலத்தில் இன்னும் உங்களிடம் நிறைய பகிர்ந்துகொள்வேன்.
நன்றி.
- சுந்தர்
Thalaivar is our god……
Dear Sundar,
"தலைவர் ஒரு பல்கலைக் கழகம். நாம் அவரிடமிருந்து கற்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது"
Well said. Keep rocking as always.
கேட்கவே சந்தோஷமாக இருக்கு சுந்தர், தலைவரின் சிறு கதைகள் ஆழ்ந்த கருத்துக்கள் உடையவை, எனக்கு தெரிந்த கதை தான் என்றாலும் தாங்கள் சொல்லும் விதம் அருமை … உங்களுக்கு சூர்யாவின் பின்னூட்டம் மகிழ்வை அளிப்பது போல், எனது நண்பரால், நண்பர்களுக்காக, மற்றும் தலைவரின் அன்பர்களுக்காக நடத்தும் இந்த தலத்தில் ஒரு பதிவால் சூர்யா அவர்களுக்கு மனச்சோர்வு நீங்கியது பெரும் மகிழ்வை தருகிறது…
சுந்தர் தொடர்ந்து கலக்குங்கள்
காமேஷ்
arumayaana kadhai… thalaivar thalaivardan
சுந்தர்ஜி பல நாட்களுக்கு பிறகு தலைவரின் அரசியல் சம்மந்தப்பட்ட கட்டுரையை எழுதியுள்ளிர்கள் . இந்த பதிவின் மூலம் தலைவர் எந்த அளவுக்கு ஆன்மிகத்தை நெடுமுறை வாழ்கையில் இணைகிறார் என்பது புரிகிறது . வெறும் ஆன்மிகத்தை மட்டும் படித்து விட்டு சுயனலதிர்கக அதனை அவர் பயன்படுத்துவது இல்லை . தன்னை சம்மந்த பட்டவர்களும் இதன் மூலம் பயன்பட வேண்டும் என்று ஆசைபடுகிறார்.
தான் ஏன் 1996 இல் அரசியலுக்கு வரவில்லை என்று தலைவர் கூறிவிட்டார் . ஆரசியலை பற்றி ஒன்று தெரியாமல் அதனில் இடுபடுவதில் தன்னக்கு விருப்பம் இல்லை என்று கூறினர் , அப்படி அதனை பற்றி தெரிந்திருந்தால் நிச்சையம் அப்பொழுதே வந்திருப்பேன் என்று கூறினர் .. ( நம்மில் பலர் அதனை உணரமுடியால் போனது , ஏனென்றால் தலைவரின் பேச்சு நம்மையும் மறந்து ரசிக்க வைத்து விட்டது . நேரம் கிடக்கும் பொழுது மீண்டும் அந்த video வை பாருங்கள் , ஏகப்பட்ட விஷயம் அதனில் உள்ளது , ரசிகர்கள் எந்த கட்சியிலும் சேர விருப்பமில்லை , என்றும் தன்னுடைய வழியிலே வர ஆசை படுகிறோம் என்று கூறியவுடன் தலைவர் ரசிகர்களை பார்த்து நன்றி கூறும் பொழுது தலைவரின் முகத்தை பாருங்கள் பல புதிருக்கு விடை கிடைக்கும் , ஆசிய கண்டத்தில் எவருக்குமே கிடைக்காத மக்கள் அதரவை வீனக்குவிர்களா என்று கேட்ட பொது நிச்சையம் வீணாக்க மாட்டேன் என்று கூறும் பொழுதும் தலைவரை பாருங்கள் அதனில் எவ்வளவு "பெரிய" விஷயம் அடங்கி யுள்ளது என்பது புரியும் . இவ்வாறு பல அரசியல் சம்பந்த பட்ட கேள்விகளுக்கு தலைவர் பதில் கூறிவிட்டார் .
ஏன் அவர் அரசியல் சம்மந்த பட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் தரவில்லை என்று பலர் கேட்பது எனக்கு புரிகிறது . எந்திரனை தன்னுட பதில் பதித்து விட கூடாது என்பதற்காக அவர் இப்படி கூறியுள்ளார் . தான் கூற நினைப்பது புரிந்து கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு புரியும் , தெரிந்து கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார் . புரிந்து கொள்ள மறுப்பார்கள் நிச்சையமாக புரிந்து கொள்ள மாட்டர்கள் என்று நச்சென்று பதில் கூறியுள்ளார் .
இதெல்லாம் பல மதங்களுக்கு முன்பே உங்களுக்கு தெரியும் அனால் நமக்கு தான் பெரிய வியாதி ஒன்று உள்ளதே அதுதான் amnesia (ஞபக மறதி ) .அதனால் தான் மீண்டும் ஒரு முறை உங்களுக்கு ஒரு நண்பனாக ஞபக படுத்துகிறேன் .
rajini will rule tamil nadu
ரஜினி அந்த கட்டத்தில் அனைவரயும் இந்த கதையுடன் ஒபிட்டு சொலிட்டார் ஆனால் அந்த தேர்தலில் அவரின் பங்கு அந்த கதையுடன் ஒப்பிட்டால் என்னவாக இருக்கும் ???
என்னை பொறுத்தவரை தமிழில் உள்ள அணைத்து காவியங்களையும் ரஜினி படித்து இருப்பார் போல தமிழ் தமிழ் சொல்ற எத்தன பேரு அதலாம் படித்து இருப்பாங்க …
எல்லாவிதத்திலும் ரஜினி எப்போதும் எல்லோருக்கும் எடுத்து காட்டாகவே இருக்காரு …
Now he is ruling the hearts of Tamil's
Next he will rule the place of Tamil's
(எப்புடி) ??? vasi நாங்களும் போடுவொம்ல
ஹா ஹா ஹா
நன்றி
ஹரி.சிவாஜி
do u have that videos of rajini's speech in suntv
———————————————————————
Yes i have. But that cassette is making problem since it was nearly 13 years old. Have to give to service centre to retrieve video on that.
- Sundar
ஒருவன் ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் அவன் அதற்க்காக எந்த அளவு தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எத்தகைய முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்பதற்கு மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள இந்த உதாரணம் ஒரு நல்ல சான்று - மகாபாரதம் ஒரு அரசியல் பொக்கிஷம் - அதில் கூறப்படாத அரசியல் கருத்துக்களே இல்லை எனலாம் - அதனால் தானோ என்னவோ நமது தலைவருக்கு மகாபாரதத்தின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு போலும் - அத்தகைய உயரிய கருத்துக்களை தலைவர் அவருக்கே உரிய பாணியில் கூறும்பொழுது நமது மனம் தாமாகவே ஈர்க்கப்பட்டு அவரிடம் சரணடைவது இயல்புதான் - மேலும் இது போன்ற பல அறிய தகவல்களை நமக்கு நித்தம் வழங்கி ரசிகர்களாகிய நம்மை ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் சுந்தர் அவர்களின் பணி தொடர வாழ்த்துவோம்
சுந்தர்,
இன்றைக்குத்தான் நெடுநாட்களுக்குப் பின் கணிப் பொறி முன் அமர்ந்தேன். அருமையான பதிவுகள் பிரமிக்க வைக்கின்றன..
இன்று கல்வி கண் திறந்த காமராசரின் பிறந்தநாள்.. நான் என்னுடைய கவிதையை இன்று அவருக்கு கீழ்க்கண்ட பதிவில் சமர்ப்பிக்கிறேன்… நண்பர்கள் படித்து அந்த நல்லவரை நினைவு கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…
அன்புடன்
ஈ ரா
http://padikkathavan.blogspot.com/2009/07/blog-po...
நண்பர் ஹரிசிவாஜி அவர்களே, பெரியார்கள் கூறுவது போல நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் சக்தி உள்ளது , பலருக்கு இது வேடிக்கையாக இருக்கும். அனால் நாம் என்றும் அறவழியில் செல்வோம் என்றாவது ஒருநாள் அந்த ஆண்டவன் நமது ஆசைகளை பூர்த்தி செய்வான் .
நீங்களும் கூறுங்கள் நண்பர் ஹரி அவர்களே நிச்சையம் அந்த ஆண்டவன் தலைவருக்கு ஒரு நல்ல சந்தர்ப்பதை தருவான். நம் மனம்போல அனைத்தும் இனிதே நடக்கும்.
நமது தலைவர் இந்த தமிழ் நாட்டு மண்ணை ஆளத்தான் போகிறார் அதையும் இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது . நல்லவர்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை, பொறுத்தார் பூமி ஆள்வார்.
rajini will rule tamil nadu
நீங்க சொல்வது நூற்றுக்குநூறு உண்மை vasi
உங்களை போல் சிலபேர் இல்லை பல கோடி கணக்கானோர் இதற்காக தானே தவம் கிடக்கின்றனர்
காலம் கனியும்
கவலைகள் தணியும்
Now he is ruling the hearts of Tamil’s
Next he will rule the place of Tamil’s
Excellent article sundar. I just want to remind to all of our thalaivar dearest fans, like thalaiavar mentioned in the last meeting with fans , we need to keep looking into the political situation in TN and India. I know , we are following this. This is just to remind everyone.
pls send the video link of that grt speech………….
please update it in our website….
தலைவரிடம் இருந்து நான் கற்றுகொண்டது ஏராளம். பொறுமை விமர்சனங்களை ஏற்று கொள்ளுதல் என்று ஏகப்பட்டது..
பகிர்விற்கு நன்றி சுந்தர்
வீடியோ பிளஸ்.